உலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019
புரட்டாசி 20, 2050 – 07.10.2013 திங்கள் காலை 10.00 ஒளவைக்கோட்டம், திருவையாறு உலக உத்தமர் காந்தியடிகள் தமிழ்க் கவிஞரகளின் கவிதாஞ்சலி கவிதைகள் அனுப்ப வேண்டிய முகவரி: கவிஞர் முனைவர் மு.கலைவேந்தன் தலைவர், அனைத்துலகத் தமிழ்க்கவிஞர் மன்றம் கல்லாடனார் கல்விக் கழகம், புதுச்சேரி ஒளவைக்கோட்ட அறிஞர் பேரவை, திருவையாறு
எங்கு மறைந்தீர்? ஏன் பிரிந்தீர்? – மறைமலை இலக்குவனார்
எங்கு மறைந்தீர்? ஏன் பிரிந்தீர்? பைந்தமிழின் பலதுறையும் ஆய்ந்தறிந்த அறிஞரே! கண்ணீரைப் பெருக்கிக் கலங்கிக் கரைந்து சிந்தை எல்லாம் நைந்திடவே எம்மைநீர் பிரிந்ததுவும் முறையா? சொல்லாண்டு பொருளாண்டு எழிலார்ந்த காப்பியத்தின் சுவையாண்டு திறனாய்ந்து நூல்பலவும் தந்தீரே! பல்லாண்டு பல்லாண்டு பாடவொரு வழியின்றி நில்லாமை நெறியெமக்குச் சொல்லாமல் சொன்னீரே! நவையெதுவும் இரா மோகன் புகழ்கொண்ட பேராசான் முகம்கண்டு மகிழ்ந்திடவே வழியினிமேல் இல்லையா? கூற்றுவன் தொல்லையா? நவையற்ற நறுந்தமிழால் நலம்விளைக்கப் பல்காலும் திறனாய்வுத் துறைமேவித் தரமான நூலியற்றி அறிவார்ந்த பொருள்பலவும் செறிவாகப் புலப்படுத்தும் அரியகலை…
ஏனையா? – அருள்மணி
ஏனையா? குண்டும் கொலையும் என்றுலகம் கொடூர வழியிற் செல்வதனைக் கண்டு காணா திருப்பதுஏன்? காரணம் சொல்வாய் ஐ. நா. வே! 1 உலக ஒழுங்கை நிலைநாட்டும் ஓரிட மாகத் உனைக்காட்டும் உலக அமைப்பாம் ஐ. நா. வே! ஊமை யானது ஏனையா? 2 திட்ட மிட்டோர் இனஅழிப்பைச் செய்த அரசிற் குதவியன்று கட்டம் கட்டமாய் அழிக்கக் காரண மானீர் ஏனையா? 3 மனித நேயம் பேசிடுவோர் மானிட உரிமைக் குரல்தருவோர் தனிமைப் படுத்தி ஓரினத்தை சாகடித் திடஏன் விட்டீர்கள்? 4…
மறப்போமா? – மாதகலான்
மறப்போமா? பத்து ஆண்டுகள் போனாலும் பழைய நினைவுகள் மாறுமோ மொத்த ஈழத் தமிழினமும் முடிவைத் தேடி ஏங்குகிறோம்! 1 மொத்த உலகும் பார்த்திருக்க முள்ளி வாய்க்கால் நிலப்பரப்பில் கொத்துக் குண்டால் அடிபட்ட கொடூரம் தன்னை மறப்போமா? 2 வாழும் உரிமை வேண்டியன்று வன்னி மண்ணில் தமிழர்கள் ஆளும் வருக்கச் சூழ்ச்சிக்கு ஆட்பட் டழிந்ததை மறப்போமா? 3 முள்ளி வாய்க்கால் அவலத்தை மொத்த ஈழத் தமிழர்க்கும் கொள்ளி வைக்கும் நினைவோடு கொண்டு சென்றதை மறப்போமா? 4 சோகம் நிறைந்த…
நல்ல நண்பர்கள் தேவை! – யாழ் பாவாணன்
