தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாழ்த்துகள் – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாழ்த்துகள் ! தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். நடிகர் விசய் அரசியலில் முழுமையாக ஈடுபடும் வண்ணம் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்னும் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். தமிழ் நாட்டின் நலன், தமிழ் மக்கள் முன்னேற்றம், தமிழ்மொழி வளர்ச்சி முதலியவற்றில் கருத்து செலுத்தி வாகை சூட வாழ்த்துகிறோம். இவர் கட்சியைத் தொடங்குகிறார் எனச் செய்திகள் வந்த பொழுதே இவர் ‘விசய்’ என்று இல்லாமல் வெற்றி என்றோ வாகை என்றோ வரும் வகையில் பெயர் சூட்டினால் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணம்…
இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 1 : தமிழ்க் கொடியேற்றம்
(தமிழர் வீரம் – முன்னுரை – நாவலர் ச.சோமசுந்தர பாரதியார்-தொடர்ச்சி) தமிழர் வீரம்தமிழ்க் கொடியேற்றம் தமிழன் சீர்மைதமிழன் என்றோர் இனம் உண்டு; தனியே அதற்கொரு திறம் உண்டு. அத்திறம் முன்னாளில் தலை சிறந்து விளங்கிற்று. “மண்ணும் இமயமலை எங்கள் மலையே” என்று மார் தட்டிக் கூறினான் தமிழன். “கங்கையும் காவிரியும் எங்கள் நதியே” என்று இறுமாந்து பாடினான் தமிழன். “பஞ்சநதி பாயும் பழனத் திருநாடு எங்கள் நாடே” என்று நெஞ்சம் நிமிர்ந்து பேசினான் தமிழன். தமிழன் ஆண்மை ஆண்மை நிறைந்தவன் தமிழன். அந்நாளில் அவன்…
வள்ளுவர் சொல்லமுதம் -5 : அ. க. நவநீத கிருட்டிணன் : கல்வியும் கேள்வியும்
(வள்ளுவர் சொல்லமுதம் -4 : அ. க. நவநீத கிருட்டிணன் : மனையும் மக்களும்.2 – தொடர்ச்சி) வள்ளுவர் சொல்லமுதம்4. கல்வியும் கேள்வியும் மக்களை மாக்களினின்றும் பிரித்துக் காட்டுவது அவர் பெற்ற கல்வியறிவே. பல்வேறு நூல்களைக் கற்றலால் பெற்றிடும் அறிவே கல்வியாகும். கற்றறிந்த நல்லார் சொல்லக் கேட்டலால் பெற்றிடும் அறிவு கேள்வியாகும். பலகால் பழகிய பழக்க முதிர்ச்சியின் விளைவாலாகிய அறிவு அனுபவமாகும். இங்ஙனம் அறிவை முக்கூறு படுத்தலாம்.முதற்கண் கல்வியறிவை நோக்குவோம். கல் என்ற சொல், தோண்டு என்ற பொருளைத் தருவது. உள்ளத்தில் ஆழ்ந்த அறியாமையைக்…
சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்:136-140
(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்-131-135 – தொடர்ச்சி) சட்டச்சொற்கள் விளக்கம் 136-140 136. Abort கருச்சிதைவுறு கருக்குலைதல், இடைமுறி, இடையழி, கருச்சிதை, கருப்பங்கரைதல், கருச் சிதைதல், காய்விழுதல், கருச் சிதைந்துவிழுதல், சிதை, செயன்முறி, செயல்முறிப்பு . இவற்றுள் கரு தொடர்பில்லாத சொற்கள் பொதுவான முறிவுகளைக் குறிப்பன. abortus என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் கருச்சிதைவு. இதிலிருந்து abort > abortion உருவாயின. 137. Aborticide கருக்கொலை தானாகவே கருவைக் குழந்தையாக வளரவிடாமல் அழிப்பது/கொல்லுவது கருக்கொலை. 138. Abortion…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1041 – 1047
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1030- 1040 : தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1041 – 1047 (கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) நூல் : தமிழ் நூல் வரலாறு (1952) பக்கம் : 23நூலாசிரியர் : பேராசிரியர், வித்துவான் பாலூர் கண்ணப்ப முதலியார் எம்.ஏ., பி.ஓ.எல்., ★…
சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்-131-135
(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன் : 126-130 – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 131-135 131. Abolition of titles பட்டங்களை ஒழித்தல் விருதுகளை ஒழித்தல் இந்திய அரசியல் யாப்பு 18 ஆம் இயல் பட்டங்கள் ஒழிப்பு (Abolition of titles)பற்றிக் கூறுகிறது. 132. Abolition of untouchability தீண்டாமை ஒழிப்பு தீண்டாமை என்பது மனிதருள் இனம், பிறப்பு, குலம் காரணமாக உயர்வு தாழ்வு கற்பித்து வேற்றுமை பாராட்டும் குமுகாயக் குற்றம். அரசியல் யாப்பு…
பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் 3/7 – இலக்குவனார் திருவள்ளுவன்
(பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் 2/7 – இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) பன்னாட்டுத் தமிழ்மொழி பண்பாட்டுக் கல்விக் கழகம் சென்னை வளர்ச்சிக் கழகம் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம் முதல் உலகத் தமிழ் வளர்ச்சி மாநாடு பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் 3/7 Instrument – ஆவணம் / பத்திரம் instrument – கருவி என்பதே பொதுவழக்கில் பயன்படுத்தப்படும் சொல்லாகும். துணைப்பொருள், கருவியாக உதவும் சாதனம், கருவியாகப் பயன்படுபவர், கையாள், இசையொலி எழுப்பும் சாதனம், ஒப்பந்தப்பத்திரம், பதிவேடு, இசைக்கருவிக்குரிய பாடற்பகுதி அமை, துணைக்கலம்; கருவியாகப் பயன்படுதல்,…
தமிழர் வீரம் – முன்னுரை – நாவலர் ச.சோமசுந்தர பாரதியார்
இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் திரு. நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் அவர்கள் எழுதிய முதற் பதிப்பின் முகவுரை தமிழர் வீரம் என்னும் நல்லுரைத் தொகுதி வரப்பெற்றேன். படித்து உவகையுற்றேன். இவ் வினிய உரைச் செய்யுள் எழுதிய புலவர், சென்னைப் பல்கலைக் கழகத் தலைவராம் திரு. இராபி. சேதுப்பிள்ளை அவர்கள். ‘ சொல்லின் செல்வர் ‘ என வள மலி புலமை இளந்தமிழுலகு பாராட்டும் இப் பேராசிரியர் இனிய எழுத்தாளர்; இன்சொற் பேச்சாளர். இவர்கள் உரை கேட்டு மகிழாத தமிழர் இரார். இவர்கள் இயற்றும்…
வள்ளுவர் சொல்லமுதம் -4 : அ. க. நவநீத கிருட்டிணன் : மனையும் மக்களும்.2
(வள்ளுவர் சொல்லமுதம் -3 : அ. க. நவநீத கிருட்டிணன் : மனையும் மக்களும் – தொடர்ச்சி) வள்ளுவர் சொல்லமுதம் : மனையும் மக்களும்.2 “கடவுட் கற்பொடு குடிக்குவிளக் காகிய புதல்வர்ப் பயந்த புகழ் மிகு சிறப்பின்‘” என்பது அகப்பாடல். அன்பினுக் காகவே வாழ்பவரார்?-அன்பில் ஆருயிர் போக்கத் துணிபவரார்? இன்ப உரைகள் தருபவரார்?-வீட்டை இன்னகை யால்ஒளி,செய்பவரார்? எல்லாம் பெண்கள் அன்றோ! அவர்தம் பங்கயக் கைகளின் நலத்தை நோக்கியன்றோ பாரில் அறங்கள் வளர்கின்றன. பிச்சை கேட்பவனும், “அம்மா ! பிச்சை”‘ என்றுதானே கேட்கின்றான். ஆதலின் இவ்…
சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன் : 126-130
(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன் : 121-125 – தொடர்ச்சி) சட்டச்சொற்கள் விளக்கம் 126-130 126. Abode உறைவிடம்இல்லம், இருப்பிடம், பணியிடம், தொழிலிடம் பிணையில் விடுவிப்பதற்கு நீதி மன்றம் குற்றம் சாட்டப்பட்டவருக்கு அல்லது பிணையாளருக்கு நிலையான அல்லது இடைக்காலமாக வசிப்பிடம் அல்லது பணியிடம் /தொழிலிடம் இருந்தால் மட்டும் கருதிப் பார்க்கும் 127. Abolish நீக்குஒதுக்கு, ஒழி ஒழித்துக்கட்டு; நீக்கு நடைமுறையில் உள்ள ஒன்றை இல்லாதாக்குதல். நிறுவனங்கள்/அமைப்புகள் பழக்க வழக்கங்களை நிறுத்தி விடுதல். எ.கா.: தீண்டாமையை ஒழித்தல்,…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 72 : திருவாவடுதுறைக் காட்சிகள்
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 71 : சரசுவதி பூசையும் தீபாவளியும் – தொடர்ச்சி) என் சரித்திரம்அத்தியாயம் 44திருவாவடுதுறைக் காட்சிகள் மார்கழி மாதக் கடைசியில் எனக்கு சுர நோய் முற்றும் நீங்கிற்று;ஆயினும் சிறிது பலக் குறைவுமட்டும் இருந்து வந்தது. பிள்ளையவர்களிடம்போக வேண்டுமென்ற விருப்பம் வர வர அதிகமாயிற்று. அவர் பட்டீச்சுரத்துக்குப் புறப்படுகையில், சுப்பிரமணிய தேசிகர் திருவாவடுதுறைக்கு வந்து அங்குள்ள பலருக்குப் பாடம் சொல்லி வரவேண்டுமென்று கட்டளையிட்டதை அறிந்த நான் அவர்திருவாவடுதுறையில் வந்திருப்பாரென்றே எண்ணினேன்; ஆயினும் ஒருவேளைவாராமல் மாயூரத்திலேயே இருக்கக்கூடுமென்ற நினைவும் வந்தது. என்சந்தேகத்தை அறிந்த என்…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1030- 1040
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1021-1029 : தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1030- 1040 (கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) (தொடரும்)உவமைக்கவிஞர் சுரதாதமிழ்ச்சொல்லாக்கம்
