அகல் விளக்கு – மு.வரதராசனார்: 70

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 69. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 27 தொடர்ச்சி வேலையாளைப் பார்த்து, நீ போ. இதோடு எட்டு மணிக்குச் சாப்பாடு எடுத்து வந்தால் போதும். இரண்டு பேர்க்குச் சாப்பாடு கொண்டு வா. இனிமேல் நான் மறுபடியும் சொல்லும் வரையில், எது கொண்டு வந்தாலும் இரண்டு பேர்க்கு என்று நினைவு வைத்துக்கொள்” என்றேன். உடனே, அன்று மாலையில் பச்சைமலையாரின் வீட்டுக்கு வருவதாகச் சொல்லி விட்டு வந்தது நினைவுக்கு வந்தது. “அப்படியே பச்சை மலையாரின் வீட்டுக்குப் போய் ஐயா இன்று வரமாட்டாராம்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  43

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  42 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்  16 தொடர்ச்சி அவள் அண்மையிலுள்ள வெளியூர்களுக்குச் சொற்பொழுவுகளுக்குப் போக நேரும் போதெல்லாம் மீனாட்சிசுந்தரமும் மங்களேசுவரி அம்மாளும் கார் கொடுத்து உதவினார்கள். முருகானந்தம் – வேறு ஓர் உதவியைச் செய்தான். உழைக்கும் மக்கள் நிறைந்த தனது பகுதியில் அடிக்கடி அவளுடைய தமிழ்ச் சொற்பொழிவுகள் நடைபெற ஏற்பாடு செய்து ஆயிரக்கணக்கான ஏழை மக்களைத் தமிழ்ச் செல்வியாகிய அவள் மேல் ஈடில்லா அன்பு கொள்ள வைத்தான். வாழ்க்கையில் மிக உயர்ந்ததொரு திருப்பத்தை நோக்கித் தான் விரைவாக வளர்ந்து கொண்டிருப்பதை…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 69

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 68. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 27 தொடர்ச்சி மூர்ச்சையாய் விழுந்து கிடப்பதை உணர்ந்தேன். முகமெல்லாம் வீக்கமும் தடிப்புமாக இருந்தன. “அய்யோ! சந்திரா!” என்று அழைத்து வருந்தினேன். வேலையாள் என் முகத்தைப் பார்த்துத் திகைத்து நின்றான். காப்பி வாங்கி வருமாறு சொல்லியனுப்பினேன். வழியில் சென்ற ஒரு டாக்சியைக் கூப்பிட்டு நிறுத்தினேன். மக்கள் மேலும் சிலர் கூடுவதைக் கண்டு, விரைந்து வீட்டுக்குப் போவதே நல்லது என்று உணர்ந்தேன். காப்பி வந்ததும், சந்திரனைத் திருப்பி அவன் வாயில் சிறிது விடச் செய்தேன்….

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  42

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  41 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்  16 அல்லற்பட்டு ஆற்றா(து) அழுத கண்ணீரன்றேசெல்வத்தைத் தேய்க்கும் படை. அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்பிற்பயக்கும் நற்பா லவை.      — திருக்குறள் முருகானந்தம் தன் இடுப்பிலிருந்த இடுப்புவாரை( ‘தோல் பெல்ட்’டை)க் கழற்றிக் கொண்டு அந்த ஆளை வாங்கு வாங்கென்று வாங்கி விட்டான். தையற்கடை வாயிலில் கூட்டம் கூடிவிட்டது. முருகானந்தத்தைத் தேடிக்கொண்டு தற்செயலாக ஏதோ காரியமாய் அரவிந்தன் அப்போது அங்கே வந்தான். அவன் குறுக்கே பாய்ந்து தடுத்திருக்காவிட்டால் முருகானந்தத்தின் சினம் எந்த அளவுக்குப் போயிருக்குமென்று…

‘பல்லக்குத் தூக்கி’ – 1100 பக்கங்கள் கொண்ட வரலாற்றுப் புதினம்

‘பல்லக்குத் தூக்கி’ – 1100 பக்கங்கள் கொண்ட வரலாற்றுப் புதினம்   கவிஞர் வேணு குணசேகரன் படைப்பில் 3 பாகங்கள் கொண்ட 1100 பக்கங்களில்  களப்பிரர், முத்தரையர் கால ஆட்சிப் பின்னணியில் மன்பதை நீதிக்கான வரலாற்றுப் புதினம் பல்லக்குத் தூக்கி பல்லக்குத்தூக்கி  நூல் வெளியீட்டின் முன்பதிவுத் திட்டம் நல்ல தாள், நேர்த்தியான அச்சு, உறுதியான கட்டமைப்பு, அத்தியாயங்களில் அழகிய ஓவியங்கள், 1/8 அளவில் ஏறத்தாழ 1100 பக்கங்கள் கொண்ட இந் நூலின் விலை உரூபாய் 1200/- ஆகும். முன்பதிவின் விலை: 5 படிகளுக்கு உரூபாய்…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 68

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 67. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 27 எப்படியோ இரண்டு ஆண்டுகள் வேகமாக உருண்டு ஓடின. ஒருநாள் தபால்காரர் ஒரு பணம்(மணியார்டர்) கொண்டு வந்து கையில் நீட்டினார். “நூறு உரூபாய்” என்றார். “எங்கிருந்து?” என்று சொல்லிக்கொண்டே அதைப் புரட்டிப் பார்த்தேன். மாலன், சோழசிங்கபுரம், வட ஆர்க்காடு மாவட்டம் என்று முகவரி கண்டதும் எனக்குப் பெரிய வியப்பாக இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகக் கடிதமும் எழுதாமல் மறைந்திருந்த ஒருவன் திடீரென்று நூறு உரூபாய் அனுப்பியிருந்தான் என்றால், என்ன என்று சொல்வது?…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 67

