தமிழ்மேல் ஆணை! – பாவேந்தர் பாரதிதாசன்

தாயின்மேல் ஆணை! தந்தைமேல் ஆணை! தமிழகமேல் ஆணை! துாயஎன் தமிழ்மேல் ஆணையிட்டே நான் தோழரே உரைக்கின்றேன்; நாயினும் கீழாய்ச் செந்தமிழ் நாட்டார் நலிவதை நான் கண்டும், ஓயுதல் இன்றி அவர் நலம் எண்ணி உழைத்திட நான் தவறேன். தமிழரின் மேன்மையை இகழ்ந்தவ னைஎன் தாய்தடுத் தாலும் விடேன்! எமைநத்து வாயென எதிரிகள் கோடி இட்டழைத் தாலும் தொடேன்! தமக்கொரு தீமை. என்று நற்றமிழர் எனைஅழைத்திடில் தாவி இமைப்பினில் ஓடித் தரக்கடவேன் நான் இனிதாம் என் ஆவி! மானமொன்றே நல்வாழ்வெனக் கொண்டு வாழ்ந்த என் மற…

ஒலி என்பதெல்லாம் செந்தமிழ் முழக்கம்! – பாவேந்தர் பாரதிதாசன்

எந்நாள்? அந்த வாழ்வுதான் எந்த நாள் வரும்? அந்த வாழ்வுதான் இந்த மாநிலம் முழுதாண் டிருந்தார் இணையின்றி வாழ்ந்தார் தமிழ்நாட்டு வேந்தர் அந்த வாழ்வுதான் எந்தநாள் வரும்? ஒலி என்பதெல்லாம் செந்தமிழ் முழக்கம்; ஒளி என்பதெல்லாம் தமிழ்க் கலைகளாம்! புலி, வில், கயல் கொடி மூன்றினால் புது வானமெங்கும் எழில் மேவிடும் அந்த வாழ்வுதான் எந்தநாள் வரும்? குறைவற்ற செல்வம், வாழ்வில் இன்பவாழ்வு கொண்ட தமிழனுள்ளம் கண்ட தமிழிசை, பிற மாந்தர்க்கும் உயி ரானதே பெறலான பேறு சிறி தல்லவே! அந்த வாழ்வுதான் எந்தநாள்…

அருந்தமிழ் நுகர்ந்து மகிழ்வோமே! – கவிமணி

வள்ளுவர் தந்த திருமறையைத் – தமிழ்      மாதின் இனிய உயிர் நிலையை உள்ளம் தெளிவுறப் போற்றுவமே – என்றும்      உத்தம ராகி ஒழுகுவமே. பாவின் சுவைக்கடல் உண்டெழுந்து – கம்பன்      பாரிற் பொழிந்ததீம் பாற்கடலை நாவின் இனிக்கப் பருகுவமே – நூலின்      நன்னயம் முற்றுந் தெளிகுவமே, தேனிலே ஊறிய செந்தமிழின் – சுவை      தேரும் சிலப்பதி காரமதை ஊனிலே எம்முயிர் உள்ளளவும் – நிதம்      ஓதி யுணர்ந்தின் புறுவோமே. கற்றவர் மெச்சும் கலித்தொகையாம் – இன்பக்…

இசை முரசு நின்றது! இரங்கற்பா!

  நாகூர்  தேன்குரல் அனிபா (HONEYபா!) – (உ)ருத்ரா “அழைக்கின்றார் அண்ணா” என்ற கணீர் தேன்குரலில் திராவிடக் கீதம் யாழ் மீட்டிய‌ மா மனிதர் திரு நாகூர் அனிபா மறைந்ததற்கு நம் ஆழ்ந்த இரங்கல்கள். எத்தனைப்பாடல்கள்? அந்தக் குரல் சுவடுகளுக்கு இறைவனின் கையெழுத்தும் போடப்பட்டிருக்கும் விந்தை உண்டு. “இறைவனிடம் கையேந்துங்கள்” என்று மக்கள் முன் உருகி வழிந்தார். காசுகள் குலுங்கும் ஒலிபோல‌ அந்த கைப்பறையின் ஒலியில் ஆகாயமே குலுங்கி கீழே உதிர்ந்தது. அனி{ ‘HONEY’)பா  அவர்களின் தேன்குரலில் தமிழின் இன்பத்தேன் வந்து பாய்ந்ததை இந்தத் தமிழ்…

