நயன்மையை(நியாயத்தை) விட நயன்மையின்மையையே(அநியாயத்தையே) காதலித்தார்கள்! – நளினி முருகன்

நயன்மையை(நியாயத்தை)விட நயன்மையின்மையையே(அநியாயத்தையே) காதலித்தார்கள்! – நளினி முருகன் ‘இராசீவு கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்’ என்ற தலைப்பில் நளினி எழுதி, இதழாளர் பா.ஏகலைவன் தொகுத்த நூலின் 6-ஆம் பகுதி இது. இந்த நூல் பேசுகிறதா? இல்லை, இந்த நூலினுள் நான் பேசுகின்றேனா என்கிற வியப்பு எனக்குள்! என் மீது வீசப்பட்ட கொடிய சொற்கள் எவ்வளவு? குடை சாய்ந்து போகும் அளவுக்குத் திணிக்கப்பட்ட மானக்கேடுகள் எவ்வளவு? என்னை நானே அறியாதபடி என் முகம் முழுக்கக் கட்டுக்கதைகளாகச் சேறு பூசப்பட்டிருந்ததே, ஏன்? என்றோ செத்துப்…

சல்லிகட்டுக்குத் தடையா? – ப.கண்ணன்சேகர்

சல்லிகட்டுக்குத் தடையா? சூரப்புலி பாய்ந்திடத் துரத்தினாள் முறத்தாலே சுவைத்தமிழ் இலக்கியம் வீரத்தை ஊட்டுமே! போரிடும் களத்திலே புறமுதுகைக் காட்டாத பெற்றமகன் வீரத்தைப் பெருமையெனக் காட்டுமே! வீரத்தமிழ் இனத்தினை விளையாட்டு பொம்மையென வேடிக்கை பார்த்திடும் வீணர்களின் கூட்டமே! ஓரவஞ்சச் செயலாலே ஒடுங்காது தமிழினம் வாக்களிக்கும் மக்களால் ஒடுங்கிடும் ஆட்டமே! ஏறுதழுவு விளையாட்டால் எங்களது வீரத்தை இவ்வுலகம் கண்டிட இரக்கமற்ற தடையேனோ? பேருபெற்ற தமிழரின் பாரம்பரிய விழாவினைக் கூறும்போடும் குரங்கெனக் கொள்கையே முறைதானோ? வேருவிட்ட ஆர்ப்பாட்டம் வீழ்த்திட நினைப்பது வீட்டுக்குள் அணுகுண்டு வைப்பதும் சரிதானோ! ஊருக்கு ஊரெலாம்…

முடியவில்லை மொழிப்போர்! முடித்து வைக்க வேண்டாவா மொழித்திணிப்புகளை! – இலக்குவனார் திருவள்ளுவன்

முடியவில்லை மொழிப்போர்! முடித்து வைக்க வேண்டாவா மொழித்திணிப்புகளை! வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால் தீயெச்சம் போலத் தெறும் (திருவள்ளுவர், திருக்குறள் 674).   மொழிப்போர் என்றால் நாம் 1965 இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப்போரைத்தான்  குறிப்பிடுகிறோம்.  வரலாறு எழுதுவோர் அதற்கு முன்  1937 இல் கட்டாய இந்தித்திணிப்பிற்கு எதிரான போராட்டத்தைக் குறிப்பிடுவர். ஆனால், சமற்கிருதம் எப்பொழுது  தன்னைத் தேவ மொழியாகக் கற்பித்துக்கொண்டும் தமிழை நீச மொழியாகப் பழித்துக் கொண்டும் தமிழ்நாட்டில் வரத் தொடங்கியதோ,  அப்பொழுதே மொழிப்போர் தொடங்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். சமற்கிருதத்திற்கு முன்னர்…

சல்லிக்கட்டிற்கான போராட்டம் தமிழர் நலனுக்கான குறியீடே! – இலக்குவனார் திருவள்ளுவன்

சல்லிக்கட்டிற்கான போராட்டம் தமிழர் நலனுக்கான குறியீடே! பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். (திருவள்ளுவர், திருக்குறள் 487)   சல்லிக்கட்டுத்தடையை எதிர்த்து  மார்கழி24/சனவரி 8இல் சென்னையில் தொடங்கிய போராட்டம் பிற இடங்களில் நடந்த கிளர்ச்சிகளுடன்சேர்ந்து இன்று நாடு முழுவதுமான அறப்போராட்டமாக மாறியுள்ளது.   அலங்காநல்லூர், சென்னை, மதுரை என அனைத்து நகர்களிலும், ஆண், பெண் என்ற வேறுபாடின்றி, மாணாக்கர்கள், இளைஞர்கள் பொறுப்புணர்வுடனும் கண்ணியத்துடனும் கட்டுப்பாட்டுடனும்  நடந்து கொள்வதாக அனைத்துத் தரப்பாரும் பாராட்டி வருகின்றனர். கட்சிக் கொத்தடிமைகளையே பார்த்து வந்த நாட்டில் முதல்முறையாகக்…

