இனியொருநாள் வந்திடாதா? – சாப்டூர் சதுரகிரியான்

இனியொருநாள் வந்திடாதா? தமிழர் எல்லாம் எழுச்சியுற்றே செந்தமிழில் பேசி டாரா? கனியிருக்கக் காய்தின்னும் போக்கை மாற்றிக் கனிமொழியாம் நற்றமிழில் கற்றி டாரா? தனித்தமிழால் கல்விகற்றே உயர்ந்தி டாரா? சங்கக்காலம் மீண்டெழுந்தே வந்தி டாதா? இனித்திடும்நல் இலக்கியங்கள் தோன்றி டாதா? இனியேனும் தமிழினமே விழிப்பு கொள்வாய்! தமிழ்மொழியை மறக்கடிக்கும் மழலைப் பள்ளி தமிழர்க்குத் தேவைதானா? தமிழில் கற்றால் வாய்ப்பின்றி வாழவழி யற்றுப் போமோ? மறத்தமிழன் யாமென்று சொல்லல் பொய்யோ? வாய்கிழிய தமிழ்மொழியை வாழ்த்தி விட்டு மாற்றானின் மொழிவழியில் கற்பித் தல்ஏன்? தாய்தன்னைப் பேணுதல்நம் கடமை யன்றோ?…

தனித்தியங்கும் தன்மை தமிழினுக் குண்டு! – பாவேந்தர் பாரதிதாசன்

தமிழனே இது கேளாய் — உன்பால் சாற்ற நினைத்தேன் பல நாளாய்! கமழும் உன் தமிழினை உயிரென ஓம்பு காணும் பிற மொழிக ளோவெறும் வேம்பு! நமையெலாம் வடமொழி தூக்கிடும் தாம்பு நம்உரி மைதனைக் கடித்ததப் பாம்பு! தமிழனே இது கேளாய்! தனித்தியங் கும்தன்மை தமிழினுக் குண்டு; தமிழே ஞாலத்தில் தாய்மொழி பண்டு! கனிச்சாறு போற்பல நூலெலாம் கண்டு காத்ததும் அளித்ததும் தமிழ்செய்த தொண்டு. தமிழனே இது கேளாய்! வஞ்சகர் வந்தவர் தமிழாற் செழித்தார் வாழ்வினில் உயர்ந்தபின் தமிழையே பழித்தார் நம்செயல் ஒழுக்கங்கள் பற்பல…

முள்ளிநிலத்தில் கள்ளக் கொலையாளிகள்! – – கவிஞர் தணிகைச் செல்வன்

முள்ளிப்போர் முனைமுகத்தில் முணைந்து சரணடைய  வெள்ளைக் கொடிவீசி வந்தாரை; விதிமீறி கள்ளக் கொலைசெய்த காட்டுவெறி காண்கிலையோ…!  பிள்ளைக் கறிகேட்கும் பேயர்களின் பலிகளமாம்  முள்வேலிக்குள் கதறும் மரணஒலி கேட்கலையோ…!  கொள்ளையர்கள் கொடுங்கரத்தில் குமரியர்கள் குமுறுகின்ற  வல்லுறவின் வதைகண்டும் மனசாட்சி வியர்க்கலையோ…!  ஒரு குவளை நீருக்கும், ஒரு கவளம் சோற்றுக்கும்  இரவலரைப் போல் ஏங்கும் ஈழவரைக் காண்கிலையோ…!  ஐயோ உலகே! ஐயகோ பேருலகே!  பொய்யோ உலகசபை ? புனைவுகளோ சபைவிதிகள் ?  கையேந்தி வந்தாரைக் கரமேந்தி காத்த இனம்  கையேந்துதல் காண்கிலையோ கஞ்சிக்கும் கருணைக்கும்.  எல்லாம் இழந்தோம்…

