வெருளி நோய்கள் 786-790: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 781-785 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 786-790 கிண்ண வெதுப்பம்(muffin) குறித்த வரம்பற்ற பேரச்சம் கிண்ண வெதுப்ப வெருளி.உணவு வெருளி(Cibophobia) உள்ளவர்களுக்குக் கிண்ண வெதுப்ப வெருளி வரும் வாய்ப்பு உள்ளது. கிண்ணவெதுப்பன்(The Muffin Man) மழலைப்பாடல்களை அடிப்படையாகக் கொண்ட திகில் தொடரில் எதிராளராக வருபவன். சிலர் இதனை அதனடிப்படையில் கிண்ண வெதுப்பன் வெருளி என்கின்றனர்.கிலி வெருளி உள்ளவர்களுக்குக் கிண்ண வெதுப்பன் வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.00 கிராண்டு தாம்பசன்(Grant Thompson)என்னும் இளைஞர் மீதான அளவுகடந்த பேரச்சம் கிராண்டு தாம்பசன் வெருளி.நேர்ப்பு மன்னர் வெருளி(The…

குறட் கடலிற் சில துளிகள் 37 : சிறுமைப்பண்புகளில் இருந்து விலகி இரு! – இலக்குவனார்திருவள்ளுவன்

 (குறட் கடலிற் சில துளிகள் 36 : நல்லார் தொடர்பைக் கைவிடாதே! – தொடர்ச்சி) சிறுமைப் பண்புகளில் இருந்து விலகி இரு! சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும்.   (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௫௰௧ – 451) பெருமைப்பண்பு சிற்றினத்தைக் கண்டு அஞ்சும்; சிறுமைப்பண்பு சிற்றினத்தையே சுற்றமாகக் கொள்ளும். பதவுரை: சிற்றினம்-சிறுமைக் குணத்தை ; அஞ்சும்-அஞ்சி ஒதுங்கும்;  பெருமை-பெருமைப் பண்பு;  சிறுமைதான்-சிறுமைப்பண்பு ; சுற்றமா-சிறுமைக் குணத்தையே உறவாக; சூழ்ந்துவிடும்-சூழவும் பிணைத்துக் கொள்ளும். பெருமை என்பதற்குப் பெருமைப்பண்பு உடைய பெரியோர் என்றும் சிறுமை என்பதற்குச்…

சமற்கிருதத்திற்குக் கூடுதல்  நிதி- சரிதானே!?- 7: இலக்குவனார் திருவள்ளுவன்

(சமற்கிருதத்திற்குக் கூடுதல்  நிதி- சரிதானே!?- 6: தொடர்ச்சி) சமற்கிருதத்திற்குக் கூடுதல்  நிதி- சரிதானே!?- 7 செம்மொழி அரசு ஏற்பால் தமிழ் பெறும் பயன்கள் என்று பல்வேறு அறிஞர்கள் கட்டுரை அளித்தார்கள். நானும் கட்டுரை யளித்தேன். அது மலேசிய இதழ் ஒன்றிலே வந்திருந்தது, புதிய பாரதம் இதழிலும் ஒரு கட்டுரை அளித்தோம். ஆனால் அவை அனைத்தும் கற்பனை! கற்பனை! கற்பனைதான்! அவற்றில் கதை அளந்திருப்போம். எங்கெங்கெல்லாம் தமிழ் வளரும் என்று பத்தாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் வாழும் நாடுகளில் எல்லாம் தமிழ் வளரும், பல்கலைக்கழகங்கள், கல்விக்கூடங்கள், பன்னாட்டு…

வெருளி நோய்கள் 781-785: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 776-780 தொடர்ச்சி0 வெருளி நோய்கள் 781-785) 781. கிச்சிலிச் சாறு வெருளி – Chymoportokaliphobia கிச்சிலிப் பழச் சாறு(orange juice) குறித்த வரம்பற்ற பேரச்சம் கிச்சிலிச் சாறு வெருளி. Chymo என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் சாறு. Portokali என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் கிச்சலிப் பழம் (ஆரஞ்சு). கிச்சிலிப் பழ வெருளி – Portokaliphobia  00 782. கிடப்பு வெருளி – Adhaesitophobia  செயல்பாடின்றிக் கிடப்பில் போடுதல் அல்லது நின்று போதல் தொடர்பான தொடர்பான வரம்பற்ற  கிடப்பு வெருளி எனப்படும். Adhaesito…

