பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 23 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

(சித்திரை 20, 2046 / மே 03, 2015 தொடர்ச்சி) காட்சி – 23 அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம்      :     மரக்கிளை நிலைமை  :     (பள்ளி செல்லும் பிள்ளைகள் பற்றி செல்லப்பேடு வினவுது இங்கே) ஆண்   :  என்னப்பேடே! பார்க்கின்றாய்? என்னவோ நாட்டில் நடந்ததுபோல்! பெண்   :  பெற்றோர் தவிக்கும் திங்களென கற்றோர் பலரோ சொல்கின்றார்! ஆண்   :  எங்கும் பள்ளி தொடங்குகின்ற திங்களன்றோ? இத்திங்கள்! பெண் :   வித்தகனாக்கத் தன் பிள்ளையை! அத்தனை துன்பமா? பெற்றோர்க்கு! ஆண்  …

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 22 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

(சித்திரை 13, 2046 / ஏப்பிரல்26, 2015 தொடர்ச்சி) காட்சி – 22 அங்கம்    :     கவிஞர், அன்பரசன் இடம்      :     குடிலின் முன்வாசல் நிலைமை  :     (இன்றைய நாட்டு நிலையை நன்றே கவிஞர் செப்புகின்றார்) அன் :     கவிஞரே! கருத்துப் பெட்டகமே! புவியின் உண்மை நிலைதான் என்ன? கவி  :     இன்றைய நாட்டின் நிலைமைதனை நன்றே உரைக்கிறேன்! கேட்டு விடு! சிந்தனை எல்லாம் சோற்றிற்கே – நாளை செலவிட வேண்டும் இந்நாட்டில் – சோறு வெந்ததும் சோற்றுப் பந்திக்கே – நாம் முந்திட…

நேபாளத்தில் சீற்றமடா ! – சி. செயபாரதன், கனடா

  இமயத் தொட்டிலில் ஆட்டமடா !  இயற்கை அன்னை சீற்றமடா !  பூமாதேவி சற்று தோள சைத்தாள் !  பொத்தென வீழும் மாளிகைகள்  பொடி ஆயின குடி வீடுகள் !  செத்து மாண்டவர் எத்தனை பேர் ?  இமைப் பொழுதில் எல்லாம் இழந்தவர் எத்தனை பேர் ?  கட்டிய இல்லம், சேமித்த செல்வம்  பெட்டி, படுக்கை, உடுப்பு,  உணவெல்லாம் மண்ணாய்ப் போச்சு !  அந்தோ !  வேனிற் கால வாடைக் காற்றில், அழும் சேய்க ளோடு  தெரு மேடையில் தூங்குகிறார் !  வானமே கூரை…

எல்லா நாளும் பொன்னாளே! – புலவர்மணி இரா.இளங்குமரன்

ஞாயி றன்று பிறந்தவனே நன்மை எல்லாம் அடைவாயே திங்க ளன்று பிறந்தவனே திறமை பலவும் பெறுவாயே செவ்வாய் அன்று பிறந்தவனே செல்வச் செழிப்பில் வாழ்வாயே புதனாம் நாளில் பிறந்தவனே புகழில் சிறந்து வாழ்வாயே வியாழ னன்று பிறந்தவனே விளங்கும் அறிவில் உயர்வாயே வெள்ளி யன்று பிறந்தவனே வெற்றி யாவும் பெறுவாயே சனியாம் கிழமை பிறந்தவனே சலியா உறுதி அடைவாயே எந்த நாளில் பிறந்தாலும் எந்தக் குறையும் வருவதில்லை. எல்லாநாளும் நன்னாளே எவர்க்கும் ஏற்ற பொன்னாளே இயற்கை தந்த நாள்களிலே எவரே குறைகள் காண்பதுவே. –…