நல்ல நண்பர்கள் தேவை! நண்பர்கள் எம்மை நாடி வரலாம்.நண்பர்களைத் தேடி நாம் போகலாம்.“ஆயிரம் நண்பர்களை இணைத்தாலும் கூடஓர் எதிரியைக் கூட ஏற்படுத்தி விடாதே!” எனப்பாவரசர் கண்ணதாசன் சொல்லிவைத்தார்!நண்பர்களை அணைக்கத் தான்நானும் விரும்புகின்றேன்.நண்பர்கள் எதிரியாவதைக் கண்டதும்நானும் ஒதுங்குகின்றேன்.எதிர்ப்பட்ட எதிரியும் நண்பராகலாம்எச்சரிக்கையாகப் பழகுகின்றேன்.நண்பர்களே வேண்டாமெனநானும் ஒதுங்கவில்லை – இத்தால்*நண்பர்கள் தேவையெனக் காத்திருக்கிறேன்.நண்பர்களால் வானுயரப் புகழீட்டியநண்பர்களால் தான் உணர்ந்தேன்நண்பர்கள் எனக்குத் தேவை என்றே!நண்பர்கள் இல்லையென்றால் – தனக்குஉளநோய் தான் வந்திருக்குமெனநண்பர்கள் சொல்லித் தான் அறிந்தேன்நண்பர்கள் கூட நல்மருந்தென்றே!என்னை நண்பர் ஆக்குங்கள்…என்னை எதிரி ஆக்காதீர்கள்…நான் எதிரியாவதை விடநல்ல நண்பராகவே இருந்துவிடுகிறேன்!நல்ல…
எங்களுக்காக உழைப்பார் உண்டோ!? – இலக்குவனார் திருவள்ளுவன்
எங்களுக்காக உழைப்பார் உண்டோ!? உழைத்தோம் உழுதோம் உணவின்றி வாடுகிறோம் உழைத்தோம் நெய்தோம் துணியின்றி ஏங்குகிறோம் உழைத்தோம் கட்டினோம் வீடுஇன்றி அலைகிறோம் உழைத்தோம் பிறருண்ண பிறருடுக்க பிறர்வசிக்க எங்களுக்கு எல்லாம் கிடைக்க உழைப்பார் உண்டோ!? இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழர் வாழ்வுக்கு ஊன்றுகோல் பாரதிதாசன் – கவிஞர் நாகூர் காதர் ஒலி
தமிழர் வாழ்வுக்கு ஊன்றுகோல் பாரதிதாசன் மூவேந்தன் வளர்த்த முதிர்கனித் தமிழை உண்டு நாவேந்தன் தானாகி நாளெல்லாம் பாட்டெழுதி காவேந்தன் மணமாகி கவிதைகள் பலப்பாடி பாவேந்தன் எனப் பேர்பெற்ற பாரதிதாசன் புதுவையில் உதித்த புதியதோர் விடியல் பூந்தமிழுக்குக் கிடைத்த பொற்குவிப் புதையல் எதுகையில் மோனையில் இசையிடும் தென்றல் ஏழ்மையில் திகந்த தூய்மையின் திங்கள் சித்திரை மாதத்தில் ஊறும் கனலூற்று செந்தமிழ்ச் சொல்லாய் சீறும் அனல்காற்று முத்திரைப் பதித்த கதிரின் ஒளிக்கீற்று முற்போக்குச் சிந்தையில் வேதியல் வீச்சு வாத்தியார் பணியில் வாழ்வேணி ஏறியவன்…
தன்னேரிலாத தமிழ் – பாரதிதாசன்
