பார்புகழ் அறிஞர் பல்லாண்டு வாழ்க – பேராசிரியர் சி.இலக்குவனார்
அறிஞர் அண்ணா அவர்கள் இன்று தமிழ்க் காக்கும் தனிப்பெரும் தலைவராக விளங்கி வருகின்றார்கள். இந்தியப் பெருந் தலைவராக உலகப் பெருந் தலைவராக விளங்கப் போகும் காலம் விரைவில் வந்து கொண்டிருக்கின்றது. மக்கள் உளங்களை வன்மையாகப் பிணித்துத் தன்பால் ஈர்க்கும் தனிப்பெரும் தலைவர் அறிஞர் அண்ணா. ‘‘விரைந்து தொழில்கேட்கும் ஞானம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின்’’ எனும் திருவள்ளுவர் செம்மொழிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குபவர் அறிஞர் அண்ணா அவர்களே! நம் அன்னைத் தமிழ், தொன்மையும், வன்மையும் தூய்மையும் இனிமையும் பொருந்தியதுதான். ஆயினும் தமிழ் மக்களே தமிழின்…
தலைத்தலைமை – அரும்பு
நாமேடை தமிழ் நாடாக்கும் நடைமேடை; சிந்தனையோ பூமேடை; கருஞ்சிவப்பாய்ப் பூத்தவிழி இந்திக்குத் தீமேடை; புகழுக்குத் தெருவெல்லாம் மணிமேடை; கோமேடைப் பழங்காஞ்சிக் கொற்றவன்தான் குணமேடை. முக்கோணத் தமிழகத்தின் முழுக் கோணல் நீக்குகிற தெக்காணப் புதுச்சிற்பி; திருக்குறள்போற் சிறுவடிவம்; எக்கோண மும்நோக்கும் இயல்பறிவு; தூக்கியதோர் கைக்கோணத் துள்இளைஞர் கடற்கோணப் பெருந்தேக்கம். ஒருமைப்பா டென்று தமிழ் ஒழிக்கவரு வார்க்கெதிரே ஒருமெய்ப்பா டில்லாமல் உலவுகிற தமிழரிடை, பெருமைப்பா டொழியாத பெருகுதமிழ் மறத்திற்கு வறுமைப்பா டில்லையென வாழுகிற அகச்சான்று. ‘நாடெ’ன்பான், ‘நமதெ’ன்பான்; நறுந்தமிழ்க் கிடும்பையெனில் ‘வாடெ’ன்பான், ‘தூக்கிடுபோர் வா‘ ளென்பான்; மொழிகாத்தல்…
அண்ணாவன்றோ? – அறந்தைத் திருமாறன்
வெடிக்கின்ற எரிமலையைப் பாய்ந்து சீறி விரிக்கின்ற நெடுநதியை நாளும் ஓயா(து) அடிக்கின்ற கடலையை மேகத் துள்ளே அலறுகின்ற இடியொலிகள் அனைத்தும் பேச்சில் வடிக்கின்ற ஆற்றலர்யார்? கருத்தை யள்ளி வழங்குகொடை வள்ளல் யார்? கொடுமை கண்டு துடிக்கின்ற உளத்தர்யார்? புரட்சியாளர் தொடருக்கே ஒளி விளக்காம் அண்ணா வன்றோ! குற்றால அருவியதின் குளிரும்; நல்ல குலைக்கனியின் சார்தந்த சுவையும்; நஞ்சை வற்றாத தஞ்சையதின் வளமும்; சேர வளநாட்டின் இயற்கையதின் செழிப்பும்; என்றும் முற்றாத செந்தமிழின் இளமையெல்லாம் முழுவடிவாய்ப் பேச்சாலும் செயலால் அன்பால் உற்றாரப் பெருக்கெடுக்கத் தேக்கும் தோன்றல்!…
செயற்கரிய செய்த பெரியார் – புலவர் வி.பொ.பழனிவேலன்
