வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.14. சூது விலக்கல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.13. தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 1.14. சூது விலக்கல் சூதுவஞ் சனையதற் கேதுவாங் கருவி. சூதாட்டம் ஏமாற்றுவதற்கு ஏற்ற ஒரு கருவி ஆகும். பந்தயங் குறிக்கும் பலவிளை யாடல். சூதாட்டம் என்பது பந்தயம் வைத்து விளையாடும் பலவகை விளையாட்டுகள் ஆகும். அதுபொரு டருதல்போ லனைத்தையும் போக்கும். சூதாட்டத்தில் ஈடுபடும்போது முதலில் பொருள் வருவது போலத் தோன்றினாலும் அது பின்னர் எல்லாவற்றையும் இழக்கச் செய்யும். உற்றவூ ணுடைமுதல் விற்றிடச் செய்யும். சூதாட்டம், ஒருவன் தனது உணவு, உடை முதலியவற்றைக் கூட விற்கும்படியான…
பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 12 – இலக்குவனார் திருவள்ளுவன்
(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 11 தொடர்ச்சி) பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 12 பயனில நீக்கிப் பண்புடன் வாழ்க! “அன்பு சிவம்! உலகத்துயர் யாவையும் அன்பினில் போகும்” (பாரதியார் கவிதைகள் :பக்கம் 26 | பாரதமாதா) என்று புத்தர் மொழியாக அன்பை வற்புறுத்துபவர் பாரதியார். “பொலிவிலா முகத்தினாய் போ போ போ … … … … … … … … … … … … … … சூழ்ந்த மாசு போன்றனை போ போ போ ஒளி படைத்த கண்ணினாய்…
ஆரிய மறைக்கு அழிவுண்டு; தமிழ்மறைக்கு அழிவில்லை! – கோதமனார்
ஆரிய மறைக்கு அழிவுண்டு; தமிழ்மறைக்கு அழிவில்லை! ஆற்றல் அழியுமென் றந்தணர்கள் நான்மறையைப் போற்றியுரைத்து ஏட்டின் புறத்தெழுதார் ஏட்டெழுதி வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச் சொல்லிடினும் ஆற்றல்சோர் வின்று கோதமனார்: திருவள்ளுவ மாலை
வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.13. களவு விலக்கல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் –1.12. தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 13. களவு விலக்கல் (களவு- திருட்டு) களவுடை யவர்தரா துளமொடொன் றெடுத்தல். களவு என்பது பொருளுக்கு உரிமையானவர் கொடுக்காமல் நம் மனம் அறிய ஒன்றை எடுத்தல் ஆகும். வஞ்சித்துக் கொளல் வாங்கிக் கொடாமை. ஏமாற்றிப் பொருளை எடுத்தல், வாங்கியதைக் கொடுக்காமல் இருத்தல் ஆகியவையும் களவு ஆகும். களவினை யேவுதல் களவிற் குதவுதல். களவினைத் தூண்டுதல், களவு செய்ய உதவுதல் ஆகியவையும் களவு ஆகும். தடுக்கக் கூடிய விடத்ததைத் தடாமை. தடுக்க முடிந்த போதும் களவினைத் தடுக்காவிடில்…
வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் –1.12. புலால் விலக்கல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.11. தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 12. புலால் விலக்கல் புலால்புழு வரித்தபுண் ணலால்வே றியாதோ? புலால் என்பது புழுவால் அரிக்கப்பட்ட புண் ஆகும். புண்ணைத் தொடாதவர் புலாலையுட் கொள்வதென்? புண்ணைத் தொட விரும்பாதவர் புலாலை எப்படி உண்கிறார்? அதுவலி தருமெனின் யானையஃ துண்டதோ? அது வலிமையைத் தரும் எனில் வலிமை உடைய யானை அதை சாப்பிடுகிறதா? சாப்பிடுவதில்லை. அரிவலி பெரிதெனி னதுநமக் காமோ? சிங்கம் வலிமை உடையது என்றால் அந்த வலிமையினால் நமக்கென்ன பயன்? ஒரு பயனும் இல்லை….
வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 11. கொலை விலக்கல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 10. தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 11. கொலை விலக்கல் கொலையுயிர் தனையத னிலையினின் றொழித்தல். கொலை என்பது உயிரினை உடலில் இருந்து நீக்குதல் ஆகும். வாழு முயிர்நிதம் வருந்த வதைத்தல். வாழுகின்ற உயிர் வருந்துமாறு கொடுமைப்படுத்துவதும் கொலை ஆகும். அச்செய றூண்டுத லச்செயற் குதவுதல். கொலை செய்வதைத் தூண்டுவதும் கொலை செய்வதற்கு உதவுவதும் கொலை ஆகும். இயலு மிடத்தச் செயலைத் தடாமை. நம்மால் முடியும் போது ஒரு கொலையினைத் தடுக்காவிடில் அதுவும் கொலையே. படுமுயி ரறிவுபோற் படிப்படி கொடிததாம். கொலை…
காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 276 – 300 : இலக்குவனார் திருவள்ளுவன்
(காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 251 – 275 தொடர்ச்சி) காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 276 – 300 மிக்க தமிழ்த் தொடை மாலை சாத்தி மேவிய ஏழ் இசை பாடிப் போந்து – பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 490.3 பாங்கு உடை வண்தமிழ் பாடி நாளும் பரமர் தம் பாதம் பணிந்து இருந்தார் – பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 491.4 செப்பிய…
காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 251 – 275 : இலக்குவனார் திருவள்ளுவன்
(காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 226-250 தொடர்ச்சி) காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 251 – 275 251. சிந்தை இன்பு உறப் பாடினார் செழும் தமிழ்ப் பதிகம். – பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 372.4 252. மதுர முத்தமிழ் வாசகர் அணைந்தனர் மன்று உள் – பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 373.3 253. தணிவு இல் காதலினால்…
வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 10. உடம்பை வளர்த்தல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 9. தொடர்ச்சி) 10. உடம்பை வளர்த்தல் உடம்பெலாஞ் செய்யு மொப்பிலாக் கருவி. உடல் என்பது எதை வேண்டுமானாலும் செய்யக்கூடிய ஒப்பற்ற கருவி ஆகும். உடம்பை வளர்த்தலஃ துரமுறச் செய்தல். உடம்பை வளர்த்தல் என்பது உடலை வலிமை உடையதாக மாற்றுவது ஆகும். உடம்புநல் லுரமுறி னுலகெலா மெய்தும். உடல் நல்ல வலிமை பெற்றால் உலகம் முழுவதையும் வெற்றி கொள்ளும். உரனிலா வுடம்பு வரனிலா மங்கை. வலிமையற்ற உடல் என்பது வாழ்க்கைத் துணையற்ற வாழ்வு போன்றது. உளந்தொழில் செயற்கு முடலுரம்…
காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 226-250 : இலக்குவனார் திருவள்ளுவன்
(காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 201-225: தொடர்ச்சி) காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 226-250 226. அருந் தமிழ் மாலை புனைந்தார் அளவு இல் ஞானத்து அமுது உண்டார். – பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 295.4 227. பன்னும் தமிழ்த் தொடை மாலைப் பாடல் புனைந்து பரவிப் – பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 297.2 228. புந்தி…
பாடம் சொல்லும் முறை – நன்னூல்
பாடம் சொல்லும் முறை ஈதல் இயல்பே இயம்பும் காலை காலமும் இடமும் வாலிதின் நோக்கி சிறந்துழி இருந்து தன் தெய்வம் வாழ்த்தி உரைக்கப்படும் பொருள் உள்ளத்து அமைத்து விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து கொள்வோன் கொள்வகை அறிந்து அவன் உளங் கொளக் கோட்டமில் மனத்தில் நூல் கொடுத்தல் என்ப நன்னூல் பாடம் சொல்லும்பொழுது உரிய காலத்தையும் உரிய இடத்தையும் தூயதாகத் தெரிவுசெய்து சிறந்த இடத்திலமர்க; தான் வழிபடும் கடவுளை வணங்கிப், பாடம் சொல்ல வேண்டிய பொருளை உள்ளத்தில் இருத்துக; விரைந்து சொல்லாமலும் சினந்து…
கேட்டல் முறை – பவணந்தி முனிவர்
கேட்டல் முறை ஒருமுறை கேட்போன் இருகால் கேட்பின் பெருக நூலில் பிழைபாடு இலனே முக்கால் கேட்பின் முறையறிந்து உரைக்கும். ஆசான் உரைத்தது அமைவரக் கொளினும் கால்கூறு அல்லது பற்றலன் ஆகும். அவ் வினையாளரொடு பயில்வகை ஒரு கால் செவ்விதின் உரைப்ப அவ்இரு காலும் மை அறு புலமை மாண்பு உடைத்தது ஆகும். பவணந்தி முனிவர் : நன்னூல் பாடங்கேட்பவன் ஒரு முறையுடன் நில்லாது இரண்டாம் முறையும் கேட்டானாயின், மிகுதியும் பிழையின்றிக் கற்றவனாவான். மூன்றாம் முறையும் கேட்டனாயின், ஆசிரியர் கற்பித்ததை உணர்ந்து பிறர்க்குச் சொல்லும்திறன்பெற்றவனாவான். …