தாயன்பும் தாய்த்தமிழும் – சாலை இளந்திரையன்

அணைக்கட்டால் மறித்தாலும் வாய்க்காலாகி                 அதிகவளம் தருகின்ற ஆற்றைப் போல இணையில்லா ஈகத்தால் எளியோர் தம்மை                 ஏற்றெடுத்துக் காப்பாற்றும் சான்றோர் போல கணிப்பரிய பெரும்புகழை ஈட்டி வைத்துக்                 காலத்தை வென்றிருக்கும் தமிழி னோடு தணிப்பரிய அன்புடனே பழகு கின்றேன்                 தனியன்புத் தாயன்பைக் காணு கின்றேன். – சாலை இளந்திரையன்: தாய் எழில் தமிழ்: தாய்மொழி: 14

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 21 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

  (சித்திரை 06, 2046 / ஏப்பிரல் 19, 2015 தொடர்ச்சி)   காட்சி – 21 (நாடகக்காட்சி – 7) அங்கம்    :     அருண்மொழி, பூங்குயில் இடம்      :     அருண்மொழி இல்லம் நிலைமை  :     (அருண்மொழி பாடலைக் கேட்ட பூங்குயில் அன்புக் கணவனை ஐயம் கொள்ள திருவளர்ச் செல்வனோ திருத்தியதோடு இன்பத்தைப் பொழியவும் செய்கிறான் ஆங்கே) அரு       :      பொழிபிறை நனி நெற்றி! தோழி!                                                                 எழில் இதழ் கனிக்கொவ்வை! தோழி! வழிகின்ற குழல் அருவி! தோழி! பொழிகின்ற வாய் அமுதம்! தோழி! விழி…

தமிழ்பேசி நாடுக நாளும் நயம் – சந்தர் சுப்பிரமணியன்

தமிழ் அந்தாதி இனிக்கும் விருந்தாகி இன்சுவைத் தேனாய் கனிக்குள் அமுதாய் கவியாய் – மனத்திடை ஆடிடும் காரிகையாய் ஆகும் தமிழ்பேசி நாடுக நாளும் நயம் (01) நயமாய் சொற்புனைந்து நல்கி விருத்த மயமாய் விளைவித்தான் விந்தை – அயமென வீழும்நம் கம்பன்தன் பாடல், தமிழ்ச்சுவை வாழப் பிறந்த வளம் (02) (அயம் – சுனை) வளமாய்த் தமிழ்பேசி, வார்த்தைகொண்(டு) ஆட்டக் களத்தே களித்தாடு; காணும் வளத்தால் பயின்று தமிழ்நன்கு பாநூறு பாடி முயன்றுயர்வாய் மேலே முனைந்து (03) முனைந்தவன் நெய்தமுழு வேதக் குறிஞ்சி புனைந்தவள்…

தமிழ் மூன்றும் செழித்ததென்று கொட்டு முரசே! – பாவேந்தர் பாரதிதாசன்

கொட்டு முரசே! எல்லார்க்கும் நல்லின்பம் எல்லார்க்கும் செல்வங்கள் எட்டும் விளைந்ததென்று கொட்டுமுரசே – வாழ்வில் கட்டுத் தொலைந்ததென்று கொட்டு முரசே! இல்லாமை என்னும்பிணி இல்லாமல் கல்விநலம் எல்லார்க்கும் என்றுசொல்லி கொட்டுமுரசே – வாழ்வில் பொல்லாங்கு தீர்ந்ததென்று கொட்டு முரசே! சான்றாண்மை இவ்வுலகில் தேன்றத் துளிர்த்த தமிழ் மூன்றும் செழித்ததென்று கொட்டுமுரசே – வாழ்வில் ஊன்றிய புகழ்சொல்லிக் கொட்டு முரசே! ஈன்று புறந்தருதல் தாயின்கடன்! உழைத்தல் எல்லார்க்கும் கடனென்று கொட்டுமுரசே! – வாழ்வில் தேன்மழை பெய்ததென்று கொட்டு முரசே! – பாவேந்தர் பாரதிதாசன்

