தமிழுக்கு ஒளி தந்த தமிழ்ஒளி 1/4 – சி.சேதுராமன்
தமிழுக்கு ஒளி தந்த தமிழ்ஒளி 1/4 பாரதி, பாரதிதாசன் ஆகிய இருவரின் சுவடுகளைப் பற்றிக் கொண்டு ‘பாரதி கவிதா மண்டலத்தின்’ மூன்றாவது தலைமுறையில் முத்திரைப் பதித்த கவிஞர்தான் தமிழொளி. பாரதியையும், பாரதிதாசனையும் பலரும் பின்பற்றி அவர்களது சுவடுகளில் கால்பதித்து நடந்தாலும் அவர்களின் வழிநின்று பொதுவுடைமைக்குக் குரல் கொடுத்து இறுதிவரை பொதுவுடைமைவாதியாகவே வாழ்ந்து மறைந்தவர் கவிஞர் தமிழொளி. தென்னார்க்காடு மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடியை அடுத்த ‘ஆடூரில்’ சின்னையா – செங்கேணி அம்மாள் இவர்களின் தலைமகனாக 1924-ஆம் ஆண்டு செட்டம்பர் திங்கள் 21-ஆம்…
காக்கையாரே காக்கையாரே எங்கே போனீர்? – க.சச்சிதானந்தன்
காக்கையாரே காக்கையாரே எங்கே போனீர்? பிள்ளை: காக்கையாரே காக்கையாரே எங்கே போனீர்? காக்கை: காணாத இடமெல்லாம் காணப் போனேன் கண்டு வந்த புதினங்கள் சொல்லக்கேளும் செட்டியார் வீட்டிலே கலியாணம் சிவனார் கோயில் விழாக்கோலம் மேரி வீட்டிலே கொண்டாட்டம் மீன் பிடித்துறையிலே சனக்கூட்டம் கண்டிப் பக்கம் குளிரோ கடுமை காங்கேசன்துறையில் வெயிலோ கொடுமை பிள்ளை: அக்கா, அம்மா, அப்பா அவர்கள் சுகமா? காக்கை: பொங்கலன்று வருவாராம் புத்தகம் வாங்கி வருவாராம் பந்தும் வாங்கி வருவாராம் பாவை உமக்குத் தருவாராம் மிகவும் நல்லாய்ப் படியென்று கடிதம்…
தமிழ்நாடு – கவிஞர் தமிழ்ஒளி
தமிழ்நாடு புதுமை கண்டு வாழ இன்று போர் செயுந் தமிழ்நாடு – மறப் போர் செயுந் தமிழ்நாடு – மிக முதுமை கொண்ட பழமை வீழ மோதிடும் தமிழ்நாடு – வீழ மோதிடும் தமிழ்நாடு! திசையை, விண்ணை, வென்று நின்று சிரித்திடுந் தமிழ்நாடு – எழில் சிரித்திடுந் தமிழ்நாடு – கொடி அசைய உயர மண்ணில் நிற்கும் கோபுரம் தமிழ்நாடு – கலைக் கோபுரம் தமிழ்நாடு! காவிரிநதி பாயுங் கழனிக் கண்ணொளி பெறும்நாடு – முக் கண்ணொளி பெறும்நாடு – பொழில் பூவிரிநறும் புனல்வி…
வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.17. : பொய்ம்மை விலக்கல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.16. தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 17. பொய்ம்மை விலக்கல் நிகழா ததனை நிகழ்த்துதல் பொய்ம்மை. நடக்காததைச் சொல்வது பொய் ஆகும். நிகழ்வதை யங்ஙன நிகழ்த்துதல் வாய்மை. நடந்ததை அவ்வாறே சொல்வது உண்மை ஆகும். தீமையைத் தருமெனின் வாய்மையும் பொய்ம்மையாம். தீய விளைவைத் தரும் எனில் உண்மை என்பது பொய்க்குச் சமம் ஆகும். புரைதீர் நலந்தரின் பொய்ம்மையும் வாய்மையாம். குற்றமில்லாத நன்மையைத் தரும் எனில் பொய்யும் உண்மைக்குச் சமம் ஆகும். வாய்மையைத் தருவதே வாயென வறிக. வாய்மை(உண்மை)யைப் பேசுவதால் மட்டுமே “வாய்”…
தீவாக்கிய அலைபேசி – கருமலைத்தமிழாழன்
