உழைப்பு உயர்வுக்கு அழைப்பு – வெ. அரங்கராசன்

உழைப்பு உயர்வுக்கு அழைப்பு…. உழைப்பு ஊக்கத்தின் விழிப்பு…. உழைப்பு பிறப்பின் ஓர்உறுப்பு…. உழைப்பு  சமுதாயப் பொறுப்பு…. உழைப்பு இல்லாப் பிறப்பு, இறப்பு…. உழைப்பு இன்றி இல்லை உயர்வு…. உழைப்பு தருமே உடல்நலக் காப்பு…. உழைப்பு ஒப்பிலா எதிர்காலச் சேமிப்பு…. உழைப்பு இன்றேல், எல்லாரிடமும் பல்இளிப்பு…. உடன்வந்து உட்கார்ந்து கொள்ளும் அவமதிப்பு…. உழையார்க்கு உண்ணும் உரிமையும் பறிப்பு…. உலகமும் அளிக்காது மன்னிப்பு; மறப்பு…. உழைப்பு இல்லாத இருப்பு, தப்பு…. உழைப்பு நிறைந்தால் நிறையாது கொழுப்பு…. உழையார் உடலில் நோயின் படையெடுப்பு…. உழைப்பு மலர்ந்தால் பற்பல படைப்பு…….

புகை இல்லாத புகைவண்டி – சின்னா சர்புதீன்

புகை இல்லாத புகைவண்டி ச்சுக்குச்சுக்கு ச்சுக்குச்சுக்கு ச்சுக்குச்சுக்கு ச்சூ ச்சுக்குச்சுக்கு ச்சுக்குச்சுக்கு ச்சுக்குச்சுக்கு ச்சூ இரும்புக்கம்பி இரண்டிலமர்ந்து   எதிர்த்திசையை நோக்கியே விரைந்துசெல்லும் வண்டியைப்பார்   வீறுகொண்டு பறக்குதே நீண்டுநெடுங் தூரம்ஓடி   நிற்குமிடம் தன்னிலே மீண்டும்மக்கள் தம்மைஏற்றி   மிகவிரைவாய்ச் செல்லுமே புகையிரதம் எனஇதற்குப்   பெயரிட்டார்கள் முன்னராம் புகைவராத இன்றும் அது   புகையிரதம் தானடா ஆடுமாடு மனிதர் பொருள்   அத்தனையும் சுமக்குமாம் வீடுபோன்ற அறைகள்பல   வரிசையாக இருக்குமாம் காடுமேடு வயல்நிலங்கள்   கடல்கடந்தும் போகுமாம் நாடிரண்டை மூன்றைத்தொடுத்து…

வியத்தகு மில்லறம் – பரிதிமாற்கலைஞர்

வியத்தகு மில்லறம் விழுப்பஞ் சான்ற வியத்தகு மில்லறம் ஒழுக்க வியலறி வறுத்துஞ் சாலையாய் நன்மை தழைத்து ஞயக்கொடை நிழற்றி மென்மை யரும்பி மேன்மை மலர்ந்துபே ரன்பு காய்த்துநல் லருள்கனிந் தலகிலா இன்பநறை பிலிற்று மினியகற் பகமாப் இலகிடு முண்மை மலையிலக் கன்றே ஏத்துறுந் தகைய இல்லற மெனுமிம் மாத்துடந் தேரினை வாழ்க்கையாம் போர்க்களஞ் செலுத்தபு துன்பந் தீயரை யெறிந்து தொலைத்திட லறியார் துறவு துறவென நாக்கடிப் பாக வாய்ப்பறை யறைந்து மயக்கினு மாழ்கலீல் மாந்தர்கள்! உயக்கமின் றில்லற முற்றுமெய் யுணர்மினோ, – – பரிதிமாற்கலைஞர்…

