அருட்பா திருக்குறட்பா
பேராசிரியர் வெ.அரங்கராசன் முன்னாள் தமிழ்த்துறை தலைவர் கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி கோவிற்பட்டி- 628 502. கைப்பேசி: 98409 47998. குறும்பா, பெரும்பா, அரும்பா… அறம்பொருள் இன்பம், தரும்பா… விரும்பா தவரும், விரும்பும் நறும்பா, அருட்பா குறட்பா… எறும்பா உழைத்திட அரிவினைத் தரும்பா, பெரும்புகழ் பெரும்பா… இரும்பா இருப்போர் தமையும், கரும்பாக் கரைக்கும், குறட்பா… விருப்பா? வெறுப்பா? இரண்டையும் அறுப்பா, எனச்சொலும் திருப்பா… திறப்பா, படித்துப் பறப்பா… நெறிப்பா, குறிப்பா இருப்பா… அயிர்ப்பா, உரிப்பா, உயர்த்தும் உயிர்ப்பா, உரைப்பா, உணரப்பா… கோலப்பா,…
தமிழ் உணர்வு – உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனார்
தமிழென் அன்னை! தமிழென் தந்தை! தமிழென்றன் உடன் பிறப்பு! தமிழென் மனைவி! தமிழென் பிள்ளை! தமிழென் நட்புடைத் தோழன்! தமிழென் சுற்றம்! தமிழென் சிற்றூர்! தமிழென் மாமணித் தேசம்! தமிழ்யான் வாழும் எழில்மா ஞாலம்! தமிழே என்னுயிர் மூலம்!
பைந்தமிழ்ப் பெருந்தேவி திருப்பள்ளியெழுச்சி
இன்றெமை ஆட்கொளும் எந்தமிழ்ச் செல்வி எந்தமிழ்க் கன்னியே எம்முயிர்த் தேவி மன்னிடும் உயிருடல் மாண்பொருள் எல்லாம் மகிழ்வுடன் நின்பதம் வைத்துமே நிற்பம் நின்னரு வரவினை நினைத்துமே இந்நாள் நிற்கிறார் நந்தமிழ் அரசியல் மக்கள் உன்னரு நெடும்புகழ் உற்றிடு மாதே, உவப்புடன் பள்ளியெ ழுந்தரு ளாயே. – பைந்தமிழ்ப் பாவலர் அ.கி.பரந்தாமனார்
தமிழகச் சிறப்பு – கவிஞர் முடியரசன்
அலையெழு நெடுங்கடல் ஆடை உடீஇய நிலமகள் தனக்கு நிறைமதி முகமெனும் நாவலந் தீவின் நாடியாய் விளங்கும் பாவலர் புகழ்தரு பண்டைத் தமிழகம் மேவலர் அணுகா வீரங் கெழுமிய 5 காவலர் மூவர் கயல்புலி வில்லெனும் கொடிமூன் றுயர்த்திக் கோலோச் சியது; சங்கம் நிறீஇத் தமிழ்மொழி ஓம்பிப் பொங்கும் புகழ்வரப் பொலிந்தநன் னாடு; `யாதும் ஊரே யாவரும் கேளிர்’என் 10 றோதி ஓதி உயர்ந்ததோ டன்றி வருபவர் தமக்கெலாம் வணங்கி வரவுரை தருவது தொழிலாத் தான்கொண்…
தமிழ் உயர்ந்தால் தமிழன் உயர்வான் – பாவேந்தர் பாரதிதாசன்
தமிழுயர்ந்தால்தான் தமிழன் உயர்வான்! தமிழப் பகையாளனும் தானே பெயர்வான்! (தமிழ்) தமிழுக்குத் தொண்டு தரும்புலவோர்கள் தமிழ்க்கனி மரத்தினைத் தாங்கிடும் வேர்கள்! கமழ்புது கருத்துக்குப் பலபல துறைகள் கற்றவர் வரவர கவின்பெறும் முறைகள்! (தமிழ்) எங்கும் எதிலுமே தமிழமுதூட்டு இங்கிலீசை இந்தியை இடமிலா தோட்டு திங்கள், செவ்வாய், புதன் கோள்கட்குச் செல்வாய் தேடரும் அறிவியல் எண்ணங்கள் வெல்வாய்! (தமிழ்)
இந்தி ஒழிக! – பாவேந்தர் பாரதிதாசன்
தமிழ்வாழ்க தமிழ்வாழ்க என்று சொன்னான் தாமரையின் வாய்மலர்ந்து தேனைப் பெய்தான்; தமிழ் இதுபார் இன்றுதன் உள்ளங் காட்டி, தன்னுயிரில் அதுகாட்டி, என்றன் தோளை அமிழ்திதுவர எட்டியா என்று தொட்டாள் அமிழ்தென்றேன் ஆம்என்றேன் மகிழ்ந்து நின்றேன் கமழ்இமை கனியிதழும் தந்தாள் உண்டேன் கண்திறந்தேன் வேறொருத்தி வருதல் கண்டேன். தமிழ்வீழ்க தமிழ்வீழ்க என்று சொன்னாள் தமிழ்க்காதில் ஈயத்தை உருக்கி வார்த்தாள் தமிழில்லை என்றுதன் உளத்தைக் காட்டி தன்னுயிரிற் பகைகாட்டி என்றன் தோளை அமிழ்திதுவா எட்டியா என்று தொட்டாள் அப்பட்டம் எட்டிக்காய் அடியே என்றேன் உமிழ் இந்தி நான்…
வேங்கையே எழுக! – பாவேந்தர் பாரதிதாசன்
இந்தித் திணிப்புச் சரியல்ல! அமைதி வேண்டும் நாட்டினிலே அன்பு வேண்டும் என்பார் ஆழ மடுவில் நீரைக் கலக்க வேண்டாம் என்று சொல்வார். தமிழகத்தில் இந்தி திணிக்கச் சட்டம் செய்தார் அவரே சாரும் குட்டையில் எருமை மாட்டை தள்ளுகின்றார் அவரே! சுமக்க வேண்டும் இந்தியினைப் பொதுமொழியாய் என்பார்; தொலைய வேண்டும் எதிர்ப்புக் கூச்சல் தொலைய வேண்டும் என்பார்; தமிழ்மொழியை அழிக்க வேண்டும் என்றவரும் அவரே தமிழகத்திலே புகுந்த சாக்குருவிகள் அவரே!
