ஊரும் பேரும் 62 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – விண்ணகரம்
(ஊரும் பேரும் 61 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – தானமும் தருமமும் – தொடர்ச்சீ) ஊரும் பேரும் விண்ணகரம் தமிழ் நாட்டில் ஈசனது கோவில் ஈச்சரம் என்று பெயர் பெற்றாற்போன்று, விட்ணுவின் கோவில் விட்ணுகிரகம் என வழங்கிற்று. அப்பெயர் விண்ணகரம் என்று மருவிற் றென்பர்.5 வைணவ உலகம் தலைக்கொண்டு போற்றும் நூற்றெட்டுத் திருப்பதிகளுள் ஆறு விண்ணகரங்கள் உள்ளன. திருவிண்ணகரம்கும்பகோண்த்திற்கு மூன்று கல் அளவில் உள்ள திருமால் கோவில் திருவிண்ணகரம் என்று விதந்துரைக்கப்பட்டது.6 ஆழ்வார்களில் நால்வர் அதற்கு மங்களா சாசனம் செய்துள்ளனர். “திருவிண்ணகர் சேர்ந்த அப்பன்தன்னொப்பார் இல்லப்பன்தந்தனன்…
தமிழ் வளர்த்த நகரங்கள் 21 – அ. க. நவநீத கிருட்டிணன்: தமிழ் வளர்த்த தில்லை
(தமிழ் வளர்த்த நகரங்கள் 20 – அ. க. நவநீத கிருட்டிணன்: இலக்கியங்களில் தில்லை – தொடர்ச்சி) தமிழ் வளர்த்த நகரங்கள்தமிழ் வளர்த்த தில்லை 15 இலக்கியத்தில் இறைமணம் சங்கக்கால இலக்கியங்களிலிருந்து தற்கால இலக்கியங்கள்வரை எந்த நூலை நோக்கினாலும் அதில் இறை மணம் கமழாமல் இருப்பதில்லை. முழுதும் இறை மணமே கமழும் இயல்புடைய இலக்கியங்களைச் சமய நூல்கள் என்பர் சான்றோர். பெரும்பாலும் தில்லை மாநகரம் வளர்த்த தமிழெல்லாம் சமயத்தமிழ், அதிலும் சைவத்தமிழ் என்றே சொல்ல வேண்டும். ‘திருமுறைகளைக் காத்த தில்லை தேவாரம் பாடிய மூவர்பெருமக்களும்…
தோழர் தியாகு எழுதுகிறார் : பரணர் பாடிய பேகனும் சாம்ராசு பாடும் தோழர்களும்
(தோழர் தியாகு எழுதுகிறார் : மாண்டவர்கள் உயிர்த்தெழுந்து ஏற்றுக விடுதலை ஒளி!-தொடர்ச்சி) பரணர் பாடிய பேகனும் சாம்ராசு பாடும் தோழர்களும் இனிய அன்பர்களே! மதுரையைக் கதைக் களனாகக் கொண்டு, மா-இலெ தோழர்களை முதன்மைக் கதை மாந்தர்களாகக் கொண்டு, 1980களைக் கதைக் காலமாகக் கொண்டு அன்பர் சாம்ராசு படைத்துள்ள புதினம் கொடை மடம். இறுதியாகப் பெயர் கொடுப்பதற்கு முன்பே இந்தப் புதினத்தைச் சாம்ராசு எனக்குப் படிக்கத் தந்தார். அது சரியான அலைச்சல் நேரம் என்றாலும் சிலநாளில் படித்து முடித்தேன். எடுத்தால் கீழே வைக்க முடியாத இலக்கியச்…
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.1 – புலவர் கா.கோவிந்தன்
தமிழர் பண்பாடு – முன்னுரை தமிழர் பண்பாடு(தொடக்க காலம் முதல் கி.பி. 600 வரை)1.முன்னுரை வரலாற்றின் குறிக்கோள் வீரத்தின் பெயரால் எண்ணற்ற மக்களைப் போர்க் களத்தில் கொன்று குவிப்பதன் விளைவாக, அரச இனங்களின் எழுச்சி வீழ்ச்சிகள் பற்றிய கதைகள், அமைதி வாழ்வு நடாத்தும் மக்கள், தங்கள் தளரா உழைப்பின் பயனாக ஈட்டிக் குவித்து வைத்திருக்கும் செல்வத்தைக் கொள்ளையடித்துக் கொள்ளும் வெறியோடு மிகப்பெரிய மக்கள் கூட்டம் உலக அரங்கில் இடம் பெயர்ந்து கொண்டேயிருக்கும் பழங்கதை, அரசகுல மகளிரின் கற்பழிப்பு, ஒரு சிலரின் வெறியாட்டத்தைப் பழி வாங்குவது…
