புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.36- 1.6.40
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.31- 1.6.35 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம் கூட்டிய புலவரைக் குமரி நாட்டிடைநாட்டிய தமிழ்க்கொடி நுடங்கு நாளவைக்கோட்டியி லவரவர் கொணர்ந்த பாக்களைஏட்டிடை யிருந்தரங் கேற்றி னானரோ. அண்ணிய புலவர்பே ரவையிற் றங்கள்பாக்கண்ணிய வுட்பொருட் கருத்தைப் பேரவைஉண்ணியே யுடன்பட வுரைத்துத் தம்முளத்தெண்ணிய படியரங் கேற்றி னானரோ.
இறந்தது நெல்லை இற்றதோ மனமே! – த.கு.கருணாநிதி
இறந்தது நெல்லை இற்றதோ மனமே! இறந்தது நெல்லை இற்றதோ மனமே துறந்தது உடலை தூயரோ கண்ணன்; சற்றைப் போதில் சடுதியில் பறித்தாய்! சரிந்தது தமிழே! சாய்ந்தது சரிதம்! பாவியாம் காலன் பறித்தான் உயிரை! மேவிய புகழுடை மேதினிப் புலவ! நெல்லை கண்ணா நெருநல் இருந்தாய்! புல்லென எண்ணி நெல்லைப் பறித்தான். அற்புதப் பேச்சினில் அறிவாம் சுடரைக் கற்பொதும் பிலும்தீச் சுடர்ஏற் றிடுவாய்! ஒப்பா ரில்லை மிக்கா ரில்லை. தப்பே…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.31 – 1.6.35
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.27 – 1.6.30 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம் தாய்க்கொலை புரிந்தவர் தமிழ்க்கொலை புரிந்தாராய்க்கொலை புரிந்தவட வாரியரின் மானச்சேய்க்குண மிலாதவிழி தீயரை யொறுத்தேதாய்க்குநிக ராகிய தமிழ்மொழி வளர்த்தார். கழகம் – மேற்படி வேறு வண்ணம் +++++ சேய்க்குணம் – தாயைப் பேணுங் குணம். 32. கல் – மலை. 33. புலக்கண் அறிவுக்கண். அலகு உறு – அளவுபட்ட, பகுதிப் பட்ட அது, அகம் புறம் +++++ இராவண காவியம் –…
தப்படி வைத்தவர் தப்புவதுண்டோ? – கவிவாணர் ஐ.உலகநாதன்
தப்படி வைத்தவர் தப்புவதுண்டோ? வஞ்ச மனத்துடன் வந்து புகுந்தவர் வாலை யறுத்திட வாராயோ-வரும் வெஞ்ச மருக்கிது வேளை பொருட்குவை மேலும் குவித்துடன் தாராயோ சேரு மலேசிய சீர்மிகு நாட்டினை சேரு மிடைப்பகை தீராயோ-உனை வாரியணைத்தவள் வாழ்வு சிறந்திட வாரி நிதிக் குவை தாராயோ ஆறு மலைத்தொடர் அன்பு மனத்தொடர் ஆர்ந்த கலைத்தொடர் தாய்நிலமே-உனை வேறு நிலத்தவர் வெல்ல முனைந்திடின் வேட்டி லவர்தலை போய்விழுமே! வீடு விளங்கிட பெற்ற குழந்தையை நாடு விளங்கிடத் தாராயோ-அவர் பீடு விளங்கிடக் கேடு களாந்திடப் பிள்ளையைப் பெற்றவர் வாரீரோ! தங்க…
தமிழ்க் கவிதை – கவிஞர் க.பெருமாள்
