தோன்றுவான் தேர்தல் களத்தில் வீணே! – தமிழ் சிவா
தோன்றுவான் தேர்தல் களத்தில் வீணே! சிறிய வீட்டின் சிதைந்த தூண்பற்றி உன்மகன் எங்கே என்று கேட்பவனே! என்மகன் எங்கிருப் பானென்று அறிவேன். நீங்கள் நீக்கமறத் திறந்து வைத்த சாய்க்கடை மதுவின் முன்பே வீழ்ந்து வாய்க்கடை எச்சில் வடியக் கிடப்பான். வௌவால் தங்கிய குகையாய், அய்யோ ஈன்ற வயிறோ இதுவே, அடேய்! மீண்டும் மீண்டும் வேண்டி யழைத்துக் கும்பிடு போட்டுத் தூக்கி வந்து கையில் புட்டியும் கறிச்சோறும் தந்தால் தோன்றுவான் தேர்தல் களத்தில் வீணே! திணை – வாகை, துறை – ஆள்பிடித்தல் /…
கற்றால் தீரும் இழிதகைமை
கற்றால் தீரும் இழிதகைமை எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந்தான் மொழித்திறத்தின் முட்டறுப்பான் ஆகும் மொழித்திறன் முட்டறுத்த நல்லோன் முதல்நூல் பொருள் உணர்ந்து கட்டறுத்து வீடு பெறும். பரிமேலழகர் மேற்கோள் பாடல்
மொழியே விழி! – கவினப்பன் தமிழன்
மொழியே விழி! மொழியென்ப மாந்தர்கட் கெல்லாங் கரவா விழியென்று கொள்ளப் படும். மறைக்காத பார்வையைப் போன்றதாயின், அது மாந்த இனத்தவருக்கு மொழியாம் என்க. உடம்பை யியக்கு முயிர்போல மாந்த ருணர்வை யியக்கு மொழி. உயிரானது உடம்பை இயக்குவது போன்று, மொழியானது மாந்தரின் உணர்வை இயக்குவதாகும். உணர்வேத்தி யுள்ளந் துலக்கி யொழுங்கிற் கணைகாத்தே யாற்று மொழி. உணர்வை ஏற்றி, உள்ளத்தைத் துலக்கி, ஒழுங்கிற்குக் காவலாய் அமையும் ஒழுக்கமே மொழி. குழியொக்குங் கொள்ளுநீர் குன்று விளக்கம் மொழியொக்குங்…
நான் சற்றுத் தூங்கிக் கொள்கிறேன்.. – முகமதுபாட்சா
நான் சற்றுத் தூங்கிக் கொள்கிறேன்… எனக்கான தூக்கத்தை யாரும் கெடுத்து விடாதீர்கள் ! ஆசையைத் துறந்த யெனக்குத் தூக்கத்தைத் துறக்கத் தெரியவில்லை ! தூங்கும் போது – நான் தியானிப்பதாகவே பொய்ச் சொல்லிக் கொள்கிறேன்! குடும்ப வாழ்வை நேசித்த வரை தூக்கத்தைத் தொலைத்திருந்தேன்! ஆசையைத் துறந்த பிறகுதான் தூக்கம் நிம்மதியாக வருகிறது! ஆசையில் தூக்கம் அடங்குமா? தெரியவில்லை ! – ஆனாலும் தூங்கித்தான் ஆக வேண்டும் ஒரேயடியாகத் தூங்கும் வரை! முகமதுபாட்சா
முகவரி அற்ற மந்தையாய் வீதியில் மனிதன்! – வல்வை சுயேன்
முகவரி அற்ற மந்தையாய் வீதியில் மனிதன்! முகவரி அற்ற மந்தையாய் வீதியில் மனிதன் அச்சடித்த வாக்குச் சீட்டில் அழ கழகாய் அவனின் பெயர்.. வறுமைக் கோட்டின் வரிகளைப் படம் பிடித்துக் காட்டிக் கொண்டிருக்கிறது கடந்த தேர்தலில் கிடைத்த புத்தாடை அவன் மேனியைக் கந்தல் கந்தலாய்.. அரசுடமைக் களவாணிகள் கட்சிக் கொடியுடன் ஐந்தாண்டுக் கொருமுறை வேட்டித் துண்டுடன் குசேலரின் வாக்குச் சீட்டில் கறுப்புப் பண குபேரர்கள் நாற்காலியில்.. அங்கம் எங்கும் தங்க நகை அது உறங்க பணக்கத்தை மெத்தை வீதி வாசி ஓலைப் பாயும் இன்றி…
வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 3.தாய்தந்தையரைத் தொழுதல்
மெய்யறம் (மாணவரியல்) [வ. உ. சிதம்பரம்(பிள்ளை) கண்ணணூர் சிறையில் இருக்கும் பொழுது எழுதிய நூல்.] 3.தாய்தந்தையரைத் தொழுதல் தாயுந் தந்தையுந் தம்முதற் றெய்வம். நம்முடைய முதல் தெய்வம் தாயும், தந்தையுமே ஆவர். அவரிற் பெரியர் யாருமிங் கிலரே. அவர்களைவிடப் பெரியவர் இவ்வுலகில் யாரும் இல்லை. 23. அவரடி முப்பொழு தநுதினந் தொழுக. நாள்தோறும் மூன்று பொழுதும் அவர்தம் அடிகளைத் தொழுதல் வேண்டும். அவர்பணி யெல்லா மன்பொடு செய்க. அன்புடன் அவர்களுக்குப் பணிவிடை செய்தல் வேண்டும். அவருரை யெல்லா மறிந்துளங் கொள்க. அவர்களின் அறிவுரைகளை அறிந்து…
