‘தமிழ் ஆய்வு – சில மயக்கங்கள்’: அணிந்துரை: பழ.நெடுமாறன்

‘தமிழ் ஆய்வு – சில மயக்கங்கள்’ : அணிந்துரை: பழ.நெடுமாறன்           புலவர் சா.பன்னீர்செல்வம் அவர்கள் ‘தமிழ் ஆய்வு – சில மயக்கங்கள்’ என்னும் தலைப்பில் தமிழ் இலக்கணம், இலக்கியம் ஆகியவற்றைக் குறித்து எழுதிய 10 கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. தொல்காப்பியர் கூறிய திசைச் சொல் என்பதின் சரியான விளக்கம் யாது என்பதைச் ‘செந்தமிழா கொடுந்தமிழா?‘ என்னும் தலைப்பிலான கட்டுரை கூறுகிறது.                    செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்                    தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி எனத் தொல்காப்பியர் கூறுவதற்கு இளம்பூரணர், “செந்தமிழ்…

எண்வகை மணம் – சோமசுந்தர பாரதியார்

எண்வகை மணம்   (எனவே ) ஐந்திணை ஒழுக்கமாகிய களவு, கற்புத் திருமணமும், கைக்கிளை மணம், பெருந்திணை வாழ்வு இம் மூன்றும் தமிழர் வாழ்விலே நிகழ்ந்த இயற்கை நிகழ்ச்சிகள். இவை எந்த நாட்டிலிருந்தும் இந்த நாட்டில் குடிபுகுந்தவையல்ல; எந்தச் சமூகத்தாரிடமிருந்தும் தமிழர்கள் கடன் வாங்கியவையல்ல; எந்த மொழிகளிலிருந்தும் தமிழ்மக்கள் கற்றுக்கொண்டவையும் அல்ல; தமிழர் சமுதாயத்தில் தாமே தோன்றி நிலவிய இயற்கை மணவாழ்வாகும். இதுவே தொல்காப்பியக் கண்ணாடி நமக்குக் காட்டும் உண்மை. – நாவலர் சோமசுந்தர பாரதியார்

மண்ணினையும் மாண்பினையும் காக்க வேண்டும்! – தாமோதரன் கபாலி

மண்ணினையும் மாண்பினையும் காக்க வேண்டும்! உண்பதுவும் உறங்குவதும் வாழ்க்கை யல்ல! உடமைகளும் உரிமைகளும் இழக்க வல்ல! உண்மைகளும் உணர்வுகளும் சாக வல்ல! உள்ளொளியும் உயிரினையும் போக்க வல்ல! பண்ணிசையும் பாத்தமிழாய் வாழ வேண்டும்! பரிவோடும் பண்போடும் நோக்க வேண்டும்! மண்ணினையும் மாண்பினையும் காக்க வேண்டும்! மாசற்ற வாழ்வினையே போற்ற வேண்டும்!   – தாமோதரன் கபாலி

காந்தி இலங்கையரா? அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்? – செந்தமிழினி பிரபாகரன்

காந்தி இலங்கையரா?  அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்?      எங்கள் தமிழீழ மண்ணில் எமக்காக ஈகைச் சாவெய்திய தமிழக தொப்புள் கொடி உயிர் கொடுத்த தோழர்களான முத்துக்குமார் முதலான ஈகியர்களுக்குச் சிலை இல்லை.   மண்ணில் நின்று போராடி வீரச் சாவெய்திய மாவீரர்களுக்கு நினைவாலயங்கள் வைக்கத் தடை.   இருந்த மாவீரர் இல்லங்கள் தகர்க்கப்பட்டு விட்டன..  மாமனிதர் இரவிராசு சிலை ‘மாமனிதர்’ என்ற பட்டம் நீக்கப்பட்டு அரச விசிறிகளால் அவமானப்படுத்தப்படுகின்றது.   ‘அடங்காப்பற்று’ என வன்னி மண்ணை அயலவரோடு போராடிக் காப்பாற்றி…

நடைமுறைப்புத்தாண்டில் நல்லன நடக்கட்டும்! நானிலம் சிறக்கட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

