86. சனாதனத்தை எதிர்ப்பவர்கள் இந்துமதப் பகைவர்கள் என்கிறார்களே! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 85 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 86 அதே நேரம் இந்து மதம் என்பது குறித்த சிக்கலையும் பார்க்க வேண்டும். தமிழர்கள் இந்துக்கள் அல்லர். வடக்கே இருந்த ஆரியச் சமயத்தில் ஆட்கொள்ளப்பட்டார்கள். எனவே வடக்கே இருந்த இந்து சமயமாகத் திரிக்கப்பட்ட  ஆரிய/இந்து சமயத் தவறான கோட்பாடுகள், பழக்க வழக்கங்கள் முதலியவை இவர்கள் மீதும் ஏற்றப் பெற்றன. எனவே, இவர்களைத் தமிழர் சமயத்தவர் என்று சொல்ல வேண்டும். அப்படிச் சொன்னால் இந்து வேறு தமிழர் சமயம் வேறு என்று…

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ-17 (மழைமானி) : அன்றே சொன்னார்கள் 55 : இலக்குவனார்திருவள்ளுவன்

(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ-16 தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ-17 (மழைமானி) கட்டடச் சிறப்பு குறித்து நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். கட்டடக்கலையுடன் பிற அறிவியல் துறைகளின் சிறப்பும் இணைந்து விளங்குவதையும் காண்கிறோம். அத்தகைய அறிவியல் செய்தியில் ஒன்று, உயர்ந்த கட்டடங்களில் மழை அளவை அறிவதற்காக மழைமானியைப் பொருத்தி இருந்துள்ளனர் என்பதாகும்.கிரேக்கத்தில் கி.மு.5 ஆம் நூற்றாண்டில் மழைஅளவைப் பதிந்து வைத்ததாகக் குறிப்புகள் கிடைத்துள்ளன.  அதற்குப் பின்னர் கி.பி.நூற்றாண்டுகளில், கொரியா அல்லது சீனாவில் மழையை அளப்பதற்கான அளவி ஒன்றை (rain gauge) உருவாக்கியதாகவும் கூறுவர். தொடர்ந்து…

85. ஆளுநர் இரா.ந. இரவி 100 பட்டியலினத்தவருக்குப் பூணூல் அணிவித்ததைப் புரட்சியாகக் கூறுகிறாரே!

(சனாதனம் – பொய்யும் மெய்யும்  83. 84 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 85 பழைய நிகழ்வுகள் இரண்டைக் குறிப்பிட விரும்புகிறேன். பாரதியார் தனது சீடராகக் கருதிய தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இரா. கனகலிங்கம் என்பவருக்கு 1913 இல் பூணூல் அணிவித்திருக்கிறார். இதன் மூலம் அனைவரையும் சமமாக ஆக்கிவிட்டதாகவும் கனகலிங்கம் உயர்ந்து விட்டதாகவும் கருதினார். இதேபோல் புதுவை உப்பளம் சேரியில் உள்ள தேசமுத்துமாரி கோவில் அருச்சகரான சி. நாகலிங்கப் பண்டாரம் என்ற பட்டியலின இளைஞருக்கும் பாரதி பூணூல் போட்டு காயத்திரி மந்திரத்தைக் கூறியுள்ளார்….

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 16 : அன்றே சொன்னார்கள் 54 – இலக்குவனார் திருவள்ளுவன்

(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 15 தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 16 கட்டடச் சிறப்பிற்கு எடுத்துக் காட்டாக அரண்மனையைக் கட்டி எழுப்புவது குறித்து மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் நெடுநல்வாடை என்னும் இலக்கியத்தில் கூறி உள்ளதைப் பார்த்தோம். தொடர்ச்சியை இப்பொழுது காண்போம். வென்றெழு கொடியோடு வேழஞ் சென்றுபுகக்குன்றுகுயின்று அன்ன ஓங்குநிலை வாயில்திருநிலை பெற்ற தீதுதீர் சிறப்பின்தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து (நெடுநல்வாடை : 87—90) வெற்றிக்கொடியை யானைமீது அமர்ந்து பிடித்து உலா வருவது வழக்கம். அக் கொடி தாழவோ சாய்க்கவோ…