என்றும் நமக்கு நன்னாளே! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஒவ்வொரு நாளும் பிறக்கின்றோம் எல்லா நாளும் சிறந்திடுவோம்! வாழ்க்கை என்பது வாழ்ந்திடவே வாழும் முறைப்படி வாழ்ந்திடுவோம்! வாழ்க்கை என்பது போராட்ட மானால் போரில் கலந்து வென்றிடுவோம்! வாழ்க்கை என்பது விளையாட் டெனில் ஆடி வாகை சூடிடுவோம்! வாழ்க்கை என்பது பயண மாயின் இனிதே இலக்கை அடைந்திடுவோம்! வாழ்க்கை என்பது கேளிக்கை என்றால் பார்த்து நாமே மகிழ்ந்திடுவோம்! வாழ்க்கை என்பது கணக்கு எனவே கணித்துப் பார்த்துத் தேர்ந்திடுவோம்! வாழ்க்கை என்பது வரலா றாகச் செம்மைச் செயலால் செதுக்கிடுவோம்! வாழ நாமும் பிறந்து விட்டோம் வாழ்ந்தேதான் காட்டிடுவோம்!…

போதை – மரு.பாலசுப்பிரமணியன்

பாதையிலே கால் நடந்தால் ஊர் போய்ச் சேரும் போதையிலே கால் நடந்தால் காடு போய் சேரும் பிணியாலும் நோயாலும் மாண்டவர் சில கோடி புகையாலும் மதுவாலும் மாண்டவர் பல கோடி புகழின் பாதை கோபுரத்துக்கு வழி காட்டும் மதுவின் போதை புதை குழிக்கு வழி காட்டும் போதை என்பது நமக்கு நாமே வைக்கும் கொள்ளி நெருப்பு சோம்பல் என்பது நமக்கு நாமே கட்டும் கல்லறை நெஞ்சினிலே துயரம் வந்ததென்று போதையில் மயங்காதே நெஞ்சினிலே துணிவு வந்த பின்னே பாதையில் தயங்காதே பாதையில் தள்ளாடும் படகுகள்…

இறைவனை எங்கும் கண்டிலனே – கவிமணி

தெப்பக் குளங் கண்டேன் – சுற்றித் தேரோடும் வீதி கண்டேன் எய்ப்பில் வைப்பா மவனைத் – தோழி ஏழை நான் கண்டிலனே சிற்பச் சிலைகள் கண்டேன் – நல்ல சித்திர வேலை கண்டேன் அற்புத மூர்த்தி யினைத் – தோழி அங்கெங்குங் கண்டிலனே பொன்னும் மணியுங் கண்டேன் – வாசம் பொங்கு பூ மாலை கண்டேன் என்னப்பன் எம்பி ரானைத் – தோழி இன்னும் யான் கண்டிலனே தூப மிடுதல் கண்டேன் – தீபம் சுற்றி எடுத்தல் கண்டேன் ஆபத்தில் காப்பவனைத் – தோழி…

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 25 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

(வைகாசி 3, 2015 / மே 17, 2015 தொடர்ச்சி) காட்சி – 25 அங்கம்    :    ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம்        :    மரக்கிளை நிலைமை    :    (காட்சியைக் கண்டு சிட்டுகளோ! நகை                     ஆட்சியைக் கண்டு வியக்கின்றது) பெண்  :    பெண்களுக்கென்ன நகையின்மேல் இத்தனை ஆசை உள்ளது சொல்? ஆண்  :    கண்ணே! பெண்ணுக்கு நகைதானே! என்ன அதில்தான் உள்ளதுவோ? பெண்  :    மேலைநாட்டுப் பெண்களுக்கு இத்தனை விருப்பம் இதில் உண்டோ? ஆண் …

