புகழுக்குரிய புலம் பெயர் தமிழர் உழைப்பு! – கவிமணி

தென்னாடு விட்டேகித் தீவாந்  தரத்தையெலாம் பொன்னாடாய் மாற்றிப் புரந்திடுவோர் – எந்நாளும் ஓங்கும் அறிவால் உழைப்பால் பெரும்புகழைத் தாங்கும் தமிழரே தாம். பொங்கு கடல் கடந்து – சென்றிப் பூவுலகத் தினிலே எங்கெங்கு வாழ்ந்தாலும் – தமிழர் ஏகக் குலத்தவராம். கோடரி மண்வெட்டி – கலப்பை குந்தாலி ஏந்துவோரே நாடெலாம் ஆளுகின்ற – உண்மை நாயக ராவாரையா! பாழ் நிலத்தையெல்லாம் – திருத்திப் பண்படுத்தி மக்கள் வாழ் நிலமாகத் – தமிழர் மாற்றிய தாரறியார்? இலங்கை சிங்கபுரம் – பிசிமுதல் இன்னும் பலவான தலங்களின்…

தமிழ்மக்கள் ஒன்றித்து நின்றால் உயர்வுண்டாம்! – கவிமணி தேசிகவிநாயகம்

என்றும் தமிழ்மக்கள் யாவரும் ஒத்திணங்கி, ஒன்றித்து நின்றால் உயர்வுண்டாம்; – அன்றெனில், மானம்போம், செல்வம்போம், மானிட வாழ்விற்குரிய தானம்போம், யாவும்போம், தாழ்ந்து. பண்டைத் தமிழர் பழம்பெருமை பாடிஇன்னும் மண்டை யுடைத்து வருந்துவதேன்? – அண்டும்இக் காலத்திற் கேற்றகல்வி கற்றுக் கடைப்பிடித்து ஞாலத்தில் வாழ்ந்திடுவோம் நன்கு.  வாணிகம் செய்வோம்; வயலிற் பயிர்செய்வோம்; காணரிய கைத்தொழிலும் கண்டு செய்வோம் – பேணிநம் சந்தத் தமிழ்வளர்ப்போம்; தாய்நாட்டுக்கே உழைப்போம்; சிந்தை மகிழ்ந்து தினம்.  தெய்வம் தொழுவோம்; திருந்தத் தமிழ்கற்போம்; செய்வினையும் நன்றாகச் செய்திடுவோம் – ஐயமின்றி எவ்வெவ் வறமும்…

தமிழா எங்கே உன் தாய்? – பாவலர் கருமலைத்தமிழாழன்

உறுதி   ஏற்பாய் ! அன்னையினை   இழிவுசெய்யும்   தமிழா !   வீட்டில்             அருந்தமிழைக்   கொலைசெய்யும்   தமிழா !   நாட்டில் உன்மொழியை   ஏளனமாய்ப்   பேசிப்   பேசி             உயர்மொழியைத்    தாழ்வுசெய்து    கீழ்மை   யானாய் முன்னோர்கள்   வழிவழியாய்ப்   பேணிக்   காத்த             முத்தமிழில்   பிறமொழியின்   மாசைச்   சேர்த்து விண்வெளியில்   ஓசோனைக்   கெடுத்த   தைப்போல்             விளைவித்தாய்   ஊறுதனைத்   தூய்மை   நீக்கி ! வீட்டிற்குள்    புதையலினை   வைத்துக்   கொண்டு             வீதியிலே   எச்சிலிலை    பொறுக்கு   கின்றாய் காட்டிற்கே   எரித்தநிலா   போன்று   சங்கக்             கவின்நூல்கள்   வீணாகக்    கிடக்கு   திங்கே…