தன்னேரிலாத தமிழ் தன்னேரிலாத தமிழ் அன்னையே-உனை வாழ்த்தினேன் இன்னல் தவிர்த்தாள் என்னையே தன்னேரிலாத….. முன்னைத் தோன்றிய மக்கள் முதன்முதல் பேசிய மொழியே! மொழியே! மொழியே!, எனவே வாழ்த்தும், தன்னேரிலாத….. தென்னவன் சேரன் சோழன் செம்மையிலே வளர்த்த திருவே! திருவே, திருவே புகழ் மிகுந்த மன்னும் குமரிமுதல் பனிமலை மட்டும் வாழ்ந்த வாழ்வே! வாழ்வே வாழ்வே எனவே வாழ்த்தும், தன்னேரிலாத….. ஆரியர் எதிர்ப்புக்கும் அசையாமல் வாழும் எங்கள் அன்பே! அன்பே,அன்பே புகழ் மிகுந்த சீர்பெறு முத்தமிழே தெவிட்டாத புத்தமிழ்தே செல்வி! செல்வி, செல்வி…
உலகத் தமிழ்க்கவிஞர்களின் சங்கமம் 2019, புதுச்சேரி
ஆடி 19, 2050 – 04.08.2019 உலக உத்தமர் காந்தியடிகள் தமிழ்க்கவிஞர்களின் கவிதாஞ்சலி கல்லாடனார் கல்விக் கழகம், புதுச்சேரி பங்களிப்புக் கட்டணம் உரூ.500/- கவிதைகள் அனுப்ப வேண்டிய முகவரி: முனைவர் மு.கலைவேந்தன் நிறுவனர் – தலைவர், உலகத் தமிழ்க்கவிஞர்கள் மா மன்றம் 153, வடக்கு வீதி, திருவையாறு 613 204, தஞ்சாவூர் மாவட்டம்
மறவாதே! 21.04.2019 பாவேந்தர் நினைவு நாள்!
மறவாதே! 21.04.2019 பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள்! “பண்பட்ட ஞானம் பகுத்தறிவாம்! அவ்வழியில் மண்ணின் மாத்தமிழர் மாண்புறுக! – விண்வரை பெண்ணினமும் ஆணினமும் பேணுங் கருத்தொன்றித் தண்ணிழல்போல் வாழ்க தழைத்து“ எனவுரைக்கும் பாவேந்தர் இன்றமிழ்ப் பாச்சொல் நனவாக்கிப் பண்பாட்டை நாடு! – இனம்மொழி மண்ணுரிமை போற்று! மறவாதே! நல்லொழுக்கம் கண்ணெனக் காத்துயர்வைக் காண்! – மணிமேகலை குப்புசாமி
காணாமல் போவர்! – இலக்குவனார் திருவள்ளுவன்
காணாமல் போவர்! நேற்றுவரை வந்தவர்கள் நாளை காணாமல் போவர் விரல் மை காயும் முன்னர் மாயமாய் மறைவர் மறந்து போய் நன்றி சொல்ல வரலாம் சிலர் தவறாமல் பலர் தொகுதிப் பக்கம் காணாமல் போவர் நம் நாட்டுத் தேர்தலின் சிறப்பு இதுதான் இருந்தாலும் நாம் தவறாமல் வாக்களிப்போம்! இலக்குவனார் திருவள்ளுவன்
வியர்வையே! – இலக்குவனார் திருவள்ளுவன்
வியர்வையே! வியர்வையே வியர்வையே உனக்கிது முறையோ அயர்விலா துழைப்போன்உடலில் பிறப்பாய் உள்ளத்தில் சிறிதும் நன்றியை எண்ணாய் கள்ளமாய் ஏய்ப்போன் பேழையைச் சேர்வாய் காலமும் மாறும் கோலமும் மாறும் ஞாலமும் நம்மை வளமாய்க் காணும் நாளும் உழைப்போம் மேலும் உயர்வோம் வாழும் உலகில் வளத்தைக் காண்போம் என்பன நினைக்கும் ஏழையை ஏய்ப்பாய் உண்பதைப் பறிப்பாய் உடுப்பதைக் களைவாய் வியர்வை என்னும விலையை வினவும் அயர்வை அறியா முதலையை வளர்ப்பாய் கொழுக்கக் கொழுக்கச் செழித்திடச் செய்வாய் கருவைத் தந்தோன் கருகிச் சாகிட உருவைக்காணான் பெருகி உயர்ந்திட உதவும்…