இந்தியா? – பாவேந்தர் பாரதிதாசன்
தமிழை ஒழிப்பவன் உலகினில் இல்லை தமிழை எதிர்த்தவன் வாழ்ந்ததும் இல்லை (தமிழை) தமிழை ஒழிக்க இந்தியை நுழைப்பவர் தம்வர லாற்றுக்கு மாசி ழைப்பவர் (தமிழை) இன்பத் தமிழ்மொழி உலக முதன்மொழி! இந்தி மொழியோ ஒழுங்கிலா இழிமொழி! என்ன போயினும் தமிழர்க்குத் தமிழ்மொழி இன்னுயிர் ஆகும் வாழ்க தமிழ்மொழி (தமிழை) ஒருமொழி ஓரினம் கொண்டதோர் நாடு பிறன் அதில் அடிவைக்க நினைப்பதும் கேடு பெருமொழி அழித்தும் பேரினம் அழித்தும் பெறுவது நாடன்று தன்பிண மேடு (தமிழை) தீதுற ஆள்வதோர் ஆட்சியே அன்று செந்தமிழ் நாட்டிலே இந்தியா…
குண்டு போடு! – பாவேந்தர் பாரதிதாசன்
தமிழுக்கு நீசெயுந் தொண்டு — நின் பகைமீது பாய்ச்சிய குண்டு (தமிழுக்கு) தமிழில்நீ புலமைபெற வேண்டும் — அது தமிழ்பெறத் தமிழரைத் தூண்டும் தமிழிலே யேபேச வேண்டும் — அது தனித்தமிழ் வளர்ச்சியைச் தூண்டும் (தமிழுக்கு) தமிழ் பேசு: தமிழிலே பாடு — நீ தமிழினிற் பாடியே ஆடு தமிழ்ப்பாட்டை யேகாதிற் போடு — தமிழ் தப்பினால் உன்காதை மூடு (தமிழுக்கு) வணிக விளம்பரப் பலகை — அதில் வண்தமிழ் இலாவிடில் கைவை காண்கநீ திருமண அழைப் பைப் — பிற கலந்திருந் தால்அதைப்…
தமிழ் வரலாறு – பாவேந்தர் பாரதிதாசன்
கேளீர் தமிழ்வர லாறு — கேட்கக் கேட்க அதுநமக்கு முக்கனிச் சாறு (கே) நாள்எனும் நீள்உல கிற்கே — நல்ல நாகரி கத்துணை நம்தமி ழாகும் வாளுக்குக் கூர்மையைப் போல — அது வாழ்வுக்குப் பாதை வகுத்ததுமாகும் (கே) இயல்பினில் தோன்றிய தாகும் — தமிழ் இந்நாவ லத்தின்மு தன்மொழியாகும் அயலவர் கால்வைக்கு முன்பே — தமிழ் ஐந்தின்இ லக்கணம் கண்டதுமாகும் (கே) அகத்தியன் சொன்னது மில்லை — தமிழ் அகத்திய மேமுதல் நூலெனல் பொய்யாம் மிகுதமிழ் நூற்கொள்கை மாற்றிப் — பிறர் மேல்வைத்த…
தமிழ் வளர்ச்சி – பாவேந்தர் பாரதிதாசன்
எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும். இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும். வெளியுலகில், சிந்தனையில் புதிது புதிதாக விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெலாங் கண்டு தெளியுறுத்தும் படங்களொடு சுவடியெலாம் செய்து செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும். எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை என்றால் இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும். உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூற்கள் ஒருத்தர் தயை இல்லாமல் ஊரறியும் தமிழில் சலசலென எவ்விடத்தும் பாய்ச்சிவிட வேண்டும்! தமிழொளியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும். இலவச நூற் கழகங்கள் எவ்விடத்தும் வேண்டும். எங்கள் தமிழ் உயர்வென்று…
தமிழ் வெல்க வெல்க
இனிமைத் தமிழ்மொழி எமது — எமக் கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது! கனியைப் பிழிந்திட்ட சாறு — எங்கள் கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு! தனிமைச் சுவையுள்ள சொல்லை — எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை! நனி்யுண்டு நனியுண்டு காதல் — தமிழ் நாட்டினர் யாவர்க்குமே தமிழ்மீதில் (இனிமைத்) தமிழ் எங்கள் உயிர் என்பதாலே — வெல்லுந் தரமுண்டு தமிழருக்கிப்புவி மேலே தமிழ்என்னில் எம்முயிர்ப் பொருளாம் – இன்பத் தமிழ்குன்றுமேல் தமிழ்நாடெங்கும் இருளாம் தமிழுண்டு தமிழ் மக்களுண்டு — இன்பத் தமிழுக்கு நாளும் செய்வோம்…