பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 5/8 – கருமலைத்தமிழாழன்

(பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 4/8 –‌ தொடர்ச்சி) பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 5/8 பாலுக்குள்  நெய்பதுங்கி   உள்ள   தன்மை பார்வைக்குத்   தெரியவில்லை   என்ப   தாலே பாலுக்குள்   உள்ளநெய்யும்   பொய்யாய்ப்   போமோ பாட்டிற்குள்  அறிவியலின்   கருத்தை  யெல்லாம் மேலுக்குச்    சொல்லவில்லை   என்ப   தாலே மேடையிலே   இல்லையென்று   முழங்க   லாமா காலங்கள்   வினைத்தொகையில்   உள்ள   போலே கனித்தமிழில்   அறிவியலும்   உள்ள  துண்மை !   பொறியிலின்   நுணுக்கத்தைப்   பாட்டிற்   குள்ளே போற்றியதைத்   தெரியாமல்   மறைத்து   வைத்தோம் குறியீட்டில்    மருத்துவத்தைச்   சித்த   ரெல்லாம் குறித்தளிக்கப்   புதையலெனப்  …

“ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே” (புறம்: 312) பெண்ணடிமைத்தனமா ? – தமிழரசி

“ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே (புறம்: 312) பெண்ணடிமைத்தனமா ?  பொன்முடியார் எனும் சங்ககாலப்பெண்புலவர், குழந்தையைப் பெற்றேடுப்பதை விட அப்பிள்ளையைப் பாதுகாத்துப் பேணி வளர்ப்பதே தாய்மாரின் பெரும் பொறுப்பாகும். அதிலும் கன்னியரையும் காளையரையும் சமுதாய நலம் பேணுபவராய் வளர்த்து எடுத்துக் கொடுப்பது மிகமிகக் கடினமான செயலாகும். அந்தக் கடினமான செயலைச் சங்ககாலத் தாய்மார் தத்தம் பண்புகளுக்கு ஏற்ப மிக நன்றாகவே செய்திருக்கிறார்கள் என்பதைச் சங்கப்பாடல்கள் காட்டுகின்றன.   சங்ககாலத் தாய்மார் அப்படி வளர்த்திராவிட்டால் சங்கப்பாடல்களையும், சங்க இலக்கியங்களையும், சங்கச்சான்றோர்களயும் நாம் கண்டிருக்க முடியுமா? “ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே சான்றோன் ஆக்குதல்…

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (7.) – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (6.) – தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (7.) 2.தமிழ் முழக்கம் (தொடர்ச்சி) மேலும் கவிஞர் கூறுவது தமிழ்நலம் கருதுவோர் உளம் கொள்ள வேண்டிய உண்மைகள் ஆகும். “முற்றிலுமே தமிழ் முழக்கம் ஆகவேண்டும்! முத்தமிழின் இயல் பலவும் செப்பும் நூல்கள்  கற்றவர்கள் இன்றெழுத வேண்டும்! நல்ல கருத்தெல்லாம் தமிழ் முழங்கக் கருதவேண்டும்   நற்றவத்தால் தமிழறிந்த தலைவர் இந்த  நாடாள வேண்டும்;ஆம்! வேண்டும்! வேண்டும்  பற்றிவரு இந்திமொழி நீங்க வேண்டும் பார்போற்றத் தமிழ்முழக்கம் செய்வோம் வாரீர்!’ இன்று…

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 4/8 – கருமலைத்தமிழாழன்

(பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 –‌ தொடர்ச்சி) பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 4/8 வான்மீதில்   தெரிகின்ற   மீன்கள்  தம்மின் வகைசொல்லி;   ஒளிர்கின்ற   திசையைக்   கொண்டே தேன்தமிழில்   கோள்கள்தம்   அசைவைச்   சொல்லித் தெளிவான   ஞானத்தால்   கதிரைச்   சுற்றி நீள்வட்டப்   பால்வீதி   உள்ள   தென்றும் நிற்காமல்   சுற்றுகின்ற   விஞ்ஞா   னத்தை ஆன்மீகப்    போர்வையிலே    சொன்ன    தாலே அறிவியல்தான்   தமிழ்மொழியில்   இல்லை    யென்றார் !   தரைதன்னில்   நாளுமெங்கோ   நடக்கும்   எல்லாத் தகவலினைக்   காட்சிகளாய்   வீட்டிற்   குள்ளே திரைதன்னில்   காண்பதனை   அறிவிய   லென்றே திளைக்கின்றார்   தொலைக்காட்சி  …