தமிழ் எங்கணும் பல்குக! பல்குக!- பாவேந்தர் பாரதிதாசன்

நன்று தமிழ் வளர்க! – தமிழ் நாட்டினில் எங்கணும் பல்குக! பல்குக! என்றும் தமிழ் வளர்க! – கலை யாவும் தமிழ்மொழியால் விளைந்தோங்குக! இன்பம் எனப்படுதல் – தமிழ் இன்பம் எனத்தமிழ் நாட்டினர் எண்ணுக! – பாவேந்தர் பாரதிதாசன்

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 20– ஆ.வெ.முல்லை நிலவழகன்

(பங்குனி 29, 2046 / ஏப்பிரல் 12, 2015 தொடர்ச்சி)   காட்சி – 20 அங்கம்    :     அன்பரசன், கவிஞர் இடம்      :     குடிலின் முன்வாசல் நிலைமை  :(நாடகக் காட்சி முடிவுபெற “காணோமே எனது பெண்ணைத்தான்” கேட்டது மகளிர் பகுதியிலே அழுகுரல் புலம்பலுமாகவே) காவலர் நிலைமையை சீர்செய்ய அமைதி அமைந்தது ஆங்கே பாவலர்சிறிதும் இவற்றையயெல்லாம் பார்க்காது! ஏதோ! நினைத்திருந்தார் அன்ப   :  மொழிவீர்! என்ன சிந்தனை? மொழியாதிருத்தல் நன்றில்லையே? கவி     :  விழி நீர் சொட்டக் கண்டதனை விளக்கமாய் எடுத்தே உரைக்கின்றேன்!…

தமிழ்மேல் ஆணை! – பாவேந்தர் பாரதிதாசன்

தாயின்மேல் ஆணை! தந்தைமேல் ஆணை! தமிழகமேல் ஆணை! துாயஎன் தமிழ்மேல் ஆணையிட்டே நான் தோழரே உரைக்கின்றேன்; நாயினும் கீழாய்ச் செந்தமிழ் நாட்டார் நலிவதை நான் கண்டும், ஓயுதல் இன்றி அவர் நலம் எண்ணி உழைத்திட நான் தவறேன். தமிழரின் மேன்மையை இகழ்ந்தவ னைஎன் தாய்தடுத் தாலும் விடேன்! எமைநத்து வாயென எதிரிகள் கோடி இட்டழைத் தாலும் தொடேன்! தமக்கொரு தீமை. என்று நற்றமிழர் எனைஅழைத்திடில் தாவி இமைப்பினில் ஓடித் தரக்கடவேன் நான் இனிதாம் என் ஆவி! மானமொன்றே நல்வாழ்வெனக் கொண்டு வாழ்ந்த என் மற…

ஒலி என்பதெல்லாம் செந்தமிழ் முழக்கம்! – பாவேந்தர் பாரதிதாசன்

எந்நாள்? அந்த வாழ்வுதான் எந்த நாள் வரும்? அந்த வாழ்வுதான் இந்த மாநிலம் முழுதாண் டிருந்தார் இணையின்றி வாழ்ந்தார் தமிழ்நாட்டு வேந்தர் அந்த வாழ்வுதான் எந்தநாள் வரும்? ஒலி என்பதெல்லாம் செந்தமிழ் முழக்கம்; ஒளி என்பதெல்லாம் தமிழ்க் கலைகளாம்! புலி, வில், கயல் கொடி மூன்றினால் புது வானமெங்கும் எழில் மேவிடும் அந்த வாழ்வுதான் எந்தநாள் வரும்? குறைவற்ற செல்வம், வாழ்வில் இன்பவாழ்வு கொண்ட தமிழனுள்ளம் கண்ட தமிழிசை, பிற மாந்தர்க்கும் உயி ரானதே பெறலான பேறு சிறி தல்லவே! அந்த வாழ்வுதான் எந்தநாள்…