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 19– ஆ.வெ.முல்லை நிலவழகன்

 (பங்குனி 22, 2046 ஏப்பிரல் 05, 2015 தொடர்ச்சி)   காட்சி – 19   அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம்      :      மரக்கிளை நிலைமை  :     (பேடும் சிட்டும் மனமொன்றி ஈடுபடல் நல் இன்பத்தில்) பெண் :     சீழ்க்கை ஒலியும்! கைத்தட்டலும் வானை முட்டுது! பார்த்தாயா? ஆண் :     வாழ்வில் காண இன்பத்தை வாழ்த்தொலி மூலம் கண்டுவிடும் ஒருவகைக் கூட்டமாய் இருக்கலாம்! என்றே ஆண்சிட்டு விடையிறுக்க (குறுநகை கொண்டு பேடையும் சிட்டின் கழுத்தை நீவியது)   (காட்சி…

வாய்ப்பு வந்தால் முன்னேற்றமும் வரும்! – கவிமணி

    அமிழ்ந்துறையும் மணிகள்  ஆழ்கடலின் கீழெவர்க்கும்      அறியமுடி யாமல் அளவிறந்த ஒளிமணிகள்      அமிழ்ந்துறையும், அம்மா!  பாழ்நிலத்தில் வீணாகப்      பகலிரவும் பூத்துப் பலகோடிப் பனிமலர்கள்      பரிமளிக்கும், அம்மா! கடல் சூழ்ந்த உலகுபுகழ்      காவியம்செய் யாமல் கண்மூடும் கம்பருக்கோர்      கணக்கில்லை, அம்மா!  இடமகன்ற போர்முனைதான்      ஈதென்னக் காணா திறக்கின்ற வில்விசயர்      எத்தனைபேர், அம்மா! (வேறு)  தக்க திறனிருந்தும் – நல்ல      தருணம் வாய்த்திலதேல், மிக்க புகழெய்தி – மக்கள்      மேன்மை அடையாரம்மா!…

இனமே சாகும்! – பாரதிதாசன்

தமிழர்க்கு அழைப்பு தமிழரெல்லாம் தமிழரையே சார்தல் வேண்டும் தமிழரல்லார் தமைச்சார்தல் தீமை செய்யும்! தமிழர்க்குத் தமிழர் தாம் இடர்செய் தாலும் தமிழர்பொது நலமெண்ணிப் பொறுக்க வேண்டும தமிழரெல்லாம் தமிழரன்றோ! தமிழர் அல்லார் தமிழரல்லார் என்பதிலும் ஐய முண்டோ? தமிழர்க்குத் தமிழரல்லார் இதுவரைக்கும் தமைமறந்தும் ஒரு நன்மை நினைத்த துண்டோ? தமிழனொரு தமிழனுக்குத் தீமை செய்தால் தனிமுறையிற் செய்ததென அதைம றந்து தமிழரது பொதுநலத்துக் குயிருந் தந்து தமிழரது பண்பை நிலைநிறுத்த வேண்டும், தமிழனுக்குத் தனிமுறையில் செய்த தீமை தமிழர்க்குச் செய்ததென நினைத்தல் நன்றா? தமிழரெலாம்…

தமிழிசைக்கு நீடுலகில் உண்டோ நிகர்? – கவிமணி

வெந்தழல் நீராகும்; வெள்ளெலும்பு பெண்ணாகும்; வந்தமத வேழம் வணங்கிடுமே; – சந்தமெழப் பாடுவார் உள்ளுருகிப் பாடும் தமிழிசைக்கு நீடுலகில் உண்டோ நிகர்? – கவிமணி தேசிகவிநாயகம் (பிள்ளை)

