நியாயத்திற்கு நிழலாய் இருப்பதே நட்பு! – ஏ.எச்.யாசிர் அசனி

நியாயத்திற்கு நிழலாய் இருப்பதே நட்பு! உதிர்க்கப்பட்ட சொற்களில், உதவி நீட்டுவதல்ல நட்பு, சொற்கள் உதிருமுன், உதவிகரம் நீட்டுவதே நட்பு. தீமைகளுக்குத் தீனியாய் இருப்பதல்ல நட்பு, தீமைகளைத் தீயிட்டு அழிப்பதே நட்பு. பொருள்தரா, இணைந்திருக்கும் இரட்டைக் கிளவியாய், இருப்பதல்ல நட்பு, இணைந்தாலும், பிரிந்தாலும் பொருள்தரும், அடுக்குத்தொடராய் இருப்பது நட்பு. கலவரங்களுக்குக், கருவாய் இருப்பதல்ல நட்பு, அதனைக், கருவிலேயே கருக்கலைப்பு செய்வதே நட்பு. அநீதிக்கு அடிக்கோடாய் இருப்பதல்ல நட்பு, நியாயத்திற்கு நிழலாய் இருப்பதே நட்பு . ஏ.எச்.யாசிர் அசனி, இலால்பேட்டை அபுதாபி. தொடர்புக்கு : 0556258851

காடு என்னும் பெயருடைய பல ஊர்கள் – இரா.பி.சேது(ப்பிள்ளை)

   காடு என்னும் பெயருடைய ஊர்கள் தமிழ் நாட்டில் பல உள்ளன. தொண்டை நாட்டில் பழையனூருக்கு அணித்தாக உள்ளது திருவாலங்காடு. பொன்னேரிக்கருகே உள்ளது பழவேற்காடு. கருவேல மரங்கள் நிறைந்திருந்த பழமையான காடு பழவேற்காடு எனப்பட்டது போலும். அவ்வூரில் வந்து குடியேறிய ஐரோப்பியர் அதனைப் புலிக் காடாக்கி விட்டனர். சோழ நாட்டில் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கும் ஏனைய தமிழரசர் இருவருக்கும் பெரும் போர் நிகழக் கண்ட காடு தலையாலங்காடாகும். இன்னும், சேலத்தினருகே ஏர்க்காடு என்னும் ஊர் உள்ளது. காடு சூழ்ந்த இடத்தில் ஓர் அழகிய ஏரி அமைந்திருந்தமையால்…

செங்குட்டுவன் போன்ற செம்மல்கள் இன்று இருப்பின் நீலகண்ட சாத்திரி போன்றார் தமிழை இழித்துரைப்பார்களா? – சி.இலக்குவனார்

செங்குட்டுவன் போன்ற செம்மல்கள் இன்று இருப்பின் நீலகண்ட சாத்திரி போன்றார் தமிழை இழித்துரைப்பார்களா?   கல்வியும் செல்வமும் உடைய தமிழர்கள் தாமுண்டு தம்வாழ்வுண்டு என்று கூற்றுவனுக்கு நாளோட்டுகின்றனரேயன்றித் தமிழினப் பெருமையை எண்ணிச் செயலாற்றும் இயல்பைப் பெற்றிலர். அன்று வாய்வாளாண்மையின் வண்டமிழ் இகழ்ந்த வடவரை அடக்க வலிதிற் சென்ற செங்குட்டுவன் போன்ற செம்மல்கள் இன்று இருப்பின் நீலகண்ட சாத்திரி போன்றார் ஆரியர்கள் வரும் முன்னர் தென்னிந்தியா வளமுற்றிருந்தது என்பதற்கோ நாகரிகச் சிறப்புடன் சிறந்தது என்பதற்கோ இதுவரை சான்று கிடையாது என்று கூறுவார்களா? கி,மு,ஏழாம் நூற்றண்டினது எனக்…

குன்றின் பெயர் கொண்ட தமிழ்நாட்டு ஊர்கள் – பெயர்க் காரணம்: இரா.பி.சேது(ப்பிள்ளை)

குன்றின் பெயர் கொண்ட தமிழ்நாட்டு ஊர்கள் – பெயர்க் காரணம்  குன்றின் பெயர் கொண்ட ஊர்கள் தமிழ்நாட்டிற் சில உண்டு. பாண்டி நாட்டுத் திருப்பரங்குன்றமும், தொண்டை நாட்டுத் திருக்கழுக்குன்றமும் பாடல் பெற்ற மலைப் பதிகளாகும். ஆர்க்காட்டு நாட்டில் குன்றம் என்பது குணம் என மருவி வழங்கும். நெற்குன்றம், நெடுங்குன்றம், பூங்குன்றம் என்னும் பெயர்கள் முறையே நெற்குணம், நெடுங்குணம், பூங்குணம் என மருவி உள்ளன. குன்றை அடுத்துள்ள ஊர் குன்றூர் என்றும், குன்றத்தூர் என்றும், குன்றக்குடி என்றும் பெயர் பெறும். அப்பெயர்களிலுள்ள குன்றம் பெரும்பாலும் குன்னம்…

