உள்ளம் முழுதும் பூத்த வெள்ளைச் சிரிப்பு- சொற்கீரன்

உள்ளம் முழுதும் பூத்த வெள்ளைச் சிரிப்பு குளித்து மணற்கொண்ட கல்லா இளமை புன்னை பொறி இணர் தூங்குமரம் வாங்கி சுழித்த பொருனையின் செழித்த வாய்க்கால் தோய்ந்த நாட்களின் நினைவுகள் மூசும் பண்டு பெரிய காலம் தடங்கள் காட்டும். திணிமணற் பாவை உருகெழு கையின் தேன்படு சிதரினும் பலவே பலவே. சிறுவளை முரல சில்பூ அவிழ்ந்தன்ன‌ பிஞ்சுவயதின் பூஞ்சினைக்  கையள் குண்டுநீர் துழாஅய் யான் காட்டிய‌ வெள்ளைச்சிறு கல்லினும் வெள்ளிய‌ நகைத்து என்னுள் பூத்தாள் கலித்தே . – சொற்கீரன் [ வாய்க்காலில் குளிக்கும்  போது ஆழமாய்  முக்குளி…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.11-15

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.6-10  தொடர்ச்சி)            11.    தன்னலமென் னும்பொருளைத் தான்காணா ராய்ச்செய்யும்                 இன்னலமே யந்நலமா யெந்நலமும் பொதுநலமா                 நன்னலஞ்செய் தெண்ணியவை நண்ணிநல மன்னினரால்                 பன்னலமும் பொருந்தியதன் பயன்றுய்க்கும் பழந்தமிழர்.  12.    முட்டாற்றுப் படவெவரு முயலாமை யெனுங்குறையை                 விட்டோட்டித் தாளாண்மை வேளாண்மைப் படவாழ்ந்தார்                 நட்டாற்றுக் கிடைப்படினு நலியாது தமிழ்வளர்க்குங்                 கொட்டாட்டுப் பாட்டுடைய குலமோங்குங் குணநாடர்.            13.    அவ்வவர்தம் பிறப்புரிமை யவரெய்தி யவ்வவருக்                 கவ்வவரே யரசர்களா யவரரசுக் கவரரசாய்                 அவ்வவர்தம் முதற்கடமை யவ்வவர்செய் தேவாழ்ந்தார்                 எவ்வளவு மிறைமுறையி னியனெறிமா றாத்தமிழர்.           …

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.6-10

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.1-5  தொடர்ச்சி) 6.      இன்னாத வெவ்வுயிர்க்குஞ் செய்யாதே யெவ்வுயிரும்                 பொன்னேபோ லருள்பூத்துப் புறந்தந்து புகழ்பூத்தார்                 கொன்னாளுங் கலஞ்செலுத்திக் குடயவனப் பெருவணிகர்                 பொன்னாடிப் பொருணாடிப் புகலாகும் புகழ்நாடர்.            7.     நலக்குறையே வலக்குறையா நற்குணநற் செய்கைதமக்                 கிலக்கியமாய் வழிவருவோர்க் கிலக்கணமா யெனைத்தொன்றும்                 சொலக்குறையா மனைவாழ்க்கைத் துறைநின்று முறைவாழ்ந்தார்                 இலைக்குறையென் றெனைவளமு மினிதமைந்த வியனாடர்.            8.     பொருவிலே மெனப்போந்த பொருளிலரை யெள்ளுதலும்                 திருவிலே மெனக்குறைவு சிந்தையிடைக் கொள்ளுதலும்                 வெருவிலே யகன்றோட வேற்றுமையற் றேவாழ்ந்தார்                 கருவிலே திருவுடைய கவல்காணாக் கலைநாடார்.           …

கலங்காதே பெண்ணே! விடியலில் வருவான்! – சொற்கீரன்

கலங்காதே பெண்ணே! விடியலில் வருவான்! மெலி இணர் நவிரல் ஒள் வீ  சிதற  வான் அதிர் உடுக்கள் வெள் நிலம்  வீழ்ந்து பரந்து விழி விழி  உறுத்து  வியத்தல் அன்ன  நின்னைக்கண்டு  நெடுவெளி ஊழ்க்கும் மணியிழாய். வெங்கல் அருங் கடம் சென்றான் ஆங்கு   மீள்வழி நோக்கி வானப்பரவை  உன் விழி அம்பு கூர்த்த வடுக்கள்  எண்ணி எண்ணி புள்ளியிட்டாய் . அதனை அழித்திட வருவான் என்னே. கலங்கல் மன்னே.காலையும் விரியும். பொழிப்புரை  மெல்லிய பூங்கொத்து உடைய முருங்கை மரத்தின் ஒளிசிந்தும் சிறு பூக்கள் உதிர்ந்து தரையில் படர்ந்து கிடப்பது…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.4.23-28

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.21-22  தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 4.தலைமக்கட் படலம்            23.    மாரி போற்பொரு ளீந்துமே தாய்மொழி வளர்த்த                  சேர சோழபாண் டியரெனத் தமிழர்கள் செப்ப                  வீர ராகவும் புலவர்க ளாகவும் வெருவாச்                  சூர ராகவும் விளங்கினா ரிவர்வழித் தோன்றல்.            24.   அன்ன மூவருந் தன்னின்கீ ழன்னசிற் றரசர்                  தன்னை யேற்படுத் தியல்பொடு தமிழகந் தன்னைப்                  பன்னு நூற்றுறை பழுத்தநற் பழந்தமிழ்ப் புலவர்                  சொன்ன சொற்படி…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.4.17-22

