மொழிக்கெலாம் தலைமை தமிழே – புலவர் குழந்தை

மொழிக்கெலாம் தலைமை தமிழே! முதன்மையும் தலைமையும் மிக்கது தமிழ் உலகம் ஊமையா உள்ள அக் காலையே பலக லைப்பயன் பாங்குறத் தாங்கியே இலகி என்றுநான் என்னும் மொழிக்கெலாம் தலைமையாம் தமிழ் – புலவர் குழந்தை

தமிழும் நீடு வாழ்க – கவியோகி சுத்தானந்த பாரதியார்

தமிழும் நீடு வாழ்க காதொளிரும் குண்டலமும் கைக்குவளை                 யாபதியும் கருணை மார்பின் மீதொளிர் சிந்தாமணியும் மெல்லிடையில்                 மேகலையும் சிலம்பார் இன்பப் போதொளிரும் திருவடியும் பொன்முடிசூ                 ளாமணியும் பொலியச் சூடி நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்                 தாங்குதமிழ் நீடு வாழ்க – கவியோகி சுத்தானந்த பாரதியார்

தமிழணங்கை வணங்குவோம் – சங்குப் புலவர்

தமிழணங்கை வணங்குவோம்!   காதிலங்கு குண்டமாகக் குண்டலகே                 சியுமிடையே கலையாச் சாத்தன் ஓதுமணி மேகலையும் ஒளிர்கைவளை                 யாவளையா பதியும் மார்பின் மீதணிசிந் தாமணியாச் சிந்தாம                 ணியுங்காலில் வியன்சி லம்பாத் திதில்சிலப் பதிகார மும்புனைந்த                 தமிழணங்கைச் சிந்தை செய்வோம்! – சங்குப் புலவர்

அகிலத்தில் அமைதி காப்போம் ! – எம். செயராம(சர்மா), மெல்பேண்

  சமயத்தின் பெயரால் சண்டை  சாதியின் பெயரால் சண்டை குமைகின்ற உள்ளங் கொண்டார் குழப்பமே செய்வார் நாளும் அமைதியை எண்ணிப் பாரார் ஆரையும் மனதில் கொள்ளார் அழித்தலை மட்டும் நாடி அனைத்தையும் ஆற்ற வந்தார் வெறி தலை கொண்டதாலே நெறி தனை மறந்தேவிட்டார் அறி வெலாம் மங்கிப்போக அரக்கராய் மாறி விட்டார் தூய்மையாம் சமயம் தன்னை தூய்மையாய் பார்க்கா நின்று பேயென உருவம் கொண்டு பிணக்காடாய் மாற்று கின்றார் கடவுளின் பெயரைச் சொல்லி கருணையை வெட்டி வீழ்த்தி தெருவெலாம் குருதி ஓட செய்கிறார் நாளும்…

பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் ! – எம். செயராம(சர்மா) … மெல்பேண்

       இறைவனிடம் கையேந்துங்கள் – அவன்      இல்லையென்று சொல்லுவதில்லை      கருணையுடன் கேட்டுப்பாருங்கள் – அவன்      காட்சிதர மறுப்பதுமில்லை        ஆணவத்தை அகற்றிப்பாருங்கள் – அவன்       அரவணைக்கக் கரத்தைநீட்டுவான்       நாணயாமாய் நடந்துபாருங்கள் – அவன்       நாளுமெங்கள் அருகில்வந்திடுவான்      உணர்வுகொண்டு பாடிப்பாருங்கள் – அவன்      உள்ளமதில் வந்துநின்றிடுவான்      தெளிவுடனே நாளும்தேடுங்கள்  –…