சட்டச்சொற்கள் விளக்கம் 86-90 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச்சொற்கள் விளக்கம் 81-85 தொடர்ச்சி) சட்டச்சொற்கள் விளக்கம் 86-90 86. Abetment of assault தாக்குதலுக்கான / தாக்க முனைதலுக்கான உடந்தை திடீரென, கடுமையான ஆத்திர மூட்டலினாலின்றித், தாக்குதல் நடத்துதல் அல்லது குற்ற வன்முறையைப் பயன்படுத்தல் இ.த.ச.பிரிவு 134 இன் கீழ்க் குற்றமாகும். தரைப்படையில் அல்லது கப்பற்படையில் அல்லது வான்படையில் உள்ள அதிகாரியோ வீரரோ மீகாமரோ(கப்பலோட்டி வீரர்) வான்படைஞரோ அலுவற்பொறுப்பை நிறைவேற்றும் எந்த ஓர் உயர் அதிகாரியைத் தாக்கினாலும் அஃது ஏழாண்டு வரையிலான சிறைத்தண்டனைக்கும் தண்டத்தொகை விதிப்பிற்கும் உரியது. தாவு/தாக்கு …
தோழர் தியாகு எழுதுகிறார் : மாண்டவர்கள் உயிர்த்தெழுந்து ஏற்றுக விடுதலை ஒளி!
(தோழர் தியாகு பகிர்கிறார் : (இ)யூத இசுரேலும் இந்து இந்தியாவும்- தொடர்ச்சி) இனிய அன்பர்களே! பெத்தலகேம் – கீழவெண்மணி: மாண்டவர்கள் உயிர்த்தெழுந்து ஏற்றுக விடுதலை ஒளி! இன்று கிறித்து பிறப்பு நாள். சமயப் பண்டிகை எதுவும் நான் ஒருபோதும் கொண்டாடியதில்லை. கிறித்து பிறப்பு நாள் பற்றிப் பெரிதாக நினைப்பதும் இல்லை. ஆனால் இந்த ஆண்டு கிறித்துநாதர் பிறந்த பெத்தலகேம் பற்றி எண்ணாமலிருக்க முடியவில்லை. உலகம் எங்கும் கிறித்துமசு கொண்டாடப்படுகிறது என்றாலும் இந்தக் கொண்டாட்டத்தின் உச்ச மையம் பெத்தலகேம்தான். ஆனால் அந்தத் திருத்தலம் பண்டிகை கொண்டாடும்…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 991- 1002
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 984-990 – தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 991- 1002 992.பஞ்சபாணம் – ஐந்தம்பு நாளியல் விளக்கம் என்னும் நந்தன வருடத்துச் சுத்த வாக்கிய பஞ்சாங்கம் (1951)ஆசிரியர் : வித்வான் : சோ. அருணாசல தேசிகர் (சீர்காழி)★ நூல் : திருச்சிறுபுலியூர் உலா (1951)குறிப்புரை : கி. இராமாநுசையங்கார் (தொடரும்)உவமைக்கவிஞர் சுரதாதமிழ்ச்சொல்லாக்கம்
தோழர் தியாகு பகிர்கிறார் : (இ)யூத இசுரேலும் இந்து இந்தியாவும் – பேராசிரியர் இராசன் குறை
(தோழர் தியாகு எழுதுகிறார் : ஆறு முதல் கடல் வரை பாலத்தீனத்துக்கு விடுதலை – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! மதத்துக்கு ஒரு தேசம் என்ற பிற்போக்கான கொள்கையின் அடிப்படையில் பாலத்தீன மண்ணில் திணிக்கப்பட்ட (இ)யூத தேசம்! இதுதான் இசுரேல்-பாலத்தீனப் பூசலுக்கு அடிப்படைக் காரணம்! தேசத்துக்கு மதத்தை அடிப்படையாகக் கொள்வது இன்றைய உலகில் படுபிற்போக்கானது! தேசம் எதுவானாலும் சரி! மதம் எதுவானாலும் சரி! இந்தியாவை ‘இந்து இராட்டிரம்’ ஆக்கத் துடிப்பவர்கள் குறித்து நமக்கு இசுரேல் ஓர் எச்சரிக்கை! இசுரேலின் புராணப் பின்னணியை விளக்கியும், இந்தியாவில் சாவர்க்கரின்…