83. சனாதன் என்றால் புனிதம் என்பது சரியா? 84.சனாதனத்திற்கு ஆதரவாகப் பலரும் எழுதுவது சரியா?  – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 82 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும்  83. 84 ? 83. சனாதன் என்றால் புனிதம் என்பது சரியா? சனாதன் (சனாதனம்) என்ற சமற்கிருதச் சொல்லின் பொருள், மதத்தை விட்டுவிட்டுப் பொருள் தேடினால் புனிதமான, பழங்கால, மறையாத, நீண்டு நிலைக்கும், என்றைக்கும் பொருத்தமான என்ற துணைச்சொல் என்று விளக்கம் தருகிறார்களே! சனாதனக் குறள், சனாதன இசுலாம் என்று கூடக் கூறலாம். . . . புனித சேவியர், தூய மேரி எனக் கிறித்துவர் சேர்க்கும் துணைச்சொல்தான் ‘சனாதன்’…

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -15: அன்றே சொன்னார்கள் 53-இலக்குவனார் திருவள்ளுவன்

(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ 14 தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -15 வானளாவியும் அகன்றும் உருவாக்கிய பழந்தமிழர்  கட்டடப் பணிகளுக்கு எடுத்துக்காட்டாக நெடுநல்வாடை என்னும் இலக்கியச் சான்றை முன்னர்ப் பார்த்தோம். கட்டுமானப் பணி சார்ந்த தச்சுப்பணியைப் பற்றிய குறிப்பை இப்பொழுது காண்போம்.கட்டடம் கட்டும்பொழுது முதலில் வாயில் நிலைகளை அமைத்தல் இப்போதைய வழக்கம். இப்பழக்கம் காலங்காலமாக நம்மிடம் இருந்து வந்துள்ளது. எனவே, முதலில் உயர்ந்த வாயிலுக்கான நெடுநிலை அமைப்பது குறித்து ஆசிரியர் நக்கீரனார் பின்வருமாறு கூறி உள்ளார்:- பருஇரும்பு பிணித்துச், செவ்வரக்கு உரீஇத்துணைமாண் கதவம்…

82. சனாதனம், வருணாசிரமம் என்பனவெல்லாம் இப்பொழுது எங்கே உள்ளது எனக் கேட்பது சரிதானா? – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 81 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 82 ? 82.சனாதனம், வருணாசிரமம் என்பனவெல்லாம் இப்பொழுது எங்கே உள்ளது என்கிறார்களே! “ஆரியராவது! திராவிடராவது! எப்பொழுதோ எழுதி வைத்த பழைய சரித்திரத்தைப் பேசுவதற்கு இது காலமா? இரு சமூகமும் எவ்வளவோ ஆண்டுகளுக்கு முன் ஒன்றாகக் கலந்து விட்டன. இனப்பிரிவை உயிர்ப்பிக்க முனைவது நாட்டுக்கு நலமன்று என ஒரு சாரார் கூறிக் கொண்டே இருக்கின்றனர். எவ்வளவு விளக்கினாலும் அவர்கள் மரமண்டையில் உண்மை குடி போவதே இல்லை, ஆயினும் அடி மேல் அடி…

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -14 : அன்றே சொன்னார்கள் 52 – இலக்குவனார் திருவள்ளுவன்

(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 13 தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -14 பழந்தமிழ் நாட்டில் இன்றைய கட்டடங்களைப் போலவும் சில நேர்வுகளில் அவற்றை விடச் சிறப்பாகவும் கட்டடங்கள் கட்டப்பட்டமையைத் தொடர்ந்து பார்த்தோம். ஊர்களும் நகர்களும் நகரமைப்பு இலக்கணத்திற்கு இணங்க அமைக்கப்பட்டிருந்தமையும் கட்டட அமைப்பின் சிறப்புகளை உணர்த்துவதாகக் கருதலாம். இன்றைய மாதிரி நகர் அமைப்புபோல் அன்றைய ஊர்கள் அமைந்திருந்தன. பரிபாடல் இணைப்பு (8:1-6) நமக்கு ஊர் அமைப்பையும் அதன் மூலம் கட்டட அமைப்பையும் விளக்குகின்றது. புலவர் பின்வருமாறு அவற்றை விளக்குகிறார்  :…

