பேசின.. பேசின.. – மு. இராமச்சந்திரன்
பேசின.. பேசின.. அச்சமும் கவலையும் நோய்களும் பேசின அடிதடி கலகமும் வறுமையும் பேசின மக்களும் பேசினர் மனத்தோடு அழுகையும் மறதியில் மறந்துமாய்ப் போக்குகளுமாய்.. வந்தவர் பேசினர் வாழ்க்கையின் நெருக்கமாய் வாய்மட்டும் பேச்சுமாய் வறட்டுகள் புரட்டுமாய் கற்றவர் பேசினர் கலைகளும் இழப்புமாய் காலமும் பேசிட வம்புமாய் வழக்குமாய் எல்லாமும் பொதுவென்னும் ஏக்கமும் கலக்கமும் இன்னலே செய்கின்ற வழக்கமே வரவுமாய் நேர்மைகள் பேசின யாரோடும் கூட்டுமாய் நெகிழ்ச்சியில் ஆடின போதனையும் வழக்கமாய் அன்புமே பேசிட மொழியின்றித் தயக்கமாய் அறிவுமே ஆடுது தள்ளாட்ட முழக்கமாய் கொடுமைகள் கொடியேந்தி…
காப்பியாற்றுப்படை – (உ)ருத்திரா
காப்பியாற்றுப்படை நெடுங்காந்தள் மூசிய அடைகரை அன்னவால் இயற்றிய வளைஇளம் நெற்றிகண்விழித்தாங்கு மொழி படாத்து மடமைகாப்பியாறு இமிழ்தரு இன்னொலியின்கதுப்பு சிவந்தவள் மணிகிளர் காட்சி.கழைபடுத்த பாம்பின் நுண்ணுரி சுற்றஇலஞ்சி நீழல் குவி இணர் கவிக்கஎழிலுண் மைக்கடல் எறிதிரை ஏய்ப்பகுணில் பாய் முரசம் உள்ளொலி எதிரமழைக்கண் கொண்டு பேய்வெள்ளருவிமலர் பொருது மற்று மண் பொருது இறங்கிபொறிப்பரல் முரல நீர்வழி போன்ம்நீடிய நெஞ்சின் அளியவள் காட்சி.முதிர்கான் போழ்ந்த வெண்ணிய காலைமுழைகள் ஒளியும் அதிர்செவி முயலாய்காட்டி காட்டி மறைக்கும் மன்றிடைகள்ளநகையாள் அவிழ்தரும் நகையுடன்சிந்திய சொல்லில் வித்திய முதிர்நெல்விளைதரும் என்று பலவு வீழ்த்தபடப்பை…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.3-1.6.7
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.21- 1.6.2தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம் 3. இனியசெந் தேனு மினியவான் பாலு மினியதீஞ் சுவைநிறைந் தியலும் கனியதன் சாறுங் கரும்பினின் சாறுங் கனிவரு முதலவின் பருப்பும் இனியவின் சுவையொன் றேயுளங் கேட்டற் கினிமைநம் பாலிலை யென்று கனியவுள் ளுருகிக் கவன்றிட விரங்கிக் கைசெயுங் கனிதமிழ் மொழியே. 4. உரப்பியுங் கனைத்து முடிமுத லடிநாக் குழறியுங் குழறியு…
தமிழன் பெட்பு – நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்
தமிழன் பெட்பு தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவற்கொரு குணமுண்டு; அமிழ்தம் அவனுடை வழியாகும்; அன்பே அவனுடை மொழியாகும். 1 அறிவின் கடலைக் கடைந்தவனாம்; அமிழ்தத் திருக்குறள் அடைந்தவனாம்; (1)பொறியின் ஆசையைக் குறைத்திடவே பொருந்திய நூல்கள் உரைத்திடுவான். 2 கவிதைச் சுவைகளை வடித்தெடுத்தான் கம்பன் பாட்டெனப் பெயர்கொடுத்தான்; புவியில் இன்பம் பகர்ந்தவெல்லாம் புண்ணிய முறையில் நுகர்ந்திடுவான். 3 “பத்தினி சாபம் பலித்துவிடும்“ பாரில் இம்மொழி ஒலித்திடவே சித்திரச் சிலப்பதி காரமதைச் செய்தவன் துறவுடை…
