அழகு மங்கை

 –  அன்பு    இன்று மாலை  தெரிந்து விடும், யாருக்கு விருது என்று? தனக்குத்தான் கிடைக்கும் எனச் சிலரும், தனக்குக் கிடைக்குமா எனச் சிலரும், அவளுக்குக் கிடைக்கும், இவளுக்குக் கிடைக்கும் என்பதுபோல் சிலரும்,  இன்னாருக்குக் கிடைக்கக்கூடாது எனச் சிலருமாக எண்ணிக் கொண்டும் பேசிக் கொண்டும்  இருந்தனர். என்ன விருது என்று எண்ணுகிறீர்களா? ‘அழகு மங்கை’ விருது. உலக அழகி, நகர அழகி என்றெல்லாம் வழங்குவதுபோல், மங்கையர்க்கரசி பள்ளியில்   அழகியைத் தேர்ந்தெடுத்து, அழகி விருது வழங்குகிறார்கள். முதலில் ‘செல்வி மங்கை’ எனப் பட்டம் வழங்குவதாகத்தான் முடிவெடுத்தார்கள்….

இயற்கை எழில் !

வான்மிதந்து  சென்றடையும்  கதிரவனைத் தான்தழுவி  ஒளிஉமிழும்   தண்நிலவில் கண்நிறைந்த  காட்சிகாண  கடல்வெளியில் மண்மீது  படுத்தேன்என்  கண்முன்னே தொங்கிச்  சுழலும்இப்   பூமிப்பந்தில் தங்கிவாழும்  மக்கள்குலம்   தழைக்க பொங்கிவழியும்   அழகுடன்நம்  பூமித்தாய் இங்கிருக்கும்  மக்களுக்கே  படைத்தாள் குறிஞ்சிமுல்லை  குறையாத  மருதத்துடன்நாம் அறிந்த  நெய்தல்பாலை  எனப் படைத்தாளே ! ஐவகைநிலத்தை   அழகுடன்    பார்த்தேன் மூவகைத்   தமிழுடன்   முத்திரைபதித்து பாவகையுடன்  பைந்தமிழ்ப்  புலவர்கள் பாடக்கேட்டேன்  இயற்கை  எழில்பற்றி ! எங்கு   பார்க்கினும்   மக்களெல்லாம் பொங்கும்  மகிழ்ச்சியால்  பூரித்ததையும் வறுமையைப்  புறந்தள்ளி   வாழும் வளமையும்  கண்டேன்  நாட்டில் ! இயற்கை    அன்னை …

வந்தேறிக் குடிப்புகளின் கொடூரமும் தமிழர் குடிப்புகளின் நலத்தன்மையும்

– அசித்தர் படிப்போர் பயன் குறிப்பு ஓர் அயிரை – ஒரு கிராம் ஒரு குவளை – 250 அயிரை ஒரு சிறிய கரண்டி – 5 அயிரை ஒரு பெரிய கரண்டி – 15 அயிரை இந்நூலில் சக்கரை எனக் குறிப்பிடப்படுவது பனை வெல்லம் அல்லது பனஞ் சக்கரை – யையேயாகும். வெள்ளைச் சக்கரையை அல்ல. ( ) இவ்வகை பிறை அடைப்புக்குள் வரும் சொற்கள் பிறமொழிச் சொற்கள் ஆகும்.   எலும்பைக் கரைக்கும் குளிர் குடிப்புகள் கோடைக்காலததில் களைப்பைப் போக்க மட்டுமல்லாது…

கை வீசம்மா கை வீசு! – இளவல்

கை வீசம்மா கை வீசு! கடைக்குப் போகலாம் கை வீசு! புத்தகம் வாங்கலாம் கை வீசு! நன்றாய்ப் படிக்கலாம் கை வீசு! கை வீசம்மா கை வீசு! கடைக்குப் போகலாம் கை வீசு! பொம்மை வாங்கலாம் கை வீசு! ஆடி மகிழலாம் கை வீசு! கை வீசம்மா கை வீசு! கடைக்குப் போகலாம் கை வீசு! பழங்கள் வாங்கலாம் கை வீசு! பகிர்ந்து உண்ணலாம் கை வீசு! கை வீசம்மா கை வீசு! கடைக்குப் போகலாம் கை வீசு! ஆடை வாங்கலாம் கை வீசு!…