தீவாக்கிய அலைபேசி செல்லிடக்கை அலைபேசி என்றே இன்று செப்புகின்ற அறிவியலின் பேசி யாலே இல்லத்தில் இருந்தபடி உலகில் எங்கோ இருப்பவரைத் தொடர்புகொண்டு பேசு கின்றோம் செல்கின்ற இடத்திருந்தே வீட்டா ரோடு செய்திகளைப் பரிமாறி மகிழு கின்றோம் எல்லைகளை நாடுகளைக் கடந்தி ருந்தும் எதிர்நின்று பேசுதல்போல் பேசு கின்றோம் ! எழுத்தாலே அனுப்பிவைத்த செய்தி தம்மை ஏற்றவகை படங்களொடு அனுப்ப லானோம் கழுத்துவலி எடுக்கமேசை முன்ன மர்ந்து கணிணியிலே செய்கின்ற பணியை யெல்லாம் அழுத்திவிரல் படுத்தபடி சாய்ந்த மர்ந்தும் அடுத்தஊர்க்குச் செலும்போதும் செய்ய லானோம் பழுதின்றி …
அறிவியல் பூக்கள் நிறைந்த தொல்காப்பியம்போல் எம்மொழியிலும் நூலில்லை! – கருமலைத்தமிழாழன்
அறிவியல் பூக்கள் நிறைந்த தொல்காப்பியம்போல் எம்மொழியிலும் நூலில்லை! [தொல்காப்பியர் சிலை திறப்பு விழா கவியரங்கம் இடம் – காப்பிக்காடு (நாகர்கோவில்) நாள்: 26.06.2047 10-07 -2016 தலைமை – கவிஞர் குமரிச்செழியன்] தமிழ்த்தாய் வணக்கம் கடல்பொங்கி நிலம்மூழ்கி அழிந்த போதும் களப்பிரரின் இருட்கால ஆட்சி தம்மில் இடம்சிறிதும் கொடுக்காமல் தடுத்த போதும் இனிமையான பாசுரங்கள் பாடா வண்ணம் கடலுக்குள் கல்கட்டிப் போட்ட போதும் காளவாய்க்குள் உடல்வேக நுழைத்த போதும் விடவாயால் கரையான்கள் அரித்த போதும் வீழாத தமிழன்னையை …
அவளும் அப்படித்தான்! – பவித்திரா நந்தகுமார்
அவளும் அப்படித்தான்! அம்மா முத்தமிட தந்தை பாசமாய் வருடி விட தமையன் தங்காள் செல்லச் சண்டையிட பள்ளி சென்று வந்த நங்கைதான் இவள் அவளும் அப்படித்தான் சென்றாள் தமையன் வீடு வரவில்லை என ஏங்கியவள் தொடராகத் தங்கையவளை உயிரற்ற உடலாய் ஆடையின்றிக் கண்டவள் தகப்பனின் உயிர்த் துடிப்பை அறிந்தவள் அப்படித்தான் அவளும் சென்றாள் குடும்பம் எண்ணாமல் தன் இனம் காக்க…. வெறுத்து விடவில்லை அவள் கடும் பயிற்சி கண்டு சோர்ந்து விடவில்லை அவள் இலட்சியக் கொள்கை ஆயுதம் கையில் எடுத்தாள் உடன் தோழிகளோடு மணக்கோலம்…
கருமலைத்தமிழாழனின் செப்பேடு – நூலாய்வு : பொன்.குமார், இனிய உதயம்
செப்பேடு ( மரபுக் கவிதை நூல் ) ஆசிரியர் – பாவலர் கருமலைத்தமிழாழன் திறனாய்வு – பொன் குமார் தமிழ்க் கவிதையின் தொடக்கம் மரபுக் கவிதையே. பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை மரபின் ஆதிக்கம் தொடர்ந்தது. பாரதிக்குப் பின் மாற்றம் ஏற்பட்டது. மரபைப் பின் தள்ளி புதுக்கவிதை முன் சென்றது. மரபுக் கவிதை என்றாலே ஒரு சிலர் மட்டுமே எழுதி ஒரு சிலர் மட்டுமே வாசிக்கும் நிலையில் மரபுக் கவிதை இருந்ததை மாற்றி அனைவரும் வாசிக்கும் வண்ணம் மரபுக் கவிதையை எழுதி …
வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.16. மயக்குவ விலக்கல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.15 தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 16. மயக்குவ விலக்கல் (மயக்குவ-போதைப்பொருட்கள்) மயக்குவ வறிவினை மயக்கும் பொருள்கள். மயக்குவ என்பவை அறிவினை மயக்கும் பொருட்கள் ஆகும். அவைகள் கஞ்சா வபின்முத லாயின. அவை கஞ்சா, அபின் போன்றவை. அறிவுதம் முயிரே யாதியே யுலகே. நம்முடைய உயிர், கடவுள், உலகம் எல்லாமாக அறிவுதான் உள்ளது. அறிவினை மயக்குத லவற்றை யழித்தலே. அறிவினை மயக்குவது என்பது இம்மூன்றையும் அழிப்பது ஆகும். அறிவினை மயக்குவா ரருமறம் புரிவர். அறிவினை மயக்கும் பொருட்களை உட்கொண்டவர் தீய செயல்களைச்…
பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 14 – இலக்குவனார் திருவள்ளுவன்
(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 13 தொடர்ச்சி) பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 14 நாமே தெய்வம்! நன்கறிக! தன்மதிப்புடன் வாழத் தன்னம்பிக்கை வேண்டும். அதனால் ‘நாம் அனைவருமே தெய்வம்’ எனப் பல இடங்களில் கூறுகிறார். “வீரர்தம் தோளினிலும் – உடல் வியர்த்திட உழைப்பவர் தோள்களிலும்” (பாரதியார் கவிதைகள்: பக்கம் 154 | திருமேகனைச் சரண் புகுதல்) தெய்வம் இருப்பதாகக் கூறுகிறார். “செல்வம் என்றொரு செய்கை எடுப்போர் செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம் கைவருந்தி உழைப்பவர் தெய்வம்” (பாரதியார் கவிதைகள்:…
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 33: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 32 தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 33: புதுக்கோட்டை மருத்துவர் இராமச்சந்திரன் அவர்கட்குப் படைக்கப்பட்ட ‘அன்புப் படையல்’ என்னும் கவிதை 1962 ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. பத்தொன்பது அடிகளையுடையது. நிலைமண்டில ஆசிரியப் பாவால் ஆகியது. கவிஞர் எழுதிய ‘பழந்தமிழ்’86 என்னும் மொழியாராய்ச்சி நூலை மருத்துவருக்குப் படைத்துள்ளார். மருத்துவர் வி.கே. இராமச்சந்திரன் யாவரிடமும் இன்முகம் கொண்டு இனிய சொல் பேசுபவர். தாய் போன்ற அன்புள்ளம் கொண்டவர். வாழ்வுக்கு இடையூறாய் அமையும் நோயின் முதல்…
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 32: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 31 தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 32 1.6 படையல் கவிதைகள் தன்னை ஆதரித்து, உதவி செய்த பெருமைக்குரியவர்களுக்கு தாம் இயற்றிய நூல்களைப் படையலாக்கியுள்ளார் இலக்குவனார். இந்நூல்களின் முகப்பில் படையல் கவிதையை வெளியிட்டுள்ளார் கவிஞர். விருதுநகர் கல்லூரிப் பணியின்றும் வெளியேற்றப்பட்ட பின் கவிஞரை ஆதரித்தவர் புதுக்கோட்டை வள்ளல் எனப்படும் அண்ணல் பு.அ. சுப்பிரமணியனார். அவருடைய தம்பி கோவிந்தசாமி, அண்ணன் கருத்து அறிந்து செயல்படுபவர். அன்னாருக்குத் தாம் எழுதிய ‘தொல்காப்பிய ஆராய்ச்சி’…
