சங்கக் காலத்தில் ஆரிய நம்பிக்கை அன்றாட வாழ்வில் இடம்பெறவில்லை – சு.வித்தியானந்தன்

சங்கக் காலத்தில் ஆரிய நம்பிக்கை அன்றாட வாழ்வில் இடம்பெறவில்லை. சங்க காலத்திலே தமிழகத்தில் அந்தணரும், முனிவரும் வாழ்ந்தனரெனினும் அவர்கள் செல்வாக்குப் பிற்காலத்தில் இருந்த அளவுக்கு மேம்பட்டிருக்கவில்லையெனக் கூறலாம். சங்க நூல்களில் ஆரிய நம்பிக்கைகளும், சமயக் கோட்பாடுகளும் கூறப்பட்டிருப்பது உண்மையே. ஆனால் பொதுவாக நோக்குமிடத்து மக்களின் அன்றாட வாழ்க்கையில் அவை இடம் பெறவில்லை எனலாம். நகர வாழ்க்கையில் இவற்றின் செல்வாக்கு சிறிது சிறிதாகப் பெருகிக்கொண்டே வந்தது. பொதுமக்கள் தங்கள் மூதாதையரின் வழிபாட்டு முறைகளையே பின்பற்றினர். -பேராசிரியர் முனைவர் சு.வித்தியானந்தன்

கண்ணன் வழிபாட்டைத் தமிழரிடம் இருந்து ஆரியர் கற்றனர் – சு.வித்தியானந்தன்

விட்டுணுவும் கண்ணனும் இதிகாசங்களிற் கண்ணன் விட்டுணுவின் ஓர் அவதாரமாகவும் ஒரு போர்வீரனாகவும் காட்சியளிக்கின்றான். அவனை ஒரு பெருந்தெய்வமாக அக்காலத்தில் மக்கள் கருதவில்லை. ஆரியர் தமிழரிடமிருந்தே கண்ணன் வழிபாட்டைப் பெற்றிருத்தல் வேண்டும். கண்ணன் உண்மையில் ஓரிடத்தில் நிலையாக இருந்து வாழ்ந்த இடையர் குலத் தெய்வமே. ஆரியர் பொருளாதாரத்தில் இடையராக இருந்தபோதும் அவர்கள் நாடோடிகளே. மேலும் கண்ணன் கருமை நிறம் வாய்ந்த தெய்வமாக இருப்பதும் அவன் தமிழ்த் தெய்வம் என்று கொள்வதற்கு அறிகுறியா அமையும் எனலாம். கருமை நிற மனிதர் என்று பழைய காலத்தில் ஆரியர் திராவிடரைக்…

தமிழ் முருகனுக்கும் ஆரிய யாகத்திற்கும் தொடர்பு இல்லை – சு.வித்தியானந்தன்

தமிழ் முருகனுக்கும் ஆரிய யாகத்திற்கும் தொடர்பு இல்லை திருமுருகாற்றுப்படையில் ‘திருச்சீரலைவாய்’ என்ற பகுதியில் ஆறு முகங்களும் பன்னிரண்டு கைகளும் உடைய முருகனின் திருவுருவம் கூறுப்படுகின்றது. இவனே சிவனின் மகனும் போர்க்கடவுளுமான ஆரியக் கற்பனையிலெழுந்த கார்த்திகேயன். மேற்கண்ட உருவ அமைதி ஆரியக் கடவுளான கார்த்திகேயனுடையது. தமிழரின் கடவுளான முருகனுக்கும் பார்ப்பனருக்கும் யாகங்களுக்கும் ஒரு வகையான தொடர்பும் இல்லை. ஆனால் மேற்கூறப்பட்ட திருமுருகாற்றுப்படையில் அவன் பார்ப்பனர் பாதுகாவலனாகக் கூறப்படுகின்றான். வள்ளியும் அவன் மனைவியாகக் கூறப்படுகின்றான். -பேராசிரியர் முனைவர் சு.வித்தியானந்தன்

