மரம் சாய்ந்து போனதம்மா – அரங்க கனகராசன்
மரம் சாய்ந்து போனதம்மா – அரங்க கனகராசன் [காதல் மணம்… கண்ணாளனைப் பொய்வழக்கில் சிக்கவைத்து சிறை அனுப்புகின்றனர் மணமகளின் தந்தை… சிறைவாசம் முடிந்து, திரும்பியபோது மனைவி ஓராண்டு கைகுழந்தையோடு இருக்கிறாள்… மனத்தால் இணைந்த இருவரும், மீண்டும் ஊருக்குத் தெரியாமல் ஓடுகின்றனர்… மோப்பம் பிடித்த, மணமகளின் தந்தையோ, தானூர்தி வரும் பாதையில், வெட்டிய மரம்தனை சாய்க்கிறார்… தானூர்தி நொறுங்குகிறது… கூடவே காதலர் இருவரும் மரணம் தழுவிட, இருவரது சடலமும் இரத்தம் தோய்ந்து தெருவில் கிடக்கிறது… இது எதுவுமே அறியாத பச்சிளங்குழந்தை, தாயின் மார்பை கவ்வுகிறது, பசிக்காக……
தனித் தமிழீழம் வேண்டும்!
தமிழீழம் எனது ஈழக் கனவு தனித் தமிழீழம் வேண்டும் – அதில் தமிழினம் மட்டுமே வாழ வேண்டும். புரட்சி வெடிக்கும் முகத்தில் – துளிப் புன்னகை மலர வேண்டும். வெறியாட்டம் கண்ட கண்கள் – இனி வாண வேடிக்கைகள் காண வேண்டும். சயனைடு எடுத்தக் கைகள் – இனிச் சாகுபடி செய்ய வேண்டுமே தவிரச் சாகும்படிச் செய்யக்கூடாது. சாவுகளைக் கண்ட மனிதர்கள் – மனச் சாந்தத்தோடு வாழ வேண்டும். ஆயுதம் ஏந்தி நடந்த கால்கள் – கடவுள் ஆலயம் நோக்கி நடக்க வேண்டும். வெடிகுண்டு…
இன்னல்தரும் இந்தியினை எண்ணுவதோ? – பாவேந்தர் பாரதிதாசன்
என் தமிழா? கட்டாயம் இந்திதனைக் கற்க அரசினர்கள் சட்டமியற்றுவதில் சம்மதமோ என்தமிழா! கன்னல் தமிழ்க்கல்வி கட்டாய மாக்காமல் இன்னல்தரும் இந்தியினை எண்ணுவதோ என்தமிழா! தாய்க்குச் சலுகையின்றித் தாழ்கின்றாள் இந்திஎனும் பேய்க்கு நறுநெய்பால் பெய்கஎன்றார் என்தமிழா? உறவிட்ட பார்ப்பனர்கள் இந்திஎன ஊளையிட்டும் பிறவிக் குணங்காட்டும் பெற்றியுணர் என்தமிழா! ‘தமிழ் அழியுமானால் தமிழர் அழிவர்’ — இதை நமைவிழுங்க வந்தவர்கள் நன்கறிவர் என்தமிழா! தம்மவர்கள் நன்மைக்கே தக்கதென்றால் இந்திதனை நம்மவர்கள் அன்னவர்கால் நக்குகின்றார் என்தமிழா! உடல்காக்கச் சோறில்லை என்னுங்கால் நம்பகைவர் கடல்காட்டி வீழ்என்று கத்துகின்றார் என்தமிழா! தென்றற்…
பிரிக்கும் ‘நான்’, பிணைக்கும் ‘நாம்’ – இரா.ந.செயராமன் ஆனந்தி
நான் நான் என்ற சொல் நாவினில் விதைக்காதீர் ! நாம் என்ற சொல் நாவினில் விதையுங்கள் ! நான் என்ற பாரம் தலைக்கு ஏற்றினால் வீழ்வது நாம் இல்லை ‘நீ’ என்பதை உலகம் இன்னும் உணரவில்லை ! நான் என்ற சொல் உதட்டைப் பிரிக்கும் பகைக்காரன் ! நாம் என்ற சொல் உதட்டை இணைக்கும் ஒற்றுமைக்காரன் ! நான் என்றால் மனிதர்களின் ஆங்காரம்! நாம் என்றால் மனிதன் அறிவின் அலங்காரம் நான் என்றால் உள்ளத்தின் அடையாளம் ! நாம் என்றால் ஒற்றுமையின் சின்னம்…
சாதிகுலம் எங்கட் கில்லை! – காகபுசுண்டர்
சாதி பேதஞ் சொல்லுவான் சுருண்டு போவான்! காணப்பா சாதிகுலம் எங்கட் கில்லை; கருத்துடனே என்குலஞ்சுக் குலந்தான் மைந்தா! தோணப்பா தோணாமற் சாதி பேதஞ் சொல்லுவான் சுருக்கமாய், சுருண்டு போவான்; வீணப்பா பிரமத்தில் ஆதி காலம் வீரமுடன் பிறந்ததடா உயிர்க ளெல்லாம்; நானப்பா அப்படியே உதித்தேன் முன்னே; நன்றாக வுதித்தவிடம் நாடி னேனே. -காகபுசுண்டர்
இனிதே இலக்கியம் 5 ‐ இறையே ஏற்பாயாக! : மாணிக்கவாசகர்