பாளமாய் ஆனதே நேபாளம்! – உருத்ரா

மலை மடிப்புக்குள்ளிருந்தும் மண் பாம்பின் சீற்றமா? பாளம் பாளமாய் ஆனதே நேபாளம். நசுங்கிய உடல்கள் திண்காரைப் பிணங்களாய் என்னே அவலம்!. செங்கல் நொறுங்கிய குவியல்களில் தொன்மைப்படிவங்களும் தொலைந்து கிடக்கின்றன. குரல்கள் அவிழ்க்கும் முன் உயிர்ப்பூக்கள் கூழாய்ப்போயின. ஊழிக்கூத்தின் உடுக்கைகள் கோவில்களில் அதிர்ந்து காட்டிய போதெலாம் கண்களில் ஒற்றிக்கொண்டோமே ஒத்திகை தான் அது என‌ இன்று காட்டினானோ அந்த சிவன். எண்ணிக்கை தெரியாத குற்றமல்ல. கிடைக்கின்ற கைகளும் கால்களும் முழுக்கணக்கு காட்டும்போது நம் மூச்சடங்கி அல்லவா போகிறது பெரும் அதிர்ச்சியில். அந்த மக்களுக்கு நாம் தோள்…

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 23 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

(சித்திரை 20, 2046 / மே 03, 2015 தொடர்ச்சி) காட்சி – 23 அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம்      :     மரக்கிளை நிலைமை  :     (பள்ளி செல்லும் பிள்ளைகள் பற்றி செல்லப்பேடு வினவுது இங்கே) ஆண்   :  என்னப்பேடே! பார்க்கின்றாய்? என்னவோ நாட்டில் நடந்ததுபோல்! பெண்   :  பெற்றோர் தவிக்கும் திங்களென கற்றோர் பலரோ சொல்கின்றார்! ஆண்   :  எங்கும் பள்ளி தொடங்குகின்ற திங்களன்றோ? இத்திங்கள்! பெண் :   வித்தகனாக்கத் தன் பிள்ளையை! அத்தனை துன்பமா? பெற்றோர்க்கு! ஆண்  …

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 22 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

(சித்திரை 13, 2046 / ஏப்பிரல்26, 2015 தொடர்ச்சி) காட்சி – 22 அங்கம்    :     கவிஞர், அன்பரசன் இடம்      :     குடிலின் முன்வாசல் நிலைமை  :     (இன்றைய நாட்டு நிலையை நன்றே கவிஞர் செப்புகின்றார்) அன் :     கவிஞரே! கருத்துப் பெட்டகமே! புவியின் உண்மை நிலைதான் என்ன? கவி  :     இன்றைய நாட்டின் நிலைமைதனை நன்றே உரைக்கிறேன்! கேட்டு விடு! சிந்தனை எல்லாம் சோற்றிற்கே – நாளை செலவிட வேண்டும் இந்நாட்டில் – சோறு வெந்ததும் சோற்றுப் பந்திக்கே – நாம் முந்திட…

நேபாளத்தில் சீற்றமடா ! – சி. செயபாரதன், கனடா

  இமயத் தொட்டிலில் ஆட்டமடா !  இயற்கை அன்னை சீற்றமடா !  பூமாதேவி சற்று தோள சைத்தாள் !  பொத்தென வீழும் மாளிகைகள்  பொடி ஆயின குடி வீடுகள் !  செத்து மாண்டவர் எத்தனை பேர் ?  இமைப் பொழுதில் எல்லாம் இழந்தவர் எத்தனை பேர் ?  கட்டிய இல்லம், சேமித்த செல்வம்  பெட்டி, படுக்கை, உடுப்பு,  உணவெல்லாம் மண்ணாய்ப் போச்சு !  அந்தோ !  வேனிற் கால வாடைக் காற்றில், அழும் சேய்க ளோடு  தெரு மேடையில் தூங்குகிறார் !  வானமே கூரை…

எல்லா நாளும் பொன்னாளே! – புலவர்மணி இரா.இளங்குமரன்

ஞாயி றன்று பிறந்தவனே நன்மை எல்லாம் அடைவாயே திங்க ளன்று பிறந்தவனே திறமை பலவும் பெறுவாயே செவ்வாய் அன்று பிறந்தவனே செல்வச் செழிப்பில் வாழ்வாயே புதனாம் நாளில் பிறந்தவனே புகழில் சிறந்து வாழ்வாயே வியாழ னன்று பிறந்தவனே விளங்கும் அறிவில் உயர்வாயே வெள்ளி யன்று பிறந்தவனே வெற்றி யாவும் பெறுவாயே சனியாம் கிழமை பிறந்தவனே சலியா உறுதி அடைவாயே எந்த நாளில் பிறந்தாலும் எந்தக் குறையும் வருவதில்லை. எல்லாநாளும் நன்னாளே எவர்க்கும் ஏற்ற பொன்னாளே இயற்கை தந்த நாள்களிலே எவரே குறைகள் காண்பதுவே. –…

