கல்வியை ஆட்சியின் கடமையாக்கியவர் திருவள்ளுவர் – குன்றக்குடி அடிகளார்

கல்வியை ஆட்சியின் கடமையாக்கியவர் திருவள்ளுவர்   திருவள்ளுவர்தான் முதன்முதலாக ஆட்சியின் கடமைகளில் கல்வி வழங்குவதையும் ஓர் அரசியல் கடமையாகச் சேர்த்துக் கூறியவர். ஆட்சியின் திறனுக்கும் ஒழுக்க நெறி நிற்பதற்கும், வளமான வாழ்க்கை அமைவதற்கும், ஆன்மீக வாழ்க்கைக்கும் கல்வியே அடிப்படை! தவத்திரு குன்றக்குடி அடிகளார்: அடிகளார் அருள்மொழி 500 : தொகுப்பு: குன்றக்குடி பெரிய பெருமாள் பக்கம்.66

உலகநூல் திருக்குறள் ஒன்றே! – இரா.இளங்குமரன்

உலகநூல் திருக்குறள் ஒன்றே!  வள்ளுவர் பார்வை உலகப்பார்வை, ஒவ்வொருவரும் உலகவராம் பார்வை. அதனாலேயே தம்மையோ, தம் மண்ணையோ, தம் மண்ணின் மொழியையோ, தம் அரசையோ, தம் இறைமையையோ சுட்டினார் அல்லர். ஆதலால், உலகுக்கு ஒரு நூல் என உலகவரால் வள்ளுவம் கொள்ளப்படுகிறதாம். உலக மறைநூல் ஒன்று காண்டல் வேண்டும் என்னும் காலமொன்று நேரிடும்போது ஒரே ஒரு நூலாக நிற்க வல்லதும் வள்ளுவமேயாம். புலவர் மணி இரா.இளங்குமரனார் : உங்கள் குரல் தமிழ்ச்செம்மொழிச் சிறப்பு மலர்

உலகில் “மறைநூல்” திருக்குறள் ஒன்றே! – ந.சேதுரகுநாதன்

உலகில் “மறைநூல்” திருக்குறள் ஒன்றே!   பகைவரால் எய்யப்படுகின்ற அம்புகளும் எறியப்படுகின்ற ஈட்டிகளும் உடம்பிற் பாயாதவாறு, உடல் முழுதுந் தழுவிக் கிடந்து காக்கும் கவசத்தை ‘மெய்ம்மறை’ என்று வழங்குவது தமிழ்மரபு. மெய்யாகிய உடம்பினை மறைத்துக் காப்பதனால் மெய்ம்மறை எனப் பெயர் பெற்றது. கோட்டைச் சுவர்களாகிய அரண்கள் பகைவர் எய்கின்ற படைக்கலங்கள் வந்து பாயாதவாறு தடுத்துக் காத்தலால் ‘மறை’ என்ற பெயர் பெறும். அரண்போல நின்று காத்து உதவும் நூல் ‘ஆரணம்’  என்று கூறப் பெறும். மறை, வேதம் என்று பெயர் பெறும் நூல்கள் ‘ஆரணம்’…

தமிழர் நலனுக்காகப் பிறர் குரல் கொடுக்கக்கூடாதா? – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழர் நலனுக்காகப் பிறர் குரல் கொடுக்கக்கூடாதா?      ஒருவர் நலனுக்காக மற்றவர் குரல்கொடுக்கக்கூடாது என்பதும் ஓர் இனத்தவரின் நலனுக்காகப் பிற இனத்தவர் குரல் கொடுக்கக்கூடாது என்பதும் அறியாமையல்லவா? இனப்பற்றை ஆரவாரச் செயலாகக் கருதுபவர்கள் அப்படித்தான்  அறியாமை மிகுந்தவர்களாக இருக்கின்றனர். சான்றுக்கு ஒன்று பார்ப்போம்!   அண்மையில் எழுவர் பேரணிக்காக, வேலூரில் இருந்து சென்னை வரை ஊர்திப்பேரணி நடப்பதாக இருந்ததை அனைவரும் அறிவர்! அந்தப் பேரணிக்குப் பலதரப்பட்டாரும் ஆதரவு தெரிவித்தனர். அதுபோல் நடிகர்  விசய்சேதுபதியும் 25 ஆண்டுகளாக அறமுறையின்றி அடைத்துவைக்கப்பட்டிருப்பதைக் கொடுமையாகக் கூறித் தானும்…

வீட்டிற்குள் நுழையும் இந்தி! விரட்டியடிப்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

