கவிஞர் முடியரசனின் பூங்கொடி 32 : பிறமொழி புகுதல்
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி 31 : முத்தக் கூத்தன் கல்லறை-தொடர்ச்சி) பூங்கொடி பிறமொழி புகுதல் நம்நாட் டகத்தே ஈயமிலாப் புன்மொழிதிணிப்பதற் கொருசிலர் செய்தனர் சூழ்ச்சி;துணுக்குற் றெழுந்தனர் தூயநல் மனமுளோர்;தாய்மொழி வளர்ச்சி தளர்ந்த இந் நாட்டில்நோய்என மடமை நுழைந்து பரந்தது; 85எழுத்தும் அறியார் படிப்பும் உணரார்கழுத்திற் பிறமொழி கட்டுதல் நன்றாே?என்றநல் லுரையை இகழ்ந்தனர் ஆள்வோர்;நெஞ்சங் கனன்றதுகன்றிய நெஞ்சங் கனன்றது; தமிழர்பொறுக்கும் அளவே பொறுப்பர், மீறின் 90ஒறுத்ததன் பிறகே ஓய்வும் உணவும்நினைவர் இதுதான் நெடுநாள் இயல்பு;கனலும் புனலும் கரைமிகின் தடுக்கஉலகில் ஒருபொருள் உளதென அறியோம்; மூக்கினை வருடின்…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி 31 : முத்தக் கூத்தன் கல்லறை
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி 30 : தாமரைக்கண்ணி அறிவிப்பு-தொடர்ச்சி) பூங்கொடி முத்தக் கூத்தன் கல்லறை கலக்கந் தருசுடு காட்டில் நெஞ்சுரம்சேருவ தெங்ஙனம்: செப்புதி எனலும்,கூறுவென் கேண்மின் கூர்மதி யுடையீர்? 60மொழிக்குயிர் ஈந்தநல் முத்தக் கூத்தன்பளிக்கறைப் புதைகுழி பாங்குடன் மிளிரும்,அதனைக் காணின் அச்சம் தொலையும்,மதமுறு கொடியர் மனச்செருக் கொழிக்கநெஞ்சுரம் ஏறும், நிமிர்ந்து நடப்பீர்! 65வஞ்சனை மாக்கள் வண்டமிழ் மொழிக்குநஞ்சினை ஊட்ட நாட்டில் மறைந்துளார்;அவர்தம் கொடுஞ்செயல் அழித்திட வேண்டின்முத்தக் கூத்தன் கல்லறை முன்போய்நத்தித் தொழுதால் நரம்புரம் ஏறும், 70குருதியில் உணர்ச்சி கொதிக்கும், நும்மினப்பெருமையை அழிப்போர் பிறக்கிடச் செய்வீர்!நாடும்…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி 30 : தாமரைக்கண்ணி அறிவிப்பு
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி 29 : கல்லறை காண் காதை – தொடர்ச்சி) பூங்கொடிதாமரைக்கண்ணி அறிவிப்பு கோமகன் ஆயிழை இவள்மேற் கொண்டகாமந் தணிந்து கழிந்தனன் அல்லன்,படிப்பதும் இதனுள் பழுதுகள் புரியின் 30அடுத்தவர் ஒறுப்பர் ஆதலின் புறத்தே வருமிடைக் காண்பான் வழியிடை ஒதுங்கிஇருத்தலுங் கூடும் இதுநீர் ஒர்ந்துதிருத்தகு நல்லீர்! தெருவழிச் செல்லேல்பொழிலின் பின்புறம் பொருந்திய ஒருசிறு 35வழியுள தவ்வழி மருங்கிற் செல்லின்சுடுகா டொன்று தோன்றும்; ஆண்டுக்கடுநவை உறாஅது; கலங்கேல், அந்செறிதாண்டிச் செல்கெனத் தாமரைக் கண்ணி வேண்டி நின்றனள், விளங்கிழை அல்லி 40 அல்லி அஞ்சுதல் பினஞ்சுடு…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி 29 : கல்லறை காண் காதை
