கொழும்பு இரோயல் கல்லூரிக்கு மாநிலக்கல்வி அமைச்சர் அதிரடி வருகை! – பா.திருஞானம்
கொழும்பு இரோயல் கல்லூரிக்கு மாநிலக்கல்வி அமைச்சர் அதிரடி வருகை! ஆசிரியர்களுக்கு உடனடி இடமாற்றம் மாநிலக் கல்விஅமைச்சர் வே. இராதாகிருட்டிணன் கொழும்பு அரசு(இரோயல்) கல்லூரியின் தமிழ்ப் பிரிவுற்கு வைகாசி 14, 2047 / 27.05.2016 அன்று அதிரடி வருகை ஒன்றினை மேற்கொண்டார். இதன் போது கல்லூரியின் அதிபர் தமிழ்ப் பிரிவிற்கான துணை அதிபர், தமிழ்மொழி மூலமான ஆசிரியர்களுடன் பாடசாலையின் குறைபாடுகள் குறித்துக் கலந்து உரையாடினார். இதன் போது மாநிலக்கல்வி அமைச்சரின் செயலாளர் திசஃகேவாவித்தான, மேலதிகச் செயலாளர் ஃகேவகே, கல்வி அமைச்சின் தமிழ்க்கல்வி மேம்பாட்டிற்குப் பொறுப்பான…
‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்
‘இலக்கியச் சோலை’ மாத இதழ் சார்பில் தந்தையர்நாள் நிகழ்ச்சி வைகாசி 30, 2047 / 12-06-2016 அன்று காலை, சென்னை, மயிலாப்பூர், பாரதிய வித்யா பவனில் நடைபெற இருக்கிறது. ‘அப்பா – அப்பப்பா’ தலைப்பில் கவியரங்கம். நீங்களும் பங்கேற்கலாம். பெயர் பதிவுக்குத் தொடர்பு கொள்க: 98405 27782.
புசல்லாவ இந்து தேசியக் கல்லூரியில் மண்சரிவுப் பேரிடர்
புசல்லாவ இந்து தேசியக் கல்லூரியில் மண்சரிவுப் பேரிடர்! பெற்றோர்கள் மாணவர்கள் அச்சத்தில்! தொடர்ந்து மலையகத்தில் காணப்படும் சீரற்ற காலநிலையில் புசல்லாவ இந்து தேசியக்கல்லூரி மண்சரிவு கண்டத்தை எதிர்நோக்கியுள்ளது. குறித்த கல்லூரியின் திடலில் இடி மின்னலுடன் மழை பெய்த வேளையில் ஏறத்தாழ 25 அடி ஆழமான குழி ஒன்று உருவாகியுள்ளது. இதன் எதிரொலியாகப் பாடசாலை கட்டடங்களில் சிறு சிறு வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால், மாணவர்கள் அச்சத்துடன் கல்வி பயின்று வருகின்றனர். நிலைமை தொடர்பாக ஊர்ச்சேவகர் ஊடாக உடபளாத்த பகுதிச் செயலாளருக்கும் பேரிடர் முகாமைத்துவ நிலையத்திற்கும்…
உருத்திரகுமாரனின் முள்ளிவாய்க்கால் 7ஆம் ஆண்டு நினைவுரைக் காணொளி
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர் உருத்திரகுமாரன் வழங்கிய நினைவுரைக் காணொளி https://www.youtube.com/watch?v=kp6pzZ2PAjY
மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் பிற பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி
முதலாம் ஆண்டு ஓவியப் போட்டி தேவகோட்டை: – தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் பிற பள்ளி மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு ஓவியப் போட்டி நடைபெற்றது. போட்டிக்கு வந்தவர்களை ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார். இளமழலை மாணவர்களுக்குத் தனியாகவும், 1முதல் 3ஆ ம்வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முதல் பிரிவாகவும், 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் பிரிவாகவும் போட்டிகள் நடைபெற்றன. பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். இப்போட்டிகளில் தேவகோட்டையில் உள்ள பல்வேறு அரசு,…
வீடுகள் வெடிப்பு, நிலம் தாழ் இறக்கம் காரணமாக 37 குடும்பங்கள் இடம் பெயர்வு
வீடுகள் வெடிப்பு, நிலம் தாழ் இறக்கம் காரணமாக 37 குடும்பங்கள் இடம் பெயர்வு கலஃகா, மேல் கலஃகா தோட்டத்தில் வீடுகள் பாரிய அளவில் வெடிப்பதினாலும் தாழ் இறங்குவதினாலும் 37 குடும்பங்களைச் சேர்ந்த 110 பேர் இடம் பெயர்ந்து தோட்டப் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் வரிசை இலக்கம் 03, இலக்கம் 04 ஆகியன பாரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. வரிசை இலக்கம் 01, வரிசை இலக்கம் 02, 04 குடியிருப்புகள் உள்ள இன்னொரு வீட்டுத் தொகுதி, 02 தனி வீடுகள்…
வட்டுக்கோட்டை இந்து இளைஞர் சங்கத்தின் மருத்துவ உதவிகள்
வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன. கடந்த காலப் போரின் போது தனது ஒரு காலினை இழந்து இருப்பதற்கு ஒழுங்கான வீடு இன்றிப் படுக்கைப் புண்ணுடன் அவதியுற்று வந்த கிளிநொச்சி மாவட்டம் இரணைமடு பாரதிபுரத்தைச் சேர்ந்த சந்தானம் சசிக்குமார் அவர்களுக்கு எமது புலம்பெயர் உறவான இலண்டனைச் சேர்ந்த தி.இலக்சனா, நந்தனா ஆகியோரின் பிறந்த நாளினை முன்னிட்டு அவரது தந்தை மருத்துவர் செ. திலகன் அவர்களின் நிதி அன்பளிப்பின் ஊடாக இவ் மருத்துவ உதவி வழங்கப்பட்டுள்ளது. இதன்…
பாரிய நிலவெடிப்பு 48 குடும்பங்களைச் சேர்ந்த 110 பேர் இடம் பெயர்வு
பாரிய நிலவெடிப்பு 48 குடும்பங்களைச் சேர்ந்த 110 பேர் இடம் பெயர்வு கல ஃகா, துனாலி, மல்பேரி பிரிவு ஊரில் காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட பாரிய நில வெடிப்பின் காரணமாக 48 குடும்பங்களைச் சேர்ந்த 191 பேர் இடம் பெயர்ந்து துனாலி தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாகத் தங்கியுள்ளனர். குறித்த பகுதியில் பல இடங்கில் பாரிய நில வெடிப்பு ஏற்பட்டுள்ளதுடன் வீடுகள் வெடித்துள்ளன மரங்கள் சாய்துள்ளன. சில மரங்கள் சாயும் நிலையில் காணப்படுகின்றன. நீர் ஓட்டம் மற்றும் கசிவு அதிகமாகக் காணப்படுகின்றன. இதனால் இவர்களைக்…
இலங்கையில் நல்லாட்சியா ? பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் !
