யாதும் ஊரே யாவரும் கேளிர் 6/8 – கருமலைத்தமிழாழன்
(யாதும் ஊரே யாவரும் கேளிர் 5/8 – தொடர்ச்சி) யாதும் ஊரே யாவரும் கேளிர் 6/8 அறிவியலில் உலகமெல்லாம் அற்பு தங்கள் அரங்கேற்றக் கலவரங்கள் அரங்க மேற்றி அறிவிலியாய்க் குறுமனத்தில் திகழு கின்றோம் அணுப்பிளந்து அடுத்தகோளில் அவர்க ளேற வெறியாலே உடன்பிறந்தார் உடல்பி ளந்து வீதியெலாம் குருதியாற்றில் ஓடம் விட்டோம் நெறியெல்லாம் மனிதத்தைச் சாய்ப்ப தென்னும் நேர்த்திகடன் கோயில்முன் செய்கின் றோம்நாம் ! வானத்தை நாம்வில்லாக வளைக்க வேண்டா வாடுவோரின் குரல்கேட்க வளைந்தால் போதும் தேனெடுத்துப் பசிக்குணவாய்க் கொடுக்க வேண்டா தேறுதலாய் நம்கரங்கள் …
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙெ) – இலக்குவனார் திருவள்ளுவன்
[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙூ) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙெ) உலகத் தமிழ் மாநாட்டில் பேராசிரியர் இலக்குவனாரை எதிர்பார்த்து ஏமாற்றமுற்ற பிற நாட்டுஅறிஞர்களும் தத்தம் நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்குப் பேராசிரியரை அழைத்தனர். பேராசிரியரும் ஐரோப்பிய நாடுகள், ஆசிய நாடுகள் என ஒவ்வொரு பகுதியாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மொழிகளின் தாயாம் தமிழின் சிறப்பைப் பரப்பத் திட்டமிட்டார். முதலில் திசம்பர் 1970 இல் பயணம் மேற்கொள்வதாக இருந்தார். இதுகுறித்து 11.10.70 குறள்நெறியில் வந்த செய்தி வருமாறு: பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களுக்கு உலகச் சுற்றுப்பயணச் செலவுச் சீட்டுகிடைத்துள்ளது. உலகப்…
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (15) – வல்லிக்கண்ணன்
[ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (14) – தொடர்ச்சி] ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (15) 3.ஒருமைப்பாட்டு உணர்வு ‘இருபது கட்டளைகள்’ நாட்டை உயர்த்தக் கூடிய நல்ல திட்டங்களை உணர்ச்சிகரமான நடையில் சொல்லும் கவிதைகளைக் கொண்ட தொகுப்பாகும். நாடு வளமுறவும் முன்னேறவும் இளைஞர்களையே நம்பி இருக்கிறது. நாட்டின் இதயம் நல்இளைஞரேயாவர். அதனால்தான் பெருங்கவிக்கோ இளைஞரை நோக்கிப் பாடுகிறார். இதயங்கள் இந்த நாட்டின் இளைஞரே நீங்கள் அன்றோ? பதம்பெற வாழ்வுப் பாதை பலப்பல மேன்மை கூட்ட நிதம்உழைப்பைத்தொ ழுங்கள்! நிகரிலா எப்ப ணிக்கும் இதம்பெறும்…
விடுதலைப் பள்ளு 2017 – இ.பு.ஞானப்பிரகாசன்