மதுவைத் தொடாதே ! – கவிஞர் முத்துச்சாமி

  மதுவைத் தொடாதே !- மனிதா! மதுவைத் தொடாதே !- மனிதா மதுவைத் தொடாதே ! மனதும்கெடும் உடலும்கெடும் மறந்து விடாதே ! போதைதரும் மதுவினையே குடிக்கத் தொடங்கினால் -உந்தன் பாதைமாறிப் போய்விடுமே பயணம் தடுமாறிடுமே ! மட்டையாக்கும் மதுவை – நீயும் சட்டைசெய்யாதே ! கட்டையாகிப் போகுமுடல் பட்டை யடிப்பதாலே ! (மதுவைத் தொடாதே) பாடுபட்ட உழைப்பை -நீயும் பார்க்கத் தவறினால் கேடுகெட்ட மதுவுமுன்னைக் கைதி ஆக்குமே ! குடும்பம் தெருவில் நிற்பதற்குக் குடியும் காரணம் – உன்னை மடியேந்த வைத்திடுமே !…

இறையனார் அகப்பொருள் உரையாளர் சிறப்பு – மறைமலையடிகள்

இறைவன் கண்ட பொருள்வரம்பு அறிந்து சொல்நெறி மாட்சியும் பொருள் நெறிமாட்சியும் அளவையின் விளைவும் தெளிவுற விரித்து சுவைபெற உரைத்த நவையில் புலமையும் மறைப்பொருள் குறிப்பு நெறிப்பட ஆய்ந்து சிவனையே முதல் எனச் சிவணிய காட்சியும் சீரிதின் இயைந்த கீரன் -தமிழ்க்கடல் மறைமலையடிகள்: திருவொற்றியூர் மும்மணிக்கோவை: 55-61

உதவிடலாம் ! – எம் .செயராம(சர்மா)

உதவிடலாம் ! பார்வையை இழந்தவர்கள் பலபேர்கள் இருக்கின்றார் பார்வையுடன் இருப்பவர்நாம் பலவழியில் உதவிடலாம் ! கல்விதனைக் காணாமல் கணக்கற்றோர் நாட்டிலுள்ளார் கற்றுநிற்கும் நாமவர்க்கு கற்பதற்கு உதவிடலாம் ! அன்னைதந்தை தெரியாது அலமந்து நிற்பார்க்கு ஆதரவுக் கரங்கொடுத்து அரவணைத்து உதவிடலாம் ! ஓலைக் குடிசைதனில் ஒழுக்குவீட்டில் வாழ்பவர்க்கு ஒழுங்கான வாழ்வுவர உள்ளத்தால் உதவிடலாம் ! நீர்கூடக் கிடைக்காமல் நிம்மதியைத் தொலைத்துநிற்கும் ஊரெல்லாம் தனையெண்ணி உணர்வோடு உதவிடலாம் ! மருத்துவ வசதியின்றி மனம்நொந்து நிற்பார்க்கு மருத்துவத்தைத் தெரிந்தவர்கள் மனதார உதவிடலாம் ! ஏமாற்றிப் பிழைப்பவரின் இடருக்குள் புகுந்தவர்கள்…

இந்தி எதிர்த்திட வாரீர் – பாரதிதாசன்

இந்தி எதிர்த்திட வாரீர் இந்தி எதிர்த்திட வாரீர் — நம் இன்பத் தமிழ்தனைக் காத்திட வாரீர்        (இந்தி) முந்திய காலத்து மன்னர் நம் முத்தமிழ் நாட்டினில் தொத்திடு நோய்போல் வந்தவட மொழிதன்னை — விட்டு                                                                                 (5) வைத்ததனால்வந்த தீமையைக் கண்டோம்.  (இந்தி) செந்தமிழ் தன்னில் இல்லாத — பல சீமைக் கருத்துக்கள் இந்தியில் உண்டோ? எந்த நலம்செய்யும் இந்தி — எமக்கு இன்பம் பயப்பது செந்தமிழன்றோ.         (இந்தி)                                                      (10) தென்னாடு தான்எங்கள் நாடு — நல்ல செந்தமிழ் தான்எங்கள்…

ஆசிரிய வகையினர் – மகா வித்துவான் மீனாட்சி சுந்தரனார்

ஆசிரிய வகையினர்         நாடிய விரிநூல் சொற்றிடு திறனால் நன் நூலா சிரியன்; நகுபாசுர முதல் உரை செய்தலினால் நவில் உரை யாசிரியன்; நீடிய பரசம யக்குழி வீழ்ந்தவர் நீப்பப் போதனைசெய் நிலையாற் போத காசிரியன்; இவை நிகழ்தொறும் நிகழ்தொறும் ஆடிய ஞானத் திறன் உறலான் ஞானா சிரியன்             –  மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் (பிள்ளை): சேக்கிழார் பிள்ளைத் தமிழ் – சப்பாணிப் பருவம், 9.