இலங்கையில் நல்லாட்சியா ? பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ! நல்லாட்சி என்ற மாயைக்குள் இலங்கைத்தீவில் தொடர்ந்தும் நடந்தேறும் மனித உரிமைமீறல்களை அம்பலப்படுத்தி இலண்டனில் கவனயீர்ப்புப் போராட்டமொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. தொடர்கின்ற கைதுகளைக் கண்டித்தும், வெள்ளைஊர்தி(வான்) கடத்தலுக்கு எதிராகவும், புலம்பெயர் தேசங்களில் இருக்கின்றவர்களைத் திருப்ப அனுப்ப வேண்டா எனத் தெரிவித்தும் இக்கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறுகின்றது. பிரித்தானிய அரசிற்கு இக் கோரிக்கைகளை முன் வைக்கும் அதேநேரம், பிரித்தானிய அரசாங்கம் சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று…
இந்தியன் குரல் : சட்ட விழிப்புணர்வுப் பயிற்சி முகாம்கள்
சமூக ஆர்வலர்களே ! வணக்கம். ஒருவர் ஆற்றிலோ கடலிலோ விழுந்தால் காப்பற்ற யாரேனும் வருவார்கள். ஆனால் அவர்களே சாக்கடையில் விழுந்தால் அவர்கள் அண்மையில் இருப்பவனும் நாற்றம் தாங்காமல் ஓடிவிடுவானே ஒழிய காக்க வரமாட்டான். “யாராவது காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்!” என்று கூவிக்கொண்டுதான் இருப்பான். அதுபோலவேதான் நம் மக்கள் நல்லவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று கூவுவதும். அவர்களைக் கொண்டு தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதும் நடக்கிறது யாராவது அரசியலுக்கு வரவேண்டும் என்பதும் வந்தவர்களை வாழ்த்தி வரவேற்பதும் உங்களைச் சாக்கடையில் தள்ளிவிட்டு நாங்கள் வேண்டியதை பெற்றுக்கொண்டு தப்பி ஓடுகின்றோம் என்று அம்மக்கள் உணர்த்தத்தான். இதையறியாமலோ அறிந்தோ சமூக ஆர்வலர்களும்,…
அறிவிப்பு: 3 திங்கள், அகரமுதல இதழில் குறைவான பதிவுகளே மேற்கொள்ளப் பெறும்.
அறிவிப்பு : 3 திங்கள், அகரமுதல இதழில் குறைவான பதிவுகளே மேற்கொள்ளப் பெறும். அன்புடையீர் வணக்கம். வேறு சில பணிகளால், இனி வரும் மூன்று திங்கள், அகரமுதல இதழில் குறைவான பதிவுகளே மேற்கொள்ளப்பெறும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம். ஆசிரியர், அகரமுதல
அழிந்து வரும் நிலையில் ஃகெல்சிரிகம பேருந்து நிலையம் – பா.திருஞானம்
அழிந்து வரும் நிலையில் பேருந்து நிலையம் கொத்(து)மலை பகுதிக்குட்பட்ட ஃகெல்பொட தோட்டம் ஃகெல்சிரிகம பகுதியில் காணப்படும் பேருந்து நிலையம் அண்மைக் காலமாக உடைந்து காணப்படுகின்றது. இதனால் இந்தப் பேருந்து தரிப்பிடத்தைப் பாவித்து வரும் பயணிகள், பாடசாலை மாணவர்கள், பல இன்னல்களைத் துய்த்து வருகின்றனர். இந்தப் பேருந்து தரிப்பிடத்தில் நுவரெலியா, வெளிமடை, பண்டாரவலை, பதுளை, தியத்தலாவ, கதிர்காமம், பூண்டுலோயா பகுதிகளில் இருந்து கண்டி, கொழும்பு, யாழ்ப்பானம், கம்பளை போன்ற இடங்களுக்குச் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன. நாளாந்தம் 1000 த்திற்கு மேற்பட்ட பயனிகள் பாவித்தும் வருகின்றனர்….