ஆலமரம் – முனைவர் எழில்வேந்தன்

அணுவுக்குள் இருக்கும் ஆற்றலைப் போல மிகச்சிறு விதைக்குள் அடங்கியிருந்த பேருருவம் நான். ஆலமரம் அற்புத அருமரம். ஈகக் குருதியின் சேற்றில் முளைத்து உகங்களின் தாகம் தேக்கிய விழிகளின் கண்ணீர்த் துளிகளால் துளிர்த்த மரம் நான். விரிந்து கிளை பரப்பி விழுதுவிட்டு அடர்ந்து பசுமையாய் பரந்து நிற்கிறேன் என் படர்ந்த நிழலுக்காகவும் பழத்தின் சுவைக்காகவும் நேசமாய் வந்தமரும் பறவைகளின் பாசறை நான். பற்பல வண்ணப் பறவை இனங்களின் மொழிகள் என்னவோ வேறு வேறுதான் பாடும் பண்ணின் சிந்தனை மட்டும் என்றென்றும் ஒன்று. நான் உழைக்கும் பறவைகளின்…

கல்பெயர்த்து இழிதரும் – (உ)ருத்ரா பரமசிவன்

    கல் பெயர்த்து இழிதரும் இமிழ் இசை அருவி புல்லோடு ஆங்கு பழனம் தழீஇ பச்சை படர்த்தி பகலவன் தீவிழி அவிப்பக் குளிரும் நீர் விரி பரவை நெடுநல் நாட!அஃது மன் அன்று உள் ஊறு தண்புயல் கண்புயல் படர‌ அடுதுயர் தந்தனை வெஞ்சுரம் ஏகி. நீர்ச்சுனை தீச்சுனை போலும் நிழலும் வேகும் அழல்நுரை அள்ளி அன்னமும் கலங்கும். ஐய நின் துழந்த பிரிவின் கொல் துயர் பொய்த்தீ பற்றி பொல்லாங்கு செய்யும். மைபொதி வானும் புள்நிரல் பொலிவும் இடி உமிழ்பு கண்டு…

வழிகாட்டும் ஒளி வேந்தன் – புலவர் இரா.வடிவேலன்

செந்தமிழர் வாழ்வென்னும் மலர்பூக்கும் கதிராய்ச் சீரேற்றும் சொற் கூட்ட வெள்ளத்தில் மழையாய் வந்தவரின் வாழ்விற்கு வன்கொடிய நெருப்பாய் வடமொழியின் வால்பற்று குழுவிற்குப் படையாய்ச் சொந்தமெனும் நம்மவரின் தோளுக்குத் துணையாய்த் தொல்லைக்கு நகை கூட்டி வாவென்னும் மலையாய்த் தந்தையாய்த் தமிழர்க்கு வெண்தாடி அலையாய்ச் சாய்ந்தாடத் தென்றலிலே சிங்கமென வந்தோன்! எண்ணத்தின் சொற்பேழை! எழுச்சிக்கு முரசம் ஏமாந்த நாட்டிற்குச் சீர்மேவ வந்தோன்! கண்ணான மண்ணிற்குக் கதியின்மை கண்டு காலத்தில் தன்மான இயக்கத்தைக் கண்டேன்! ‘விண்ணாட்டுத் தேவரிவர், வணங்குங்கள்’’ என்ற வேதத்தின் தரகற்கு விலங்கேற்ற வந்தோன் பண்ணூடு தமிழுக்குத்…

அண்ணாப்பத்து – காரை இறையடியான்

1) பண்ணார் தமிழ்ப் பேச்சுப் பாங்கால் பெரியோர்க்கும் ‘அண்ணா’ வா ஆனான் அவன்! 2) மாற்றார் மதிக்கும் மதிவளம் தாங்கிய ஆற்றலால் ‘அண்ணா’ அவன் 3) இடுக்கண் புரிவோரும் இன்பமெனக் கேட்பர் அடுக்கு மொழி அண்ணா அவன்! 4) நஞ்சிந்திப் பேயை நசுக்கச் சிறையிருக்க அஞ்சாத அண்ணா அவன்! 5) தமிழர் தம் பண்பாட்டைத் தாக்கும் வெறியை அமிழ்த்திடும் அண்ணா அவன்! 6) பேராயக் கட்சிப் பெருங்குற்றம் போக்கிட ஆராயும் அண்ணா அவன்! 7) சீர் திருத்த கருத்தைச் செந்தமிழ் நல்லேட்டில் ஆர்த்தெழுதும் அண்ணா…