பிய்த்தே எறிந்திடு நீ சாதியை – நடராசன் கல்பட்டு நரசிம்மன்

முத்தத்தில் இல்லை சாதி இரத்தத்தில் இல்லையது – மனித மனத்தின் பித்தத்தில் உள்ளதது பிய்த்தே எறிந்திடு நீ யதை வைத்தே பார்த்திடு அனைவரையும் சமமாய்! – கல்பட்டார்  

தொட்டால் உயிர் சுடுமெனில் தொடாதே சாதியை! – வித்யாசாகர்

தொட்டால் உயிர் சுடுமெனில் தொடாதே சாதியை – வித்யாசாகர்   துருப்பிடித்த சாதி – அது திருத்திடாத நீதி, துண்டுத் துண்டாகி – இன்று உயிர்களைக் குடிக்கிறது சாதி.. தலைமுறையில் பாதி – அது கொன்று கொன்று விழுவதேது நீதி ? காதல்சருகுகளை – பிஞ்சுகளைக் கொன்று கடும் நஞ்சாய்ப் பரவுகிறது சாதி.. கருப்பு வெள்ளையில்லா ஒரே சிவப்பு இரத்தம், அது சிந்திச் சிந்தி நனைகிறது பூமி, செத்துமடிபவர் கீழெனில் சாகடிப்பவரை மேலென்னுமா சாதி ? “ச்சீ”.. கேட்கவே வெட்கம் செங்கல் வேகலாம், சாதியில்…

மாற்றம்! – கவிக்கோ ஞானச்செல்வன்

ஞாலம் தோன்றிய நாள்முதலாய் நடந்தன நடப்பன மாற்றங்கள்! காலம் ஓடும் வேகத்தில் கழிந்தன புகுந்தன எத்தனையோ! மேலாம் வளர்ச்சி மாற்றமின்றி மேவுதல் என்பது முயற்கொம்பே! சாலவும் எல்லாம் மாறிடினும் சால்பும் அறமும் மாறாவே! நங்கை ஒருத்தி தன்மனத்துள் நல்லிளஞ் சிங்கம் ஒருவனையே தங்கும் அன்புக் கணவனெனத் தாங்கிய பின்னை மாற்றுவளோ? அங்கம் குழைந்தே அழதழுதே ஆண்டவன் அடிசேர் அடியார்கள் பங்கம் நேரத் தம்மனத்தைப் பாரில் என்றும் மாற்றுவரோ? அறிவியல் வளர்ந்த காரணத்தால் அடைந்தன பற்பல மாற்றங்கள்! பொறிகள் தம்புலன் மாற்றியொரு புதுமை தன்னைச் செய்ததுண்டோ?…

அரசியல் ஆத்திசூடி – இராமசெயம்

அனைத்திலும் அரசியல் அறிந்திடு ஆதிக்க உணர்வை வெறுத்திடு இல்லாதோர்க்காய் உழைத்திடு ஈகைக் குணத்தை வளர்த்திடு உண்மை உழைப்பைப் போற்றிடு ஊழல் சூழல் போக்கிடு எளிமை நெறியைக் கற்றிடு ஏளனம் செய்தல் மறந்திடு ஐக்கிய மாதல் உரைத்திடு ஒற்றுமை எண்ணம் பெருக்கிடு ஓய்தல் நீக்கிச் செயல்படு ஓளடதம் நீயென எண்ணிடு அஃதே அரசியலென மாற்றிடு. – க.இராமசெயம் http://www.rmsudarkodi.blogspot.in/