வெருளி நோய்கள் 776-780: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 771-775: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 776-780 காற்று வீச்சு தொடர்பான அளவுகடந்ததேவையற்ற பேரச்சம் காற்று வெருளி.சிறு பருவத்தில் காற்று, சூறைக்காற்று, சூறாவளிக் காற்று, புயல் காற்று முதலியவற்றால் ஏற்பட்ட ஊறு உள்ளத்தில் ஆழ் மனத்தில் பதிந்து அதனால் காற்று வெருளி உண்டாகிறது. காற்று என்பது கொல்வதற்கு அல்லது அழிப்பதற்கு என்று எண்ணிக் காற்று மீது தேவையற்ற பேரச்சம் கொள்கின்றனர்.புயல் வெருளி(Procellaphobia), கடும்புயல் வெருளி(Tempestaphobia), சூறாவளி வெருளி(Lilapsophobia), சூறைக்காற்று வெருளி( Cyclonophobia) முதலானவற்றையும் காண்க.குட காற்று எறிந்த குப்பை, வட பால் (பெரும்பாண் ஆற்றுப்படை…

நாலடி நல்கும் நன்னெறி 20: – பிறன் மனைவியை விரும்பாதே: இலக்குவனார் திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி 19: – பிறருக்குக் கொடுப்பதைக் கடமையாகக் கொள்க: தொடர்ச்சி) பிறன் மனைவியை விரும்பினால் வருவது அச்சம்! அச்சம்! அச்சமே! எனவே, கை விடுக! புக்க விடத்தச்சம் போதரும் போதச்சம் துய்க்கு மிடத்தச்சம் தோன்றாமல் காப்பச்சம் எக்காலும் அச்சம் தருமால் எவன்கொலோ உட்கான் பிறன்இல் புகல். (நாலடியார், ௮௰௩-83) பொருளுரை: பிறர் மனைவியை விரும்பி அவள் வீட்டிற்குள் புகும் பொழுது அச்சம்; அங்கிருந்து திரும்பி வெளியே வரும்பொழுதும்  அச்சம்; அவளுடன் சேர்ந்து இன்பம் துய்க்கும்போதும் அச்சம்; இக்கள்ள உறவைப் பிறர் யாரும்…

தொல்காப்பியமும் பாணினியமும் – 12 : பாணினியின் வேர்ச்சொல்லாய்வு மிகப்பெரும் மோசடி– இலக்குவனார் திருவள்ளுவன்

(தொல்காப்பியமும் பாணினியமும் – 11 : முன்னோர் மொழியைப் பொன்போல் போற்றும் தொல்காப்பியர்– தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 12 பாணினியின் வேர்ச்சொல்லாய்வு மிகப்பெரிய மோசடி தொல்காப்பியப் பொருளதிகாரம் குறித்த நடுநிலையான பொருளுரையைப் பேரா.ப.மருதநாயகம் அளித்துள்ளார். பாணினியின் வேர்ச்சொல்லாய்வு மிகப்பெரிய மோசடி, ஏமாற்றுவேலை. ‘ஆதிபாஃசா’ நூலில் சட்டம்பி அடிகளார், தமிழிலிருந்து பிராகிருதமும் பிராகிருதத்திலிருந்து சமற்கிருதமும் தோன்றியது என்னும் வரலாற்று உண்மையை மெய்ப்பிக்கிறார். பேரா.சி.இலக்குவனார் அவர்களும் அவர் வழியில் அறிஞர்கள் பலரும் தொல்காப்பியத்தில் இடம் பெற்ற இடைச்செருகல்களை நீக்கினால் தொல்காப்பியம் முரண்பாடு இன்றிச் செம்மையாக இருக்கும் என நிறுவியுள்ளனர். இவை…

வெருளி நோய்கள் 771-775: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 766-770:  தொடர்ச்சி) வெருளி நோய்கள் 771-775 காளான்பற்றிய அளவுகடந்த பேரச்சம் காளான் வெருளி.காளாம்பி என்றும் காளானைக் குறிப்பர். எனவே, முதலில் காளாம்பி வெருளி என்றும் குறித்திருந்தேன். எனினும் இரு வகை வேண்டா என்பதால் இப்பொழுது காளான் வெருளி என்று மட்டும் குறித்துள்ளேன்.myco என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் காளான்.00 காற்பந்தாட்டம் குறித்த வரம்பற்ற பேரச்சம் காற்பந்தாட்ட வெருளி. அமெரிக்கா, கனடா, ஆத்தரேலிய நாடுகளில் காற்பந்தை(foot ball) உதைபந்து(soccer ball) என்பதால் உதைபந்தாட்ட வெருளி என்றும் சொல்லப் பெறும்.காற்பந்தாட்டத்தினால் உடலுக்கோ உயிருக்கோ சேதமோ…

