கசங்கிய காகிதங்களின் கருணைமனு – தமிழ்சிவா

கசங்கிய காகிதங்களின் கருணைமனு   நகர நரகத்தில் கைவிடப்பட்ட கட்டடங்களாய், தூய்மையையே காணாத கழிவறைகளாய், தூய்மை இந்தியாவில் நாங்கள்!   நகரத் திராணியற்ற நத்தையின் முதுகில் நான்காயிரம் பலமேற்றியதில் கல்வி வண்டி கவிழ்ந்தது எங்கள்மேல்தான்!   அந்த இண்டு இடுக்கில் எட்டிப்பார்த்தவேளையில் காலைத் திணிக்க இரண்டுறைகள் நூல்களைத் திணிக்கப் பையுறை உங்கள் விருப்பத்தைத் திணிக்க நாங்கள் எங்களைத் திணிக்கப் பள்ளி உந்துகள் கழுத்துக்குக் கோவணம் மாட்டி மூளையை அம்மணமாக்கினீர்கள்!   எங்கள் நாக்கைக் கசக்கியதில் நாண்டுகொண்டது எங்கள் மொழி!   பள்ளிக்கழிவறையில் பதைத்துச் செத்தது…

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (28) – வல்லிக்கண்ணன்

[ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (27)   தொடர்ச்சி]   ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (28) அறந்தவறாமல் வாழ்ந்தால் அகத்தினிய வலிமை ஓங்கும் திறந்தவறாமல் வாழ்ந்தால் செம்மைசால் நலங்கள் தேங்கும் சிறந்தபேர் பணிகள் செய்தால் செய்தவக் கனிபழுக்கும் உறவெனக் கவிதை கண்டால் உளமூன்றும் வாழ்க்கை சூடும்!” மனிதர்களுக்குள் காணப்படும் மாறுபாடுகள் புற்றியும், அவை நீங்குவதற்கான வழிகள் குறித்தும் பெருங்கவிக்கோ சிந்தனைகள் வளர்த்துள்ளார். மன்பதை அல்லலில் மனவேறு பாட்டினில் மதி கெடத் துடித்தலும் ஏன்? ஏன்? மனிதர்கள் மனிதர்க்குள் மாவேறு பாடுகள் மல்கிடப் பிழிந்ததும் ஏன்? ஏன்?…

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (27) – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (26)   தொடர்ச்சி)   ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (27)   தீமைகள் வளர்த்து, மோசத் தீமையே. முன்னேறும்படி செய்வோர்பற்றி வருத்தத்துடன் அவர் குறிப்பிடுகிறார்.  வேசித் தனத்தை முதலாய் வைத்தார்-நாட்டில் வீறு கொண்டே எழுந்து விட்டார்-நன்மை பேசி வாயால் மழுப்புகின்றார்-அந்தோ பேடிமைத் தீம்ை வளர்த்து விட்டார்-விந்தை மோசத் தீமையே முன்னேறும்-என்ன . . . . . . .* இன்று இங்கு, நம் நாட்டில் உள்ள நிலைகள் பற்றி பெருங்கவிக்கோ நிறையவே கருத்துக்கள் சொல்லியிருக்கிறார் தன் கவிதைகளில்….

நான்!  –  அகரம் அமுதன்

நான்!    துன்பங்கள் யார்படினும் துடிக்கின்றவன் பிறர் கண்ணீரைக் கவிதையாய் வடிக்கின்றவன்!   கொடுமைக்கு அறம்பாடி முடிக்கின்றவன்  – அதன் குரல்வளை நெரித்துயிர் குடிக்கின்றவன்!   வன்முறை யார்செயினும் வெடிக்கின்றவன் – அந்தப் புன்முறை போய்மாளப் பொடிக்கின்றவன்!   பெயருக்கா எழுதுகோல் பிடிக்கின்றவன்? –என்றன் எழுத்தாலே இனப்பகை இடிக்கின்றவன்!   அகரம் அமுதன் http://agaramamutha.blogspot.in/2016/03/blog-post_76.html

திருப்பூர்தேவியின் குறும்பாக்கள் – மலர்

திருப்பூர்தேவியின் குறும்பாக்கள்    மது அருந்தாமலே வாழ்ந்து முடித்தவனை மது நிரம்பிய மலர்களால் போர்த்தி இருந்தனர் அவன் அந்திமத்தில்! ++ பூவாங்கக் காசு போதாததால் அதை விற்கும் வேலையை வாங்கிக் கொண்டாள் ஏழைச் சிறுமி! ++ சிதைந்து உடன்கட்டை ஏறின இறந்தவருடன்… சாலையில் இறைக்கப்பட்ட மலர்கள்…! ++           வழக்குரைஞர் இரா.சுகுணாதேவி, திருப்பூர்

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (26) – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (25)   தொடர்ச்சி)   ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (26)  7. அறச் சீற்றமும் புதுமை நோக்கும்  துறை தோறும் மண்டிக் கிடக்கின்ற சிறுமைகளும் சீரழிவுகளும் பெருங்கவிக்கோவின் உள்ளத்தை உறுத்து கின்றன. அவரைக் கோபம் கொள்ளச் செய்கின்றன. ஐயோ, நம் நாடும் நம் மக்களும் இப்படி இருக்கிறார்களே என்ற வேதனையால் எழும் அறச்சீற்றம் அவர் கவிதைகளில் சூடாகப் பரவிப் பாய்வதை பல இடங்களில் காண முடிகிறது. நமக்குள் தமிழர்க்குள் நாம் காணும் பெருங்குறை என்? நமக்குள் நாமே நாவளர்த்து நயம்…