சட்டச்சொற்கள் விளக்கம் 81-85 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச்சொற்கள் விளக்கம் 71-80 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொகுப்பு) சட்டச்சொற்கள் விளக்கம் 81-85 81. Abetment by aid தூண்டல் உதவி குற்ற உடந்தை உதவி – குற்றவாளி, குற்றம் புரிவதற்கு வேண்டுமென்றே உதவி, தூண்டுதலாக இருப்பது. குற்றம் புரிய அல்லது குற்றச் செய்கையை எளிமையாக்கத் தூண்டுநர் உதவுகையை இது குறிக்கிறது. குற்றவாளிக்கு உதவும் எண்ணம் இருப்பதே முதன்மையானது. தூண்டுதல் என்பது, குற்றவாளி குற்றத்தைச் செய்யும்போது, குற்றம் புரிய ஏவுதல் அல்லது சொல்லிக் கொடுத்தல் அல்லது ஊக்குவித்தல் அல்லது…
தோழர் தியாகு எழுதுகிறார் : ஆறு முதல் கடல் வரை பாலத்தீனத்துக்கு விடுதலை
(தோழர் தியாகு எழுதுகிறார் : இசுரேல் எதிர்ப்பும் இசுலாமியக் குறுநெறியும் – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! “ஆறு முதல் கடல் வரை பாலத்தீனத்துக்கு விடுதலை!” அட்டோபர் 7 இசுரேல் மீது ஃகாமாசு தாக்குதலுக்குப் பின் நூறு நாட்களுக்கும் மேலாயிற்று. இசுரேல் அரசு காசா மீது தரை வழிப் படையெடுப்புத் தொடங்கி 75 நாட்களுக்கு மேலாயிற்று. சற்றொப்ப 1,500 இசுரேலியர்களும் 20,000 பாலத்தீனியர்களும் கொல்லப்பட்டிருப்பதாகக் கணக்கிடபப்டுகிறது. கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலார் போருக்குத் தொடர்பில்லாத குழந்தைகள், பெண்கள், முதியவர்கள்! ஃகாமாசு பிடித்துச் சென்ற பிணைக் கைதிகளில் 130 பேர்…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 67 : ஆறுமுகத்தா பிள்ளையின் இயல்பு
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 66 : பட்டீச்சுரத்திற் கேட்ட பாடம் – தொடர்ச்சி) என் சரித்திரம்ஆறுமுகத்தா பிள்ளையின் இயல்பு ஆறுமுகத்தாபிள்ளை நல்ல உபகாரி; தம் செல்வத்தை இன்ன வழியில் பயன்படுத்த வேண்டுமென்ற வரையறையில்லாதவர். அந்த ஊரில் தம்மை ஒரு சிற்றரசராக எண்ணி அதிகாரம் செலுத்தி வந்தார். யார் வந்தாலும் உணவளிப்பதில் சலிக்கமாட்டார். பிள்ளையவர்கள் அவர் வீட்டில் தங்கிய காலத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விசேட தினமாகவே இருக்கும். கும்பகோணம் முதலிய இடங்களிலிருந்து பிள்ளையவர்களைப் பார்ப்பதற்கு நாள்தோறும் சிலர் வந்தவண்ணம் இருப்பார்கள். வெளியூர்களிலுள்ள பள்ளிக்கூடங்களில் தமிழாசிரியர்களாக…
பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்
பன்னாட்டுத் தமிழ்மொழி பண்பாட்டுக் கல்விக் கழகம் சென்னை வளர்ச்சிக் கழகம் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம் முதல் உலகத் தமிழ் வளர்ச்சி மாநாடு ஆடி 27, 2054 —– ஆகட்டு 12, 2023 பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் 1/7 கலைச்சொற்கள், துறைச் சொற்கள், தொழில் நுட்பச் சொற்கள் எனச் சிலவாறாகக் கூறப்படும் சொற்கள் இயல்பான வழக்கில் கருதப்படும் பொருள்களுக்கு மாறாகச் சிறப்புப் பொருள்களில் பயன்படுத்தப் படுகின்றன. ஒரு சொல்லே பயன்படும் இடத்திற்கு ஏற்ப இயல்புச் சொல்லாகவோ சிறப்புச் சொல்லாகவோ பயன்படுத்தப்படுகிறது. எனவே, கலைச்சொல் என…