நடைமுறைப்புத்தாண்டில் நல்லன நடக்கட்டும்! நானிலம் சிறக்கட்டும்!     2017 ஆம் ஆண்டுப் பிறப்பிற்கு அனைத்து அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் நடைமுறைப் புத்தாண்டு வாழ்த்துகள்!   தமிழ்நாட்டில் புதிய அரசு மலர்ந்துள்ளது!   ஆளுங்கட்சியிலும் புதிய தலைமை மலர்ந்துள்ளது!   எதிர்க்கட்சியிலும் புதிய தலைமை மலர உள்ளதாகக் கூறப்படுகிறது!   இவற்றால் தமிழ்நாட்டில் புதிய மலர்ச்சி ஏற்படட்டும்!       பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்         அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து   (திருவள்ளுவர், திருக்குறள் 738) என்பதற்கேற்பப் பசிப்பிணியும் பிற நோயும்…

கவிஞாயிறு தாராபாரதி 1 & 2 – சந்தர் சுப்பிரமணியன்

கவிஞாயிறு தாராபாரதி 1 & 2 அவருக்குள் தமிழ்மணக்கும், அறிந்தே முன்னர் அன்னைபெயர் புட்பமென அமைந்த தாமோ? குவளைக்குள் பூகம்பம்! கொடையாய்ச் செந்தீ! கொடுங்காலூர் வரையெழுந்து கொதித்த செந்நா! திவலை க்குள் பொறியேற்றுத் தீயைச் சேர்த்துத் திரையாக்கிச் செந்தமிழாய்த் தெறிக்கும் தாரா! இவருக்கோர் கவிமலரை இயற்றி வந்தேன்! இவரெழுத்தை என்குரலில் இயம்பு கின்றேன்! (1) காவியங்கள் பாடவில்லை; காதல் என்னும் கற்பனைக்குள் கரையவில்லை; கானல் நீரைத் தூவிநஞ்சை வளர்க்கவில்லை; சொல்லால் பொய்யைத் தொடுத்தளிக்கும் கவிதையில்லை; சொகுசு வாழ்க்கை மேவுதற்காய் மாறவில்லை; மேன்மை கொன்று மேனிலையை…

தாயினுஞ் சிறந்தது தமிழே! – ஞா.தேவநேயப் பாவாணர்

தாயினுஞ் சிறந்தது தமிழே! எமுனாகல்யாணி – ஆதி தாயினுஞ் சிறந்தது தமிழே தரணியி லுயர்ந்தது தமிழே வாயுடன் பிறந்தது தமிழே வாழ்வெல்லாந் தொடர்வது தமிழே. பாலூட்டி வளர்த்ததும் தமிழே தாலாட்டி வளர்த்ததும் தமிழே பாராட்டி வளர்த்ததும் தமிழே சீராட்டி வளர்த்ததும் தமிழே தேம்படு மழலையுந் தமிழே திருந்திய வுரைகளும் தமிழே தேம்பி யழுததுந் தமிழே தேவையைக் கேட்டதும் தமிழே முந்தி நினைந்தலும் தமிழே முந்தி மொழிந்ததும் தமிழே குந்தி யெழுந்ததும் தமிழே குலவி மகிழ்ந்ததுந் தமிழே பயன்படு கல்வியும் தமிழே பணிபெறப் படுவதும் தமிழே…

தமிழே வாழ்க! – தாராபாரதி

தமிழே வாழ்க!  – தாராபாரதி தமிழே வாழ்க! தாய்மொழி தமிழே! எந்தன் தனிமொழி முதலே, வாழ்க! வாய்மொழி பலவென் றாலும் வழிமொழி நீயே ஆனாய்! காய்மொழி சிலவற் றுள்ளும் கனிமொழி நீதான் என்பேன்! தாய்மொழி தமிழே, எந்தன் தனிமொழி முதலே வாழ்க!   கவிஞர் தாராபாரதி

ஈழத்தமிழர் வாழ்வு குறித்து இரட்டை நிலைப்பாடு வேண்டா! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஈழத்தமிழர் வாழ்வு குறித்து இரட்டை நிலைப்பாடு வேண்டா!    ஒருவர் தன் கொள்கையை அல்லது கருத்தை மாற்றிக் கொண்ட பின்னர் முன்னர்  அவர் சொன்னதையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கக்கூடாது. சான்றாகத் தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி இறை மறுப்பாளர் என்ற முறையில்தான் உலகறியப்பட்டவர். ஆனால், தொடக்கத்தில் அவர் சாமியாராகத் திரிந்ததை வைத்துக்கொண்டு அவரை இறைஏற்பாளர் என்ற அளவில் மதிப்பிடலாமா? கூடாதல்லவா? அதுபோல்தான் மேனாள் முதல்வர் செயலலிதா தமிழ்ஈழம் குறித்தும் விடுதலைப்புலிகள் குறித்தும் தமிழ்க்கேடர்களின் கருத்தாக்கத்தால் முதலில் தவறான நிலைப்பாடு எடுத்திருந்தார்.  சட்ட மன்றத்திலும் மேதகு பிரபாகரனைக்…