கரு.  தடைச்சட்டமும் தமிழ் இனமும் 2/3: திருத்துறைக் கிழார்

(கரு.  தடைச்சட்டமும் தமிழ் இனமும் 1/3: தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் கரு.  தடைச்சட்டமும் தமிழ் இனமும் 2/3 இலங்கை அரசுடன் இந்தியா உடன்படிக்கை இந்திராகாந்தி இந்தியாவை ஆண்டகாலத்தில் தமிழ்நாட்டிற்குரிய கச்சத்தீவு இலங்கையரசிடம் விடப்பட்டது. தமழக அரசு வடவரக்கு அடிமையாயிருப்பதால் தட்டிக்கேட்கத் துணிவில்லை. கேட்டால் பதவி பறிபோகும்!  ஈழ விடுதலைப்புலிகள் போராட முற்பட்டனர். ஈழத்தமிழர் இளைஞர் பலர் படையில் சேர்ந்தனர். சிங்களர் அரசுடன் போர் தொடங்கினர். சிங்களர் திணறினர். இலங்கையரசால் தாக்குப் பிடிக்கவியலவில்லை. அமெரிக்கப் படைகள் தங்க இலங்கையில் இடமளிக்க முடிவு செய்தது…

வெருளி நோய்கள் 766-770: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 761-765: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 766-770 காவல் நாய் குறித்த அளவுகடந்த பேரச்சம் காவல் நாய் வெருளி.காவல் நாய்கள் பல பெருத்த உருவிலும் பருத்த தோற்றத்திலும் பார்ப்பதற்கு அச்சம் ஊட்டும் வகையிலும் இருக்கும். இதனாலும் எங்கே காவல் நாய்மேலே பாய்ந்து சதையைப் பிடுங்கி விடுமோ என்ற பேரச்சத்திலும் காவல் நாய் வெருளிக்கு ஆளாகின்றனர். நாய் மீதான அச்சம் உள்ளவர்களுக்கும் விலங்கு வெருளி உள்ளவர்களுக்கும் காவல் நாய் வெருளி வருகிறது. 00 காவல்துறையினர் குறித்த வரம்பற்ற பேரச்சம் காவல்துறையினர் வெருளி.காவல்துறையினர் சிலரின் அட்டூழியங்களையும்…

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 18 : நாளைக்கு, இன்றைக்கு, நேற்றைக்கு : இலக்குவனார் திருவள்ளுவன்

(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 17 : உடைமையாளர், உரிமையாளர் வேறுபாடு – தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 18 இம் மடலில் நாளைக்கு  தொடக்க விழா நடைபெறும் என்று உள்ளது. இது போன்ற ஒற்றுப் பிழைகளைத் தவிர்க்க வேண்டும். நான்காம் வேற்றுமை உருபான ‘கு’ அடுத்து வல்லினம் மிகும் எனப் பார்த்தோம் அல்லவா? அதனால், நாளைக்கு, இன்றைக்கு, நேற்றைக்கு, தொடக்கத்திற்கு, முடிவிற்கு, முன்பு குறிப்பிட்டவாறு இடைவேளைக்கு அடுத்தெல்லாம் வல்லினம் மிகும்.  எனவே, பின்வருமாறு தொடர்கள் அமையும். நாளைக்குத் தொடக்கம்…

வெருளி நோய்கள் 761-765: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 756-760: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 761-765 கால் வருடி(foot massager) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கால் வருடி வெருளி.கால் வருடியில் பாதங்கள் சிக்கிக் கொள்ளுமோ, மின் அதிர்ச்சிக்கு ஆளாகிப்பேரிடர் நேருமோ என்றெறல்லாம தேவையற்ற கவலைக்கு ஆளாகி வருடி வெருளிக்கு ஆளாகின்றனர்.00 கால்விரல்கள் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கால்விரல் வெகால்விரல்களில் வலி ஏற்படும், சேற்றுப் புண் ஏற்படும், விரல் முட்டிகளில் வீக்கம் ஏற்படும் என்பன போன்ற தேவையற்ற பேரச்சம் கொண்டு கால் விரல் வெருளிக்கு ஆளாகின்றனர்.“digitus” என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் கால்…