அறம் காப்பார் அடுத்த முதல்வர்! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி
அறம் காப்பார் அடுத்த முதல்வர்! அரசு அலுவலகம் அனைத்திலும் இங்கே, முரசு கொட்டியே கையூட்டு கூத்தாடும், அசுரகுல மாந்தர் அங்கு பணியாற்ற, அனைத்து குலமாந்தர் நலமும் பாழாகும்! ஆட்சி அதிகாரம் மாற்றம் கண்டாலும், காட்சி மாறாத கோலம் அங்கென்றும்! ஆற்று மணலென்று மக்களை எண்ணி, அங்கு நாள்தோறும் சுரண்டல் அரங்கேறும்! ஆண்டு ஐம்பதைக் கடந்த பின்னாலும், அவலம் மாறாத கொடுமை நாள்தோறும்! அதனை எண்ணி மனம் வெம்பும் அனைவர்க்கும், அரிய வாய்ப்பாக அமையும் இத்தேர்தல், அறத்தின் வழிநின்று ஆளும் ஒருவரை, அடுத்த முதல்வராய் ஆக்கலாம்…
தெளிந்தவர் வாக்கு
தெளிந்தவர் வாக்கு கொடுக்கப்பட்ட புகார்களை வரிசையாய் எண்களிட்டு வாகாய் அடுக்கிவைக்கும் காட்சிக் கூடமொன்று கண்டுகளிக்க உள்ளதெனக் கண்டவர்கள் சொன்னார்கள்! கயமைத்தனத்தைக் குத்தகையெடுத்துக் கழிபேருவகை எய்தியோர் களிநடம் புரிய அரங்குகள் அமைத்துத்தரும் ஆணையம் உண்டென்று அறிந்தவர்கள் சொன்னார்கள்! சீர்திருத்தம் எனச்சொல்லி ஓர்திருத்தமும் செய்யாத நாடறிந்த நல்லோரவை நம்நாட்டில் உண்டென்று நன்கறிந்தோர் சொன்னார்கள்! தப்படியும் சேப்படியும் ஒப்பில்லாமல் செய்தவர்கள் எப்படியும் வெற்றிபெற்றுக் கறைவாழ்வு வாழ்ந்திடவே கலங்கரை விளக்கமாய்க் கலங்காது பணியாற்றும் மெத்தபடித்த மேதையோரவை இத்தமிழ் நாட்டிலும் உண்டெனும் உண்மையைத் தெளிந்தவர்கள் சொன்னார்கள் தேர்தல் ஆணையமென்று! தமிழ் சிவா
நாக்கு வாய்க்குள் முளைத்த கொம்பு – பழநிபாரதி
நாக்கு அசிங்கமானது அபாயகரமானதும்கூட! அது வாய்க்குள் முளைத்த கொம்பு துருப்பிடித்த கத்தி தீட்டப்பட்ட அரிவாளும்கூட! சில நேரம் தனது எச்சிலை தன்மீதே துப்பிக்கொள்ளும் இப்போது நாம் இது குறித்துப் பேசுவோம் இதுவே சரியான தருணம் – பழநிபாரதி
தாய்க்கோழியின் வருத்தம் – தமிழ்சிவா
தாய்க்கோழியின் வருத்தம் காடடைப்பான்1 தூக்கிச் செல்லுமோ என்றஞ்சிய தாய்க்கோழி, வேலியில் ஊர்ந்த பாம்பு கௌவிய குஞ்சை மீட்கக் கொக்கரிக்கும். என்நெஞ்சைப் படம்பிடித்து, நெடுமென வளர்ந்த கருமுள் முருக்கம் சிவப்பாய்ப் பூக்கும். அந்தி மந்தாரை அனைத்தும் கலங்கடிக்கும். பந்தல்கால் சுற்றிய பசுநிறக் கொடியில் பவழ மயிர்மாணிக்கம் பார்க்கும். கையெழுத்து மறையும் வேளையில், அங்கே சேச மலையில் சிவப்பு மரத்தைச் சிரத்தையுடன் சீவிக் கொண்டிருப்பாய், இங்கே பால்சுவை பருகிய பூனைகள் சிவப்பாய் மொடமொடக்கும் காகிதக் கட்டுடன், அங்கே சுட்டு வதக்கிய உடல்களும் கூர்ங்கத்தி பட்டுச் செதுக்கிய…
உன்புகழ் பதித்தேன்! -கெர்சோம்செல்லையா
அருவிக்கரை அன்று கண்ட அருவிக்கரையே! பஃறுளி ஆறாய்ப் பாய்ந்து வந்தாய்; படைத்தவர் தந்த அழகில் மிதந்தாய். வறுமை நீக்கி வாழ்வே தந்தாய்; வட்டாற்றில் கோதையுட் புகுந்தாய்! சிறுவனாக உன்மேல் குதித்தேன்; சீரிய உந்தன் அழகை மதித்தேன். வெறுமை இன்று வீழ்த்தாதிருக்க, விண்ணினீவே, உன்புகழ் பதித்தேன்! -கெர்சோம்செல்லையா
வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 4. மெய்யைத் தொழுதல்
வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் மெய்யறம் (மாணவரியல்) [வ. உ. சிதம்பரம்(பிள்ளை) கண்ணணூர் சிறையில் இருக்கும் பொழுது எழுதிய நூல்.] 4.மெய்யைத் தொழுதல் மெய்யுல கெல்லாஞ் செய்முதற் கடவுள் உலகத்தை எல்லாம் உருவாக்கக் கூடிய முதன்மையான கடவுள் உண்மையே ஆகும். உலகப் பொருட்கெலா முயிரென நிற்பது. உலகத்தில் உள்ள பொருட்களுக்கு எல்லாம் உயிராக நிற்பது உண்மையே ஆகும். அறிவா யெங்கணுஞ் செறிவா யமைந்தது. உண்மை, உலகம் எல்லாம் ஞானமாக நிறைந்து விளங்குகிறது. பகுத்தறி யுயிர்வினைப் பயனதற் களிப்பது. உண்மை, மனிதர்களின் செயல்களின் விளைவை அவர்களுக்கு அளிக்கிறது. உலகந்…
பாவிற்கு வேண்டிய நயங்கள் – மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
பாவிற்கு வேண்டிய நயங்கள் சொன்னயமும் பொருள்நயமும் அணிநயமும் கற்பனையாச் சொல்லா நின்ற நன்னயமும் தொடைநயமும் வனப்புநய மும்பிறிது நாட்டா நிற்கும் எந்நயமும் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
கூடா நட்பு -தமிழ் சிவா
கூடா நட்பு ஆங்கிலப் புத்தாண்டை அமைவுறக் கொண்டாட அடுத்த நாட்டுக்குப் போகும் அ“று”ந்தகையே! அரிசனர் வீட்டிலே அரிசிச் சோறுண்டால் ஆகுமோ அனைவரும் இணைதான் என்றே? முட்டிலாக் காவலில் கட்டினில் உறங்கிய சுரங்கக் கோப்புகள் பிள்ளைக் கரிக்குச்சியோ? வெட்டிய வெளிச்சமும் திட்டிய வாய்களும் எட்டியாய் இருந்த இணக்கமும் இன்று வெற்றிலைக் காம்பாய் ஒட்டி இருப்பது வெட்டி எறிய அல்லால் வேறெதற்கு? -தமிழ் சிவா
அறிவியலை மூட்டை கட்டி விண்வெளிக்கே அனுப்புங்கள்! – தி.வே.விசயலட்சுமி
அறிவியலாளர்கட்கு அறைகூவல்! விண்ணுக்கும் மண்ணுக்கும் பாலம் அமைத்துவிட்டோம் என்று மார்தட்டிக் கொள்ளவேண்டா! ‘எங்கள் ஊரில் விண்ணுக்குப் ‘பறக்கும் விலைவாசி ஏற்றத்தை இந்த மண்ணுக்குக் கொண்டுவர ஏதேனும் வழிமுறைகள் சொல்லுங்கள்! இல்லையெனில் உங்கள் அறிவியலை மூட்டை கட்டி விண்வெளிக்கே அனுப்புங்கள்! தி.வே.விசயலட்சுமி
புதிய வேந்தர்கள் – தமிழ் சிவா
புதிய வேந்தர்கள் சென்ற மாதம் செறிந்த பகலில் இருந்தன மணலும் இன்முக ஆறும் இந்த மாதம் எரிந்த பகலில் அடாவடி அரசியல் கயவோர் ஆற்றைக் கொன்றனர் மணலை அள்ளியே! நன்றி – பாரிமகளிர்: புறநானூறு-112 – தமிழ் சிவா
தோன்றுவான் தேர்தல் களத்தில் வீணே! – தமிழ் சிவா
தோன்றுவான் தேர்தல் களத்தில் வீணே! சிறிய வீட்டின் சிதைந்த தூண்பற்றி உன்மகன் எங்கே என்று கேட்பவனே! என்மகன் எங்கிருப் பானென்று அறிவேன். நீங்கள் நீக்கமறத் திறந்து வைத்த சாய்க்கடை மதுவின் முன்பே வீழ்ந்து வாய்க்கடை எச்சில் வடியக் கிடப்பான். வௌவால் தங்கிய குகையாய், அய்யோ ஈன்ற வயிறோ இதுவே, அடேய்! மீண்டும் மீண்டும் வேண்டி யழைத்துக் கும்பிடு போட்டுத் தூக்கி வந்து கையில் புட்டியும் கறிச்சோறும் தந்தால் தோன்றுவான் தேர்தல் களத்தில் வீணே! திணை – வாகை, துறை – ஆள்பிடித்தல் /…
கற்றால் தீரும் இழிதகைமை
கற்றால் தீரும் இழிதகைமை எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந்தான் மொழித்திறத்தின் முட்டறுப்பான் ஆகும் மொழித்திறன் முட்டறுத்த நல்லோன் முதல்நூல் பொருள் உணர்ந்து கட்டறுத்து வீடு பெறும். பரிமேலழகர் மேற்கோள் பாடல்