ஒரு முறையாவது முத்தமிடவேண்டும்! – புகழேந்தி தங்கராசு

கதை எழுதுவதென்று முடிவெடுத்த கணத்தில் கண் முன்னே விரிந்ததெல்லாம் கண்ணீர்க்கதைகள்… எதை எழுதுவது? ஒருமுறைக்கு இருமுறை எண்ணிய பிறகுதான் எழுதுகிறேன் இதை! இது ஒரு விதையின் முகவரியை விவரிக்கிற முயற்சி… கவிதையென்றோ…. கதையென்றோ…. எப்படியாயினும் இதை அழைக்கலாம் நீங்கள்.. உண்மை – என்றே இதை விளிக்கிறேன் நான்! இரண்டாயிரத்து ஒன்பது பிறந்து மூன்று மாதங்கள் முடிந்துவிட்டன. பதுங்குகுழிக்குள் இருக்க நேரும் அவலம் மட்டும் முடியவில்லை அவர்களுக்கு! முரசுமோட்டையிலிருந்து அம்பலவன்பொக்கணை வரை மாறிக்கொண்டேயிருக்கிறது இடம்… பதுங்குகுழிகள் மட்டும் மாறவேயில்லை! இடப்பெயர்ச்சி என்பது அவர்களைப் பொருத்தவரை ஒரு…

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 24 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

 (சித்திரை 27, 2046 / மே 10, 2015 தொடர்ச்சி) காட்சி – 24 அங்கம்    :     அருண்மொழி, பூங்குயில் இடம்      :     அருண்மொழி இல்லம் நிலைமை  :     (ஒப்பனைக்காக அருண்மொழி, அனைத்தும் தப்பாது வாங்கி இல்லம் வருதல்) அரு   :   கொடியே! நீ! வருக! கோவில் நாம் செல்வோம் நொடியும் இனி இல்லை புரிவாய்! நீ கண்ணே! பூங்   :    வாடா மலர்ப் பட்டோ! காஞ்சி செம்பட்டோ! தேடி நான் கட்டி வருகிறேன் அத்தான்! அரு   :   வீடே ஒரு கடையாய் இருந்ததும்…

கூனுமா தமிழன் வீரம்? – காசி ஆனந்தன்

தமிழ்க்குலம் புயலாய் மாறும்! தூற்றினார் தமிழை என்னும் துடித்திடும் சேதி கேட்டு மாற்றலர் மண்ணில் பாய்ந்து மானத்தைக் கல்லாய் மாற்றி ஏற்றினான் சேரன் ஆங்கே எதிரியின் தலைமீ தென்ற கூற்றினைக் கேட்ட பின்னும் கூனுமோ தமிழன் வீரம்? பறித்திடத் தமிழன் மண்ணைப் பரங்கியர் வந்த வேளை தறித்தவர் தலைகள் கொய்து தன்வலி காட்டி நின்ற மறப்புலித் தேவன் வீரன் மரபினில் வந்த நம்மோர் துரத்துது குண்டென் றாலும் துணிவிழந் தோடுவாரோ? உற்றசெந் தமிழி னத்தை ஒழித்திட முரசம் ஆர்த்த துட்டகை முனுவின் கொட்டம் தூள்படச்…

விதியே, விதியே, தமிழச் சாதியை என்செய நினைத்தாய்?- மாக்கவி பாரதியார்

விதியே, விதியே, தமிழச் சாதியை என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ? சார்வினுக் கெல்லாம் தகத்தக மாறித் தன்மையும் தனது தருமமும் மாயாது என்றுமோர் நிலையா யிருந்துநின் அருளால் வாழ்ந்திடும் பொருளொடு வகுத்திடு வாயோ? தோற்றமும் புறத்துத் தொழிலுமே காத்துமற்று உள்ளுறு தருமமு உண்மையும் மாறிச் ….. ….           …..             …     …..  சிதைவுற் றழியும் பொருள்களில் சேர்ப்பையோ? ‘அழியாக் கடலோ? அணிமலர்த் தடமோ? வானுறு மீனோ? மாளிகை விளக்கோ? கற்பகத் தருவோ? காட்டிடை மரமோ? விதியே, தமிழச் சாதியை எவ்வகை விதித்தாய்’ என்பதன் மெய்யெனக்…