சட்டச் சொற்கள் விளக்கம் 976-980 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 971-975 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 976-980 976. Attributable     பண்புக்கூறு         கற்பித்துக் கூறு உடைமையாக்கத் தக்க கற்பித்துக் கூறத்தக்க காரணம் கற்பித்தல் சாட்டத்தக்கது. சட்டத்தில், “பண்புக்கூறு” என்பது  குறிப்பிட்ட ஒருவர், நிகழ்வு அல்லது செயலால் ஏற்பட்டதாகவோ, விளைந்ததாகவோ ஒதுக்கப்பட்டதாகவோ கருதப்படுவதைக் குறிக்கிறது. இது பெரும்பாலும் ஒரு காரணத் தொடர்பு அல்லது பொறுப்பைக் குறிக்கிறது. கொத்தடிமைத் தொழிலாளர் முறை (ஒழிப்புச்) சட்டம், 1976(Bonded Labour System (Abolition) Act, 1976) பிரிவு (2):…

81. சனாதனத்தில் மட்டும்தான் மனிதன் கடவுள் ஆக முடியும். எடுத்துக்காட்டு ஐயா வைகுண்டர்- அண்ணாமலை: இந்தப் புளுகிற்கு என்ன விடை?

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 80 தொடர்ச்சி) சனாதனம் இல்லாத பிற சமயங்களில் தத்தம் மத மூலவரை அவர்கள் சிறந்து வாழ்ந்ததன் அடிப்படையில் கடவுளர்களாக மக்கள் கருதுகிறார்களே! சீர்திருத்தவாதியான ஐயா வைகுண்டரைச்  சனாதனி என்பது வரலாற்றுத் திரிபு, கயமைத்தனம். ஒடுக்கப்பட்ட மக்களைச் சாதிக்கொடுமைகளிலிருந்து மீட்க ‘ஐயா வழி’ என்னும் தனிச் சமயத்தை தோற்றுவித்தார் ஐயா வைகுண்டர். அவர் சனாதன வாதியாக இருந்தால் சனாதனத்திற்கு எதிராக தனியொரு சமயத்தைத் தோற்றுவித்திருப்பாரா? சனாதனத்தில் பிராமணர் அல்லாதார்க்கு கடவுளர் பெயரைச் சூட்டுவதற்குத் தடை உள்ளமையால், முடிசூடும் பெருமாள் எனப்…

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 13, அன்றே சொன்னார்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்

(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ 12 – தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 13 முன்னரே குறிப்பிட்டவாறு உயிரியறிவியலும் பயிரறிவியலும் தனியே பார்க்கப்பட வேண்டியவையே! இருப்பினும்  இங்கே நாம், கட்டட அறிவியல் குறித்துப் பார்த்தாலும் கட்டட அமைப்பிற்குத் துணைநிற்கும் தோட்ட வளர்ப்பு குறித்தும் கால்நடை வளர்ப்பு குறித்தும், சிறிது அறிவதும் பொருத்தமானதே என்பதால் நாம் மனைத்தோட்டம் குறித்துப் பார்த்தோம். இனி மனைவளர்ப்பு உயிரினங்கள் சில குறித்துக் காண்போம். தோட்ட அமைப்பைச் சார்ந்தே வீடுகள் அமைக்கப்பட்டமை போல் உயிரினங்களின் வளர்ப்பிற்கும் ஏற்ற அளவில் அவை சிறப்பாக…

80. பிராமணர்கள் அனைவரும் தமிழ்ப்பகைவர்களா?  – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 79 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 80 அப்படியில்லை. எல்லா வகுப்பினரிலும் தமிழ்ப்பகைவர்களும் உள்ளனர்; தமிழன்பர்களும் உள்ளனர். ஆனால் பிராமணர்களில் தமிழ்ப்பகைவர்கள் மிகுதியாக உள்ளனர். இதனடிப்படையில் பிராமணர்களை மூவகையாகப் பிரிக்கலாம். அ.) தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு தமிழுக்குத் தொண்டாற்றும் தமிழன்பர்கள் ஆ.) சமற்கிருதத்தைத் தாய்மொழியாகக் கருதி, அதற்கடுத்தாற்போல் தமிழை எண்ணும் இருமொழிப் பற்றர்கள். சமற்கிருதத்தை முதன்மைப் படுத்தித் தமிழை இரண்டாம் நிலைக்குத் தள்ளுவோர் இவர்களில் உள்ளனர். இ.) சமற்கிருதமே உயர்வு எனத் தவறாகக் கருதி, அதனை நிலைநாட்ட…