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙொ) – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங‌ை) – தொடர்ச்சி)   தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙொ)  ‘பேராசிரியர் இலக்குவனாரே மொழிப்போர்த் தந்தை’ என்பதை எடுத்தியம்பி ஆய்வுசெய்துள்ள திருவாட்டி து.சுசீலா பின் வருமாறு தம் ஆய்வேட்டில் குறிப்பிட்டுள்ளார்:   தி.மு.க. கை விட்டுவிட்ட பிறகும் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை மாணவர்கள் தொடர்ந்து நடத்திய செய்தி இப்போராட்டங்களைத் தலைமையேற்று நடத்தியவர்கள் மாணவர்கள் என்பதை வலியுறுத்துகிறது. அத்தகைய மாணவர்களின் பங்களிப்பிற்கு மூலக் காரணமாகவும் விலைவாசிப் போரில் ஈடுபட்டிருந்த தி.மு.க. கழகத்தினரை இந்தி எதிர்ப்புப்போரில் ஈடுபடுத்திய கோட்பாட்டாளராகவும் (Theoretician) இலக்குவனார் தமிழ்உரிமைப்…

சுந்தரச் சிலேடைகள் 16: மங்கையும் கங்கையும் – ஒ.சுந்தரமூர்த்தி

  சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை  அணி 16 மங்கையும் கங்கையும் சடைமே லிருக்கும், சனிநீரு முண்டாம் மடைமையுந் தண்ணளியாய் மண்டும் .- நடையழகாம் நானிலத்தில் நற்றமிழ்வாழ் நற்கங்கை வானிலவாள் மங்கைக்கே ஒப்பு . பொருள் 1) சிவன் சடைமேலிருந்து கங்கை வருகிறது பெண்களுக்கு கூந்தலில் போடப்பட்ட சடை தலைமேல் இருக்கிறது . 2) சனி நீர்  – ஊற்று நீர் கங்கையிலும் நீர் ஊற்று இருக்கிறது பெண்களின் கண்களிலும் நீர் ஊற்று இருக்கிறது . 3) கங்கை நீர் வெளிச்செல்ல மடைகள் உண்டு ….

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (6.) – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (5.) – தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (6.) 2.தமிழ் முழக்கம் (தொடர்ச்சி) தேயாத ஒருவான நிலவே அந்நாள் செந்தமிழர் வாழ்வென்றால். வருங்காலத்தில் ஒயாத புகழ்க்கதிரோன் வரவை நோக்கி உழைப்போம் நாம் உறுதியுடன் வெற்றி காண்போம் பேயாத விண்ணும் ஓர் நாளில் பெய்யும் பேரிருளும்  பகல் வந்தால் பிணங்கி ஓடும்! நாயாக நாமின்று தாழ்ந்த லைந்தால் நமக்கும் ஓர் எதிர்காலம் உண்டோ? சொல்வீர்!’ எதிர்கால வளத்துக்காகச் செய்யப்பட வேண்டிய ஆக்கப்பணிகளை அறிவுறுத்துகிறார் கவிஞர். பல்கலை நற்கழகத்தில் தமிழ்முழக்கம்…

திருக்குறள் அறுசொல் உரை: 131. புலவி : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை: 130. நெஞ்சொடு புலத்தல் :தொடர்ச்சி)   திருக்குறள் அறுசொல் உரை  3. காமத்துப் பால் 15. கற்பு இயல்    131. புலவி தலைமக்கள் ஒருவர்மீது ஒருவர், கொள்ளும் பொய்ச்சினமும், பிணக்கும்   (01-05 தலைவி சொல்லியவை) புல்லா(து) இராஅப் புலத்தை, அவர்உறும்       அல்லல்நோய் காண்கம் சிறிது.        அவர்படும் துயரைக் காண்போம்         சிறிது; மனமே! நீ வேறுபடு.    1302. உப்(பு)அமைந்(து) அற்(று)ஆல் புலவி, அதுசிறிது       மிக்(கு)அற்(று)ஆல் நீள விடல்.         உணவில் உப்பின்…