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 66. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 26 தொடர்ச்சி “என்ன தெரிந்துவிட்டது?” என்று அவளைக் கேட்டேன். அதற்குள் மாதவி மெல்லச் சுவரைப் பிடித்தபடியே நடந்து வந்து என் மடியின்மேல் ஏறித் தன் வாயைத் திறந்து நாக்கை நீட்டிக் காட்டினாள். “சரிதான். வாய்க்குள் நாக்கு இருப்பது தெரிந்து விட்டது என்கிறாள். அதுதானே நீ சொல்வது?” என்றேன். மனைவி சிரித்தாள். “சொல்வதைக் கேட்டுத் தெரிந்து கொண்டால் அதன் பிறகு சிரிக்கமாட்டீர்கள். உடனே போய்ப் பார்க்கலாம் என்று புறப்படுவீர்கள்” என்றாள். “உங்கள் வீட்டுக்காரர்…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 66

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 65. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 26 தொடர்ச்சி ஒரு மாதக் கடைசியில் வரவு செலவு பார்த்தபோது, ஈரோட்டு அப்பாவுக்காக ஐம்பது உரூபாய் என்று சொல்லாமல் மாலனுக்காக ஐம்பது ரூபாய் என்று சொல்லிவிட்டேன். அகப்பட்டுக் கொண்டேன். விடாமல் கேட்டாள். உண்மையைச் சொன்னேன். “அவ்வளவுதான், அந்த ஆயிரமும் போனதுதான். பணவகையில் அவர் மோசமான பேர்வழி என்று தெரிந்துதான் கற்பகத்தின் அப்பா பணம் கொடுக்க மாட்டேன் என்கிறார். நிலமாக எழுதி வைக்கிறார். எனக்கு இதுவரையில் சொல்லவில்லையே” என்று கடிந்தாள். “நண்பருக்கு ஒரு…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  39

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  38 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்15 “மங்கைய ராகப் பிறப்பதற்கே – நல்லமாதவம் செய்திடல் வேண்டும் அம்மாபங்கயக் கைநலம் பார்த்தலவோ – இந்தப்பாரில் அறங்கள் வளரும், அம்மா!”      — கவிமணி பூரணி கொண்டு வந்த தந்தியை முருகானந்தம் படித்தான். தன்னிடமிருந்த புகைப்படங்களையும் வசந்தா கைப்பட எழுதிய கடிதத்தையும் காட்டி அவளுக்கு விளக்கிச் சொன்னான். “திரைப்படத்தில் கதாநாயகியாய் நடிக்க வாய்ப்பு உண்டாக்கித் தருவதாக இப்படி எத்தனை பேரை ஏமாற்றிப் பணம் பறித்திருக்கிறானோ அந்த ஆள்? அவனுடைய போதாத வேளை; இங்கே…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 65

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 64. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 26   மேலும் ஒரு மாதத்திற்குள் என்னை ஈரோட்டிலிருந்து சென்னைக்கு மாற்றி உத்தரவு வந்தது. அருமையான நண்பரையும் காவிரியாற்றுத் தண்ணீரையும் விட்டுப் பிரிந்து போவது வருத்தமாக இருந்தது. “நான் அடிக்கடி சென்னைக்கு வருபவன். ஆகையால் நம் பழக்கம் எப்போதும் இருக்கும். அந்தக் கவலையே வேண்டாம். காவிரியாற்றுத் தண்ணீர்தான் அங்கே உங்களுக்குக் கிடைக்காது. வேண்டுமானால் நான் சென்னைக்கு வரும்போதெல்லாம், பெரிய காளத்தி கூசா நிறையத் தண்ணீர் பிடித்துக் கொண்டு வருவேன்” என்று நகர்மன்றத்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  38

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  37 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 14 தொடர்ச்சி   “வழி தவறுகிற இந்தத் துணிச்சல் எங்கிருந்து பழகத் தொடங்குகிறது என்பதுதான் எனக்கும் விளங்கவில்லை. இன்னும் சிறிது காலத்துக்குக் கணக்கும், வரலாறும், விஞ்ஞானமும் கற்றுக் கொடுப்பதை நிறுத்திவிட்டு ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் கற்றுக் கொடுக்கலாமா என்று கூடத் தோன்றுகிறது. சுதந்திரமும் உரிமைகளும் பெருகுவதற்கு முன்னால் படிக்காதவர்களில் சிலர் அறியாமையால் தவறு செய்து கொண்டிருந்தார்கள். இப்போதோ படித்தவர்கள், தவறுகளை அவை தவறுகளென அறிந்து கொண்டே செய்கிறார்கள். கீழ்நாட்டு வாழ்வின் அசௌகரியங்கள் நிறைந்த ஏழைக் குடும்பங்களிலிருந்து…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 64

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 63. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 25 தொடர்ச்சி   என் மனம் திடுக்கிட்டாற் போல் நின்றது. உணவை மறந்து அவருடைய புதிய கருத்தில் சென்றது. அவர், விட்ட மோர் இலையைவிட்டு ஓடி மனைவியின் இலைப்பக்கம் சென்றது. “அப்புறம் யோசிக்கலாம். சோற்றைப் பிசையுங்கள். மோர் தரையில் ஓடுகிறது” என்று மனைவி சொன்ன போதுதான் என் கைகள் கடமையை உணர்ந்தன. எண்ணிக் கொண்டே உண்டேன். உண்டு முடித்துக் கை அலம்பிய பிறகு, “மீரா செய்ததில் தவறு என்ன? கணவன் உயரவில்லை….