பேரறிஞர் அண்ணாவின் குமரிக்கோட்டம் – முன்னுரை
குமரிக்கோட்டம் முன்னுரை காலம் மாறுகிறது என்பதை அறிய மறுக்கும் வைதீகர்களில் சிலருக்குத் தமது சொந்த வாழ்க்கை யிலேயே, நேரிடும் சிலபல சம்பவங்கள், மனமாற்றத்தை ஆச்சரியகரமான விதத்திலும் வேகத்துடனும் தந்து விடுகின்றன. ‘குமரிக்கோட்டம் ‘ இக் கருத்தை விளக்கும் ஓர் கற்பனை ஓவியம். இதிலே காணப்படும் சீறும் தந்தை, வாதிடும் மகன், வசீகர மங்கை, உரோசம் நிரம்பிய அண்ணன், இவர்களை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் காணலாம். பெயர்கள், குழந்தைவேலர் என்றிராது; குமரி என்று இருக்காது. ஆனால், இவ்விதமான நிலைமையிலுள்ளவர்களை, நாட்டிலே காண முடியும். மகன் தலைகால்…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 49
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 48 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 18 “இப்போதைக்கு என்னை விட்டுவிடு அரவிந்தன். இராத்திரி ஒன்பது மணிக்கு மேல் அச்சகத்துக்கு வந்து அடி முதல் நுனி வரையில் எல்லா விவரமும் நானே சொல்லிவிடுகிறேன். திலகர் திடலில் ஆறரை மணிக்குப் பொதுக்கூட்டம். நான் அதில் பேசுகிறேன்” என்று பரபரப்பைக் காட்டிக் கொண்டு அரவிந்தனிடமிருந்து நழுவினான் முருகானந்தம். “இந்தப் பொதுக்கூட்டம், தொழிற்சங்கம், சமூகத்தொண்டு, ஏழைகளின் உதவி நிதிகள் – இவையெல்லாம் இனி என்ன கதியடையப் போகின்றனவோ? நீ காதல் வலையில் நன்றாகச் சிக்கிக் கொண்டு…
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 75
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 74. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 27 தொடர்ச்சி இரவு மூன்று மணிக்கு விழித்தபோது புயல் அடங்கி இருந்தது. மின்னலும் இடியும் களத்தைவிட்டு அகன்று ஓய்ந்திருக்கச் சென்றிருந்தன. காற்றுத் தோல்வியுற்று அடங்கி எங்கே ஒளிந்திருந்தது. மழையும் களைத்துச் சோர்ந்து விட்டாற்போல் சிறு சிறு தூறலாய் பெய்து கொண்டிருந்தது. எழுந்து போய்ச் சந்திரனைப் பார்த்தேன். பிதற்றாமல் புரளாமல் ஆடாமல் அசையாமல் இருந்தான். நல்ல அமைதியோடு உறங்குகிறான் என்று திரும்பி விட்டேன். மன அமைதி உள்ளபோது உடம்பும் நல்ல அமைதி பெறுவது…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 48
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 47 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்18 பரபரப்பினோடே பலபல செய்தாங்(கு)இரவு பகல் பாழுக்(கு) இறைப்ப – ஒருவாற்றான்நல்லாற்றின் ஊக்கிற் பதறிக் குலைகுலைபஎவ்வாற்றான் உய்வார் இவர். — குமரகுருபரர் மேற்கு வானத்திலிருந்து தங்க ஊசிகள் நீளம் நீளமாக இறங்குகிறாற் போல் மாலை வெயில் பொற்பூச்சுப் பூசிக் கொண்டிருந்தது. கண்களுக்கு நேரே மஞ்சள் நிறக் கண்ணாடிக் காகிதத்தைப் பிடித்துக் கொண்டுப் பார்க்கிற மாதிரி தெருக்களும், வீடுகளும், மரங்களும் மஞ்சள் கவிந்து எத்தனை எழில் மிகுந்து தோன்றுகின்றன! கோடானுகோடி நெருஞ்சிப் பூக்களை வாரிக்…
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 74
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 73. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 27 தொடர்ச்சி சிறிது பொறுத்து மறுபடியும் அதே போக்கில் பேசலானான். “நீ மண் அகலாக இருந்த காலத்தில் நான் பித்தளை அகலாக இருந்தேன். சிறிது காலம் பள பள என்று மின்னினேன். என் அழகையும் அறிவையும் அப்போது எல்லோரும் விரும்பினார்கள்; பாராட்டினார்கள். என்ன பயன்? வர வர, எண்ணெயும் கெட்டது, திரியும் கெட்டது. சிட்டமும் பிடித்தது. ஒளி மங்கியது. மங்கிவிட்டேன். நீதான் நேராகச் சுடர்விட்டு அமைதியாக எரியும் ஒளி விளக்கு” என்றான்….