வீட்டிற்குள் நுழையும் இந்தி! விரட்டியடிப்போம்!      முதலாவது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் தொண்ணூறாம் ஆண்டினைக் கடக்கும் காலக்கட்டத்தில் – இரண்டாவது இந்தி எதிர்ப்புப்போரின் 50 ஆம் ஆண்டுவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில், ஏமாளித் தமிழர்கள் மீது இந்தி, ஊடகங்கள்வழி திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.   விளம்பரங்களின் நோக்கம் என்ன? மக்களைச் சென்றுசேர வேண்டும்என்பதுதானே! விளம்பரத்திற்குரிய பொருளோ செய்தியோ மக்களிடம் சேருவதைவிட இந்தி சேர வேண்டும் எனப் பா.ச.க.  துடிக்கிறது!   மத்திய அரசின் விளம்பரம், பா.ச.க.விளம்பரம், தனியார் விளம்பரம் என ஊடகங்களில் இந்தி விளம்பரம்…

உணவகத்தோரே! உறைவகத்தோரே! தமிழ்ச்சுவை அழிக்காதீர்! (1) – இலக்குவனார் திருவள்ளுவன்

உணவகத்தோரே! உறைவகத்தோரே! தமிழ்ச்சுவை அழிக்காதீர்!  (1)     திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும் பொருளும் அதனினூஉங்கு இல். (திருவள்ளுவர், திருக்குறள் 644)     நாம் உணவுதரும் நிலையத்தை உணவகம் என்கிறோம். தங்குமிடத்தை விடுதி என்கிறோம். உணவுவசதியுடன் தங்குமிடத்தை உண்டிஉறையுளகம் (Boarding and Lodging) என்று முன்பு குறித்தாலும்  இப்பொழுது உணவு விடுதி என்கிறோம். என்றாலும் விடுதி (Lodge) என்ற சொல்லை மாணவர்கள் அல்லது பணியாற்றுநர் தங்குமிடமாக(Hostel) நாம் கையாள்கிறோம். தங்குமிடம் என்ற சொல்லில் கையாண்டால், வேறுவகை தொழில் நடக்குமிடமாகக் கருதிப் புறக்கணிக்கி்றோம்….

உணவகத்தோரே! உறைவகத்தோரே! தமிழ்ச்சுவை அழிக்காதீர்! (2) – இலக்குவனார் திருவள்ளுவன்

உணவகத்தோரே! உறைவகத்தோரே! தமிழ்ச்சுவை அழிக்காதீர்! (1) (தொடர்ச்சி) உணவகத்தோரே! உறைவகத்தோரே! தமிழ்ச்சுவை அழிக்காதீர்!  (2)   உணவகங்கள், உறைவகங்களில் உள்ள தகவல் விவரங்களும் ஆங்கிலத்தில்தான் உள்ளன. முன்பு ஒரு முறை உறைவகம் ஒன்றில் நடைபெற்ற தமிழறிஞர் ஒருவர் இல்ல நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். அங்கே முகப்பில் ஆங்கிலத்தில் விவரங்கள் குறிக்கப்பெற்ற  தட்டி இருந்தது. அவர் மகனிடம் தமிழில் எழுதுவோர் கிடைக்கவில்லையா எனக் கேட்டேன். “வரவேற்புத்தட்டி உறைவகத்தினர் அன்பளிப்பாம். ஆங்கிலத்தில்தான் வைப்பார்களாம். மேடையில் வேண்டுமென்றால் தமிழில் வைத்துக்கொள்ளலாமாம்.  நான் எவ்வளவு கேட்டும் வரவேற்புத்தட்டியைத் தமிழில் வைக்க இடந்தரவில்லை” என்றார்….

நான்தான் கடவுள்! – ஆரூர் தமிழ்நாடன்

நான்தான் கடவுள்! நான்தான் கடவுள்; நான்தான் கடவுள்; நான்தான் பூமியை நடத்தும் கடவுள்! நம்ப மறுக்கும் நண்பர்க ளேஎனைக் கூர்ந்து பார்த்தால் கும்பிடு வீர்கள்! எங்கும் நான்தான் இல்லா திருக்கிறேன்; எங்கும் ஆசையாய் இறைந்து கிடக்கிறேன்; மழையோ வெயிலோ மயக்கும் பொழுதோ மனமொன் றாமல் மரத்துத் திரிகிறேன்; வாழ்வின் மகிழ்வை வசீகர சுகத்தை உணர்ந்து நெகிழ ஒருபொழு தில்லை; வலிகள் என்று வருந்திய தில்லை; நிறைவென நெஞ்சம் நெகிழ்ந்ததும் இல்லை; நான்தான் கடவுள்; நான்தான் கடவுள்; நான்தான் பூமியை நடத்தும் கடவுள்! இசைக்கென உயிரும்…

