பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ்7/8 – கருமலைத்தமிழாழன்
(பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 6/8 – தொடர்ச்சி) பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 7/8 சொற்பொழிவு கேட்பதற்கும் அறிஞ ரோடு சொல்லாடல் நிகழ்த்துதற்கும் கவிஞர் தம்மின் நற்கவிதை அவர்சொல்லத் துய்ப்ப தற்கும் நாளிதழின் செய்திகளை அறிவ தற்கும் பல்வேறு விளையாட்டில் திளைப்ப தற்கும் பலநாட்டுப் பொருட்களினை வாங்கு தற்கும் அற்புதமாய் நமக்குவாய்த்த இணையம் இந்த அகிலத்தை வீட்டிற்குள் அடைத்த தின்று ! அறிவியலுக் கேற்றமொழி அல்ல வென்னும் அறிவிலிகள் கூற்றையெல்லாம் பொய்யா யாக்கி செறிவான கணிப்பொறியின் மொழியா யாகி செம்மையான …
திருக்குறள் அறுசொல் உரை: 133. ஊடல் உவகை : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை: 132. புலவி நுணுக்கம்: தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 3.காமத்துப் பால் 15. கற்பு இயல் 133. ஊடல் உவகை கூடல் இன்பத்தைக் கூட்டும் ஊடல் பற்றிய உளமகிழ்ச்சி. (01-04 தலைவி சொல்லியவை) இல்லை தவ(று)அவர்க்(கு) ஆயினும், ஊடுதல் வல்லது அவர்அளிக்கும் ஆறு. தவறுஇல்லை எனினும், இன்பத்தைக் கூட்டவே, அவரோடு ஊடுவேன். உடலில் தோன்றும் சிறுதுனி, நல்அளி வாடினும், பாடு பெறும். ஊடல்தரும் சிறுதுயரம் வாட்டினும், கூடல் இன்பத்தைப்,…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙௌ) – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙோ) – தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙௌ) இவை மட்டுமல்ல, அனைத்து இதழ்களும் ஊடகங்களும் நல்ல தமிழே மக்களுக்கானது என்பதை உணர்ந்து தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும். இதற்கான பணிகளைத் தமிழ் அமைப்புகள் மேலும் முனைப்பாக ஆற்றி வெற்றி பெற வேண்டும். அன்று பேராசிரியர் இலக்குவனார் விதைத்த தமிழ்உணர்வு இன்றும் மங்காமல் தமிழ் ஆர்வலர்களிடம் உள்ளது. அவர்கள் இப்பணியில் வெற்றி பெறுவதே நாம் பேராசிரியருக்குப் படைக்கும் காணிக்கையாகும் என்பதை உணரவேண்டும். குறள்நெறி ஆங்கில இதழுக்கு இருந்த வரவேற்பாலும்…
தமிழர் என்பதாலே இந்தச் சோதனை! – சந்திரசேகரன் சுப்பிரமணியம்
தமிழர் என்பதாலே இந்தச் சோதனை! யாதுமாகி நின்றே நம்தமிழை எங்கு நிறையச் செய்வோம் சூது அலட்சிமாய், இந்து அரசு செய்யும் சூழ்ச்சி அன்றோ? மோதும் பகைமை எல்லாம் நாம் தமிழர் என்பதால் அன்றோ ? நீதி நேர்மை எல்லாம் இந்தியர் கீதை ஏட்டில் மட்டும்தானே !! இந்தி புகுத்தி விட்டார் – இவர் சூதுநிறை மதஆட்சியாலே ; மந்திகள் ஆடவிட்டார் அவரை மந்திரி என்ற பெயராலே குந்தி மைந்தர் என்பார்; இவர் கோசலை குமரென்பார் ; விந்தியமலைக்கீழேஇருக்கு நமை வேற்றுகிரக மக்களென்பார் ; இராம…
பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 6/8 – கருமலைத்தமிழாழன்
(பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 5/8 – தொடர்ச்சி) பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 6/8 கொல்லையிலே பூத்துளது என்ற போதும் கொஞ்சுமெழில் நறுமணத்தை அறிவ தற்கே முல்லைக்கும் விளம்பரங்கள் செய்யும் காலம் முத்தமிழில் உள்ளதென நமக்கு நாமே சொல்லுவதால் யாறறிந்தார் உலக மெல்லாம் சொல்லுகின்ற வகையினுக்கே வழியென் செய்தோம் வெல்லுகின்ற இலக்கியத்துக் கருத்தை யெல்லாம் வெளிச்சத்தில் கடைவிரித்தே கூவ வேண்டும் ! கணியனவன் யாதும்ஊர் என்று ரைத்த கருத்தின்று கணினிவழி வந்த திங்கே தனித்தீவாய் வாழ்ந்துவந்த மக்க ளெல்லாம் தமராக இணைகின்றார் …
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (8) – வல்லிக்கண்ணன்
(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (7.) – தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (8) 2.தமிழ் முழக்கம் (தொடர்ச்சி) இம் மாபெரும் சாதனையைக் கவிதையில் பதிவு செய்யும் வகையில், பெருங்கவிக்கோ “தமிழ் நடைப் பாவை’ என்ற நூலை இயற்றியுள்ளார். தமிழ் இலக்கி: யத்தில் நித்தியமான நிரந்தரமான இடத்தைப் பெற்றுள்ள திருப்பாவை: திருவெம்பாவை பாணியில் எழுதப்பட்டுள்ள தமிழ்நடைப்பாவை கவிஞரின் புலமைக்கு நல்ல சான்றாகத் திகழ்கிறது. இனிய சொல் லோட்டம், நல்ல கருத்துகள், உணர்ச்சி ஒட்டம், சந்த நயம் முதலியன கொண்ட அருமையான படைப்பாக…
வேண்டல் ஒருநாள் கூடிவரும்! – கெருசோம் செல்லையா
வேண்டல் ஒருநாள் கூடிவரும்! நீண்ட நாளின் விண்ணப்பம், நிறைவேறாது இருந்தாலும், ஆண்டவரின் நன்மக்கள், அண்டிக் கொள்வது அறமாகும். வேண்டல் ஒருநாள் கூடிவரும்; விரும்பும் நன்மை தேடிவரும். தோண்டத் தோண்ட அருளூற்று, தூயோர் வாழ்வில் உறவாகும்! – கெருசோம் செல்லையா
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙோ) – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙொ) – தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙோ) குறள்நெறி இதழ்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் திங்கள் இருமுறைதான் வந்தன. தமிழன்பர்கள் “வார இதழாக மாற்றக்கூடாதா? பக்கங்களைக் கூட்டக்கூடாதா” என்றெல்லாம் வேண்டினர். வார இதழாக மாற்றுவதை விட நாளிதழாக மாற்றுவதே தக்க பணியாகும் எனப் பேராசிரியர் இலக்குவனார் கருதினார். இதழ்கள் வாயிலாக மொழிக்கொலை நடைபெறுவதால் அதைத் தடுத்து நிறுத்தத் தாமே முன்முறையாக நன்முறையாக நற்றமிழில் நாளிதழ் நடத்த வேண்டும் என்று முடிவெடுத்து குறள்நெறி நாளிதழும் தொடங்கினார். இது குறித்த நாளிதழ்…
