இலக்குவனார் புகழ் இனிதே வாழ்க! – பூங்கொடிபராங்குசம்

இலக்குவனார் புகழ் இனிதே வாழ்க!   இலக்கியம் கூறும் இயல்புடை வாழ்வைப் பலப்பலக் கூறாய்ப் பகுத்துக் காட்டிச் சங்கத் தமிழைச் சாறாய்ப் பிழிந்த சிங்க மறவர்; சிறந்தநல் மொழியர் இலக்குவன் என்னும் பண்புடைப் பெரியர் கலக்கமில் நெஞ்சர் கண்ணிமை துஞ்சா உழைப்பில் நாளும் உயர்ந்த நிலையால் அழைத்தது காலம் அவர்நூற் றாண்டைப் போற்றி மகிழப் புதுப்பொலி வானது ஆற்றிய பணிக்கே அகமுக நெகிழ நன்றி யென்பதை நாடி யவர்க்கே இன்று சொல்லியே இறும்பூ தெய்தது. கற்றோ ரெல்லாம் களிப்புறு வாழ்த்தால் பொற்றா மரையெனப் போற்றினர்…

இந்திக் கள்ளிப்பால் ஊற்றுதல் கட்டாயமாம்! – பாரதிதாசன்

இந்தியா கட்டாயம்? – பாரதிதாசன் தமிழ், அன்னைக்குச் சோறில்லை எம்மிடத்தில் — இந்தி அனைக்குத் தீனியும் கட்டாயமாம் சின்னபிள் ளைக்குத்தாய்ப் பாலினொடும் — இந்தத் தீநஞ்சை ஊட்டுதல் கட்டாயமாம். கல்லாமை என்னுமோர் கண்ணோய்க்கே — இந்திக் கள்ளிப்பால் ஊற்றுதல் கட்டாயமாம். இல்லாமை என்னுமோர் தொல்லைக்குமேல் — இந்தி இருட்டில் வீழ்வது கட்டாயமாம். அம்மா எனத்தாவும் கைக்குழந்தை —     இந்தி அம்மியில் முட்டுதல் காட்டாயமாம். இம்மா நிலத்தினில் கல்வித்திட்டம் —       இவ்வா றிட்டதோர் முட்டாளைக் கண்டதில்லை. தாய்மொழி நூற்றுக்கு நூறுபெயர் — பெறத் தக்கதொர் கட்டாயம்…

இலக்குவனார் புகழ்நிலைக்கும்! – கவிஞர் கா. முருகையன்

பேராசிரியர் இலக்குவனார்! இலக்குவனார் எனும்பெயரைச் சொல்லும் போதே இனஉணர்வும் மொழிஉணர்வும் எழுமே நெஞ்சில்! தலைமுறையில் தமிழுக்கும் தமிழ ருக்கும் தம்வாழ்நாள் முழுமைக்கும் தொண்டு செய்தார்! சிலரைப்போல் ஒருபோதும் தமிழைச் சொல்லி சில்லறைகள் இவர்சேர்த்த தில்லை! ஆனால் மலையெனவே எதிர்ப்புகளுக் கஞ்சி டாமல் மாத்தமிழைக் காத்திடவே சிறைக்கும் சென்றார்! மொழிப்போரில் களம்கண்டோர் தம்மில் அந்நாள் முன்வரிசைப் படையினிலே இவரி ருந்தார்! “அழித்தொழிக்க வந்தஇந்தி தமிழின் மீது ஆதிக்கம் செலுத்திடுமா தமிழர் நாட்டில்? விழித்தெழுவீர் மாணவர்காள்!”- என்றே சொல்லி வேங்கையென முழக்கமிட்ட மறவர்! மானம் இழப்பதற்கோ? காப்பதற்கோ?…

கலக்கமில்லா இலக்குவனார் – கவியோகி சுத்தானந்த பாரதியார்

    அலக்கண் வரினும் கலக்கமின்றி செந்தமிழ்க் கொடியை முந்துறத் தாங்கி தன்மானத்தைப் பொன்னெனக் காத்த நுண்மாண் புலவர்; நூல்பல பயின்று நன்மாணவரை நன்கு பயிற்றி வீரத் தமிழர்வெற்றிப் படையை ஊக்கிய செம்மல் உள்ளத் துடிப்பெலாம் நந்தமிழ் வாழ்கென நடக்கும் புரவலர் இலக்குவனாரின் இலக்கணச சிறப்பும் தனித்தமிழ்க் கொஞ்சும் இனித்த நடையும் நிமிர்ந்த வீறும் அமைந்த சீரும் எண்ணிஎண்ணி ஏத்திடுவோமே! – கவியோகி சுத்தானந்த பாரதியார்