விடுதலைப் பள்ளு 2017 [இராகம் – முகாரி; தாளம் – சோற்றுத்தாளம்] பல்லவி ஆடுவோமே! பள்ளுப் பாடுவோமே! அழகான விடுதலை அடைந்து விட்டோ மென்று ஆடுவோமே! உருவடி-௧ நல்லாரைத் தலைவரென்னும் காலமும் போச்சே! – வெற்று வீணரைக் கொண்டாடும் காலமும் ஆச்சே! – நல் நீதியே பெரிதென்ற காலமும் போச்சே! – சமய, சாதிக்கு வாக்களிக்கும் காலமும் ஆச்சே! ஆடுவோமே! பள்ளுப் பாடுவோமே! அழகான விடுதலை அடைந்து விட்டோ மென்று ஆடுவோமே! உருவடி-௨ எங்கும் பொதுவரி* என்பதே பேச்சு!…
யாதும் ஊரே யாவரும் கேளிர் 5/8 – கருமலைத்தமிழாழன்
(யாதும் ஊரே யாவரும் கேளிர் 4/8 – தொடர்ச்சி) யாதும் ஊரே யாவரும் கேளிர் 5/8 பிறர்வாழப் பொறுக்காத மனத்தைப் பெற்றோம் பிறர்நெஞ்சைப் புண்ணாக்கும் கலையில் தேர்ந்தோம் பிறர்போற்றப் பொதுநலத்தை மேடை மீது பிசிரின்றிப் பேசிநிதம் கள்ள ராகப் பிறர்பொருளை அபகரிக்கும் தன்ன லத்தால் பிறர்காலை வெட்டுவதில் வல்லவ ரானோம் சிரம்தாழ்த்தும் பழிதனுக்கே நாணி டாமல் சிறப்பாக நடிக்கின்ற நடிக ரானோம் ! சாதிகளின் பெயராலே சங்கம் வைத்தோம் சாதிக்காய்த் தலைவரினைத் தேர்ந்தெ டுத்தோம் சாதிக்கும் சக்தியெல்லாம் ஊர்வ லத்தில் சாதனையாய்ப் …
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (14) – வல்லிக்கண் ணன்
[ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (13) – தொடர்ச்சி] ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (14) 3.ஒருமைப்பாட்டு உணர்வு “சுடர்முகம் காக்க வேண்டும் சோர்வின்றி உழைக்க வேண்டும் அடலேற்று வலிமை வேண்டும் அஞ்சிடா வாழ்வு வேண்டும் கடலைப்போல் உள்ளம் வேண்டும் கறைபடாக் கரங்கள் வேண்டும் நடமாடும் தொழிற்கூடம் வேண்டும் நல்லுழைப்பாளர் வேண்டும் நாடு முன்னேறுவதற்கு இந்திய நாடு முழுவதும். ஒன்றே என்ற ஒருமைப்பாட்டு உணர்வு நாட்டு மக்களிடையே வேரூன்றி வளர வேண்டும். ஏற்றமும் தாழ்வும் ஒன்றே, எந்தையர் நாடிங்கேதான் எல்லாரின் வாழ்வும் ஒன்றே…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙூ) – இலக்குவனார் திருவள்ளுவன்
[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙு) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙூ) பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்குப்பின், ஆட்சியாளரின் பதவியை நிலைப்படுத்திக் கொள்வதற்கான விட்டுக் கொடுத்தல்களும் ஒத்துப்போதல்களும் எதிர்பார்த்த தமிழ்ப் பயன்களைத் தரவில்லை. இதனால் பேராசிரியர் இலக்குவனார் வேதனை உற்றார். உசுமானியாப் பல்கலைக்கழகத்திலோ, தமிழில் இருந்து பிறந்தனவே தெலுங்கு முதலான தமிழ்க்குடும்ப மொழிகள் என்னும் உண்மையை ஏற்காத தெலுங்குத் துறையினர் தெலுங்கின் மகள் தமிழ் என்றும் தெலுங்கின் தங்கை தமிழ் என்றும் உண்மைக்கு மாறான கருத்துகளைப் பரப்பி வந்தனர். அவர்களிடம் தமிழின் தொன்மையையும் தாய்மையையும் விளக்கினார்….