தமிழ்க் கவிதை எதுகையென்ன? மோனையென்ன? கவிதை என்றால்எழுத்தசையும் சீர்த்தளையும் தேடி சோர்ந்தபதுங்குவதா? பிதுங்குவதா விழிகள்? இல்லை!பாவேந்தர் பேரனென்ற ஊக்கத் தோடமெது மெதுவாய்ப் பயின்றேன்காண் கவிதைப் பாடமமெய்மறந்தேன் அதன் சுவையில் ஒன்றிப் போனேன்!இதுவரையில் இலக்கியத்தின் சுவையை நாடயான்பெற்ற இன்பங்கள் கோடி கோடி! வாழ்வுமெங்கள் வளமுஉயர் தமிழே என்றவழங்காத வாயுண்டோ தமிழர் தம்மில்!ஆழ்கடலில் முத்தெடுத்த களிப்புப் பொங்கஅருந்தமிழர் நாமணக்கும் அமுதப் பாட்டாயசூழ்புரியும் பாவேந்தர் வரிகள் என்றும்சுடர்ந்திருக்கும் உண்மையதை மறுப்பாருண்டோ!யாழ்குழலின் இசையெல்லாம் இணைத்து வார்க்கும்இன்சுவையின் எல்லைவரை கவிதை செல்லும்! துறைதோறும் கவிதைகளே இன்பம் சேர்க்குமதொட்டதெல்லாம் துலக்கமுற ஒளியைப் பாய்ச்சும்நிறைவான…
உதிக்கும் சூரியனே! – க. இராசேசு
உதிக்கும் சூரியனே! பனியை உருக்க வரும் சூரியன்போல்பகலெல்லாம் உழைத்து ஓய்வெடுடாபனிமலையையே உருக்க நீ நினைத்தால்பகலவனாய் வானில் நீ எரிந்திடடா! சிறுகச் சிறுக வரும் வியர்வைத்துளிஉன் உழைப்பிற்குக் கிடைத்த பொன்துளிகள்பெருகி பெருகி வரும் ஊனின் வலிஉன் உடலை செய்யும் உறுதியடா! ஓடும் ஓட்டமும் ஓயாது வாழ்வுமுடியாப் பாதையின் தொடர்ச்சியடா,வாழ்வில் கடினப் பாதைகள் பலவுண்டுஅதைக் கண்கள் மூடாமல் ஓடிடடா,கடினப் பாதைகளில் ஓடிப் பழகிவிட்டால்இனி எந்தப் பாதையிலும் ஓடிடலாம்! சூழும் துன்ப இருளை நீ நீக்கிடவேபுது சூரியனாய் வானில் உதித்திடடா,சிகர தூரம் அது மிகத் தூரமில்லைஉன் புன்சிரிப்பால் அதை…
எரிமலையும் சிறு பொடியே! – தனிமையின் நண்பன்
எரிமலையும் சிறு பொடியே! கண்ணாடி முன் நின்று பார் கவலையை முகத்தில் அகற்றிப் பார் ஓய்வின்றி உழைக்கும் கடலலையென ஓயாது முயற்சி செய்து பார் உன்னை நீயே அறிந்து பார் உலகமே சிறிதெனக் கூறிப் பார் எறும்புகளை உற்றுப் பார் எவ்வளவு ஒற்றுமை வியந்து பார் தோல்வியில் சிரித்துப் பார் அதில் கற்றதை உணர்ந்து பார் ஆசையைத் துறந்து பார் அச்சத்தை மறந்து பார் எதிரியை எதிர்த்துப் பார் எரிமலையாய் வெடித்துப் பார் வியர்வை சொட்ட உழைத்துப் பார் வெற்றிக்கனியை சுவைத்துப் பார் தனிமையின்…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.27 – 1.6.30
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.23- 1.6.26 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம் வாய்மொழி பொதிந்திடுசொன் மாலைபல வேய்ந்துதாய்மொழி வளர்த்திடு தமிழ்ப்புலவர் தம்மைஆய்மொழி புனைந்தில கரியணை யிருத்திப்போய்மொழி பெறாதிலகு பொன்முடி புனைவார். தேங்குபுகழ் தாங்கிய செழும்புலவர் கொள்ளஓங்குமுகில் தோய்முக டுயர்ந்தமலை யேறிஆங்கவர்கள் கண்டநில மானவை யனைத்தும்பாங்கொடு கொடுத்துயர் பசுந்தமிழ் வளர்த்தார். என்றுமுயர் செந்தமி ழியற்புலவர் கொள்ளக்கன்றினொடு தூங்கிவரு கைப்பிடி புணர்ந்தவென்றுகொடு வந்தவெறி வேழமது தந்துநன்றியொடு தொன்றுவரு நற்றமிழ் வளர்த்தார். மாணிழை புனைந்துமண வாமல ரணிந்தும்பாணரொடு கூடவரு பாடினியர்…