சேரர் – சொல்லும் பொருளும்: மயிலை சீனி.வேங்கடசாமி

சேரர் – சொல்லும் பொருளும்   இராமாயணக் காலத்தில் சீதையைத் தேடிச் சென்ற வானர வீரர்களுக்குச் சுக்கிரீவன் வழித்துறைகளை வகுத்துரைக்கும்போது சோழ, சேர, பாண்டிய நாடுகளைக் குறிப்பிடுகிறான். உதிட்டிரன் இராயசூய வேள்வி வேட்டபோது சோழ, சேர, பாண்டியர் மூவரும் வந்திருந்ததாக வியாசரும் கூறுகிறார்.   கிரேக்கத் தூதரான மெகசுதனீசு என்பார் தமது குறிப்பில் சேரர்களைச் சேரமான்கள் என்றே அழைக்கின்றார்.   திருஞானசம்பந்தரும் தமது பதிகங்களில் சேரர், சேரலர் என்னும் சொற்களைப் பயன்படுத்துகிறார். இவர் வாழ்ந்தது ஏழாம் நூற்றாண்டாகும். இதனை நோக்கும்போது சேரர், சேரலர் என்னும்…

புறநானூற்றுப் புதிய சொ ற்கள் தேடல் – மோகனா : 1/3

1   சங்க இலக்கியங்களை முன்வைத்து இன்று தமிழ்மொழியின் தொன்மை உலக அரங்கில் நிறுவப்பட்டுள்ளது. தொகுப்பு நூல்களான அவ்விலக்கியங்கள் காலந்தோறும் பல்வேறு வகையான வாசிப்புகளை வேண்டி நிற்கின்றன. பெரும்பாலான வாசிப்புகள் அவற்றின் தனித்தன்மையை உணர்த்துவனவாகவும் நிலைபேற்றை மதிப்பிடுவனவாகவும் அமைந்துள்ளன. அவற்றுள்ளும் புறநானூற்றின் வாசிப்பும் அதன் மீதான ஆய்வுகளும் தனித்த கவனத்தைப் பெறுகின்றன. மு. இராகவையங்காரின் ‘வீரத்தாய்மார்’ தொடங்கி க.கைலாசபதியின் ‘தமிழ் வீரநிலைக்கவிதை’ வரை புறநானூறு தமிழ்பேசும் மக்கள் கூட்டத்தின் வீர வாழ்வை, உணர்வை வெளிப்படுத்தும் இலக்கியமாக மதிக்கப்பட்டுப் போற்றப்பட்டு வந்துள்ளது. உண்மையில் அக இலக்கியங்களைவிட…

சங்க இலக்கியத்தில் இடம் பெறும் மதுரை, கூடல் சொற்கள்

சங்க இலக்கியத்தில் இடம் பெறும் மதுரை, கூடல் சொற்கள் கூடல் (மதுரை) பொய்யா விழாவின் கூடற் பறந்தலை – அகநானூறு: 16:14 கொடிநுடங்கு மறுகிற் கூடற்குடா அது அகநானூறு:149: 14 யாம்வேண்டும் வையைப்புனல் எதிர்கொள்கூடல் பரிபாடல் : 10:40 4.மதிமலை மாலிருள் கால்சீப்பக் கூடல் பரிபாடல் : 10: 112 வருந்தாது வரும்புனல் விருந்தயர் கூடல் பரிபாடல் : 10:12 கூடலொடு பரங்குன்றினிடை பரிபாடல் : 17: 23 கொய்யுளை மான்தேர்க் கொடித்தேரான் கூடற்கும் பரிபாடல் : 17:45 புலத்தினும் போரினும் போர்தோலாக் கூடல்…

சாதி நிலைத்திருக்கும் வரை மக்களாட்சி வெற்றிபெறுதல் இயலாது! – சி.இலக்குவனார்

பிறப்பு (சாதி) வேறுபாடுகள் நிலைத்திருக்கும் வரை மக்களாட்சி வெற்றிபெறுதல் இயலாது!   சாதிகளைப் போற்றும் சங்கங்கள் இருத்தல் கூடாது; அவற்றைத் தடுத்தல் வேண்டும் என்று கூறுகின்றனர். இந்நாட்டின் ஒற்றுமையைக் குலைத்து மக்களாட்சி வெற்றி பெறாமல் செய்துவரும் தீமைகளுள் தலையாயது சாதிமுறையேயாகும். சாதிகள் ஒழிந்தாலன்றிச் சமநிலை மன்பதைஉருவாதல் ஒருநாளும் இயலாது. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்‘ என இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் திருவள்ளுவர் முழங்கியும் இன்னும் பிறப்பால் வேறுபாடுகாட்டும் நிலை அழியாமல் இருப்பது மிக மிக வருந்தத்தக்கது. பிறப்பு (சாதி) வேறுபாடுகள் நிலைத்திருக்கும் வரை மக்களாட்சி வெற்றிபெறுதல்…