அமைதியின் காரணம் ஆழ்மனத் துயரமோ? – இலக்குவனார் திருவள்ளுவன்

அமைதியின் காரணம்  ஆழ்மனத் துயரமோ?   சொலல் வல்லர் சோர்விலர் இன்று சொல்லவும் இயலவில்லை! சோர்வும் விடவில்லை! கலைஞர்களைத் தன்  சொல்லோவியங்களால் உருவாக்கிய கலைஞர் கருணாநிதியின் சொல்ல முடியா அமைதியின் காரணம் ஆழ்மனத் துயரமோ? ஆட்சிச்சிறையில் இல்லாத பொழுது உரிமையுடன் முழங்க முடிந்தது! சிறைச்சாலையைப் பூஞ்சோலையாய்க் கருத முடிந்தது! தமி்ழ் தமிழ் என்று தாளமிட முடிந்தது! ஆட்சியில் குமுக நலன்களுக்குத் தீர்வு கண்டு பெண்ணுரிமை பேண முடிந்தது! சமத்துவம் காண முடிந்தது! ஆரியத்துடன் இணையவும் முடிந்தது! அன்னைத்தமிழை மறக்கவும் முடிந்தது! கல்விநிலையங்களில் விரட்டப்படும் தமிழால்…

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (5.) – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (4.) –‌ தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (5.)  2.தமிழ் முழக்கம் (தொடர்ச்சி) வஞ்சருக்கும் பொய்யருக்கும் பணிந்து நாமும் வாழ்கின்றோம்! அரைவயிற்றுக் கஞ்சிக்காக  வஞ்சகத்தை வால்பிடித்துச் செல்கின்றோம் வீண் வாயடியும் கையடியும் கொண்ட பேரை மஞ்சத்தில் ஏற்றிவைத்து மலரும் சூட்டி மரியாதை செய்கின்றோம்! அவரிடம் போய்க் கொஞ்சியும் குலவியுமே வாழ்கின்றோம் நாம் கொடுமைக்கும் மடமைக்கும் தாழ்கின்றோம் நாம்!    பஞ்சமா பாவியர்கள் இவர்கள் தம்மின்  பண்புக்குத் தீவைப்போம்! வஞ்சகத்தை  அஞ்சாமல் எதிர்த்திடுவோம்! தமிழ்த்தாய் வாழ அரும்புமீசை முறுக்கிடுவோம்!…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங‌‌‌ை) – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங‌ே) –  ‌தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங‌‌‌ை)  பேராசிரியர் இலக்குவனாரின் மொழிப்போர்த் தலைமை குறித்த நல்லாவணமாகப் பேரறிஞர் அண்ணா அவர்களின் சொற்பொழிவொன்றைக் குறிப்பிடலாம். பேராசிரியர் இலக்குவனாரின் 55 ஆம் பிறந்தநாள் பெருமங்கல விழாவில் பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரையின் ஒரு பகுதி வருமாறு: பேராசிரியரை(இலக்குவனாரை)ச் சிறைப்படுத்தியதால், வேலையிலிருந்து நீக்கி வாழ்வில் தொல்லை விளைவித்ததனால், தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டதாகத் தவறாகக் கணக்கு போடுகிறார்கள். முப்பதாண்டு காலமாகப் பேராசிரியர் இலக்குவனார் ஊட்டிய தமிழ்  உணர்ச்சி நூறாயிரக்கணக்கான தமிழர்களைத் தமிழுணர்வு கொண்ட…

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

(பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 2/8 –‌ தொடர்ச்சி)   பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8   கவியரங்கக்கவிதை மயில்பொறியை   வானத்தில்   பறக்க   வைத்தோம் மணிபல்லத்   தீவிற்குப்   பறந்து   சென்றோம் குயில்மொழியாள்   கண்ணகியை   அழைத்துச்   செல்லக் குன்றுக்கு   வானஊர்தி   வந்த   தென்றே ‘உயில்‘போன்று   நம்முன்னோர்   எழுதி   வைத்த உண்மைகளை   அறிவியலின்   அற்பு  தத்தை பயில்கின்ற   காப்பியத்தில்   படித்த   தெல்லாம் பார்தன்னில்   நனவாகக்   காணு  கின்றோம் !   அணுப்பிளந்த    செய்திதனை   ஔவை   சொன்னால் அவிழ்த்துவிட்ட    புளுகுமூட்டை   என்று   ரைத்தார் அணுக்குண்டைப்    பொக்ரானில்    வெடித்த  …