பறவையே பெருந் தச்சன்! – மாம்பலம் ஆ.சந்திரசேகர்
தனக்குத் தானே கட்டிக்கொள்! பறவையே பெருந் தச்சன்! பாரினில் முதல் சிற்பி! திறமையாக கட்டும் கலைஞர் ! தெரியுதே தேர்ந்த தன்கூட்டில்! சிறகுதான் பறக்கும் விமானம்! சிற்றலகுதான் சுமக்கும் வாகனம்! உறவுக்கு சொந்த இல்லம்! உலகுக்கே வீட்டுப் பாடம்! கட்டுமான வீட்டின் அடித்தளம் எட்டடி தோண்டினாலும் விழுதே! கற்றுக்கொள் பறவை பாடம் ! கல்வியதுவே தொழில் நுட்பம்! விட்டுவிட்டு வீசும் தென்றல் ஆட்டிவிட்டு அச்சுறுத்தும் மரம் ! ஒட்டிகிளையில் விழாத கூடு!. முட்டைவிழா அற்புத வீடு ! தொங்கும் தோட்டக் குடிலில் தங்கிவசிக்க ஆசைக்…
மீண்டும் மீண்டும் கூட்டமொன்று வரும் வரும் – ஏர்வாடி இராதாகிருட்டிணன்
மீண்டும் மீண்டும் கொடிகளோடு கூட்டமொன்று வரும் வரும்- தாம் கொண்டு வந்த பரிசுகளைத் தரும் தரும் கால்களிலே கைகளிலே விழும் விழும்- நம் கதவு தட்டிக் கைவணங்கித் தொழும் தொழும் அவ்வப்போது கொள்கைகளை விடும் விடும் – அது அரசியலில் இயல்பென்று கதை விடும். ஐந்தாண்டுக் கொருமுறைதான் தேர்தல் வரும்-பாவம் அன்று நமது அறிவில் இடி விழும் விழும். தவறு செய்து விட்டதாகத் தெளிவு வரும்- அந்தத் தவற்றை மீண்டும் செய்ய அடுத்த தேர்தல் வரும்…. ஏர்வாடி இராதாகிருட்டிணன்
மக்கள் கடன் – களப்பாள் குமரன்
தன்குடிப்பேணித் தன்கிளைதாங்கிச் சுற்றம்தழுவி தந்தை இவரெனப் போற்றப் புரிதல். தலைமைஏற்றித் தக்கன ஆற்றிப்பலர்புகழ் பண்புடைமை தாயெனும் தகைமை யுடையாள் பெற்றோர் மனங்குளிர நடத்தல் நன்றே ஆற்றுதல் மக்கள் கடன். களப்பாள் குமரன்: நன்மொழி ஆயிரம்: பதியம் 24: 13: பக்கம்.24
வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 2.விதியியல் அறிதல்
மெய்யறம் (மாணவரியல்) [வ. உ. சிதம்பரம்(பிள்ளை) கண்ணணூர் சிறையில் இருக்கும் பொழுது எழுதிய நூல்.] 2. விதியியல் அறிதல் 11. வினையின் விளைவே விதியென வந்துறும். நாம் செய்யும் செயல்களின் விளைவே நம்முடைய விதியாகி நம்மிடம் வந்து சேரும். விதிசெய் கர்த்தா வினைசெய் யுயிரே. ஆதலால் விதியைச் செய்யக்கூடிய மூலப்பொருள் செயல்களைச் செய்யக்கூடிய உயிரே ஆகும். மெய்ப்பொருள் வினையை விளைத்துயிர்க் கீயும். இறைவன் வினைகளின் விளைவை உயிர்களுக்குக் கொடுக்கிறோம். தீவினை விளைவிற் சேருவ துன்பம். தீவினைகளால் துன்பமே வந்து சேரும். நல்வினை விளைவி னணுகுவ…
கொக்குப்பறக்கும் புறாப்பறக்கும் – இராம கவிராயர்
நானேன் பறப்பேன் நராதிபனே! கொக்குப்பறக்கும் புறாப்பறக்குங் குருவிபறக்குங் குயில்பறக்கும் நக்குப் பொறுக்கிகளும் பறப்பர் நானேன் பறப்பேன் நராதிபனே திக்கு விசயஞ் செலுத்தியுயர் செங்கோல் நடாத்தும் அரங்காநின் பக்கம் இருக்க வொருநாளும் பறவேன் பறவேன் பறவேனே. இராம கவிராயர்
மெய்யறம் – 1. மாணவர் கடமை : வ.உ.சிதம்பரனார்
மெய்யறம் தமிழறிஞர் செக்கிழுத்த செம்மல் வ. உ. சிதம்பரனார்(சிதம்பரம்பிள்ளை) கண்ணணூர் சிறையில் இருக்கும் பொழுது எழுதிய நூல் ‘மெய்யறம்’ என்பதாகும். இந்நூல். மாணவரியல் (30 அதிகாரங்கள்) இல்வாழ்வியல் (30 அதிகாரங்கள்) அரசியல் (50 அதிகாரங்கள்) அந்தணரியல் (10 அதிகாரங்கள்) மெய்யியல் (5 அதிகாரங்கள்) என ஐம்பிரிவுகளையும் 125 அதிகாரங்களையும் உடையது; அதிகாரத்திற்குப் பத்துப்பாடல்களையும் விளக்கங்களையும் உடையது. அகரமுதல நவம்பர் 22, 2015 இதழில் மாண் பெற முயல்பவர் மாணவர் – வ.உ.சிதம்பரனார் என்னும் தலைப்பில் முதல் அதிகாரத்தின் பாடல் வரிகள் மட்டும் பதியப்பட்டு…