சமக்கிருதத்திற்கும் தமிழ் மொழிக்கும் உள்ள வேறுபாடு மிகப்பலவாம். – மு.கதிரேசன்

சமக்கிருதத்திற்கும் தமிழ் மொழிக்கும் உள்ள வேறுபாடு மிகப்பலவாம்.    சமக்கிருத மொழியில் தமிழிற் போலத் திணைபாலுணர்த்தும் வினைவிகுதிகள் இல்லை. “பவதி” என்னும் வினைமுற்று “இருக்கின்றான்” “இருக்கின்றாள்” “இருக்கின்றது” என ஓர் ஈறே நின்று எழுவாய்க்கேற்றவாறு பொருளுணர்த்தும். தமிழில் வினை முற்றுகளின் ஈறே திணை பால்களை உணர்த்தி நிற்கும. பால வகுப்புத் தமிழிற் பொருளைப் பற்றியும், வடமொழியிற் சொல்லைப் பற்றியும் உள்ளது. ஆண் மகனைப் பற்றி வருஞ்சொற்களெல்லாம் ஆண்பாலாகவும், பெண்மகளைப் பற்றி வருவனவெல்லாம் பெண்பாலாகவும் தமிழில் உள்ளன. வடமொழியில் இவ்வறையறை இல்லை; மாறுபட்டு வரும், சொல்…

திருக்குறளில் வணிகவியல் மேலாண்மைக் கோட்பாடுகள் 3 – வெ.அரங்கராசன்

(ஆனி 20, 2046 / சூலை 05, 2015 தொடர்ச்சி) 3 16.0. வணிகவியல் வரைவிலக்கணம் 16.1. வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்      பிறவும் தமபோல் செயின்         [0120] .       வணிகத்திற்கு உரிய இலக்கணத்தை கடைப்பிடித்துப் பிறர் பொருளையும் தம் பொருள் போல மதித்து வணிகம் செய்வார் வணிகம், பெருகும்; பணப்பயனும் பெருகும். 17.0. இத் திருக்குறட் பா இவ் அதிகாரத்தில் ஏன்….? நடுவு நிலைமை அதிகாரத்தில் 0120 — ஆவது திருக்குறட் பாவைத் திருவள்ளுவர் ஏன் அமைத்தார்…..?      …

வெ.அரங்கராசனின் குறள்பொருள் நகைச்சுவை – குமரிச்செழியனின் நயவுரை

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திருவள்ளுவர் ஆண்டு சித்திரைத் திங்கள் 5 [18–-04—2015] அன்று திருக்குறள் எழுச்சி மாநாடு நடைபெற்றது.      அங்குத் தமிழ்மாமணி பேராசிரியர் முனைவர் பா. வளன் அரசு அவர்களின் தலைமையில் திருக்குறள் தூயர் மிகச்சிறந்த திருக்குறள் நுண்ணாய்வாளர் பேராசிரியர் முனைவர் கு. மோகனராசு நல்வாழ்த்துகளுடன் பேராசிரியர் வெ. அரங்கராசன் எழுதிய குறள் பொருள் நகைச்சுவை என்னும் நூல் வெளியிடப்பட்டது.      நூலை வெளியிட்டவர் சென்னை மாநிலக் கல்லூரியில் பணியாற்றும் இணைப்பேராசிரியர் முனைவர் முகிலை இராசபாண்டியன். முதல் படியைப் பெற்றுக்கொண்டவர் திருக்குறள் தூதர் சு. நடராசன். அந்நூலில் இடம்…

தாய்த்தமிழும் மலையாளமும் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்

(ஆனி 20, 2046 / சூலை 05, 2015 தொடர்ச்சி) தாய்த்தமிழும் மலையாளமும் 2 கி.பி. 1860-இல் தான் முதல் மலையாள இலக்கணம் இயற்றப்பட்டதாம். பதினைந்தாம்    நூற்றாண்டில் நீலதிலகம் எனும் மலையாள மொழியைப்பற்றிய நூல் ஆரிய மொழியில் இயற்றப்பட்டுள்ளதாம். எடுத்துக்காட்டுகள் தமிழிலிருந்தும் கன்னடத்திலிருந்தும் தரப்பட்டுள்ளனவாம்.[1] இந் நூலால்அறியப்படுவது மலையாளம் எனும் மொழி பதினைந்தாம் நூற்றாண்டில் தமிழாகவே இருந்தது என்பதாம். மலையாள உயர் இலக்கிய காலம் பதினாறாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டது என்று கூறலாம் என்பர் .[2]                மலையாள மொழிபற்றி அறிஞர் கால்டுவல் கூறும் கருத்துகள்…