ஆவணியில் தொடங்குவது ஆண்டு! சித்திரையில் தொடங்குவது வருடம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஆவணியில்  தொடங்குவது ஆண்டு! சித்திரையில் தொடங்குவது வருடம்!  தமிழ்ப்புத்தாண்டு தொடக்கத்தில் மேற்குறித்த தலைப்பு புதிராக இருக்கலாம். தைப்புத்தாண்டிற்கு மாறான கருத்துகளைத் தெரிவித்தாலே கண்டன அம்பு தொடுப்போர் இருப்பதையும் அறிவேன்.   60 ஆண்டுக் காலச்சுழற்சியில் அறிவுக்குப் பொருந்தாத ஒழுக்கக்கேடான கதைகளைக் கற்பித்து இழுக்கு ஏற்படுத்தும் வகையில் சித்திரை ஆண்டு மாறியதால் வந்த தைப்புத்தாண்டு வரவேற்கத்தக்கதே. நாம் அனைவரும் பின்பற்றப்பட வேண்டியதே! அதே நேரம் கடந்த கால வரலாற்றை அறியவேண்டியதும் நம் கடமையாகும்.  அந்த வகையில் அமைந்தததே இக்கட்டுரை.   வருடம் என்பதற்குச் சரியான தமிழ்ச்சொல்…

கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை:பாசுரங்கள் 5& 6

திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 5& 6 ஐந்தாம் பாசுரம் தமிழ்மொழி மூலமறியா இறைபோல ! தானுணரா, பேசும் தமிழ்க்கூட்டம் தானுணரா வானுணரா, வையம் உணரா, தமிழவளை ஈன்றவர்தாம் யாரென்றும், என்றுயிர்த்தாள் என்றும், ஊன்றியா ராய்ந்தும் உணர்ந்தறியாத் தன்மையளாய்த், தோன்றறியா ஞானியாய்த் தோன்றும் இறையொப்ப, ஆன்ற பெருங்குழாத்திற் கன்னையளாய்ப், பன்மொழிகள் ஈன்றவளாய், நேரிலளாய், இன்பம் தருவாளின் கோன்மை இசைத்திடவா கோதையே, எம்பாவாய் ! ஆறாம் பாசுரம் தமிழின் பெருஞ்சிறப்பு ‘ ழ ‘ ழகரத் திருவெழுத்து ஏழிசைக்கு நேராய் ; நிகராய்ப் பிறமொழியில் நின்றிழைதல் காணார் ;…

வாழ்ந்து காட்ட வேண்டும்! – அம்பாளடியாள்

வாழ்ந்து காட்ட வேண்டும்! வலிமையுள்ள மனிதனாக வாழ்ந்து காட்ட வேண்டும் ! எளிமையான வாழ்வுக்கே இடமளிக்க வேண்டும்! தனிமையிலும் இனிமை காண தன்னடக்கம் வேண்டும் ! தரணியெல்லாம் போற்றும் வகை தயவு நெஞ்சில் வேண்டும்! கலியுகத்தின் போக்கை மாற்ற கருணை தம்முள் வேண்டும் ! கடவுள் என்றும் கொண்டாட கடமை உணர்தல் வேண்டும் ! பழியுணர்வை போக்க வல்ல பாசம் இங்கே வேண்டும் ! பகைவரையும் மன்னிக்கும் பக்குவமும் வேண்டும் ! மனித குலம் உயிரினத்தை மதித்து வாழ வேண்டும்! மரணம் வரும் என்ற…

கவிஞாயிறு தாராபாரதி 7 & 8 – சந்தர் சுப்பிரமணியன்

(கவிஞாயிறு தாராபாரதி 5 & 6 – தொடர்ச்சி) கவிஞாயிறு தாராபாரதி 7 & 8   சாதியெனும் அமைப்புகளேன்? சங்கம் வைத்துச் சந்தையென மனிதரையேன் தரம் பிரித்தாய்? போதைநிலைப் பொய்க்கணக்கின் போக்கில் இன்று பொதுநிலையே மனக்கணக்காய் போன திங்கு! தீதெனினும் தொடர்கின்ற தீயாய்ச் சாதி! தேசத்தின் கறையிவைதான்! தெரிந்தி வற்றை வீதியிலே தூக்கியெறி! மெய்யாய் நல்ல வேள்விக்கோர் தேதிகுறி! விடியும் என்றார்! (7) மண்புழுவாய்ப் பிறந்திருந்தால் மண்ணைத் தின்னும் மந்திரம்தான் தெரிந்திருக்கும்; மனிதர்க் கெங்கே? எண்ணளவில் அதிகரிக்கும் ஏழை மக்கள்! இதைத்தானா சுதந்திரத்தின்…