தமிழ் மட்டும் தானே! – உருத்திரா
தமிழ் மட்டும் தானே! நம்பிக்கை கொள்! அது உன்னுள் ஆயிரம் யானைகள் பிளிறும் குரல்! அச்சம் அகற்று! அதுவே உன் விரல்நுனியில் ஒரு விடியல். உள்ளம் பிழிதல் தவிர்த்து விடு! அதுவே வழியிடறும் பாறைகள் தவிடு பொடியாக்கும். இதயம் துடிக்கும் போது உணர்ச்சியை இளக்கமாய் ஆக்கி இறுக்கமாய் உடுத்திக்கொள்! தளர்வுகள் ஏதும் தலை காட்டாது ஓடும். சொற்கள் தோறும் கற்கள் பிளந்து உறுதியைக்காட்டு! இமயங்கள் கூடத் தன் மகுடங்கள் இழந்து மண்டியிடும் அறிவாய்! மனிதா!மனிதா! மந்திரம் சொல்லி உனை மடக்கும் மொழியை உடைக்கும் ஓரொலி…
இன்று மகாராட்டிரம், நாளை தமிழகமா? – பழ.தமிழாளன்
இன்று மகாராட்டிரம் நாளை தமிழகமா? குடியாட்சி மாண்பதனைக் குப்புறவே கவிழ்க்கின்ற காட்சி தன்னைக் கொள்கையற்றே ஒன்றியத்தை ஆளு கின்ற ஆட்சியினர் இற்றை நாளில் முடிமன்னர் போலவுமே மகாராட்டி ரமாநிலத்தின் ஆட்சி தன்னை முற்றாக முடிப்பதற்கு முனைப்போடு செயல்புரியும் காட்சி காண்க அடிமையென மக்களையே ஆக்குகின்ற ஆரியத்தின் சூழ்ச்சி தன்னை அடல்மறவத் தமிழினமே அகமதிலே பதியாதே இருப்பார் என்றால் விடிந்திருக்கும் நிலைமாறி விடியாத இருள்சூழ்ந்த நிலையே ஒக்கும் வெல்தமிழ இனமெல்லாம் விழிப்…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.21-1.6.2
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.16-20 தொடர்ச்சி) இராவண காவியம் தமிழகக் காண்டம் தாய்மொழிப் படலம் 21. காதல்முதிர்ந் தில்லறஞ்செய் காதலர்தா மவரோடு சாதலிலை யேற்றனியாந் தபுதார நிலைவாழ்தல் ஈதலது பலரைமணந் திடர்விளைக்கு மிழிசெயலைக் காதினுங்கேட் டறியார்கைக் களிறிளைக்கு மலைநாடர். 22. அறப்போர்செய் குவதன்றி யரசிழக்க நேரினுமே மறப்போர்செய் தறியாது மறஞ்செறிந்த மனத்தினராய்ப் புறப்பொருளின் றுறையறிந்து பொருதுபுகழ் பூண்டிருந்தார் திறப்பாடெல் லாம்பொருந்தித் திருவளருந் தென்னாடர். 23. ஆன்றவிந்த தமிழ்ப்பெரியா ரந்தணரா மையரெனுஞ் …
நம்பிக்கையுடன் எழு! : கி.பி. அரவிந்தன்
நம்பிக்கையுடன் எழு! மலைகளில் உரமாய்த்தேநீரில் இரத்தமாய்முகமற்றுப் போனோரேகவனித்தீர்களா? பனிப் படலங்களைஊடுருவும்எக்காள ஒலிகள்.சிங்கத்தின் வாள்இனிஉடைபடக்கூடும். அதோ.வயல்வெளி எங்கும்தலை நிமிரும் நெற்பயிர்கள்.வசந்தன் கூத்தின்நாயகர்கள் ஆட்டம்.இவனோ நண்பன். பனைகள் மறைக்கும்செம்மண் பரப்பு.பனங்காட்டுச் சலசலப்பு.ஓலைகள் உராய்வினில்அக்கினிக் குஞ்சுகள். அவற்றுக்கும் அப்பால்அலைகளின் சீற்றம்,முரல்களின் துள்ளல்.அம்பாப் பாடல்களில்சோகம் தொலைக்கும்ஏலேலோப் பாடகர்கள். நண்பர்கள் . . .தோழர்கள். . . “ஆறுகள் முன்னோக்கியேபாய்கின்றன”அப்புறமென்ன!அடர்ந்த மலைகளின்இருட்டினில் இருந்துதேநீர் கரங்களில்விலங்குகள் கழற்று.பனி மலைகளின்உச்சிகள் பிளந்துகலவியைத் தொடங்கு,சக்தியை உமிழ்,உழுத்த மாளிகையின்இடுக்குகள் எங்கணும்ஆலம்விதைகள். நம்பிக்கையுடன்எழு. . . . -கி.பி. அரவிந்தன்