பழந்தமிழர் எண்ணறிவியல் சிறந்து விளங்கினர் – சி.இலக்குவனார்

பழந்தமிழர் எண்ணறிவியல் சிறந்து விளங்கினர் தமிழில் வழங்கிய பேர் எண், கோடிக்கு மேற்பட்டது. தமிழர்கட்கு நூற்றுக்குமேல் எண்ணத் தெரியாது என்றும் ‘ஆயிரம்’ என்ற சொல் கூட ‘சகசிரம்’ என்ற ஆரிய மொழியின் திரிபு என்றும் தமிழர் நிலையைத் தக்கவாறு அறியும் வாய்ப்பில்லாத ஒரு மேலைநாட்டார் கூறிச் சென்றார். ‘ஆயிரம்’ என்பது தமிழே. அதற்கு மேல் நூறாயிரம், கோடி என்றும் எண்ணினர். ‘கோடி’ என்றால் கடைசி என்றும் பொருள் உண்டு. எண்ணுமுறையில் அதுதான் இறுதியானது என்பதை உணர்த்தும் முறையில் கோடி என்று பெயரிட்டுள்ளனர். அதற்குமேல் வரும்…

இனப்படுகொலைக்கு நீதி நம் கையில்! கைவிட்டு விடாதீர்கள்! – இ.பு.ஞானப்பிரகாசன்

இனப்படுகொலைக்கு நீதி கிடைப்பது இப்பொழுது நம் கையில்! தமிழர்களே! கைவிட்டு விடாதீர்கள்!    நெஞ்சார்ந்த உலகத் தமிழ் உறவுகளே! உங்கள் அனைவருக்கும் நேச வணக்கம்! கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை; இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து நம் யாருக்கும் புதிதாகச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த உலகத்தின் அத்தனைக் கோடி கண்களுக்கும் முன்னதாகத்தான் அந்தத் தாள முடியாத கொடுமை அரங்கேறியது. ஆனால், அதை இனப்படுகொலையாக இல்லாவிட்டாலும், குறைந்தது போர்க் குற்றமாக ஏற்கக் கூட இன்று வரை எந்த நாடும் முன்வரவில்லை. சரி, என்னதான் நடந்தது என…

சங்க இலக்கியத்தில் ஒலிச்சூழலமைவு – 3: மறைமலை இலக்குவனார்

(ஆனி 20, 2046 / சூலை 05, 2015 தொடர்ச்சி) பாடல் பெற்ற பல்வேறு ஒலிகள் அருவி ஒலி இயற்கையொலிகளில் அருவி ஒலியை மிகப் பெரிதும் சங்கச் சான்றோர் போற்றியுள்ளமைக்குச் சங்கப்பாடல்கள் சான்று பகர்கின்றன. ‘பெருவரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப’18 எனவும்‘அருவி விடரகத்து இயம்பும் நாட’19 எனவும் அதன் ஆரவாரத்தையும்“ஒலிவெள் ளருவி யோங்குமலை நாடன்”20 எனவும் ‘ஒல்லென விழிதரு மருவி’21எனவும் அதன் ஒலிச்சிறப்பையும் பதிவுசெய்துள்ளனர். ‘இன் இசை இயத்தின் கறங்கும் கல்மிசை அருவி’22என்று அருவியின் ஓசையை ஓர் இசைக்கருவியோசையாகவே அவர்தம் செவிகள் நுகர்ந்துள்ளன.’வயங்குவெள் அருவி…

தமிழர்கள் இனி்மேலும் தனியரசு காண்பார் – அ.க.நவநீதக்கிருட்டிணன்

தமிழ்வாழ்க! தமிழ்வாழ்க! என்று நீபாடு தமிழ்வெல்க! தமிழ்வெல்க! என்றுதினம் ஆடு தமிழை அழிப்பாரைத் தலைதுணிக்க ஓடு தமிழைப் பழிப்பாரைத் தவிடாகச் சாடு தமிழர்கள் உலகிலே தனியரசு கண்டார் தமிழர்கள் இனி்மேலும் தனியரசு காண்பார். – திருக்குறள் மணி அ.க.நவநீதக்கிருட்டிணன்

தகவல் அறியும் உரிமைச்சட்டமும் தள்ளாடும் அதிகாரிகளும் 4 – வைகை அனீசு

(சூன் 28, 2015 இதழின் தொடர்ச்சி) 4 உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்புகள்   பிரிவு 24: தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மத்திய அரசால் நிறுவப்பட்ட உளவு நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு இச்சட்டம் பொருந்தாது எனப் பிரிவு 24 கூறுகிறது. இதில், 25 வகையான நிறுவனங்கள் அடங்கும். இருந்தபோதிலும், இந்நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களில் நடைபெறும் ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து நாம் தகவல் கேட்டால் அதனைப் பொதுத் தகவல் அலுவலர் மறுக்கக் கூடாது;   தொடர்பான…