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 47
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 46 தொடர்ச்சி) “நீ உடனிருந்து செய்யாவிட்டால் என்ன? உன்னுடைய சொற்பொழிவுதானே இந்தப் பொதுப்பணிக்கு இவ்வளவு பணம் வசூல் செய்து கொடுத்தது” என்று அவளுக்குச் சமாதானம் சொன்னான் அரவிந்தன். பூரணி, வசந்தா, சமையற்கார அம்மாள் மூவரையும் ஏற்றிக் கொண்டு கார் கொடைக்கானலுக்குப் புறப்பட்டது. அவர்களைக் கொடைக்கானலில் கொண்டுபோய் விட்டுத் திரும்பி வருமாறு சொல்லித் தன் காரை டிரைவருடன் அனுப்பியிருந்தாள் மங்களேசுவரி அம்மாள். அம்மையநாயக்கனூர், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு என்று மதுரைச் சீமையில் அழகிய ஊர்களையெல்லாம் ஊடுருவிக் கொண்டு கார் விரைந்தது. சாலை, மலைப்பகுதியில்…
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 73
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 72 தொடர்ச்சி) அத்தியாயம் 27 தொடர்ச்சி அந்த மோசக்காரி ஓ என்று கூச்சலிட்டாள். வந்தவர்கள் என் முதுகைப் பழுக்கப் பார்த்தார்கள். தாம்புக் கயிறு கொண்டு அடித்தார்கள். வீட்டுக்குத் திரும்பியபோது முதுகில் கறை இருந்ததை எப்படியோ மனைவி பார்த்து விட்டாள். என்னிடம் வாய் திறந்து கேட்கத் தைரியம் இல்லை. அழுதுகொண்டு போய் என் அத்தையிடம் சொல்லியிருக்கிறாள். அத்தை அப்போது இருந்தார். நான் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தபோது அத்தை என் முதுகுப்பக்கம் வந்து உட்கார்ந்து பார்த்து வருத்தப்பட்டிருக்கிறார். நான் விழித்தபோது வாசற்படிக்கு…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 46
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 45 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 17 தொடர்ச்சி “அதெல்லாம் கெடுதலாக ஒன்றும் இருக்காது. சீக்கிரம் அக்கா திரும்பி வந்துவிடுவாள்” என்று ஓதுவார்க்கிழவர் அவர்களைத் தைரியம் சொல்லிச் சமாதானப் படுத்தினார். அச்சகத்திலிருந்து திருநாவுக்கரசு டாக்டர் வீட்டுக்கு ஓடி வந்திருந்தான். அந்தச் சில மணி நேரத்தில் தன் மேல் அன்பு கொண்டிருந்த எல்லாரையும் கதிகலங்கிப் பரபரப்படையச் செய்துவிட்டாள் பூரணி. டாக்டர், அரவிந்தனிடம் வந்து கூறினார். “பயப்படுகிறார்போல் இப்போது ஒன்றுமில்லை. ஆனால் இப்படியே தொடர்ந்து நாள் தவறாமல் இரண்டு மூன்று பிரசங்கங்கள் வீதம் தொண்டையைக்…
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 72
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 71. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 27 தொடர்ச்சி “ஊரில் எல்லாரும் எப்படி இருக்கிறார்கள்? நீ ஒன்றுமே சொல்லலையே?” என்றான். “நீ ஒன்றும் கேட்கவில்லையே. எதைப் பேசினாலும் உடனே விம்மி விம்மி அழுகிறாய். அதனால் உடம்பும் கெட்டுப்போகிறது” என்றேன். “அழுவது ஒன்றுதான் இப்போது என் மனத்துக்கு மருந்தாக இருக்கிறது. உண்மையாய்ச் சொல்கிறேன் வேலு அழுத பிறகுதான் மனம் அமைதியாக இருக்கிறது. அழுவது நல்லது, மிக மிக நல்லது வேலு” என்றான். “ஊரில் எல்லாரும் நல்லபடி இருக்கிறார்கள். அப்பா இருக்கிறார்….