கரையான் புற்றுக்குள் கருநாகம் – 2 : புலவர் பழ.தமிழாளன்
கரையான் புற்றுக்குள் கருநாகம் – 2 தில்லைமரம் நிறைந்ததினால் தில்லை யென்ற பெயரோங்கும் இடமும் ஆகிச் செந்தமிழர் போற்றுகின்ற சிவனாகும் நடராசர் கோவி லுக்குத் தொல்தமிழ இனம்வந்த முதற்பராந்த கமன்னென்பார் பொன்னும் வேய்ந்தார் / புதுக்கோட்டை மாமன்னர் சேதுபதி மரகதக்கல் ஈந்து மகிழ்ந்தார் // கொல்லைப்புற வழியாக உட்புகுந்த தீச்சிதரும் உரிமை கோரல் / கருநாகம் கரையான்புற் றுரிமை தனைக் கோருகின்ற நிலையே ஒக்கும் // வல்லடியாய் வழக்காடு தீச்சிதரை …
கரையானின் புற்றிற்குள் கருநாகப் படையெடுப்பா ! ? – புலவர் பழ.தமிழாளன்
கரையானின் புற்றிற்குள் கருநாகப் படையெடுப்பா ! ? இறையுறையும் கோவில்கட்ட இயன்ற வரை பொருளீந்தோர் தமிழ ரன்றோ ? எழிலார்க்கும் கோபுரமும் இறையமரும் கருவறையும் புறமும் உள்ளும் முறையாகப் பணிபுரிந்தோர் முத்தமிழ்த் தாய் ஈன்றெடுத்த சேய்க ளன்றோ ? முடிவுற்ற கோயிலினுள் முத்தாய்ப்பாய் எப்பணியும் செய்யா நின்ற கறையுள்ளத் தீச்சிதர்கள் உட்புகுந்தே தில்லையிலே போடும் கொட்டம் காணக்கண் கூசுகின்ற காட்சியதைக் காணுங்கால் கரையான் தன்வாய் // உறைவதற்கே உழைத்தெடுத்த புற்றி …
அடிப்பாய் நீச்சல் உன்கையாலே! – பாவலர் மு இராமச்சந்திரன்
அடிப்பாய் நீச்சல் உன்கையாலே! வந்தது போகும் வருவதும் போகும் வாழ்நாள் முழுவதும் வருவதும் போகும் துன்பங்கள் போகும் துயரங்கள் போகும் துய்க்க மறந்தன பலவும் போகும் ஏழ்மையும் போகும் இன்பங்கள் போகும் இருந்து களித்த சுகங்களும் போகும் போகும் போகும் புகுந்தன போகும் புதிதாய் வந்தன பழையதாய்ப் போகும் இளமை போகும் இருந்து உழைத்த உறுதியும் போகும் இல்லாதிருந்த மாற்றங்கள் வாழும்! படைத்தன போகும் பகைகளும் போகும் பழியென சுமந்த காலமும் போகும் அப்படி அப்படி ஆட்சியில் உலகம் அதனுள் இருந்து பழகிடு உவந்தும்…
தமிழினத்து நலவாழ்வை எண்ணல் வேண்டும்! – புலவர் பழ.தமிழாளன்
தமிழினத்து நலவாழ்வை எண்ணல் வேண்டும்! இதழ்களுக்கு வேண்டும் ! 1.நாடாம்நம் மொழியினமே போற்றல் வேண்டும் !நற்றமிழர் பண்பாடு காத்தல் வேண்டும் !வாடாமல் உணவுண்டே மக்கள் வாழவழிவகைகள் ஆசான்போல் கூறல் வேண்டும் !நாடாளும் மன்னனிடம் குறையே கண்டால்நக்கீரன் போலுறுதி கூறல் வேண்டும் !ஏடாள்வோன் என்றென்றும் நெருப்பைக் கக்கும்எரிமலையாய்த் தீமைதனை எரித்தல் வேண்டும் ! 2.மனமொன்றித் தமிழினத்து மக்கள் எல்லாம்மாற்றமின்றித் தமிழறத்தைப் போற்றல் வேண்டும் !இனம்நாடு மொழிவாழ்ந்து சிறப்புற் றோங்கஎந்நாளும் ஏற்றபணி செய்தல் வேண்டும் !தனதுநல வாழ்வதனைப் புறத்தே தள்ளித்தமிழினத்து நலவாழ்வை எண்ணல் வேண்டும் !இனப்பகையாம் ஆரியத்தை…
