சொல்ல முடியாத சொல் – அப்துல்ரகுமான்
சொல்ல முடியாத சொல் உன் பாதையும் என் பாதையும் வெவ்வேறாக இருக்கலாம் ஆனால் அவை ஒரே கையின் இரேகைகள் நீ கண்ணீரை விட ஆழமானவள் (ன்) சோகத்தை விட அழகானவள் (ன்) பாவத்திற்கு கிடைத்த மன்னிப்பை போல நீ எனக்குக் கிடைத்தாய் என்னை மறந்துவிட்டதாகச் சொல்கிறாய் பிறகு ஏன் உன் கண்ணில் நீர் ஒவ்வொரு மூச்சும் உன்னை சந்திக்கப் புறப்படுகிறது ஏமாற்றத்தோடு திரும்புகிறது நான் உன் மூச்சு என்னை நீ விட்டாலும் மீண்டும் வாங்கித்தான் ஆகவேண்டும் உன் மௌனத்தில் என் காயம் உறங்க இடம்…
திருக்குறள் அறுசொல் உரை: 130. நெஞ்சொடு புலத்தல் : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை: 129. புணர்ச்சி விதும்பல் : தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 3.காமத்துப் பால் 15.கற்பு இயல் 130.நெஞ்சொடு புலத்தல் ஊடாமல் கூடவிரும்பும் தலைவியின் நெஞ்சோடான உணர்வுப் போராட்டம். (01-10 தலைவி சொல்லியவை) அவர்நெஞ்(சு) அவர்க்(கு)ஆதல் கண்டும், எவன்நெஞ்சே! நீஎமக்(கு) ஆகா தது? அவர்நெஞ்சு அவரிடம்; என்நெஞ்சே! நீஏன், என்னிடம் இல்லை? உறாஅ தவர்க்கண்ட கண்ணும், அவரைச் செறாஅ(ர்எ)னச், சேறிஎன் நெஞ்சு. நெஞ்சே! பொருந்தார்என அறிந்தும், வெறுக்கார்எனப் பின்செல்கிறாய்…
வாழிய பெரும! வண்டமிழ் போன்றே! – இளங்குமரனார்க்கு வாழ்த்து : மறைமலை இலக்குவனார்
வாழிய பெரும! வண்டமிழ் போன்றே! அகவை தொண்ணூறு நிறைந்த ஆசான் இளங்குமரனார்க்கு அகங்கனிந்த வாழ்த்து வாழிய பெரும! வண்டமிழ் போன்றே! புலவர்மணி,முதுமுனைவர் இளங்குமரனார்க்கு வாழ்த்து (பிறந்த நாள் தை 17, 1958 / சனவரி 30, 1927) பளிங்கெனத் துளங்கிடும் பண்புசால் உள்ளம்; உளங்கவர் முறுவல் விளங்கிடும் திருமுகம்; தமிழ்நலன் காத்தல் தம்கடன் என்றே தளரா துழைத்திடும் தறுகண் உறைவிடம்; மறைமலை யார்போல் நிறைவுறு புலமை; பாவாணர் நெறியில் ஓய்விலா ஆய்வு; இலக்குவர் வழியில் இயங்கிடும் தமிழ்மறம்; இனம்,மொழி பேணிட இன்றமிழ் மக்களை…
நீயின்றி இயங்காது எம் உலகு! – கவிஞர் கனிமொழி
நீயின்றி இயங்காது எம் உலகு! பேசுவதை நிறுத்திக்கொண்டாய். “உங்களிடம் பேசி என்ன ஆகப்போகிறது” என்று நினைத்துவிட்டாயா? பேசிப் பேசி அலுத்து விட்டதா? சொல்வதற்கு இருந்ததை எல்லாம் சொல்லிவிட்டேன் என்றா? உன் வார்த்தைகளின் எசமானர்கள் நாங்கள் என்று உனக்குத் தெரியாதா? மௌனம் கனத்துக்கிடக்கிறது எங்கள் பாதையை அடைத்துக்குக்கிடக்கும் அசைக்க முடியாத பாறையாய்… வெடித்துக் கிடக்கும் வறண்ட வயலின் வரப்பில், செய்வது அறியாது நிலைகுலைந்து நிற்கும் குடியானவனைப் போல நாங்களும் காத்துக்கிடக்கிறோம் கார்முகிலாய் திரளும் சொற்களுக்காக. கடல் பிளந்து மறுகரை சேர்க்கிறேன் என்ற கிழவனை, பறித்துச்…
பேசு தலைவா பேசு! – சுப.வீரபாண்டியன்