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி 28 : அடிகள் அடைக்கலம் அருளல் – தொடர்ச்சி) 6. கல்லறை காண் காதை நிலவும் உடுவும் மாலைப் பொழுதில் மேலைத் திசையில் சிலப் பச்சை கோலச் சிவப்பு மஞ்சள் முதலா வண்ணங் குழைத்துச் செஞ்சுடர்ப் பரிதி சென்றனன் இரவெனும் ஓவியன், மாதர் ஒளிமுகந் தீட்ட 5 நீல வான நெடுந்திரை தன்னில் கோல வட்டம் குறித்தனன், அதனை ஞாலம் நிலவென நவின்று மகிழ்ந்தது; துதலிற் புரளும் சுருள்குழல் வரைய 10 நுதலி ஒருபுறம் நுண்ணிதின் வரைந்தனன் களங்கப்…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி 28 : அடிகள் அடைக்கலம் அருளல்
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி 27 : குறளகம் புகுதல் – தொடர்ச்சி) அடிகள் அடைக்கலம் அருளல் நல்லறம் எவைஅவை நயந்திடும் அவர்எம் அல்லல் கண்டதும் அரும்பினர் கண்ணீர் துடைப்பேன் துயர்எனத் துடைத்தனர் அந்நீர்; 110 உடைப்பெருஞ் செல்வம் உற்றேன் போலக் களித்தேன் தாயின் கருணையைக் கண்டேன்; உளத்தே நிறையும் உவப்புடன் குறளகத் தொண்டுகள் புரியும் தோகை இவளிடம் விண்டுளம் நண்பு கொண்டுளேன் யான்’ என; 115 கோமகன் அகலுதல் `அல்லி! நின்வர லாறு தெரிந்தேன் மெல்லியல் இவளை வஞ்சியின்…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி 27 : குறளகம் புகுதல்
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி 26 : அல்லியின் வரலாறு – தொடர்ச்சி) பூங்கொடி குறளகம் புகுதல் புரக்குநர் இலோமெனப் புலம்புதல் கேட்டஅறத்து வழிப்படூஉம் நெஞ்சினன் ஒருவன்தாயினும் மேலாம் நோயுறும் தந்தைவீய்நிலை கண்டுளம் வெதும்பி இரங்கித்தோள்மிசைத் தழீஇத் தொண்டுளம் பூண்டவாழ்நாள் உடையார் மலையுறை யடிகள்தம்குறளகம் தனிலெமைக் கொண்டுய்த் தனனே; 80 மலையுறை அடிகள் மாண்பு குறள்நெறி வாழும் கொள்கையர், அறிஞர்ஒழுக்கம் உயிரென ஓம்பும் செம்மல்,வழுக்கியும் தீதுரை வழங்காப் பெரியார்;கல்வித் தொண்டே கடவுள் தொண்டெனக்கல்வி வளர்ந்திடக் கழகம் கண்டவர்; 85பல்வகை நூல்பயில் படிப்பகம் நிறுவியோர்கவிஞர் பலருயிர் காத்தருள்…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி 26 : அல்லியின் வரலாறு
(பூங்கொடி 25 : அல்லியின் மறுமொழி – தொடர்ச்சி) பூங்கொடி அல்லியின் வரலாறு `வளர்பெரு நிதியோய்! வாழ்கநீ பெரும! தளர்வுறும் நின்மனம் தகாநெறி ஒரீஇ நல்வழிப் படர்க! நானிவண் உற்றது செல்வக் கோவே செப்புவென் கேண்மோ! மகப்புனல் ஆட மயில்நகர் விடுத்துத் தகப்பன் தடையைப் பொருட்படுத் தேனாய் 45 வருமெனை மறித்து வஞ்சகஞ் செய்தனன்; வெருகன் தன்னுரை முழுதும் மெய்யென நம்பிய என்பால் நலம்நுகர்ந் ததற்பின் வெம்பி அழிந்திட வீதியில் விடுத்துக் காணா தேகினன்; கலங்கஞர் எய்தி நாணி என்னூர்…
பூங்கொடி 25 : அல்லியின் மறுமொழி