நீதான் கண்ணே அழகு! – அன்பு

  அம்மா!    நான் ஏம்மா அழகாய் இல்லை! யாரம்மா சொன்னது அப்படி? நீ அழகுதானே! போங்கம்மா! நான் சிவப்பாகவே இல்லையே! சிவப்பு நிறம் அழகு என்று யாரம்மா உன்னிடம் சொன்னது? எல்லா நிறமும் அழகுதான். காலச்சூழலுக்கேற்ப மக்கள் நிறம் மாறுபடுகிறது. சில நாடுகளில் மக்கள் அனைவருமே கருப்பாகத்தான் இருக்கின்றார்கள்! அப்படி என்றால் அந்த நாட்டில் அனைவரும் அழகற்றவர்கள் என்று ஆகுமா? இல்லைம்மா! என் முகம் கூட உருண்டையாக அழகாக இல்லையே! உருண்டையான முகம்தான் அழகு என்று யார் சொன்னது? எலும்பு அமைப்பிற்கேற்ப  முகவடிவமும் மாறும்….

என் தாய்

–    திருக்குறள் பாவலன் தமிழ்மகிழ்நன் 92802 53329     தாயுனைத் தொழுதுன் திருவடி பணிவேன்  தன்னலச் சேற்றினில் மாயேன்! கோயிலில் உறையும் கொற்றவை போலே   குடியினைக் காப்பவள் நீயே! சேயெமைக் காக்க சீரலொ மிழந்தாய்!   செல்வமே பிள்ளைக ளென்றாய்! ஓயுத லின்றி உழைப்பினைத் தந்தாய்!  உனக்கிலை ஒருவரு மீடே!   பற்பல தெய்வம் படைத்தன ரெனினும்  பண்புடை தாய்முதற்  தெய்வம் நற்றவம் செய்தேன் நானுனைத் தாயாய்  நல்லறப் பேற்றினால் பெற்றேன்!   வெற்றுரை யில்லை வெடித்தெழும் நெஞ்சின்   விழைவது அம்மையே…

தமிழிசை வாழ்கிறதா? வீழ்கிறதா? – 3

(முன் இதழ்த் தொடர்ச்சி) – இலக்குவனார் திருவள்ளுவன் பிடில் சீனிவாசையர், ‘தமிழிசைதான் தென்னிந்தியாவின் இசை. அது சூரியனைப் போன்றது. மற்ற இசைகளுக்கும்மற்ற மொழிகளுக்கும் இடம் கொடுக்கும் பாவம் தமிழிசைக்கு உண்டு. அதனாலேயே தமிழிசை கேடுற்றது. பயிரைக் கெடுக்க வந்த களைகளைப் பிடுங்கி எறிய வேண்டுமா? அவற்றோடு உறவு கொண்டாட வேண்டுமா?” என்று ஆணித்தரமாகக் கேட்டும் பரிதிமாற் கலைஞர் குறிப்பிடும் போலி ஆரியரதமிழிசையைப் புறக்கணிப்பதையே தம் தொழிலாகக் கொண்டுள்ளனர். அனந்தகிருட்டிணசர்மா என்பார்,’ தியாகையர் பாடலகள் இலக்கிய நயம் உடையன அல்ல. தியாகையர் பாடலுக்குத் தமிழர்களாலேயே முதன்மைகொடுக்கப்பட்டடது….

மாவீரர்நாள் உரைமணிகள் சில! – 5

(முன்னிதழ்த் தொடர்ச்சி)   போராளிகள் இனத்தைப் பேரழிவிலிருந்து பாதுகாத்து, எமது தாயக நிலத்தை அயலவனிடமிருந்து மீட்டெடுக்க எமது விடுதலை இயக்கம் அளப்பரிய  ஒப்படைப்புகளைச் செய்துள்ளது. எமது மாவீரர்களின் இம்மகத்தான  ஈகங்களால், எத்தனையோ தடவைகள் நாம் பேரழிவுகளின் விளிம்பிலிருந்து மீண்டிருக்கின்றோம். மரணத்தின் வாயிலுக்குச் சென்று மறுபிறவி எடுத்திருக்கின்றோம். வல்லாதிக்க  ஆற்றல்களின் தலையீடுகளைத் தனித்து நின்று தகர்த்திருக்கின்றோம். . . . . . . . . . . . . ஆயுத வன்முறையில் ஆசைகொண்டு நாம் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கவில்லை. இன அழிவை…