ஈரோட் டரிமா இணையற்ற இராம சாமிப் பெரியார் இத்தமிழ் நாட்டில் தோன்றா திருந்தால் தமிழர் யாவரும் ஆரியர்க் கடிமையாய் ஆகி யிருப்போம். இதனில் ஐயம் ஒருசிறி தில்லை. தமிழர் குமுகம் தன்மா னத்துடன் தலைநிமிர்ந் துலவத் தண்ணளி செய்த அண்ணல் ‘பெரியார்’ அன்றி வேறிலை. துணிவும் பணிவும் தூய உள்ளமும் நனியும் பெற்றவர் நந்தமிழ்த் தலைவர். செல்வச் சிறப்பும் சீர்பல பெற்றும் சொல்லில் உரப்பும் சோர்விலா உழைப்பும் தமிழர் நலனே தம்நல மென்றும் பட்டி தொட்டிகள் பலவும் சென்று தமிழர்க் குணவைத் தட்டி ஊட்டி…
பாரதியார் நாமம் வாழ்க – பாரதிதாசன்
வாளேந்து மன்னர்களும் மானியங்கொள் புலவர்களும் மகிழ்வாய் அந்நாள் தாளேந்திக் காத்தநறுந் தமிழ்மொழியைத் தாய் மொழியை உயிரை இந்த நாள் ஏந்திக் காக்குநர் யார்? நண்ணுநர் யார்? என அயலார் நகைக்கும் போதில், தோளேந்திக் காத்த எழிற் சுப்ரமண்ய பாரதியார் நாமம் வாழ்க!
பிரான்சு கம்பன் மகளிரணியின் முத்தான கவிதை மூன்று
பள்ளிக்கு ஏன் செல்ல வேண்டும்? மரபுக் கவிதையைச் சுவைப்போர் குறைந்து வருவதும், அதைப் புரிந்து கொள்வோர் அருகி வருவதும் கண்கூடு. தொன்று தொட்டு வரும் கவி அரங்கம் அல்லது கவி மலர் என்கிற பாணியில் மக்களைச் சலிப்புற வைப்பதற்கு மாற்றாக அவர்கள் ஊன்றிக் கவனிக்கும் வகையில் அவற்றை அளித்தால் என்ன என்ற எண்ணத்தின் வெளிப்பாடே கடந்த இரு வருட மகளிர் விழாவில் முன் வைத்தக் கவிதைகள். சென்ற வருடம் “வினா-விடை” முறையில் ஒரு கவிஞர் கேட்கவும், மற்றொருவர் விடையளிக்கவும் வைத்த உத்தி…
முறுவல் – மரபுக்கவிதை இதழ்
முறுவல் இதழுக்கு மரபுக்கவிதைகள் வரவேற்கப்படுகின்றன! arvinpadmanaba@gmail.com
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே! -முனைவர் மறைமலை இலக்குவனார்
’இந்திய இறையாண்மை’ இதுதான் துன்பக் கடலில் தத்தளிக்கும் இந்திய மீனவர்கள் வலைவீசிப் பிடிக்கும் சிங்களப் படையினர் பிடிபட்டால் சிறைவாசம் தப்பிக்கமுயன்றால் துப்பாக்கிச் சூடு வேடிக்கை பார்ப்பதற்குக் கடலோரத்தில் காவற்படை! எதிர்த்துப் பேசாதீர்கள் ’இந்திய இறையாண்மை’ இதுதான் என்று புரிந்துகொள்ளுங்கள்! அரசியற்சட்ட அமைப்பில் அறிந்தேற்புப் பெற்றவை அட்டவணைப் படுத்தப்பட்டவை இருபத்துமூன்று மொழிகள்! அந்த வாய்ப்பும் அற்றவை பல நூறுமொழிகள்! ஆட்சி புரியும் நல்வாய்ப்பு ஒரே ஒரு மொழிக்குத்தான்! தொன்மையான மொழிகள் இரண்டே இரண்டு கொண்டாடுவதற்குச் சமற்கிருதம் திண்டாடுவதற்குத் தமிழ்! எதிர்த்துப் பேசாதீர்கள் ’இந்திய இறையாண்மை’ இதுதான்…