தமிழ்அறம்பாடி வந்தஅறிஞன் ! – மா.கந்தையா

யார்  இவர் ? ! ” தமிழைப்  பழித்தவனை  என்தாய் தடுத்தாலும் விடேன் எதிரிகள்  கோடி  இட்டு அழைத்தாலும்  தொடேன் “ வஞ்சினம்  கூறிய  வாதில்புலவன்  பாவேந்தர் வழிவந்த  மறவன்   தமிழ்அறம்பாடி  வந்தஅறிஞன் ! சங்கத்துமது   ரையில்தமிழைப்  பங்கப்படுத்திப்   பேசிய ஓங்குபுகழ்  அறிஞரெனினும்  ஒவ்வாதசொல்  லைத்தாங்காது தமிழைப்  பழித்தவர்க்கு  தக்கறிவூட்டி கருத்தினை உமிழ்ந்து  தள்ளியதற்கு  ஓர்சான்று   உண்டன்றோ ! விடுதலையான  நம்நாட்டில்  கெடுதலையேதரும் பொருள்நிலையை சடுதில்மாற்றி  இந்தியநாடு  சமநிலைகாண  நிதிஅமைச்சராகவும் சர்ச்சிலொடு வாதிட்டுவென்று ‘சர்பட்டம் ‘  பெற்ற ஆர்….

”காங்கிரசா தமிழைக் காத்தது?” – பாரதிதாசன்

”காங்கிரசா தமிழைக் காத்தது?” செத்தவட மொழியினில் செந்தமிழ் பிறந்ததென்று பொய்த்திடும் வையாபுரிகள் போக்கினையும் ஆதரித்த கத்துநிறை காங்கிரசா எங்கள்தமிழை — இங்குக் காத்ததென்று புகன்றனை நாணமில்லையா? செம்பொனிகர் பைந்தமிழைத் தேர்ந்துணரா டீ.கே.சி.யைக் கம்பனென வேஅணைத்த கல்கியினை ஆதரித்த வம்புமிகும் காங்கிரசா எங்கள்தமிழை — இங்குக் காத்ததென வரைந்தனை வெட்கமில்லையா? தாய்மொழி இலக்கணத்தைத் தாக்கிஒரு கம்பனுயர் தூய்கவி அலைக்கழித்துச் சொற்பிழைக்கும் டிகேசியைப் போய்உயர்த்தும் காங்கிரசா எங்கள்தமிழை — இங்குக் காத்ததென்று புகன்றனை அறிவில்லையா? காளையர்கள் ஓதுதமிழ்க் கல்வியையும் பெற்றறியா மூளிகளைக், காப்பிக்கடை முண்டங்களை நல்லஎழுத் தாளரெனும்…

செந்தமிழ் நாட்டிலே இந்தியா நன்று? – பாவேந்தர் பாரதிதாசன்

தமிழை ஒழிப்பவன் உலகினில் இல்லை தமிழை எதிர்த்தவன் வாழ்ந்ததும் இல்லை (தமிழை) தமிழை ஒழிக்க இந்தியை நுழைப்பவர் தம்வர லாற்றுக்கு மாசி ழைப்பவர் (தமிழை) இன்பத் தமிழ்மொழி உலக முதன்மொழி! இந்தி மொழியோ ஒழுங்கிலா இழிமொழி! என்ன போயினும் தமிழர்க்குத் தமிழ்மொழி இன்னுயிர் ஆகும் வாழ்க தமிழ்மொழி (தமிழை) ஒருமொழி ஓரினம் கொண்டதோர் நாடு பிறன் அதில் அடிவைக்க நினைப்பதும் கேடு பெருமொழி அழித்தும் பேரினம் அழித்தும் பெறுவது நாடன்று தன்பிண மேடு (தமிழை) தீதுற ஆள்வதோர் ஆட்சியே அன்று செந்தமிழ் நாட்டிலே இந்தியா…

தமிழரும் தமிழர் என்ற தம்பெயர் இழந்திடாரோ! – பாவேந்தர் பாரதிதாசன்

பெயர் மாற்றம் சென்னையில் கீழ்ப்பாக்கத்தைத் தேடினேன். ஓர் இளைஞன் அன்னதோர் ஊரே இல்லை என்றனன்! அப்பக்கத்தில் இன்னொரு முதியோர் தம்மை வினவினேன்; இருப்ப தாகச் சொன்னார் அவ்வூர்க்குப் போகத் தோதென்றும் சொல்ல லானார். மக்களின் இயங்கி வண்டி இங்குத்தான் வந்து நிற்கும் இக்காலம் வருங்காலந்தான் ஏறிச்செல் வீர்கள் என்றார். மக்களின் இயங்கி வண்டி வந்தது குந்திக் கொண்டேன் சிக்கென ஓர் ஆள் “எங்கே செல்லுதல் வேண்டும்” என்றான். “கீழ்ப்பாக்கம்” என்று சொன்னேன் கேலியை என்மேல் வீசிக் ”கீழ்ப்பாக்கம் என்ப தில்லை மேல்பாக்கம் தானும் இல்லை…