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 45
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 44 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 17 “எங்கோ இருந்தென்னை அழைக்கிறாய்,எங்கோ இருந்ததனைக் கேட்கின்றேன்.எங்கோ இருந்தென்னை நினைக்கின்றாய்!எங்கோ இருந்துன்னை நினைக்கின்றேன்!”+ பூரணிக்குக் கண்கள் இருண்டு கொண்டு வந்தது. உணர்வு நழுவிற்று. அடிவயிற்றில் இருந்து மேலே நெஞ்சுக்குழி வரையில் பழுக்கக் காய்ச்சிய இரும்புக்கோலை நுழைத்துக் குடைவது போல் ஒரு வலி ஏற்பட்டது. ‘அம்மா’ என்று ஈனக்குரலில் மெல்ல முனகியபடி மேடையில் நின்று பேசிக் கொண்டிருந்த இடத்துக்குப் பின்னால் போடப்பட்டிருந்த பிரம்பு நாற்காலியில் போய்ச் சாய்ந்தாள். பூத்து இரண்டு நாட்களான பின் ஒவ்வொன்றாகக் காற்றில்…
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 71
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 70. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 27 தொடர்ச்சி “நீ ஒன்றும் சொல்லாமலாவது இரு; சொல்லிவிட்டு இப்படித் துன்பப்படாதே” என்றேன். “எப்படி இருப்பேன் வேலு! எப்படி இருப்பேன்? நான் பேசாமல் இருந்தாலும் என் மனம் சும்மா இல்லையே. அது உள்ளே இருந்து வாட்டி வதைக்குதே. உன்னிடம் சொன்ன பிறகுதான் அது அடங்குது. நான் எப்படிச் சொல்லாமல் இருப்பேன்? அதோ நினைவு வருகிறதே! ஓர் ஏழைப் பெண், என்னால் சீரழிந்த பெண், என்னைப் போல் நோயாளி ஆய்விட்டாளே! அவளுக்கும் தொழுநோய்…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 44
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 43 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 16 தொடர்ச்சி “நீ வந்திருக்கிறாயா அம்மா? பெரிய வால் ஆச்சே நீ” என்று செல்லமாகச் சொல்லிக்கொண்டே அவளுக்கும் பூ வைத்து விட்டாள் பாட்டி. அப்போது அந்தக் கூடத்தில் குழுமியிருந்த சிறியவர்களும், பெரியவர்களுமான எல்லாப் பெண்களைக் காட்டிலும் பூரணி அதிக ஞானமுள்ளவள், அதிகப் புகழுள்ளவள், அதிகத் துணிவும் தூய்மையும் உள்ளவள். ஆனாலும் அங்கே நிற்கக் கூசிற்று அவளுக்கு. அவளுடைய கூச்சத்துக்கேற்றாற் போல் அவளை அதற்கு முன்னால் பார்த்திராத வெளியூர் பாட்டி ஒருத்தி அத்தனை பேருக்கு நடுவில்…