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 10 – இலக்குவனார் திருவள்ளுவன்

(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 09 தொடர்ச்சி)   பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 10. முயற்சியால் துன்பம் வென்று இன்பம் காண்க!   பணத்தினைப் பெருக்கி வாழ்வில் உயர என்ன செய்ய வேண்டும்? கல்வியறிவும், தொழில் ஈடுபாடும் இருந்தால் மட்டும் போதுமா? “நல்லன எண்ண வேண்டும்”, “எண்ணிய முடிய சோம்பலை நீக்க வேண்டும்”, முயற்சி வேண்டும்; காலம் அறிந்து செயல்பட வேண்டும்; முடியும் மட்டும் வினையாற்ற வேண்டும் அல்லவா? இவற்றைப் பல பாடல்கள் வழி வலியுறுத்துபவர்தானே பாரதியார்! “எடுத்த காரியம் யாவினும் வெற்றி எங்கு நோக்கினும்…

கருப்பினப் போராளி அலி! -ஆரூர் தமிழ்நாடன்

  முகமது அலி, உலகக்குத்துச்சண்டை உலகில் சுற்றிச் சுழன்ற கறுப்புச் சூறாவளி.  அமெரிக்காவில் நிலவும் நிறவெறிக் கொடுமைகளுக்கு எதிராகத் தொடர்ந்து மிகுவலுக் குத்துகளை விட்டுகொண்டிருந்த மாவீரர் அவர். நடுக்குவாத (Parkinson) நோயோடு 30 ஆண்டுகளுக்கும் மேலாய், மல்யுத்தம் நடத்திகொண்டிருந்த அந்த மாவீரர், தனது 74-ஆவது  அகவையில், கடந்த 3-ஆம்நாள் தன்  நேயர்களிடமிருந்து  நிலையாக விடைபெற்றுக்கொண்டார். உலகைப் போட்டிகளில் அழுத்தமான குத்துகளால் எதிராளிகளை மிரட்டிய அவரது கைகள், அசைவற்ற  அமைதியில் அமிழ்ந்துவிட்டன.     அமெரிக்காவின் கென்டகி மாநிலத்தில் 1942- இல் பிறந்த அலியின் இயற்பெயர்,…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் –1.12. புலால் விலக்கல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.11. தொடர்ச்சி)   மெய்யறம் மாணவரியல் 12. புலால் விலக்கல் புலால்புழு வரித்தபுண் ணலால்வே றியாதோ? புலால் என்பது புழுவால் அரிக்கப்பட்ட புண் ஆகும். புண்ணைத் தொடாதவர் புலாலையுட் கொள்வதென்? புண்ணைத் தொட விரும்பாதவர் புலாலை எப்படி உண்கிறார்? அதுவலி தருமெனின் யானையஃ துண்டதோ? அது வலிமையைத் தரும் எனில் வலிமை உடைய யானை அதை சாப்பிடுகிறதா? சாப்பிடுவதில்லை. அரிவலி பெரிதெனி னதுநமக் காமோ? சிங்கம் வலிமை உடையது என்றால் அந்த வலிமையினால் நமக்கென்ன பயன்? ஒரு பயனும் இல்லை….

வரலாறு படைக்கும் வாழ்வியல் கவிஞர் அன்வர்! 1/3 – முனைவர். ப. பானுமதி

வரலாறு படைக்கும் வாழ்வியல் கவிஞர் அன்வர்!     கவிதை என்பது தம்மின், தம் நாட்டின், மொழியின், பெருமை பேசுவதோ, சிறுமையைக் கண்டு கொதிப்பதோ மட்டுமல்ல. அது தன் வேகம் நிறைந்த, விவேகம் நிறைந்த, எழுச்சி மிகுந்த கருத்தால் சிறுமையைக் களையும் பக்குவத்தோடு வெளிப்படல் வேண்டும். எதிர்காலப் புலனோடு மட்டுமன்றி சமுதாயத்தைக், குறிப்பாக இளைய சமுதாயத்தை முன்னேற்றப் பாதை நோக்கி இயக்கக் கூடிய விசையாக இருக்க வேண்டும். தனக்கான பாதையில் மட்டுமன்றி தான் பிறந்த நாட்டிற்கும் மக்களுக்கும் ஒர் அடையாளத்தை விட்டுச் செல்வதாக இருக்க வேண்டும்….