தாய்மொழி தமிழெனும் அரும்பேறு – – கவிஞர் செ.சீனி நைனா முகம்மது
தாய்மொழி என்பது தாயின்மொழி – அது தாயும் நீயும் பேசும்மொழி ஆயிரம் மொழிகள் நீயறிந் தாலும் ஆன்மா உணர்மொழி அந்தமொழி – அது அன்னையின் கருவில் வந்தமொழி! அன்னையின் மடியில் கிடக்கையிலே – அவள் அன்பினைப் பாலாய்க் குடிக்கையிலே சின்னவுன் செவியில் சில்லெனப் பாய்ந்து தேனாய் இனித்திடக் கேட்டமொழி – உன் சிந்தையில் விதைகள் போட்டமொழி! தோளிலும், மார்பிலும் சாய்கையிலே – நீ தொட்டிலில் ஆடி ஓய்கையிலே ஏழிசை மிஞ்சிடும் தாயிசை கேட்டே இதமாய்த் தூங்கிய பாட்டுமொழி – அது இதயங்கள் பேசிடும் வீட்டுமொழி! அன்னையை…
நிலைபெறநீ வாழியவே! – கவிஞர் சீனி நைனா முகம்மது
காப்பியனை ஈன்றவளே! காப்பியங்கள் கண்டவளே! கலைவளர்த்த தமிழகத்தின் தலைநிலத்தில் ஆள்பவளே! தாய்ப்புலமை யாற்புவியில் தனிப்பெருமை கொண்டவளே! தமிழரொடு புலம்பெயர்ந்து தரணியெங்கும் வாழ்பவளே! எங்களெழில் மலைசியத்தில் சிங்கைதனில் ஈழமண்ணில் இலக்கியமாய் வழக்கியலாய் இனக்காவல் தருபவளே! பொங்கிவளர் அறிவியலின் புத்தாக்கம் அத்தனைக்கும் பொருந்தியின்று மின்னுலகில் புரட்சிவலம்…
மாடுகள்முட்டி மலை சரியுமா???- கவிஞர் சீனி நைனா முகம்மது
பாராட்டத்தான் எண்ணுகிறேன் என்ன செய்வது?-அட பன்றிகளைச் சிங்கமென்று எப்படிச் சொல்வது? மாறாட்டத்தால் இலக்கியமா மயக்கம் காண்பது?-சிறு மண்புழுக்கள் வளைவதையா ‘ட’னா என்பது? கவிதையென்ன பாவமடா உனக்குச் செய்தது?-அதைக் கண்டுவிட்டால் உன்முகமேன் கருகித் தீய்வது? கவிஞனாக ஆசையென்றால் கற்றுப் பார்ப்பது- அது கைவராது போனதென்றால் விட்டுத் தீர்ப்பது! கவிதையுடன் உரைத்துணுக்கா கைகள் கோப்பது?-மலர்க் கதம்பத்துடன் கற்களையா கூட்டுச் சேர்ப்பது? புவிபுகழும் புதுமையென்றா புலம்பித் திரிவது?-என்ன புதுமையடா அலிகள் கூடிப் பிள்ளை பெருவது! கடிதத்துக்கே மொழியறியான் கதைக்குப் போவது-அதில் காலைவிட்டு வாலைநீட்டிக் கவிஞன் ஆவது வடிவமின்றி முடிவுமின்றி…
எங்கே நீ இருக்கின்றாய் அம்மா? – கவிஞர் சீனி நைனா முகம்மது
அனைத்துயிர்க்கும் நேரில் வந்து கருணை செய்ய ஆண்டவனுக் கியலாத காரணத்தால் தனித்தனியே தாய் படைத்தான் என்று மக்கள் தாய்க்குலத்தைப் புகழ்ந்துரைக்கக் கேட்டேன், ஆனால் எனக்கு மட்டும் கருணைசெய்யக் குப்பைத் தொட்டி ஏற்றதென ஏன்விடுத்துப் போனாய் அம்மா? தனக்கெனவே வாழாத தாய்மை என்னைத் தண்டிக்க என்ன பிழை நான் புரிந்தேன்?