யாதும் ஊரே யாவரும் கேளிர் 4/8 – கருமலைத்தமிழாழன்
(யாதும் ஊரே யாவரும் கேளிர் 3/8 – தொடர்ச்சி) யாதும் ஊரே யாவரும் கேளிர் 4/8 காடுகளாய் நம்முன்னோர் வளர்த்து வைத்துக் கவின்மிகுந்த மரங்களினை வெட்டி வெட்டிக் கோடுகளாய் மண்ணுடலைப் பிளக்க வைத்துக் கொட்டிவந்த மழைவளத்தை அழித்த போல வாடுகின்ற பயிர்கண்டு வாட்டம் கொண்ட வள்ளலாரின் மனிதநேயம் அழித்து விட்டோம் பாடுபட்டு யாதும்ஊர் என்ற பண்பைப் பாதுகாத்துத் தந்ததனைத் தொலைத்து விட்டோம் ! பக்கத்தில் குடியிருப்போர் முகத்தைக் கூடப் பார்க்காமல் வாழுகின்ற வகையைக் கற்றோம் துக்கத்தில் துடிப்போரின் குரலைக் கேட்டும்…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙு) – இலக்குவனார் திருவள்ளுவன்
[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙீ) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙு) இன்னா செய்தாரை இனிமைச் செயல்களால் ஒறுத்தல் நன்றென உரைத்த பொருளுரை படித்து மேடையில் பாங்காய்ப் பொழிந்தும் தமிழ்நலம் நாடிய தகைசால் உரையைப் பொறுக்கலா ற்றாது வெறுக்கும் இயல்பால் அரசின் சார்பில் அளிக்க இருந்த பரிசைத் தடுத்த பரிசை என்னென நற்றமிழ்நாடே நவில்க! நற்றமிழ்த் தொண்டு புரிதல் துயர்க்கே கூட்டும் தமிழ்ப் பகைத்தோர் தள்ளினர் சிறையில் தமிழின் பேரால் தகுநிலை அடைந்தோர் தமிழ்ப் புகழ்பாடினும் தமிழை அடக்கி வாழவே முனையும் வன்கண்மையால் இழக்கச்…
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (13) – வல்லிக்கண்ணன்
(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (12) – தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (13) நாட்டில் வீண் பேச்சுப் பெருகி விட்டது. பேச்சைக் குறைத்து செயலைப் பெருக்க வேண்டும் என்பதையும் கவிஞர் அறிவிக்கிறார். ஆண்மைசால் பேருழைப்பை அன்னை நம் நாட்டுக்காக்கி, வீண்பேச்சைக் குறைத்துத் தீய வீணரை ஒழித்தே அன்பாம் காண்தகு நிலைகள் எல்லாம் கடும் உழைப் பொன்றால் என்ற மாண்பெழில் கொள்கை வெல்லும் வரலாறு படைக்க வேண்டும்! முன்னேற்றம் காண்பதற்கு ஒற்றுமை அவசியம். மக்களின் சக்தியை ஒன்று திரட்ட வேண்டுவதும் அவசிய…
மறக்கமுடியுமா? – ‘மனோன்மணீயம்’ பேராசிரியர் பெ.சுந்தரம்(பிள்ளை) :- எழில்.இளங்கோவன்
மறக்கமுடியுமா? ‘மனோன்மணீயம்’ பேராசிரியர் பெ.சுந்தரம்(பிள்ளை) கன்னியாகுமரி மாவட்டம் நாஞ்சில் நாடுதான் இவரின் சொந்த ஊர். தொழில் தொடர்பாக, நாஞ்சில் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து, கேரளம் மாநிலம் ஆலப்புழையில் குடியேறியவர்கள் பெருமாள்பிள்ளை, மாடத்தியம்மாள் இணையர். இவர்களின் மகனாக ஆலப்புழையில் பங்குனி 23, 1886 / 1855ஆம் ஆண்டு ஏப்பிரல் 4ஆம் நாள் பிறந்தவர் ‘மனோன்மணீயம்’ பெ.சுந்தரம்(பிள்ளை). தமிழ் மொழி இயல், இசை, கூத்து என மூன்று பிரிவுகளைக் கொண்டது. கூத்து என்பது நாடக வடிவத்தின் பெயர். நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற…
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (12) – வல்லிக்கண்ணன்
(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (11) – தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (12) 3.ஒருமைப்பாட்டு உணர்வு – தொடர்ச்சி அடிமையில் மோகமும், அடிமைத்தனமும் ஒழிக்கப் படவேண்டும். அதற்கு மக்கள் விழிப்பும் எழுச்சியும் பெற்றாக வேண்டும். கொடுமைகள் நீக்கிக் கொள்கைகள் காத்து பெரிய முன்னேற்றம் ஆக்கி, விந்தைகள் நிலைக்கச் செய்து, வெற்றி மேல் வெற்றி சேர்த்து, தந்தையர் நாட்டை ஏற்றம்தனில் நிலை நாட்டி வைப்போம் என்று முழக்கமிடுகிறார் பெருங்கவிக்கோ. பாரினில் பாரதம் மேன்மை பெற்று விளங்க நாட்டில் உற்பத்தி பெருக வேண்டும்;…