தமிழே நீ வாழி! – சந்தர் சுப்பிரமணியன்
தமிழே நீ வாழி! தூய தமிழே நீவாழி!தொன்மைத் தமிழே நீவாழி!பாயும் அமுதின் ஊற்றைப்போல்பழகும் தமிழே நீவாழி!ஆய நூல்கள் அணிகலனாய்அணிந்த தமிழே நீவாழி!தாயின் சிறந்தாய் நீவாழி!தங்கத் தமிழே நீவாழி! கவிஞர் சந்தர் சுப்பிரமணியன் வலைத்தமிழ்
கலைஞர் என்றும் கதிராய் ஒளிர்வார் !– பழ.தமிழாளன்
கலைஞர் என்றும் கதிராய் ஒளிர்வார் ! 1. திருக்குவளை எனுமூரில் அஞ்சுகத்தாய் முத்துவேலர் அன்பால் ஒன்றி ஆற்றலுருக் கொண்டாரை அருமைந் தாய்க் கலைஞரையே ஈன்றெடுத்தார் திருவாகும் கல்வியினைத் தேடுகையில் செந்தமிழிற் பற்றுக் கொண்டும் ஈரோட்டுப் பெரியாரின் ஈடில்லாப் பகுத்தறிவின் ஊற்றங் கொண்டும் பெருமைமிகு அண்ணாவின் பீடுநிறை உணர்வதனைப் பெற்றுக் கொண்டும் பைந்தமிழ நாடதனில் பாங்குறவே ஐந்துமுறை முதல்வ ராகி இருளடிமைத் தீவீழ்ந்த இனமதனை எழுகதிராய் எழவும் வைத்தோர் ஈடிணையும் இல்லாதே …
தமிழினத்திற்கு வாழ்வா ? சாவா ? – புலவர் பழ.தமிழாளன்
தமிழினத்திற்கு வாழ்வா ? சாவா ? 1. அன்றுதொட்டே இன்றுவரை அறத்தமிழை இனத்தினை அழிக்கின்ற கொள்கைநிறை நஞ்சாரிய நெஞ்சுடன் நன்றிகொன்று நாடோறும் ஞாலமதில் வாழ்பவர் நடுநிலையும் நயன்மையையும் நாடாத இனமதே இன்றுமுற்றாய் அழிப்பதற்கே ஏறியுமே ஆட்சியில் இயற்றுகிற சட்டமதை எண்ணியுமே காத்திட ஒன்றிணைய வேண்டுமென்றே உள்ளமதில் தேருக ! ஒன்றிணைய வில்லையெனில் ஒண்டமிழும் அழியுமே ! 2. தனதுநலம் புறந்தள்ளித் தமிழினத்தைக் காப்பதே தலையாய கடனென்று தமிழினமே உணருதல் தனதுநல முதற்படியாய் நெஞ்சமதில் தேருக ! தமிழ்மொழியே தன்னினத்தைக் காக்கவல்ல தென்றுமே தனதுநெஞ்சில் …
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.23- 1.6.26
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.18 – 1.6.22 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம் 23. சொற்சுவை யடுத்தொளிர் தொடைச்சுவை நிறைந்த நற்சுவை யுடைப்பொரு ணலச்சுவை செறிந்த பற்சுவை படச்செயுள்செய் பாவலர்கொ ளப்பொன் னிற்சுவை கொடுத்துய ரியற்றமிழ் வளர்த்தார். 24. மண்ணுமுழ வோடுகுழல் நண்ணுமிசை யாழின் எண்ணொடு கலந்திலகு மேழிசை பொருந்தப் பண்ணொடு திறந்தெரிபு பாடுமவர் கொள்ள எண்ணிய கொடுத்துய ரிசைத்தமிழ் வளர்த்தார். 25. உண்ணிகழ்…