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 18– ஆ.வெ.முல்லை நிலவழகன்

(பங்குனி 15, 2045 / மார்ச்சு 29, 2015 தொடர்ச்சி)   காட்சி – 18 (நாடகக் காட்சி – 6) அங்கம்    :     அருண்மொழி, பூங்குயில் இடம்      :     பள்ளியறை நிலைமை  :     (கூடலிலே இன்பம் திளைத்த மனமோ தேடியே அதனை நினைக்கச் செய்ய இன்ப நினைவினை அசையாய்ப் போட்டு மென்று உதிர்க்கிறான் வெளியில் அதனை அருண்    :      வெள்ளி ஒளிக் கிண்ணத்திலே பாலின் சுவையிருக்க! கள்ளியவள் கன்னத்திலே கனியின் சாறிருக்க! மதியென வந்தாள்! மதியே நானென்று! சதிரென மொழிந்தாள் சதிரே…

நல்வழியின் சொல்வழியே… சந்தர் சுப்பிரமணியன்

நம்மை அணுகி நலங்காப்போம் நாமென்றே நிம்மதியாய் நிற்கும் நிழற்சுற்றம் – வெம்மைவரின் கோதுவேர்த் தாகமறக் கொட்டுமழை போன்றதுவே தீதொழிய நன்மை செயல் செயற்கண் நுணங்கித் திறஞ்சேர்த்துப் பின்னர் அயல்நின்றாங்(கு) ஆர்குறைகள் ஆயும் – இயல்பதனைத் தட்டாதார் வெல்வார், தகவிலார்க்(கு) ஏதுசெயம் பட்டாங்கில் உள்ள படி படிக்கும் பொருளுணர்ந்து பட்டறிவோ டுள்ளம் துடிக்குநிலை கொண்டோர் தொழிற்செய்! – விடுத்ததனை அஞ்சுமனம் கொண்டே அறிவில்லா மூடராய்த் துஞ்சுவதோ மாந்தர் தொழில் தொழிற்சிறக்கப் போராடித் தொல்லைபல பெற்றும் உழைப்பினுல கென்றும் உதவும் – குழியடிகாண் கல்லை உடைக்கின்நீர் காட்டும்…

பேரின்பம் நல்குமாம் தாய்மொழி – கவிக்கோ ஞானச்செல்வன்

  தாய்மொழி என்பது சிந்தனைக்கோ ஊற்றுக்கண் சீர்மைக்கோ நாற்றங்கால் வந்தனைக்கோ சீர்தெய்வம் வாழ்க்கைக்கோ உயிர்நாடி முந்திவரும் நல்லறிவு மூளுகின்ற மெய்யுணர்வு வந்துலவும் பூந்தென்றல் வழிகாட்டும் ஒளிவிளக்கு தாய்மொழி என்பது தாய்முலைப் பாலதாம் ஊட்டம்மிகத் தருவதாம் உரமூட்டும் வரமதாம் வலிமையைச் சேர்ப்பதாம் வல்லமை வளர்ப்பதாம் பிணியெலாம் அகற்றுமாம் பேரின்பம் நல்குமாம் நந்தமிழ் வண்டமிழ் செந்தமிழ் பைந்தமிழ் இன்தமிழ் பொன்தமிழ் சொற்றமிழ் நற்றமிழ் சுகத்தமிழ் அகத்தமிழ் சங்கத்தமிழ் தங்கத்தமிழ் பொங்குதமிழ் தங்குதமிழ் கன்னல்தமிழ் கட்டித்தமிழ்! – கவிக்கோ ஞானச்செல்வன்

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 17– ஆ.வெ.முல்லை நிலவழகன்

(பங்குனி 8, 2045 / மார்ச்சு 22, 2015 தொடர்ச்சி)   காட்சி – 17 அங்கம்      :      ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம்       :      குருவிக்கூடு நிலைமை   : (தேர்தல் பற்றிய கருத்துரையைப் பேடைக்கு    நேர்பட சிட்டு உரைக்கின்றது!) ஆண் :      சின்னப்பேடே! சிரிப்பென்ன?                                                                                                            என்ன! கொஞ்சம் சொல்லிவிடேன் பெண் :      தேர்தல் தேர்தல் எனப் பலரோ                     வேர்வை வடியப் படித்திட்டார்!                      சோர்வே எதுவும் இல்லாது                       கூர்மையாய் சுவரில் எழுதிட்டார்!            …