வளந்தரும் வாழ்த்து

வளந்தரும் வாழ்த்து சுண்ணச் சுவர்கள் மின்னலிட வண்ணக் கோலம் பலவகையாக மாவிலைத் தோரணம் காற்றாட மல்லிகைச் சரங்கள் மணந்தாட கொஞ்சும் புத்தாடை குதுகலமாக மஞ்சள் இஞ்சி மங்கலமாக பச்சரிசி பொங்கல் பளபளக்க கட்டிக் கரும்பு நாவினிக்க தந்தையும் தாயும் வாழ்த்திட சிந்தைசீர் மகன்மகள் வணங்கிட இல்ல மகளிர் யாவருமே விளக்கேற்றி வருகதிரைத் துதிக்க உற்றார் உறவினர் ஒன்றுகூடி பற்றுடன் பொங்கலோ பொங்கலென தமிழர் திருநாளில் குடும்பமுடன் தழைத்து வாழ்கநீர் பல்லாண்டே. . . . தமிழகத்தாய்க்குழு . . . பொன் தங்கவேலன்

தொழூஉப்புகுதல்(சல்லிகட்டு) இலக்கியத்தில் சான்று – சான்றோர் மெய்ம்மறை

முழக்கு என இடி என முன் சமத்து ஆர்ப்ப வழக்கு மாறு கொண்டு வருபு வருபு ஈண்டி நறையோடு துகள் எழ நல்லவர் அணி நிற்பத் துறையும் ஆலமும் தொல்வலி மரா அமும் முறையுளிப் பரா அய்ப் பாய்ந்தனர் தொழூஉ (முல்லைக்கலி 101:10-14) இரும் புலித் தொகுதியும் பெருங் களிற்று இனமும் மாறு மாறு உழக்கியாங்கு உழக்கிப் பொதுவரும் ஏறு கொண்டு ஒருங்கு தொழூஉ விட்டனர்! விட்டாங்கே மயில் எருத்து உறழ் அணிமணி நிலத்துப் பிறழப் பயில் இதழ் மலர் உண்கண் மாதர் மகளிரும்…

நம்வாழ்வு விடிந்திடட்டும் ! – எம்.செயராமன்

      வெள்ளம்  வடிந்தோட வேதனையும் விரைந்தோட உள்ளமெலாம் உற்சாகம் ஊற்றெடுத்து நின்றிடட்டும் நல்லவை நம்வாழ்வில் நாளும்வர வேண்டுமென்று நாம்பொங்கி மகிழ்ந்திடுவோம் நம்வாழ்வு விடிந்திடட்டும் ! இயற்கை தந்தவிடர்கண்டு ஏக்கமுற்று விழுந்திடாமல் முயற்சியுடன் உதவிநின்றார் முழுமனதை வாழ்த்திநின்று அயற்சிதனை விட்டெறிந்து அனைவருமே அணைந்துநின்று உயற்சிதர வேண்டுமென்று உளமாரப் பொங்கிநிற்போம் ! நீர்பெருகி நின்றதனால் நீரருந்த முடியாமல் ஊர்மக்கள் யாவருமே உயிர்துடித்து நின்றார்கள் நீர்வற்றிப் போனாலும் நிம்மதியைத் தேடுமவர் சீர்பெற்று வாழ்வதற்கு இப்பொங்கல் உதவிடட்டும் ! மார்கழி மாதமது மனங்குளிர வைத்தாலும் மாமழையும் பேரழிவும் மனம்வருந்தச் செய்ததுவே…

தமிழ்ப்பொங்கல் – ப.கண்ணன்சேகர்

தமிழ்ப்பொங்கல் – ப.கண்ணன்சேகர் மண்ணில் பசுமை நிலவிட மணக்கும் தமிழால் குலவிட மாநிலம் மாறிட நல்லது! நல்லது நினைத்து வேண்டிட நாளைய உலகை தூண்டிட நன்மை செய்வாய் இக்கணம்! இக்கணம் எழுதும் வரிகளே இயம்பும் வாழ்வின் நெறிகளாய் இனிமைக் காணச் செய்திடும்! செய்திடும் ஒற்றுமை நட்பாக சேர்ந்தே வாழ்வீர் வளமாக செழித்தே ஓங்கும் வையகம்! வையகம் முழுமை தமிழாக வைத்திடு தாய்மொழி அமுதாக வந்திடும் தமிழ்தைப் பொங்கல்! பொங்கல் இல்லா நல்மனமே புழுங்கல் இல்லா ஒருகுணமே போற்றும் தமிழர் பன்பாடு! பன்பாடு காக்கும் நன்நாளே…