நடிப்பை நம்பி ஏமாறாதே வீணாகாதே! – பட்டாபு பத்மநாபன்

நடிப்புவேறு நாடுகின்ற வாழ்க்கை வேறு! (எண்சீர் விருத்தம்) விளக்கொளியைத் தேடிவரும் விட்டில் பூச்சி விழியிருந்தும் விளக்கொளியில் வீழ்ந்து மாயும் பளபளக்கும் விளக்கொளியில் படத்திற் காக பலவாறு நடிக்கின்ற நடிகர் பண்பை விளக்கிநின்றால் வேதனையே மிஞ்சும் தம்பி விவரமாகச் சொல்வதென்றால் வேடம்! தம்பி அளந்திடுவார் வாய்கிழிய அன்பர் என்பார் அடுக்கிடுவார் பணந்தன்னை அறியா வண்ணம் கொடுக்கின்ற கதைமாந்தர் தன்மைக் கேற்ப கும்மாளம் அடித்திடுவார் கொஞ்சிப் பேசி நடிக்கின்றார் நாமெல்லாம் வியந்து பார்ப்போம் நடிப்புவேறு நாடுகின்ற வாழ்க்கை வேறு குடித்திடுவார் கூத்தடிப்பார் வாய்ப்பு வந்தால் கூடவரும் நடிகையையும்…

இல்லறத்தில் இனிது வாழ்க ! – பரிதிமாற்கலைஞர்

இல்லறத்தில் இனிது வாழ்க ஆடலு மழகும் பாடலுஞ் சான்றீர் இன்னிசைக் குயில்கள்! பன்னருங் கலைவலீர் நும்வகைப் பட்டோர் நுமைத்தெய்வ மென்பர் நுந்தமக் கோர்சொல் சிந்தை செய்ம்மினோ வாய்ப்பாரு நலனெலாம் வாய்க்கப் பெற்றீர் என்கொ லவற்றைப் புல்லிடை யுகுக்கின்றீர் தூய இல்லறக் கோயி லில்லை கொல்? இன்னற மணியெனு மியற்கை நலத்தீர் வீழ்ந்த மகளிர்காள் விரைவினி லெழுமின் ஆழ்ந்திடா தின்னே யறிவுகைப் பற்றுமின் இழிந்தார் புகழுரை யேற்றுக் கொள்ளலிர் இன்புடன் மேவி யில்லறத் தினிது வாழிய எங்கை மீரே – பரிதிமாற்கலைஞர்: தனிப்பாசுரத் தொகை

தமிழன்னை கண்ணீரை வடிக்கின்றாள்! – குருநாதன்

அன்னைமொழி மறந்தார்! அன்னைமொழி அமுதமென அற்றைநாள் சொன்னார்கள் இற்றை நாளில் முன்னைமொழி மூத்தமொழி முடங்கியதை மறந்துவிட்டு மூங்கை யானார்; பின்னைவந்த மொழிகளிலே பேசுகின்றார்; எழுதுகின்றார் பேதை யாகித் தன்மொழியைத் தாம்மறந்து தருக்குகிறார் தமிழ்நாட்டில் வெட்கக் கேடே! இருந்தமிழே உன்னால்தான் நானிருந்தேன்; அன்று சொன்னார்; இற்றை நாளில் இருந்தமிழே உனக்காய்நான் இருப்பதாகச் சொல்வதற்கே இதயம் இல்லை! அரியணையில் ஏற்றிவைத்த அருந்தமிழைப் போற்றுவதற்கு மறந்து போனோம் திருத்தமுற எடுத்துரைக்கத் திசையெங்கும் தமிழ்வளர்க்கும் கொள்கை ஏற்போம். புலம்பெயர்ந்து போனவர்கள் புதுமைகளைக் கண்டங்கே மொழிவ ளர்த்து நலமுடனே வாழ்கின்றார்; நாமோ…

உழைப்பு உயர்வுக்கு அழைப்பு – வெ. அரங்கராசன்

உழைப்பு உயர்வுக்கு அழைப்பு…. உழைப்பு ஊக்கத்தின் விழிப்பு…. உழைப்பு பிறப்பின் ஓர்உறுப்பு…. உழைப்பு  சமுதாயப் பொறுப்பு…. உழைப்பு இல்லாப் பிறப்பு, இறப்பு…. உழைப்பு இன்றி இல்லை உயர்வு…. உழைப்பு தருமே உடல்நலக் காப்பு…. உழைப்பு ஒப்பிலா எதிர்காலச் சேமிப்பு…. உழைப்பு இன்றேல், எல்லாரிடமும் பல்இளிப்பு…. உடன்வந்து உட்கார்ந்து கொள்ளும் அவமதிப்பு…. உழையார்க்கு உண்ணும் உரிமையும் பறிப்பு…. உலகமும் அளிக்காது மன்னிப்பு; மறப்பு…. உழைப்பு இல்லாத இருப்பு, தப்பு…. உழைப்பு நிறைந்தால் நிறையாது கொழுப்பு…. உழையார் உடலில் நோயின் படையெடுப்பு…. உழைப்பு மலர்ந்தால் பற்பல படைப்பு…….