துடித்தேன்! வடித்தேன்! காலடிச் சுவடுகள் பதிப்பேன்! – கவிஞர் சீவா பாரதி
துடித்தேன்! வடித்தேன்! காலடிச் சுவடுகள் பதிப்பேன்! வானத்தில் உலவிடும் வண்ணமலர் நிலவைநான் வடித்திட எழுதுகோல் பிடித்தேன் – புது வரிகளை வேண்டிநாள் துடித்தேன் – ஆனால் வானமே கூரையாய் வாழ்ந்திடும் எளியவர் வாழ்க்கையைக் கவிதையில் வடித்தேன் – அவர் நிலைகண்டு கண்ணீரை வடித்தேன்! – அந்த நிலவினைப் பாடநான் நினைத்தேன் – நாட்டு நிலைமையைப் பாடிநான் முடித்தேன் – இது நான்செய்த தவறாகுமா? – இல்லை நான்கற்ற முறையாகுமா? காதலின் இலக்கணம் கண்டவர் வாழ்க்கையைப் படைத்திட எழுதுகோல் பிடித்தேன் – புதுப் பாடல்கள்…
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (24) – வல்லிக்கண்ணன்
[ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (23) தொடர்ச்சி)] ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (24) இருள் மூடும் தமிழகத்தில் அருட்கதிராய் வந்து, மண்ணிலே மனிதகுலம் ஒன்றே என்று நல்மார்க்கத்தை அறிமுகம் செய்த வள்ளலாரை விதவிதமாய்ப் போற்றி இசைக்க பெருங்கவிக்கோ அலுக்கவில்லை. வேறொரு இடத்தில் வள்ளலார் பெருமையை அவர் இவ்வாறு பாடுகிறார்: – இருட்சாதி மதத்தொழுநோய் இவ்வுலகம் முற்றும் இவன்பெரியன் நான்பெரியன் என்பதன்றிவேறு அருட்தன்மை எல்லேரர்க்கும்.காட்டுவதாய் இல்லை அவரவர்கள் தம்பெயர்க்கே அதர்மங்கள் கண்டார் பொருட்தன்மை பெரிதல்ல புண்ணியங்கள் அல்ல பூமியுள்ள மனிதரெல்லாம் மதங்களாலே பிரிந்தே மருட்தன்மை…
திருப்பூர் தேவியின் குறும்பாக்கள் – விண்மீன்கள், ஆறு, புல்லாங்குழல்
திருப்பூர் தேவியின் குறும்பாக்கள் – விண்மீன்கள், ஆறு, புல்லாங்குழல் வெறும் கூழாங்கற்கள் கிளிஞ்சல்களுடன் அரற்றியது… மணலையிழந்த ஆறு! பெருங்கூட்டம் எனப் பெயர் வாங்கின… தனித்தனியான விண்மீன்கள்! யார் ஒளித்து வைத்தது குழலையும் இசையையும்… மூங்கில் வனத்தினுள்? வழக்குரைஞர் இரா.சுகுணாதேவி, திருப்பூர்
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (23) – வல்லிக்கண்ணன்
[ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (22) தொடர்ச்சி] ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (23) மதம்வேண்டாம் சாதிவேண்டாம் மார்க்கம் ஒன்றே மனிதருக்குள் உலகத்தில் இருந்தால்போதும் கதகதப்பாய்க் குளிர்காய அமைத்தார் கீழ்மைக் கயவர்கள்தாம் சாதிமதச் சமயச் சண்டை! பேதமில்லை பிரிவில்லை பிரிவால்.வையப் பட்டினிகள் ஒழியவில்லை! பின்ஏன் இந்த இதமில்லா மதப்பிரிவு எண்ணிப் பாரீர் எல்லாரும் மனிதமதம் உரிமை ஒன்றே! என்றெல்லாம் வியத்தகுநல் கருத்தைச் சொன்ன ஈரமிகு வள்ளலாரின் கொள்கை பற்றி நன்றி யுடன் இவ்வையம் சென்றி ருந்தால் நாசங்கள் நலிவேது? பூமித ன்னில் கொன்றொழிக்கும்…
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (22) – வல்லிக்கண்ணன்
[ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (21) தொடர்ச்சி] ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (22) மதங்கள் சாதி மடமை இன்றி மார்க்கம் கண்ட தமிழர்கள்-பின்னே விதந்து பிறரின் மதத்தில் சென்ற, வினைகள் மாற்றப் புறப்பட்டேன் என நாவலிக்கிறார் பெருங்கவிக்கோ. அறமும் மறமும் ஆன்ற ஒழுக்கமும், உண்மை ஆக்க நெறியும், ஆண் பெண் சமமும், திறமுடன் சங்கக் காலத்தின் முன்பே தமிழர் தேர்ந்த வாழ்க்கை முறையாகும். என்று கவிஞர் அறிவுறுத்துகிறார். இம்மதம் அம்மதம் எம்மதம் சேரினும்-நம்மின் இனம்தமிழ் மொழி தமிழ் என்றே பாடு: தம்மதம்…
நாம் தமிழுக்கு உண்மையாக இல்லை! பேரா.மறைமலை இலக்குவனாரின் நேருரை 2/2 – சந்தர் சுப்பிரமணியன்
(நாம் தமிழுக்கு உண்மையாக இல்லை! பேரா.மறைமலை இலக்குவனாரின் நேருரை 1/2 தொடர்ச்சி) நாம் தமிழுக்கு உண்மையாக இல்லை! பேரா.மறைமலை இலக்குவனாரின் நேருரை 2/2 11)? இன்றைய அவசரகதி உலகில் சிற்றிதழ்களுக்கு – பொதுவாக இதழ்களுக்கு வாசகர்கள் உள்ளார்களா? அல்லது குறைந்து வருகிறதா? வாசகர்களின் ஆர்வம் குறைந்துள்ளது என்று சொல்லவியலாது ஏனெனில், ஆனந்த விகடன் போன்ற பதிப்பகங்கள், வெகுவாக அறியப்படாத எழுத்தாளர்களின் நூல்களைக்கூட பத்தாயிரம் படிகளுக்கு மேல் பதிப்பிடுகின்றன. ஆனால் வாசகர்கள் எதை விரும்பிப் படிக்கிறார்கள் என்பதே கேள்விக்குரியது. ஊன்றிக்கற்க வேண்டிய இலக்கியங்களைக் கற்காமல்,…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙுங)– இலக்குவனார் திருவள்ளுவன்
( தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙௌ) தொடர்ச்சி ) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙுங) ஆய்வுரைப் போர்வையில் தமிழுக்கு எதிராகப் பரப்பும் கருத்துகளுக்கு எதிரான போர்! கால ஆராய்ச்சி என்ற பெயரில் முந்தைத் தமிழின் காலத்தைப் பின்னுக்குத் தள்ளுவோருக்கு எதிரான போர்! தாய்மொழித் தமிழைப் படிப்பிப்பதால் தமிழாசிரியர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளை மீட்பதற்கான போர்! என்றும் தமிழ் எங்கும் தமிழ் துலங்க வேண்டும் என்பதற்கான போர்! அயல் மொழிகளில் மறைக்கப்படும் உயர்தனிச் செந்தமிழ்ச் சிறப்புகளை வெளிக்கொணருவதற்கான போர்! தமிழால் வாழ்ந்தும் தமிழையே தாழ்த்துவோருக்கு…
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (21) – வல்லிக்கண்ணன்
(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (20) தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (21) வீண் சண்டை வேண்டாம் விவேகமில்லா மதம் வேண்டாம். எல்லா மதங்களிலும் இருக்கின்ற நற்கருத்தை நல்நோக்கத்தோடு நாமெல்லாம் ஏற்றே மனிதர்கள் ஒற்றுமையால் மன்பதையில் வாழ்வதற்கு இனி ஒருவகை செய்வீர் என்றுதான் கேட்கின்றேன்! வழிவகை என்னவென்று வகையறிந்து காண்கையிலே கழிகொள்கை நீக்கிக் காரிருள் ஒளியாக சமனிதமதம் என்ற ஒரேமதம் உலகில் ஏற்படுத்திப் புனிதம் அடைவோம் போற்றிப்புகழ் அடைவோம்என ஆசையாய்க் கூறுகின்றேன் அழைக்கின்றேன் மனத்துணிவாய் என்று பெருங்கவிக்கோ தன் எண்ணத்தை…