பொங்கலோ பொங்கல்! – தமிழ நம்பி

பொங்கலோ பொங்கல்! – தமிழ நம்பி இற்றைக்குப் பொங்கல்நாள் ஏற்றமிகு திருநாளே எழுந்தே வாநீ! கற்கின்ற வேற்றுமொழி கரிப்பானை அதன்கழுத்தில் கட்டி வைக்கும் சுற்றிமுடி நூல்சோம்பல் தோயுமில வயம்மஞ்சள் தூய பால்தான் எற்றைக்கும் இரண்டகத்தால் இனமிழக்கும் குருதியதை எடுத்துள் ஊற்று! ஏனலுறு அரிசியென ஏற்றிருக்கும் அடிமைநிலை இடுபா னைக்குள்! மானமெனும் விறகெரித்து மலிந்தகடை அரசுதரும் மதுக்கு டித்தே கூனலுற மயக்கத்தே கூவிடுவாய் தமிழ்மகனே குரைநா யாக வானத்துங் கேட்டிடவே வல்லொலியில் ‘பொங்கலோ பொங்கல்’ என்றே!  – தமிழ நம்பி  

புரட்சி மிக்க பொங்கல்! – பா சங்கிலியன்

புரட்சி மிக்க பொங்கல்! – பா சங்கிலியன் கசப்பான இழப்புகள் நடக்கும் களத்தினிலும் எங்கள் வரிப்புலிகள் இனிப்பான பொங்கல் பொங்கித் தமிழரின் பண்பாட்டை தரணி எங்கும் பரப்பினர் தமிழர்கள் நாம் தமிழே மூச்சு தமிழ் மொழியே பேச்சென தலைநிமிர்ந்து வாழ்வோம் அடிமை நிலையை எதிர்ப்போம் அடுத்தவன் காலில் அண்டி வாழ்வதைத் தவிர்ப்போம் அறநெறி கற்க மறவோம் அம்மை அப்பரைத் தொழுவோம் எமக்கென ஓர் இடம் பிடிப்போம் எம்மவரை அங்கு ஆளவைப்போம் எளிமையை என்றும் மறவோம் எதற்கும் துணிந்து நிற்போம் பொங்கு தமிழாய் எழுவோம் புவியெங்கும்…

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 06 – இலக்குவனார் திருவள்ளுவன்

(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 05 தொடர்ச்சி) 06 உடல்நலன் பேணுக! வீரத்துடனும் வலிமையுடனும் திகழ அடிப்படைத் தேவை உடல்நலம் அல்லவா? எனவே, அதனையும் பாரதியார் வலியுறுத்துகிறார். பொலிவிலா முகத்தினாய் போ போ போ பொறியிழந்த விழியினாய் போ போ போ ஒலியிழந்த குரலினாய் போ போ போ ஒளியிழந்த மேனியாய் போ போ போ கிலி பிடித்த நெஞ்சினாய் போ போ போ என நலமற்ற தன்மையை விரட்டியடித்து நோய்களற்ற உடலினாய் வா வா வா (பக்கங்கள் 38-39 / போகின்ற பாரதமும் வருகின்ற…