தமிழர்கள் குறளைத் தமதாக்கிக் கொள்ளவில்லை! – சி.இலக்குவனார்

தமிழர்கள் குறளைத் தமதாக்கிக் கொள்ளவில்லை! வள்ளுவர் தமிழகத்தில் தோன்றித் தமிழில் எழுதியிருந்தாலும் தமிழர்களாகிய நாம் இன்னும் அதனுடைய நுட்பங்களை உணர்ந்து அதன்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவில்லை. தமிழர்கள் இன்னும் அதனை நல்ல முறையில் விளங்கிக் கொள்ளாததால்தான் தமிழ்ப்பற்று இல்லாதவர்களும் தமிழ்ப்பகைவர்களும் மக்கள் பகைவர்களும் அதனை இழித்தும் பழித்தும் கூறியும் அதனால் பெருமை பெற்றும் வருகிறார்கள். தமிழர்களாகிய நாம் அதனுடைய நெறிகளைக் கடைப்பிடித்து வந்தால் நாடும் நாமும் நம்மைச் சேர்ந்தவர்களும் சேராதவர்களும் நன்மைஅடையத் துணைபுரியும். குறள்நெறி என்பது வள்ளுவர் நெறி. குறள் என்ற சொல்லுக்கு இன்று…

தொல்காப்பியத்தைப் பயிலாது மாளுதல்கூடாது! – பேரா.சி.இலக்குவனார்

தமிழரெனக் கூறிக் கொள்வோர் தொல்காப்பியத்தைப் பயிலாது மாளுதல்கூடாது   தொல்காப்பியம் மொழியியலையும் இலக்கிய இயலையும் விளக்கும் நூலேயாயினும் தமிழர் வாழ்வியலையும் அறிவுறுத்தும் வரலாறாகவும் அமைந்துள்ளது. தமிழர் வரலாறு எழுதப் புகுவோர் தொல்காப்பியத்தை நன்கு கற்றல் வேண்டும். அப்பொழுதுதான் தமிழரின் உண்மை வரலாற்றை எழுத இயலும். ஆகவே, தமிழக வரலாறும் பண்பாடும் அறிய விரும்புவோர் தொல்காப்பியத்தைத் தவறாது கற்றல் வேண்டும். தமிழரெனக் கூறிக் கொள்வோர் தொல்காப்பியத்தைப் பயிலாது மாளுதல்கூடாது என்ற குறிக்கோளைக் கொள்ளுதல் வேண்டும். கல்வித் திட்டமும் அதற்கு இடம் கொடுத்தல் வேண்டும். தொல்காப்பியம் கற்றுத்…

சாதிக் கட்சிகள் தோன்றாமலிருத்தலே சாலவும் நன்று! – முனைவர் சி.இலக்குவனார்

சாதிக் கட்சிகள் தோன்றாமலிருத்தலே சாலவும் நன்று!   இந்நிலையில் சாதிகளின் பெயரால் கட்சிகளை உருவாக்கித் தேர்தல்களில் போட்டியிட முனைவது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போலாகும். ஒவ்வொரு சாதிக்கும் ஒரு கட்சி என்று அமைத்துக் கொண்டு தேர்தலில் ஈடுபடுவாரேல் தேர்தல் களம் போர்க்களமாக மாறி நாட்டின் அமைதியும் மக்களின் நல்லுறவும் கெட்டுவிடும் என்பதில் எட்டுணை ஐயமின்று. ஆதலின் சாதிகளின் பெயரால் கட்சிகள் அமைக்க வேண்டாமென அன்புடன் வேணடுகின்றோம். கொள்கைகள் அடிப்படையில் கட்சிகள் அமைவதுதான் மக்களாட்சி முறைக்கு ஏற்றதாகும். நாட்டுக்கு நலம் பயக்கும் கொள்கைகளை மக்களிடையே…

ஆரியத்தை உயர்த்துவதும் தமிழைத் தாழ்த்துவதும் வழக்கமாகிவிட்டது

ஆரியத்தை உயர்த்துவதும் உண்மையான உயர்வுடைய தமிழைத் தாழ்த்துவதும் வழக்கமாகிவிட்டது   தூயதமிழ்ச் சொற்களை ஆரிய மொழிச் சொற்கள் எனத் திரித்துக் கூறுவதும், தமிழர்க்கே உரிய நாகரிகத்தையும் பண்பாட்டையும் ஆரியர்க்குரியன என அறங்கோடி அறைவதும் இன்னும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றமை மிக மிக வருந்துவதற்குரியது. உண்மைக்குப் புறம்பான புனைந்துரை எழுதி ஆரியரே மேலோராய்த் தமிழர்க்கு நாகரிகம் கற்பித்தனர் எனக் கூறுவோரை உயர்ந்த வரலாற்று ஆசிரியர் என்பதும் காய்தல் உவத்தல் இன்றிஆராய்நது தமிழர் நாகரிகச் சிறப்பை உரைப்போரைக் குறுகிய நோக்கமுடைய குறுமதியாளர் எனக் குற்றம் கூறி இகழ்வதும்…