அறிஞர் அண்ணா அவர்கள் மீது பாடிய வெள்ளணி நாள் விழா வாழ்த்து

– பைந்தமிழ்ப் பாவலர் அ.கி.பரந்தாமனார் திருமணக்கும் கலைமணக்கும் திருத்தொண்டை நாட்டில் சிறப்புமிகப் பெற்றிலங்கும் திருக்காஞ்சி நகரம் பெரும்புகழை எய்திடவே பிறந்த பேரறிஞ, பிறர் இகழ்ச்சி தனை மறக்கும் பெருஞ்சால்பு மிக்கோய், ஒரு கடவுள் உளத்திருத்தி உறுமூடக் கருத்தை ஒழித்துவிடப் பாடுபடும் ஒப்பரிய தொண்ட, இருங்கடல்சூழ் இவ்வுலகில் நீடுழி வாழி! எழுத்தாள! அண்ணாவே, நீடுழி வாழி! இந்தி வந்து புகுவதனால் இனிய தமிழ் சாகும் என்றறிஞர் பெருமக்கள் எடுத்தெடுத்துச் சொலினும் அந்த இந்தி வெறியாளர் அதுபுகுந்து சிறக்க ஆனபல வழிமிகவும் ஆற்றுவது கண்டே அந்த நிலை…

பார்புகழ் அறிஞர் பல்லாண்டு வாழ்க – பேராசிரியர் சி.இலக்குவனார்

அறிஞர் அண்ணா அவர்கள் இன்று தமிழ்க் காக்கும் தனிப்பெரும் தலைவராக விளங்கி வருகின்றார்கள். இந்தியப் பெருந் தலைவராக உலகப் பெருந் தலைவராக விளங்கப் போகும் காலம் விரைவில் வந்து கொண்டிருக்கின்றது. மக்கள் உளங்களை வன்மையாகப் பிணித்துத் தன்பால் ஈர்க்கும் தனிப்பெரும் தலைவர் அறிஞர் அண்ணா. ‘‘விரைந்து தொழில்கேட்கும் ஞானம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின்’’ எனும் திருவள்ளுவர் செம்மொழிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குபவர் அறிஞர் அண்ணா அவர்களே! நம் அன்னைத் தமிழ், தொன்மையும், வன்மையும் தூய்மையும் இனிமையும் பொருந்தியதுதான். ஆயினும் தமிழ் மக்களே தமிழின்…

தலைத்தலைமை – அரும்பு

நாமேடை தமிழ் நாடாக்கும் நடைமேடை; சிந்தனையோ பூமேடை; கருஞ்சிவப்பாய்ப் பூத்தவிழி இந்திக்குத் தீமேடை; புகழுக்குத் தெருவெல்லாம் மணிமேடை; கோமேடைப் பழங்காஞ்சிக் கொற்றவன்தான் குணமேடை. முக்கோணத் தமிழகத்தின் முழுக் கோணல் நீக்குகிற தெக்காணப் புதுச்சிற்பி; திருக்குறள்போற் சிறுவடிவம்; எக்கோண மும்நோக்கும் இயல்பறிவு; தூக்கியதோர் கைக்கோணத் துள்இளைஞர் கடற்கோணப் பெருந்தேக்கம். ஒருமைப்பா டென்று தமிழ் ஒழிக்கவரு வார்க்கெதிரே ஒருமெய்ப்பா டில்லாமல் உலவுகிற தமிழரிடை, பெருமைப்பா டொழியாத பெருகுதமிழ் மறத்திற்கு வறுமைப்பா டில்லையென வாழுகிற அகச்சான்று. ‘நாடெ’ன்பான், ‘நமதெ’ன்பான்; நறுந்தமிழ்க் கிடும்பையெனில் ‘வாடெ’ன்பான், ‘தூக்கிடுபோர் வா‘ ளென்பான்; மொழிகாத்தல்…