தேவயானியும் இந்திய அரசின் முகங்களும் – இதழுரை

  தேவயானி யார்? நாட்டிற்காக உழைக்கும் நல்லோர் எனப் பாராட்டு பெறுபவரா? மக்களுக்காகப் பாடுபடும் பண்பாளர் என்று  போற்றப் பெறுபவரா? பதவியில் நேர்மை மிக்கவர் என்ற சிறப்பைப் பெற்றவரா? இதற்கு முன்பு வரை ஆதர்சு ஊழல்தான்  அவர் அடையாளமாக இருந்தது. நாட்டிற்காக உயிர் நீத்த வீரர்களை மதிக்கும் வகையிலும் அவர்களின் குடும்பத்தினருக்கு உதவும் வகையிலும் மகாராட்டிர அரசு கட்டித்தந்ததுதான் ஆதர்சுவீடுகள். பொதுவாகவே அரசு குடியிருப்பில் பெறுவோர்  வேறு எங்கும் சொந்த   வீடு வைத்திருக்கக்கூடாது என்பதுதான் விதி. மகாராட்டிர அரசிலும் இந்த விதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால்…

பிற்பகல் விளையும் – ஆல்பர்ட்டு, விச்கான்சின், அமெரிக்கா.

“அரசு கிளம்பு! இப்பொழுது புறப்பட்டால்தான் இருட்டுமுன் தெட்டுராய்டு போய்ச் சேர முடியும்” என்றவாறு குமரன் வந்தான். திருநாவுக்கரசு பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கவே, “மூன்று நாள், கொண்டாட்டமாக இருந்துவிட்டு நாளைக்கு வேலைக்குப் போக வேண்டுமே எனக் கவலையாக இருக்கிறதா?” என்று மீண்டும் கேட்டான் குமரன். “ம்ம்… மகிழ்நனும் புகழும் ஆயத்தமாகி விட்டார்களா?” என்றவாறே அரசு படுக்கையை விட்டு எழுந்தான். “நாங்களெல்லாரும் கிளம்பியாகிவிட்டது! நீ என்ன தூங்கி விட்டாயா?” கேட்டுக்கொண்டே அறைக்குள் நுழைந்தான் மகிழ்நன். “இதோ! ஒரு நொடியில கிளம்பி விடுகிறேன். நீங்கள் புறப்படுங்கள்! நானும் குமரனும்…

தமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் – 4

கல்வியாளர் வெற்றிச் செழியன், செயலர், தமிழ்வழிக் கல்விக்கழகம். 1. தாய்த்தமிழ்ப் பள்ளி, வள்ளலார் நகர், திருப்பூர்     இப்பள்ளி 1995இல் வெள்ளியங்காடு பாரதி நகரில் குடிசையில் தொடங்கப்பட்டது.  முதல் ஆண்டின் தொடக்கத்தில் 25 குழந்தைகள் சேர்ந்தனர்.  குழந்தைகள் எண்ணிக்கை அவ்வாண்டின் முடிவில் 40 ஆகும்.  ஒவ்வோர் ஆண்டும் குழந்தைகள் எண்ணிக்கை உயர்ந்து 450 ஐ எட்டியது.     பல்வேறு சூழல்களால் ஏற்பிசைவு பெற முடியாது இருந்தது.  2002 இல் மக்களின் உதவியால் வள்ளலார் நகரில் சொந்த இடம் வாங்கப்பட்டுச் சிறுகசிறுகக் கட்டடங்கள்…

தமிழ் வரிவடிவம் காப்போம்! – 5

   தொகுநர்: சிவ அன்பு & இ.பு.ஞானப்பிரகாசன்  (22.11.2044 / 08.12.13 இதழின் தொடர்ச்சி)     தமிழுக்கு ஆங்கில எழுத்து வடிவத்தைப் பயன்படுத்தலாம் என்கிற முறையில் இவர் எழுதியுள்ளதை அவரது வழக்கமான கவன ஈர்ப்பு உத்தி என்பதாக மட்டும் பார்த்துவிடக் கூடாது.    அவரது ஒவ்வொரு நடவடிக்கையிலும் வெளிப்படும் ஆர்.எசு.எசு மனநிலை இதிலும் வெளிப்படுவதை நாம் கவனிக்கத் தவறலாகாது.    மொழிவாரி மாநிலம் என்பதை அவர்கள் ஏற்பதில்லை. மாறாக, இந்தியாவை எழுபதுக்கும் மேற்பட்ட சிறு நிருவாக அலகுகளாகப் பிரித்து ஆள வேண்டும் என்பது…