வேண்டாமே இந்தப் ப(பு)கை! – அகரம்.அமுதா

வேண்டாமே இந்தப் ப(பு)கை!    நகைக்கிடங் கான நறுவாய் நகைபோய்ப் புகைக்கிடங் காதல் புதிர்!   வெம்புகையில் இன்பம் விளையும் எனுங்கருத்தை நம்புகையில் வீழும் நலம்!   நகைபூக்கும் வாயில் புகைபூக்கக் காண்டல் தகையில்லை வேண்டும் தடை!   காற்றிற்கும் மாசாகும் கைப்பிடித்தார் வாழ்வடைக்கும் கூற்றிற்கும் தூதாம்வெண் கோல்!   புகையின் சுவைகண்டார் போயொழிய வேறோர் பகையில் புகையே பகை!   சிறிதும் கரித்தூளைத் தேடற்க தேடின் பொறியைந்தும் பாழாம் புரி!   பற்றவைக்கும் பாழ்சுருளால் பாலன்ன நெஞ்சினிலும் புற்றுவைக்கும் வேண்டாம் புகை!  …

கண்ணதாசன் – வண்ணக்கவி வாசன் : வெ.அரங்கராசன்

கண்ணதாசன் – வண்ணக்கவி வாசன்             சிறுகூடல்பட்டி — தந்த           பெருங்கவிப் பெட்டி!           தேன்தமிழ்த் தொட்டி! — பனங்           கற்கண்டுக் கட்டி!             பைந்தமிழ்ப் புலமையில் நீஎன்றும் கெட்டி!                 கவிச்சுவை உள்ளத்தில் நிற்குமே ஒட்டி!           வஞ்சரை உன்பாட்டு உதைக்குமே எட்டி!           கொஞ்சமும் தயங்காது விரட்டுமே முட்டி!                              கண்ணதாசன், வண்ணக்கவி வாசன்!           பண்ணுள்ள பாட்டுக்குநீ நேசன்!       …

திருப்பூர்தேவியின் குறும்பாக்கள் : வானவில்

  திருப்பூர்தேவியின் குறும்பாக்கள் : வானவில் இதில் நாண் பூட்டி அம்பு எய்ய வருபவர் யார்? ++ இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் அம்பு இல்லாத வில்லையே வரையும்… அந்த வானம்?     வழக்குரைஞர் இரா.சுகுணாதேவி, திருப்பூர்

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (25) – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (24)   தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 25   பண்பு நலன்களாலேயே ஒருவன் நன்மணி மனிதன் ஆவான் என்றும், பழியிலா வாழ்வே பண்பின் ஒழுக்கமே பயன்தரு உயர்வாகும் என்றும் அவர் உறுதியாய்க் கூறுகிறார். எது தெய்வம் என்று கேட்டுப்பெருங்கவிக்கோ தெளிவுபடுத்தியுள்ள கவிதைகள் அவரது உளப்பண்பை, நல்நோக்கை, மனவிரிவைப் புலப்படுத்துகின்றன. தீதில்லா நெறியினிலே தெய்வம் உண்டு! திக்கெல்லாம் உறவாடும் இயற்கைத் தாயாள் மோதிவரும் அழகுருவில் தெய்வம் உண்டு!. முதிர்கின்ற அனுபவத்தில் தெய்வம் உண்டு! யாதினிலும் இனிய தெய்வம் நம்மை…

திருப்பூர் தேவியின் குறும்பாக்கள் – கவிதைகள்

திருப்பூர் தேவியின் குறும்பாக்கள் – கவிதைகள்   போகும் இடமெல்லாம் எடுத்தேதான் செல்கிறாள்… இன்னும் எழுதாக் கவிதைகளை! +++ ஒப்படைத்து விட்டாள் சொற்களைக் கவிதைகளாக்கி வாசகர் வசம்..! வழக்குரைஞர் இரா.சுகுணாதேவி, திருப்பூர்

தீவாளி, நல்விழா நாளா? – பாரதிதாசன்

தீவாளி, நல்விழா நாளா?  நரகனைக் கொன்றநாள் நல்விழா நாளா? நரகன் இறந்ததால் நன்மை யாருக்கு? நரகன் என்பவன் நல்லனா? தீயனா? அசுரன்என் றவனை அறைகின் றாரே? இராக்கதன் என்றும் இயம்புகின் றாரே? இப்பெய ரெல்லாம் யாரைக் குறிப்பது? இன்றும் தமிழரை இராக்கதர் எனச்சிலர் பன்னு கின்றனர் என்பது பொய்யா? இவைக ளைநாம் எண்ண வேண்டும். எண்ணா தெதையும் நண்ணுவ தென்பது படித்தவர் செயலும் பண்பும் ஆகுமா? வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல் கழுத்துப் போயினும் கைக்கொள வேண்டாம். ஆயிரம் கோடி ஆண்டு செல்லினும் தூயது…