இனிமைத் தமிழெடுத்து இதயம்குளிர வாழ்த்துவோம் ! : கந்தையா – செயம்

  ஆர்கலி  உலகிடை   மார்கழிப்   பெண்ணாள் ஆடிமுடித்தாள்  பின்அவள்  அடிஎடுத்து  வைத்து ” தை தை ” என     நடைபோட்டு  தையலவள்  நடந்ததால் தைத்திங்கள்   பிறந்ததோஅத்     தையே  தமிழ்ப் புத்தாண்டு !   தகுமிகு  முத்தமிழ்   முன்னோர் பத்தாயிரம்  ஆண்டாய்  பழக்கத்தில்  கைக்கொண்ட புத்தாண்டுக்   கொள்கை  பொங்கிய  கடல்பேரழிவில் புதைந்து  போனதை   விதந்தநம்   சான்றோர்கள்கூடி ஆய்ந்து   ஆய்ந்து  அறுபதாண்டின்   முதலாண்டை சிதைந்த   தமிழரிடம்  …

திருவள்ளுவர் நாளில் நாம் என்ன செய்ய வேண்டும் ?

 உலகத் தமிழர்களுக்கு அடையாளமாக விளங்கும் திருவள்ளுவருக்கு ஆண்டுதோறும் ஒரு நாள் கடைப்பிடிக்கப் படுகிறது. தமிழக அரசு இந்நாளை திருவள்ளுவர் நாளாக அறிவித்த போதிலும் இந்த நாளை உலகத் தமிழர்கள் எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்ற செய்தியைத் தமிழர்களிடைய அரசு கொண்டு செல்லவில்லை. தமிழ் அமைப்புகள் மட்டும் தங்களால் முடிந்தவரை சிறிய அளவில் இந்நாளில் நிகழ்சிகளை நடத்தி வருகின்றனர். உலகம் முழுவதும் இந்நாளில் அறியப்பட வேண்டிய திருவள்ளுவரின் புகழை இன்று தமிழர்களே அறியாத நிலை தான் இன்றுவரை நீடிக்கிறது. இந்த நிலையை நாம்தான் மாற்ற வேண்டும்….

தமிழண்ணலின் தமிழ் வாழ்வு – தமிழ்ச்சிவா

தமிழண்ணலின் தமிழ் வாழ்வு (ஆடி 28, 1956 – மார்கழி 13, 2046 / ஆக. 12, 1928 – திசம்பர் 29, 2015)     எண்பத்தெட்டாம் அகவைவரை வாழ்ந்து தமிழ் மொழிக்குத் தன்னாலான பல ஆய்வு நூல்களை வழங்கித், தமிழர் நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்துள்ளார், அறிஞர் இராம.பெரியகருப்பன் என்கின்ற தமிழண்ணல். ஆய்வுலகில் ஓர் தமிழரிமாவாகத் திகழ்ந்தார். கவிஞர், புதின ஆசிரியர், திறனாய்வாளர், பதிப்பாசிரியர், சொற்பொழிவாளர் எனப் பல முகங்களைக் கொண்டிருந்தவர்; தம்முடைய திறமையால் பல படிநிலைகளைக் கடந்தவர்; மொழிப்போர் வீரர்;…

வாயிலுக்கு வெளியேதான் ஓட வேண்டும்! – க.தமிழமல்லன்

என்நாட்டில் என்மொழியி்ல் எல்லாம் செய்வேன் எவன்தடுப்பான்? முன்வரட்டும் எலிபோல் சாவான்! என்வீட்டில் நான் பேசி வாழ்வ தற்கே எச்சட்டம் தடுக்க வரும்? நெருப்பில் வேகும்! என்அன்னைத் தமிழ்மக்கள் அமைத்தார் கோயில் எவன்தடுப்பான் தமிழ்உரிமை? கால்கள் போகும்! என்மக்கள் ஏமாறி வாழ்க்கை தந்தால் என்மொழியை உதைக்கின்றார் வாழ்க்கை சாகும்! சமற்கிருதம் எனச்செய்த மொழியை என்றும் சரியாகப் பேசியவர் எவரு மில்லை சமற்கிருதப் பிணந் தூக்கிப் பணத்தைஎண்ணிச் சமயத்தால் மேலேறிச் சாதி செய்தோர் நமக்குள்ளே வேற்றுமைத் தீ மூட்டிவிட்டார் நம்மவரே சமற்கிருதம் தூக்க லானார் சமற்கிருதம் செத்தமொழி…