தனியே பிறந்து தனியே வளர்ந்து தனியே சிறந்த தமிழே! – தேவநேயப் பாவாணர்

தனியே பிறந்து தனியே வளர்ந்து தனியே சிறந்த தமிழே! – தேவநேயப் பாவாணர்   [‘மருவே செறித்த’ என்ற திருப்புகழ் மெட்டு தனனா தனந்த தனனா தனந்த தனனா தனந்த தனதான என்ற வண்ணம்]   தனியே பிறந்து தனியே வளர்ந்து தனியே சிறந்து தரைமீது தனியே விரிந்து கவையே பிரிந்து கிளையே திரிந்து பலவாக முனிவோர் மொழிந்து முனமே திருந்தி முதனூ லெழுந்த மொழியாகி முருகால் நடந்த சவைமீ தமர்ந்து முகைவாய் மலர்ந்த தமிழாயே கனியா யருந்து முனையே மிகுந்து பயிலா மலுந்தன்…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙாஙா] – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாங] – தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙாஙா] –  3. தமிழ்நலப் போராளி – தொடர்ச்சி  பாவேந்தர் பாரதிதாசன் அவர்களும் பேராசிரியர் இலக்குவனாரும் தமிழ் காக்கும் எண்ணங்களில் ஒன்றுபட்டவர்கள். பாவேந்தரின் தமிழியக்க எண்ணங்களுக்கு வடிவம் தந்தவர் பேராசிரியர்; பாவேந்தர் வகுத்த தமிழ்ப்போராளி இலக்கணத்திற்கு இலக்கியமாகத் திகழ்ந்தவர் பேராசிரியர் எனத் தமிழ் உணர்வாளர்கள் உரைப்பர். அதே நேரம் மூத்த தலைமுறையினர் பேராசிரியரின் வாழ்வுப்பாதையைக் குறியீடாகக் கொண்டு தமிழ்உணர்வுப் பாடல்களைப் படைத்தவர் பாவேந்தர் என்பர். இரண்டிலும் உண்மைகள் உள எனவும் ஆன்றோர் எண்ணத்தால்…

இரவிச்சந்திரனின் ‘வெட்டிக்காடு’ தற்புனைவின் வெளிப்பாடு 1/3 – மு.இளங்கோவன்

இரவிச்சந்திரனின்  ‘வெட்டிக்காடு’ தற்புனைவின் வெளிப்பாடு 1/3 இலக்கிய வடிவமும் பாடுபொருளும் படைப்போரும் ஒவ்வொரு காலத்திலும் வேறுபட்டு வந்துள்ளமையை இலக்கிய வரலாற்றின் தொடர்ச்சியைக் கவனிக்கும்பொழுது அறியமுடிகின்றது. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உலகம் முழுவதும் இலக்கியப்போக்குகளில் புதுப்புது மாற்றங்களைக் காணமுடிகின்றது. அதில் ஒன்று தற்புனைவு (Auto Fiction) என்னும் வெளியீட்டு முறை. தன் இளமைக் கால வாழ்க்கையைப் புனைவுகளை இணைத்து வெளிப்படுத்தும்பொழுது அரிய படைப்பாக இலக்கியம் உருவாகிறது.   தம் இளமைக்கால வாழ்க்கையைப் படைப்பாக்குவதில் மேற்குலகப் படைப்பாளிகள் முன்னின்றதைத் திறனாய்வாளர்கள் எடுத்துரைக்கின்றனர். 1977 இல் தற்புனைவு என்னும்…

வேதம் தமிழிலுண்டு! – கவிஞாயிறு தாராபாரதி

வேதம் தமிழிலுண்டு! – கவிஞாயிறு தாராபாரதி   தாயின் கருவறையில் தான்படித்த செந்தமிழைக் கோயில் கருவறைக்குள் கொண்டுசெல்ல முடியாதா?   பொன்னியில் குளித்த புனிதத் திருமொழியைச் சன்னதியில் பாடினால் சாமிக்கா தீட்டுவரும்?   தேவாரம் பிரபந்தம் திருவாசகம் அருட்பா நாவாரப் பாடினால் நாதன் செவி கேளாதா?   தமிழறியும் பெருமாளும் தமிழ்க் கடவுள் முருகனும் அமுதத் தமிழ்கேட்டால் ஆசிதர மறுப்பாரா?   சொற்றமிழால் பாடென்று சுந்தரனை வேண்டிநின்ற நெற்றிக்கண் ஈசனது நேயர் விருப்பம் எது?   ஒதும் மந்திரங்கள் உண்டெந்தன் தாய்மொழியில்; வேதம் தமிழிலுண்டு!…