பேசு தலைவா பேசு! நீ என்றன் பள்ளிக்கூடம் – சிந்தை தெளியாப் பருவத்துச் சிறுவனாய்ப் படித்தேன் உன்னை உயர்கல்வித் தளத்தில் கூட உன்னைத்தான் படித்தேன் அப்போதே எனது திசைகளைத் தீர்மானித்த தொலைதூர வெளிச்சம் நீ தொடமுடியா விண்மீன் நீ! நீ என்றன் பள்ளிக்கூடம் இலக்கியம் எப்படி எழுதுவதென்றும் மேடையில் எப்படிப் பேசுவதென்றும் வாதம் புரியும் வகைஎது என்றும் வடிவாய் உன்னிடம் பாடம் கற்றேன் நீ என்றன் பள்ளிக்கூடம் – பத்து ஆண்டுகள் உன் பக்கம் இருந்தேன் பார்த்துக் கொண்டிருந்ததாய்ப் பலரும்…
சுந்தரச் சிலேடைகள் 15. தாமரையும் பெண்ணும் – ஒ.சுந்தரமூர்த்தி
சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை அணி 15 தாமரையும் பெண்ணும் கூம்பி விரிதலால், கூடை சுமத்தலால், தேம்பி அழுதலால் , தேனடையாம் – தாம்பதற்கும் வாசம் பலதந்து வாழ்வில் சிறக்கின்ற நேசமிவள் தாமரைக்கு ஒப்பு . பொருள் தாமரை இரவில் கூம்பிப் பகலில் விரியும். 2 ) தாமரை மலர்களைப் பறித்து விற்பனைக்குக் கூடைகளில் கொண்டு செல்வர் . 3 ) அலைகளின் மோதலால் தாமரை அசைவது தேம்புவது போன்றும், மலரில் அலைநீர் பட்டு வழிவது அதன் கண்ணீர் போன்றும் தோன்றும் . 4…
தமிழ்த்தாய்க்கு யார் ஆறுதல் சொல்வது? – மறைமலை இலக்குவனார்
தமிழ்த்தாய்க்கு யார் ஆறுதல் சொல்வது? தமிழ்ச்சொற்களெல்லாம் தேம்பித்தேம்பி அழுகின்றன. சொற்களுக்கும் பொருள்களுக்கும் சோடிப்பொருத்தம் பார்த்துச் சோடித்துவைத்த கவிஞர் மறைந்துவிட்டார். அவர் உருவாக்கிய கவிதைகளெல்லாமே காமதேனுக்கள். கேட்ட பொருளும் கேட்காத பொருளும் நினைக்கும் பொருளும் நினைக்காத பொருளும் வாரிவாரி வழங்கும் வள்ளற்பசுக்களாக அவர் படைத்த கவிதைகள் வரலாறு படைத்துக்கொண்டிருக்கின்றன. அந்தப் படிமச்சிற்பியின் படிமப்பட்டறை இழுத்து மூடப்பட்டுவிட்டதே! உயிர்த்துடிப்பு மிக்க படிமச்சிற்பங்களைப் படைத்து உலகெல்லாம் உலாவரச்செய்த அவருடைய ஆற்றலைக்கண்டு தேவலோகத்து மயன் தற்கொலை செய்த கதை பழங்கதை. அவர் மேடையேறிய கவியரங்குகளெல்லாமே இலக்கிய…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙே) – இலக்குவனார் திருவள்ளுவன்
[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙெ) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙே) …….. (இவை பற்றிய ஆசிரிய உரை வருமாறு: ) இக் கொடுஞ்சிறை வாழ்வைப் பெற்றது ஏன்? இந்தி மொழி மட்டும் முதன்மை பெற்றால் ஏனைய மொழிகள் அழிந்தொழியும் என்றும் தமிழர்கள் தமிழ் மொழி வழியாகப் படித்தலே தக்கது என்றும் உரைத்ததும் இக் கொள்கைகளைப் பரப்ப ஒல்லும் வகையால் முயன்றதுமேதான் இச்சிறை வாழ்வை எனக்கு அளித் தன. யான் சிறையிலிருந்து விடுதலை பெற்றுவிட்டேன். என் இனிய தமிழ்த்தா இன்னும் விடுதலை பெற்றிலள். ஒரு…
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (4.) – வல்லிக்கண்ணன்