பெரும்பசிக்காரர்களின் தீராவேட்கை – தமிழ்சிவா
பெரும்பசிக்காரர்களின் தீராவேட்கை அறிவின் சுடுகாட்டிற்கென அமைந்த வழிகள் ஏராளம் ஏராளம் எழுதுங்கள் எழுதுங்கள் எல்லாத் தேர்வுகளையும் பாடத்திட்டப் படுகுழிகள் எப்போதும் பயன்பாட்டிலேயே இருக்கின்றன மதிப்பெண்களால் சிதைக்கப்பட்ட மனித மூளைகள் வரலாற்றுப் பெட்டிகளில் பாதுகாப்புடன் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன பெரும்பசிக்காரர்களின் தீராவேட்கையுடன் அறுப்பதற்காகவே ஆடுகளும் கோழிகளும் அலங்கரிக்கப்பட்டுள்ளன நித்திரை மன்றங்களின் சுத்தியல்பட்டு சிந்திய இரத்தவாந்திகள் அவ்வப்போது உடனுக்குடனே ‘சுடச்சுட’ அலசப்படுகின்றன பற்பலவற்றை ஆவணப்படுத்தாமலிருப்பது அருமை மீயருமை வருணவழிப் ‘பட்ட’ கல்வியில் கல் மண் முள் கழிவுகள் காளைகளின்…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙௌ) – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙோ) தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙௌ) 5. ஞாலப் போராளி தாழும் தமிழர்களை மீட்பதற்காக வாழும் வரை போராடிய பேராசிரியரே ஓர் இயக்கம் என்றும் வலிமை மிக்கப் படை என்றும் இன்றும் நினைவில் போற்றப்படுகிறார். இவ்வாறு, தமிழ்ப்பேராசிரியர் சி.இலக்குவனார் உலகப் போராளியாக உயர்ந்து நிற்பதை அறிஞர்கள் பலரும் உரைத்துள்ளனர். “பேராசிரியர் இலக்குவனார் தமிழ் காக்கப் பிறந்த பிறவி! அதற்கு ஊறு நேரும் எனின் தம் தலை தந்தும் காக்க முந்தும் போராளி!” என்கிறார் முதுமுனைவர் இரா.இளங்குமரன் (பக்கம்…
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (20) – வல்லிக்கண்ணன்
[ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (19) தொடர்ச்சி] ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (20) 6. மதங்களைச் சாடும் சிந்தனை வேகம் உள்ளத்தில் பெருக்கெடுக்கும் உணர்வின் ஊற்றுக்களாகப் பக்திப் பாடல்கள் பாடியுள்ள பெருங்கவிக்கோ முழுக்க முழுக்க ஆத்திகக் கவிஞர் அல்லர். சிந்தனை வேகம் பொங்கிப் பாயும் சுடர் அறிவுக் கவிதைகளை மதங்களைச்சாடியும், போலிமதவாதிகளை வன்மையாகக் கண்டித்தும் அவர் பாடியிருக்கிறார். இவர் ஒரு நாத்திகரோ என்ற மயக்கத்தை உண்டாக்கும் அவற்றை மட்டுமே படிக்க நேர்ந்தால். கவிஞரை நன்கறிந்த கவிக்கொண்டல் மா. செங்குட் டுவன் இது…
அடுத்தவன் வாயில் உண்பான் உண்டோ? – அ.பு.திருமாலனார்
அடுத்தவன் வாயில் உண்பான் உண்டோ? அவனவன் வாயா லன்றிப் பிறனெவன் உண்ண வல்லான் அவனவன் கண்ணா லன்றிப் பிறனெவன் காண வல்லான் அவனவன் செவியா லன்றிப் பிறனெவன் கேட்க வல்லான் அவனவன் மொழியினத்தைப் பிறனெவன் காப்பான் வந்தே! தன்னினம் காப்ப தற்கே தகவிலான் தன்னி னத்தின் திண்ணிய நெறியைப் போற்றுந் திறனிலான் தேர்வார் தம்மை அன்னிய ரென்றே யெண்ணி ஆழ்குழி வெட்டி யதனுள் கண்ணிலா னாய் வீழும் கதையிவன் கதையாய்ப் போயிற்றே! பட்டங்கள் பெற்றா லென்ன? பதவிகள் பெற்றா லென்ன? கற்றவர்க்…