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3. 11-16  தொடர்ச்சி)    இராவண காவியம் தமிழகக் காண்டம் 4. தலைமக்கட் படலம் 17.    இன்ன போலவே கிழக்குநா டென்னுமவ் விடத்திற்                  கன்னை போவோ ரின்புடைத் தமிழ்மகன் தன்னை                  மன்ன னாக்கினன் அன்னனும் வண்டமிழ் வளர்த்தான்                  இன்ன வன்மர பெழுந்தரே யிசையுடைச் சோழர்.            18.    ஓகை யோடவர் வானினுங் கொடுமுடி யுயர்ந்த                  நாகை மாநகர் தனிலினி திருந்துநா ணாளும்                  ஈகை யோடுசெங் கோலற முதலிய வெவற்றும்                  வாகை…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.4.11-16

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.6-10 தொடர்ச்சி) இராவண காவியம்1. தமிழகக் காண்டம் 4. தலைமக்கட் படலம்        11.    ஈங்குபல் லாண்டு செல்ல விருந்தமி ழகத்தில் வாழும்                  ஓங்குநல் லறிவு வாய்ந்த யுயர்தமிழ் மக்க ளெல்லாம்                  தாங்குநா னிலத்த ராகித் தனித்தனி வாழ்தல் நீத்துத்                  தேங்குமோர் குடையி னீழற் றிகழ்ந்திட மனக்கொண் டாரே. மாபெருந் தலைவன்            12.    தண்டமி ழகத்தை முற்றுந் தனியர சோச்சத் தாழ்வில்                  திண்டிற லொழுக்க மேன்மை திறம்பிடா நீர்மை மேய                 …

நான்

நான் முதுமை என்பது எனக்கில்லை! முனகலும் தவிப்பும் எனக்கில்லை! நோய்கள் குறித்து வருத்தமில்லை! நோதலும் சாதலும் எனக்கில்லை! இளமை இன்றும் மனம் நிறைய இன்னிசைப் பாடித் திரிகின்றேன்! எனக்கும் மேலே உள்ளவனை ஏக்கம் கொண்டு பார்ப்பதில்லை! எனக்கும் கீழே இருப்பவனை ஏளனம் செய்துச் சிரிப்பதில்லை! இதயத் துடிப்பின் உயிர்த்துளியாய் இயற்கை என்போன் இயக்குகிறான்! அன்பும் அறிவும் நிறைந்தோர்கள் அருகில் வாழும் காரணத்தால் ஆசைகள் குறைந்த மனிதன் நான்! அகந்தை இல்லாக் கவிஞன் நான்! – பாவலர் கருமலைப் பழம் நீ பேசி – 94444…

பீலிபெய் நடுகல் – சொற்கீரன்

பீலிபெய் நடுகல் மண்காத்து தன் உயிர் நீத்தவர்பீலிபெய் நடுகல் அல்லது பிறிது உரைபேழ் வாய்ப் பூதம் பேய்க்கதை கூறும்மறை மொழி ஈண்டு என்னிஃது பகரும்.பிறப்பும் இறப்பும் அடுக்கிய ஊழ் தனில்இருப்பின் பொறிகிளர் எல்லே எல்லாம்சொல்லிச்செல்லும் மெய்மொழி உணரார்கல்படு சுனை ஒரு நுங்கின் கண் என‌பளிங்கு வீழ்த்த நிழற்பட்டாங்குஉள்ளம் பாழ்த்து அஞ்சவும் படுமே. – சொற்கீரன் விளக்க உரை தன் தாய்மண் காக்க உயிர்நீத்தவர் பற்றி மயில் பீலி சூட்டிய அந்த நடுகல் காட்டும் உரைகள் தவிர வேறு வாய்பிளந்த பூதம் பேய்களின் கதைகளா அங்கு…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.4. 6-10

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3. 1-5 தொடர்ச்சி) இராவண காவியம்1. தமிழகக் காண்டம் 4. தலைமக்கட் படலம் 6.     ஏந்திய செல்வ மோங்கு மிரும்புனல் மருதந் தன்னில்                  வாழ்ந்தவே ருழவ ரோங்க வருமுதற் றலைவர் முன்பு                  போந்தவ னரணந் தங்கிப் பொருள்வளம் பொலியக் காத்து                  வேந்தனென் றானா னப்பேர் மேவினார் வழிவந் தோரும்.            7.     கடல்கடந் தயனா டேகிக் கலனிறை பொருள ராகி                  மடலுடைத் தாழைச் சேர்ப்பின் மணலுடை நெய்தல் வாழும்                  மிடலுடை நுளையர்…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.4.1-5

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.21-26  தொடர்ச்சி) இராவண காவியம் தமிழகக் காண்டம் 4. தலைமக்கட் படலம் அறுசீர் விருத்தம்            1.     குறிஞ்சியி லிருந்து முல்லை குறுகிப்பின் மருத நண்ணித்                  திறஞ்செறி வடைந்த பின்னர்த் திரைகடல் நெய்தல் மேவி                  மறஞ்சிறந் தயனா டேகி வணிகத்தாற் பொருணன் கீட்டி                  அறம்பொரு ளின்ப முற்றி யழகொடு வாழுங் காலை;            2.     தங்களுக் குள்ளே தங்கள் தலைவரைத் தேர்ந்தெ டுத்தாங்                  கங்கவ ராணைக் குட்பட் டச்சமொன் றின்றி யன்னார்                 …