5 இறையே ஏற்பாயாக! மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உன் விரை ஆர் சுழற்கு என் கைதான் தலை வைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம் பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி சய சய போற்றி என்னும் கைதான் நெகிழ விடேன் உடையாய் என்னைக் கண்டு கொள்ளே! மாணிக்கவாசகரால் எழுதப் பெற்ற உவட்டாமல் இனிக்கும் திருவாசகத்தில் வரும் பாடல் இது. பன்னிரு திருமுறைகளுள் எட்டாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளது மாணிக்கவாசகரின் திருவாசகம். “அருள் உடையவனே! நறுமணம்( விரைஆர்) நிறைந்த உன் திருவடிகள்பால்(கழற்கு), முழுமையாக…
எழிலரசி அல்லது காதலின் வெற்றி – பேரா.சி.இலக்குவனார்
எழிலரசி அல்லது காதலின் வெற்றி உலகினிற் சிறந்த வுயர்கலா புரியில் வணிக னொருவன் வான் பெருஞ் செல்வனாய்ச் சீருடன் வாழ்ந்து செல்லுங் காலை புதல்வர் மூவரும் புதல்வி யொருத்தியும் 5. எச்சமாய் நிற்க இச்சையி னீட்டிய அருநிதி துறந்து ஆவி நீத்தனன் பெற்றோ ரீட்டிப் பேணிய பொருளை மைந்தரைப் போலவே மகளிர் தமக்கும் உரிமை யாக்கும் ஒருவிதி நினைந்து தந்தை மாய்ந்தபின்தனயர் மூவரும் பொருள்மீ துற்ற பெருவேட் கையினால் தம்முடன் பிறந்த தங்கை நன்மணம் பெறுவா ளென்னிற் பெரும்பொருள்…
தொந்திக் கரைசல் கண்டேன்! நொந்தேன்! – அரங்க கனகராசன் கனகு
தொலைக் காட்சியில் கண்டேன் … நொந்தேன்… கரைத்தாயிற்று கடலில்… வேதிக் கலவைகளும் கலக்கின கடல்தனை! தொந்தி உருண்டையை – ஏதோ வெல்லக்கட்டியென நினைத்து சுள்ளெனக் கடித்துத் தின்னவே வந்தனவே மீன்கள்! வேதிக் கலவையது – மீனின் பேதியானது! நோயின் வலையில் சிக்கி -பின்னர் மீனவன் விரித்த வலையில் மாண்டனவே! நோயுற்ற மீனை விலைக் கொடுத்துண்ட மாந்தரும் சிக்கினரே நோய்தனில்! அலைநீரில் வாழும் மீனவர் வாழ்வதும் பாழாகாதோ! பாழும் வேதிக் கலவை – விநாயகன் உருவில் ஆழ் கடல்தனில் கலந்திட்டால்? சிந்திப்பாருண்டோ – சந்தி சிரிக்காதோ…
தெய்வம் ஒன்றே! – பட்டினத்தார்
– பட்டினத்தார்
ஊனமுற்ற காயமாய் இருப்பவன் ஈசன்
இனிதே இலக்கியம்! 4 – முத்தொழில் ஆற்றுநரே தலைவர் : – இலக்குவனார் திருவள்ளுவன்
4 முத்தொழில் ஆற்றுநரே தலைவர் உலகம் யாவையும் தாமுளவாக்கலும், நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா, அலகி லா விளை யாட்டுடை யார், அவர் தலைவர்! அன்னவர்க் கேசரண் நாங்களே! கவிப்பேரரசர் கம்பர் தம்முடைய இராமகாவியத்தில் எழுதிய தற்சிறப்புப்பாயிரம். “உலகங்கள் யாவற்றையும் தாம் உள்ளவாறு படைத்தலும் அவ்வுலகங்களில் உள்ள அனைத்து வகை உயிர்களையும் நிலைபெறச்செய்து காத்தலும் அவற்றை நீக்க வேண்டிய நேரத்தில் நீக்கி அழித்தலும் ஆகிய மூன்று தொழில்களையும் இடைவிடாமல்(நீங்கலா) அளவற்ற(அலகுஇலா) திருவிளை யாடல்களாகப் புரிபவர் யாரோ, அவரே எங்கள்…
சண்டாளக் காடையர் குடி யழிப்போம்!
சாக்காடு நாள்வரை யாம் மறவோம் ! கூடி எம் நாட்டில் களித் திருந்தோம் குடும்பமாய் நன்றாய் மகிழ்ந் திருந்தோம் முற்றத்தில் ஆடிக் கதைத் திருந்தோம் முழுநிலவு கண்டே வாழ்ந் திருந்தோம் அக்கையும் அன்னையும் சார்ந்திருந்தோம் அழகுத் தமிழை யாம் கற்றிருந்தோம் அம்மம்மா சொல்லும் கதை கேட்டோம் அம்மப்பா ஊட்டும் நெறி கண்டோம் ஒற்றுமை யோடே வாழ்ந் திருந்தோம் ஓர்நிலம் ஈழம் நினைந் திருந்தோம் மாவீர ரீகம் வணங்கி நின்றோம் மாயீழ விடுதலை பெற்றி ருந்தோம் தேசியத்தலைவரை வாழ்த்தி வந்தோம் தேசமே உயிரென்றே களி கூர்ந்தோம்…