திருக்குறள் அறுசொல் உரை: 132. புலவி நுணுக்கம்: வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை: 131. புலவி:தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 3. காமத்துப் பால் 15. கற்பு இயல் 132. புலவி நுணுக்கம் தவறுஇல்லாப் போதும், கூடல்இன்ப மிகுதிக்காக நுட்பமாய்ச் சினத்தல் (01-02 தலைவி சொல்லியவை) பெண்இயலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர், நண்ணேன், பரத்த!நின் மார்பு. பெண்களின் பார்வைகளால் கற்பினை இழந்தவனே! உன்னை நெருங்கேன். ஊடி இருந்தேம்ஆத், தும்மினார், யாம்தம்மை, “நீடுவாழ்” கென்பாக்(கு) அறிந்து. ஊடலில் தும்மினார், “நீடுவாழ்க”என வாழ்த்துவேன் என்று நினைந்து. (03-10 தலைவன் சொல்லியவை) …
சுந்தரச் சிலேடைகள் 17 : பெண்மகளும் பெட்டகமும் – ஒ .சுந்தரமூர்த்தி
சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை அணி 17 பெண்மகளும் பெட்டகமும் வாய்மூடிக் கொள்ளுமே, வாய்திறக்க முத்துதிர்க்கும் தூய்மை தனைநாடும், நல்சுமக்கும் – ஏற்புறப் பல்நிலை தானிருக்கும் பாதரு காரிகையே ! வெல்மகளும் பெட்டகமாய் வீடு. பொருள்: பெண் மகள்: | ) தேவைப்படும் நேரத்தில் அளவாகப் பேசிவிட்டு வாயை மூடிக் கொள்வர். 2) வாய் திறந்தால் வெண்முத்துகளாய்ப் பற்கள் ஒளிரும் . 3) தூய்மையாக இருப்பார்கள். 4) குடும்பப் பொறுப்பை உணர்ந்து குடும்பத்தைத் தாங்கும் தூணாக இருப்பர். 5) பேதை பெதும்பை மங்கை மடந்தை அரிவை…
பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 5/8 – கருமலைத்தமிழாழன்
(பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 4/8 – தொடர்ச்சி) பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 5/8 பாலுக்குள் நெய்பதுங்கி உள்ள தன்மை பார்வைக்குத் தெரியவில்லை என்ப தாலே பாலுக்குள் உள்ளநெய்யும் பொய்யாய்ப் போமோ பாட்டிற்குள் அறிவியலின் கருத்தை யெல்லாம் மேலுக்குச் சொல்லவில்லை என்ப தாலே மேடையிலே இல்லையென்று முழங்க லாமா காலங்கள் வினைத்தொகையில் உள்ள போலே கனித்தமிழில் அறிவியலும் உள்ள துண்மை ! பொறியிலின் நுணுக்கத்தைப் பாட்டிற் குள்ளே போற்றியதைத் தெரியாமல் மறைத்து வைத்தோம் குறியீட்டில் மருத்துவத்தைச் சித்த ரெல்லாம் குறித்தளிக்கப் புதையலெனப் …
“ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே” (புறம்: 312) பெண்ணடிமைத்தனமா ? – தமிழரசி
“ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே (புறம்: 312) பெண்ணடிமைத்தனமா ? பொன்முடியார் எனும் சங்ககாலப்பெண்புலவர், குழந்தையைப் பெற்றேடுப்பதை விட அப்பிள்ளையைப் பாதுகாத்துப் பேணி வளர்ப்பதே தாய்மாரின் பெரும் பொறுப்பாகும். அதிலும் கன்னியரையும் காளையரையும் சமுதாய நலம் பேணுபவராய் வளர்த்து எடுத்துக் கொடுப்பது மிகமிகக் கடினமான செயலாகும். அந்தக் கடினமான செயலைச் சங்ககாலத் தாய்மார் தத்தம் பண்புகளுக்கு ஏற்ப மிக நன்றாகவே செய்திருக்கிறார்கள் என்பதைச் சங்கப்பாடல்கள் காட்டுகின்றன. சங்ககாலத் தாய்மார் அப்படி வளர்த்திராவிட்டால் சங்கப்பாடல்களையும், சங்க இலக்கியங்களையும், சங்கச்சான்றோர்களயும் நாம் கண்டிருக்க முடியுமா? “ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே சான்றோன் ஆக்குதல்…