தாயன்பும் தாய்த்தமிழும் – சாலை இளந்திரையன்

அணைக்கட்டால் மறித்தாலும் வாய்க்காலாகி                 அதிகவளம் தருகின்ற ஆற்றைப் போல இணையில்லா ஈகத்தால் எளியோர் தம்மை                 ஏற்றெடுத்துக் காப்பாற்றும் சான்றோர் போல கணிப்பரிய பெரும்புகழை ஈட்டி வைத்துக்                 காலத்தை வென்றிருக்கும் தமிழி னோடு தணிப்பரிய அன்புடனே பழகு கின்றேன்                 தனியன்புத் தாயன்பைக் காணு கின்றேன். – சாலை இளந்திரையன்: தாய் எழில் தமிழ்: தாய்மொழி: 14

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 21 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

  (சித்திரை 06, 2046 / ஏப்பிரல் 19, 2015 தொடர்ச்சி)   காட்சி – 21 (நாடகக்காட்சி – 7) அங்கம்    :     அருண்மொழி, பூங்குயில் இடம்      :     அருண்மொழி இல்லம் நிலைமை  :     (அருண்மொழி பாடலைக் கேட்ட பூங்குயில் அன்புக் கணவனை ஐயம் கொள்ள திருவளர்ச் செல்வனோ திருத்தியதோடு இன்பத்தைப் பொழியவும் செய்கிறான் ஆங்கே) அரு       :      பொழிபிறை நனி நெற்றி! தோழி!                                                                 எழில் இதழ் கனிக்கொவ்வை! தோழி! வழிகின்ற குழல் அருவி! தோழி! பொழிகின்ற வாய் அமுதம்! தோழி! விழி…

தமிழ்பேசி நாடுக நாளும் நயம் – சந்தர் சுப்பிரமணியன்

தமிழ் அந்தாதி இனிக்கும் விருந்தாகி இன்சுவைத் தேனாய் கனிக்குள் அமுதாய் கவியாய் – மனத்திடை ஆடிடும் காரிகையாய் ஆகும் தமிழ்பேசி நாடுக நாளும் நயம் (01) நயமாய் சொற்புனைந்து நல்கி விருத்த மயமாய் விளைவித்தான் விந்தை – அயமென வீழும்நம் கம்பன்தன் பாடல், தமிழ்ச்சுவை வாழப் பிறந்த வளம் (02) (அயம் – சுனை) வளமாய்த் தமிழ்பேசி, வார்த்தைகொண்(டு) ஆட்டக் களத்தே களித்தாடு; காணும் வளத்தால் பயின்று தமிழ்நன்கு பாநூறு பாடி முயன்றுயர்வாய் மேலே முனைந்து (03) முனைந்தவன் நெய்தமுழு வேதக் குறிஞ்சி புனைந்தவள்…

தமிழ் மூன்றும் செழித்ததென்று கொட்டு முரசே! – பாவேந்தர் பாரதிதாசன்

கொட்டு முரசே! எல்லார்க்கும் நல்லின்பம் எல்லார்க்கும் செல்வங்கள் எட்டும் விளைந்ததென்று கொட்டுமுரசே – வாழ்வில் கட்டுத் தொலைந்ததென்று கொட்டு முரசே! இல்லாமை என்னும்பிணி இல்லாமல் கல்விநலம் எல்லார்க்கும் என்றுசொல்லி கொட்டுமுரசே – வாழ்வில் பொல்லாங்கு தீர்ந்ததென்று கொட்டு முரசே! சான்றாண்மை இவ்வுலகில் தேன்றத் துளிர்த்த தமிழ் மூன்றும் செழித்ததென்று கொட்டுமுரசே – வாழ்வில் ஊன்றிய புகழ்சொல்லிக் கொட்டு முரசே! ஈன்று புறந்தருதல் தாயின்கடன்! உழைத்தல் எல்லார்க்கும் கடனென்று கொட்டுமுரசே! – வாழ்வில் தேன்மழை பெய்ததென்று கொட்டு முரசே! – பாவேந்தர் பாரதிதாசன்