ஆள்வினைச்செல்வி சசிகலா மீதான ஆரியத்தாக்குதல் – இலக்குவனார் திருவள்ளுவன்

ஆள்வினைச்செல்வி சசிகலா மீதான ஆரியத்தாக்குதல்     ஊழலற்ற, நேர்மையான தமிழ்நல மக்களாட்சிதான் நமக்குத் தேவை. ஆனால், அதற்கான காலம் இன்னும் கனியவில்லை. எனவே, இருப்பனவற்றுள் ஏற்கத்தக்கதைத்தான் நாம தெரிவு செய்ய வேண்டியுள்ளது. “யார் நல்ல பையன்” என்று கேட்டால், “அதோ கூரை மீது கொள்ளி  வைத்துக்கொண்டுள்ளானே அவன்தான் நல்ல பையன்” என்று சொல்லும் நிலையில்தான், நாமும் நம்நாட்டுக் கட்சிகளும் உள்ளன. எனவே, நாம் நம் அளவுகோலை மாற்றி வைத்துக்கொண்டுதான் முடிவெடுக்க வேண்டியுள்ளோம்.  அதுபோல்,  தமிழ் நாட்டில்  பல கட்சிகள் இருப்பினும்  இரு கட்சி…

தேறாத மனத்துக்கு ஆறுதலேது! – தமிழ்சிவா

தேறாத மனத்துக்கு ஆறுதலேது! நிலத் தட்டுகள் இடம்பெயர்ந்து நிலை தடுமாறியது பெயராநிலம் ! எல்லைகள் கடந்து பிள்ளைகளுக்குப் பிணமென்று பேர்வைக்க பீறிட்டுக் கிளம்பியது கடல்! பெருகிய ஓலங்கள் பேரலைகளின் பேய்த்தனமான பேச்சொலியில் நீரணைந்த நெருப்பாயின ! தணியாத தாகத்தில் நீர் குடித்த உடலங்கள் சடலங்கள் என்னும் சட்டை போட்டுக்கொண்டன! கண்ணீர்ச் சுவையில் உவர்ப்பு ஒழிந்து கைப்பு கூடியது.. தொலைந்த  இறகுகள்தேடி அலைந்துகொண்டே இருக்கிறது கலுழ்ந்து கலுழ்ந்து கண்கள் பூத்த காலம்! நச்சு மரங்களை வீழ்த்தியிருக்க வேண்டிய நான் பிள்ளை வரங்களைப் பெயர்த்தேனே என வயிறளைக்கும்…

வணக்கம் யாருக்கு? – இலக்குவனார் திருவள்ளுவன்

வணக்கம் யாருக்கு?     ஆள்வினைச்செல்வி சசிகலாவிற்கு அவரது கட்சித் தொண்டர்களும் பிறரும் வணக்கம் செலுத்துவதுபோலும் அவர் வெறுமனே நிற்பதுபோலும இதழ்களில் சில படங்கள் வருகின்றன. அதைப்பார்த்த நண்பர்கள், “வணக்கம் செலுத்தினால்  மறு வணக்கம் தெரிவிக்காமல் இருக்கிறாரே!  ‘சின்னம்மா’ என்று பணிவன்புடன் அழைப்பவர்களிடம்  மறு வணக்கம் தெரிவிப்பதுதானே முறை” என்றனர். அதற்கு நான், “இவர் வணக்கம் செலுத்தாமல் இருந்தால் தவறுதான்.  ஆனால், இவர் வணக்கம் தெரிவித்த படம் வெளி வந்திருக்காது.  ஏனெனில் வந்துள்ள படங்களில் சிலர் மட்டும் வணக்கம் செலுத்துவதுபோல் காட்சிகள் உள்ளன. அப்படியானால் அவர்…