(பூங்கொடி 24 : தாமரைக்கண்ணி தோன்றிய காதை – தொடர்ச்சி) பூங்கொடி அல்லியின் மறுமொழி ‘எத்தனை முறைநினக் கியம்புவென் பெரும! வித்தக! விண்மீன் வலையினிற் சிக்குமோ? தத்தை கொடுஞ்சிறைக் கூண்டுள் தங்கிட விழைதல் உண்டோ? விடுவிடு காமம்! மழைமுகில் தொடுதர வானுயர் கோவில் அழுக்கும் இழுக்கும் பெருகி ஆங்குப் புழுக்கள் நெளிதரல் போலச் செல்வர் நெஞ்சில் தீக்குணம் நெறிந்தன போலும்; வெஞ்சினங் கொள்வாள் நின்முகம் நோக்காள் 25 வஞ்சி குறிக்கோள் வாழ்வினள் ஆதலின் விஞ்சுங் காமம் விடுவிடு’ என்றனள்; 30 அல்லியின் வரலாறு வினவல்…
செம்மொழிப் போர்மறவர் சி.இலக்குவனார் – ச.ந.இளங்குமரன்
செம்மொழிப் போர்மறவர் சி.இலக்குவனார் தமிழ்வாழ்த்து (கலித்துறை) அகர முதலா னவளே அமிழ்தே அருள்வாய் இகர உகர உடல்நீ உயிர்நீ உணர்வாய் பகர்கிறே னிப்பா வரங்கில் பரவசம் கொள்வாய் பகர்வாய் பகர்வதி ளங்குமர னல்லதமிழ் தானென்றே! (நேரிசை வெண்பா) தந்தைக்கு வாய்த்த தவப்புதல்வன் செந்தமிழ்ச்சீர் சிந்தை நிறைதிரு வள்ளுவன் – தந்தைதந்த செந்தமிழ்க் காப்புக் கழகமதை செவ்வனே முந்தியே காப்பார் முனைந்து (நேரிசை வெண்பா) தனித்தமிழை மீட்டெடுத்த தன்மான வீரன் கனித்தமிழ்ச் சொல்லன் கணியன் – இனித்ததமிழ் கல்விமொழி யாவதற்குக் கண்ணுறக்கம் விட்டொழித்த வல்லார் இலக்குவனார்…
பூங்கொடி 24 : தாமரைக்கண்ணி தோன்றிய காதை
(பூங்கொடி 23 : காமங் கடந்தவள் – தொடர்ச்சி) பூங்கொடி கோமகன் கலக்கம் கோமகன் விழியிற் குலமகள் படுதலும் காமங் கதுவிய கருத்தின னாகிப் படிப்பகம் புகுதப் பார்த்தனன்; `அடஓ! சித்தமும் விழியும் சேர்ந்து பதிந்திடப் புத்தகம் பயில்வோர் பொருந்திடன் அன்றோ! புத்தகம் புரட்டும் புல்லென் ஓசையும் உரவோர் உயிர்க்கும் ஓசையும் அன்றி அரவம் சிறிதும் அறியா இடமாம்; அறிவை வளர்க்கும் ஆய்வுரை நூல்பல 5 நிறைதரும் அவ்வகம் தூய்மை நிலையம்; கொள்கைச் சான்றோர் குழுமும் நூலகம்; உள்ளிற் செல்லுதல்…
பூங்கொடி 23 : காமங் கடந்தவள்
(பூங்கொடி 22 : கொழுநன் ஆவேன் – தொடர்ச்சி) பூங்கொடி காமங் கடந்தவள் நல்லியல் மாதர் நலம்பெறு வாழ்வைச் செல்வச் செருக்கால் சேர்வுறு பிறப்பால் வெல்லக் கருதின் விளைவது வேறு; 115 சொல்லக் கூசேன் மெல்லியல் மாத ரார் பிள்ளைப் பூச்சிகள் அல்லர் பெரியோய்! காமங் கதுவக் கருத்தினை விடுப்பின் நாமங் கேடுறும் நல்லறங் தீயும் தீமை பற்பல சேர்வது திண்ணம் 120 மாதரார் உளப்பாங் கியாதென உணர்ந்து காதல் மேற்கொளல் கடமை யாகும்; காமங் கடந்தவள் காமம் என்னும் கள்வன் றனக்கே புகஇடம்…
பூங்கொடி 22 : கொழுநன் ஆவேன்
(பூங்கொடி 21 – கவிஞர் முடியரசன்: கோமகன் ஆவல் – தொடர்ச்சி) பூங்கொடி கொழுநன் ஆவேன் கொழுகொம் பின்றிப் பூங்கொடி தவித்து விழுவது பொறேனாய்க் கொழுநன் ஆவேன் எனுமுயர் நினைவால் இரங்கி வந்துளேன் 90 நின்பூங் கொடியோ நேரிசைக் குலத்தாள் என்பெரு நிலையினை இசைத்தால் உடன்படும்; உடன்படச் செய்க குறளகம் விடுத்துக் குமரன் என்னைப் பெறுமணங் கொள்ளப் பெட்டனள் ஆயின் அளப்பருஞ் செல்வம் அனேக்தும் ஈவேன் 95 களைத்துடல் இளைக்கக் கருதா தென்றன் காதற் கடலைக் கடந்திட அவளை மாலுமி யாக்கி மகிழ்ந்திடக் குறித்தேன்…