(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (3.) – தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (4.) 2.தமிழ் முழக்கம் (தொடர்ச்சி) உலகமனிதன் முதலில் உதித்ததுவும் உன்குடியா? நிலம் உன்னைப் புரிந்துகொள்ள நிமிர்ந்துநிற்க மாட்டாயோ?” தமிழ் மொழியின் சிதைவுக்கும் தமிழ் இனத்தின் சீர்கேட்டுக்குமான காரணங்களைச் சிந்தித்த பெருங் கவிக்கோ அவைபற்றிப் பல இடங்களிலும் தனது எண்ணங்களைக் கவிதையாக்கியிருக்கிறார். இடைப்பட்ட தமிழர்நிலை எண்ணிப் பார்த்தால் இடிபட்டார் பலசமயம் பற்றிக்கொண்டே உடைபட்ட கலத்தைப் போல் சிதறலானார் உதவாத கொள்கைக்குச் சண்டை செய்வார்! கிடையாத நம் சொத்துத் தமிழ்…
சுந்தரச் சிலேடைகள் 14. நங்கையும் நாணலும் – ஒ.சுந்தரமூர்த்தி
சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை அணி 14 நங்கையும் நாணலும் கொண்டையதோ வெண்பூக்கள் கொண்டிருக்கும், நாடலுறும் கெண்டைகளும் உள்ளிருக்கக் கேள்வியெழும் – பண்டையரின் பாவிருக்கும், பங்கமிலாப் பண்பிருக்கும், பெண்ணினத்தைக் காவிருக்கும் நாணலெனக் காட்டு . பொருள் – நங்கை பெண்கள் தலைவாரிக் கொண்டையிட்டுப் பெரும்பாலும் வெண்பூக்களைச் சூடிக் கொள்வார்கள். விரும்பத் தகுந்த புருவத்திற்குக் கீழே இமைகளின் காவற்கு உள்ளே கெண்டை மீனையொத்த கண்கள் பல கேள்விகளை அசைவில் கேட்கும். பண்டை இலக்கியங்களில் பெண்ணின் பெருமை போற்றாத புலவர்களே இல்லை. பெண் மென்மையானவள்; நல்ல பண்பு நலன்களைக்…
திருக்குறள் அறுசொல் உரை: 129. புணர்ச்சி விதும்பல் : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை: 128. குறிப்பு அறிவுறுத்தல் : தொடர்ச்சி) 3. காமத்துப் பால் 15. கற்பு இயல் 129. புணர்ச்சி விதும்பல் பிரிந்து கூடிய காதலர், கலந்து இன்புறத் துடித்தல். (01-08 தலைவி சொல்லியவை) உள்ளக் களித்தலும், காண மகிழ்தலும், கள்ளுக்(கு)இல், காமத்திற்(கு) உண்டு. நினைத்த, பார்த்த உடனேயே, மகிழ்விப்பது கள்இல்லை; காதலே. தினைத்துணையும் ஊடாமை வேண்டும், பனைத்துணையும் காமம் நிறைய வரின். பனைஅளவுக் கூடல் ஆசைவரின், தினைஅளவும் ஊடல்…
பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 2/8 – கருமலைத்தமிழாழன்
(பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 1/8 தொடர்ச்சி) பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 2/8 தலைமை வணக்கம் சித்தர்தம் மறுபிறவி ஆனை வாரி சிந்தனையின் தோற்றந்தான் ஆனை வாரி புத்தர்தம் உள்ளந்தான் ஆனை வாரி புதுக்கருத்தை விதைப்பவன்தான் ஆனை வாரி புத்தகங்கள் தோழன்தான் ஆனை வாரி புதுமைகளைப் படைப்பவன்தான் ஆனை வாரி முத்தமிழர் கண்டதமிழ் மருத்து வத்தை முதன்மையென உணர்த்துபவன் ஆனை வாரி ! திருக்குறளைத் தேசியநூல் ஆக்கு தற்குத் தில்லியிலே போராட்டம் செய்த வல்லோன் அருங்குறளை ஆங்கிலத்தில் மொழிபெ யர்த்தே…
