இன்றியமையா உணவுப் பொருள்களை இலவசமாக வழங்குக! – கு.இராமக்கிருட்டிணன்
இன்றியமையா உணவுப் பொருள்களை இலவசமாக வழங்குக! – கு.இராமக்கிருட்டிணன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் இன்றியமையா உணவுப் பொருள்களை நியாய விலைக் கடைகளில் இலவசமாக வழங்க வேண்டும் என்று மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநிலச் செயலர் இராமக்கிருட்டிணன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாகச் சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: வெள்ளத்தின் காரணமாக ஏராளமானோர் தங்கள் உடைமைகளை இழந்து தவிக்கின்றனர். இந்தச் சூழலைப் பயன்படுத்தி இன்றியமையாப் பொருள்களின் விலை மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், இலவசப் பேருந்து பயண வசதி செய்துள்ளதுபோல…
50 ஆயிரம் கோடிக்கு மேல் தேவை! – திருமாவளவன்
சீரமைப்பதற்கு ஏறத்தாழ உரூ. 50 ஆயிரம் கோடிக்கு மேல் தேவை! – திருமாவளவன் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கவும், சேதமடைந்துள்ள சாலைகள், பாலங்கள் போன்ற கட்டமைப்புகளைச் சீரமைப்பதற்கும் ஏறத்தாழ உரூ. 50 ஆயிரம் கோடிக்கு மேல் தேவை என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ”கடந்த ஒரு மாத காலமாக மழை, வெள்ளத்தால். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர்முதலான கடலோர மாவட்டங்கள் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாகச், சென்னை மாநகரம்…
துயரீடுகள் வழங்குவதில் அ.தி.மு.க அரசு மெத்தனம் – தாலின் குற்றச்சாட்டு!
ஒட்டிகள் ஒட்டுவதில் காட்டும் அக்கறையைப் பொருள்கள் வழங்குவதில் காட்ட வேண்டும்! கும்மிடிப்பூண்டியில் ஏறத்தாழ உரூ. 10 இலட்சம் மதிப்புள்ள துயரீட்டு உதவிகளை வழங்க வந்த தி.மு.க பொருளாளர் மு.க..தாலின் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துயரீடுகள் வழங்குவதில் அ.தி.மு.க அரசு மெத்தனம் காட்டுவதாகக் குற்றம் சாட்டினார். திருவள்ளூர் வடக்கு மாவட்டத் தி.மு.க சார்பில் கும்மிடிப்பூண்டி வட்டத்திலுள்ள 61 ஊராட்சிகளைச் சேர்ந்த 81ஊர்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1000பேர்களுக்கு மழை வெள்ளத்துயரீடுகள் வழங்கப்படும் நிகழ்வு கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி…
உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும்! – வைகோ
உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும்! – வைகோ இராசீவுகாந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். சனிக்கிழமை, இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: இராசீவுகாந்தி கொலை வழக்கில் 7 தமிழர்களை விடுதலை செய்வது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி முதலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வில் நடைபெற்றது. இந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில், மரணத் தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர்த் தண்டனை குறைக்கப்பட்ட…
வெளியூர்ப் பேருந்துகளையும் கட்டணமின்றி இயக்க வேண்டும் – இராமதாசு
வெளியூர்ப் பேருந்துகளையும் கட்டணமின்றி இயக்க வேண்டும்! மதுக்கடைகளை மூட வேண்டும்! பாமக நிறுவனர் இராமதாசு வலியுறுத்தல்! சனிக்கிழமை, இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:- பாதிக்கப்பட்டோருக்கு அரசு சார்பில் உணவு முதலான உதவிகளை வழங்குவதுடன், மற்றவர்களையும் உதவி செய்ய அனுமதிக்க வேண்டும். வெள்ளம் தேங்கிய பகுதிகளில் நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் உள்ளூர்ப் பேருந்துகள் மட்டும் இலவசமாக இயக்கப்படும் நிலையில், பாதிக்கப்பட்டோர் சொந்த ஊர் செல்ல வசதியாக வெளியூர் செல்லும் பேருந்துகளையும் இலவசமாக இயக்க வேண்டும். வெள்ளத் துயர்…
மயானம் கிடைக்காமல் இன்னலுற்ற விக்கிரமனின் இறுதிச் சடங்கு – மானா பாசுகரன்
மழை பாதிப்பினால் மயானம் கிடைக்காமல் இன்னலுற்ற புகழ்மிகு எழுத்தாளர் விக்கிரமனின் இறுதிச் சடங்கு: சென்னையில் 4 நாள் அவதிக்குப் பிறகு எரியூட்டல் கடந்த 1-ஆம் நாள் புகழ்மிகு எழுத்தாளரும், ‘அமுதசுரபி’ இதழின் முன்னாள் ஆசிரியருமான விக்கிரமன் காலமானார். இவரது உடல், மழை வெள்ளம் காரணமாக உடலை பாதுக்காக்கும் உறைகலன் பேழை கிடைக்காமல், எரியூட்ட மயானம் கிடைக்காமல் 4 நாட்கள் கடும்அவதிக்குப் பிறகு 4- ஆம் நாள் நண்பகல் எரியூட்டப்பட்டது. ‘நந்திபுரத்து நாயகி’, ‘வந்தியத் தேவன் வாள்’ ‘இராசராசன் சபதம்’ முதலான புதினங்களை எழுதியவர்…
பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையாக உதவுக: விசயகாந்து வேண்டுகோள்!
அரசியல் ஆதாயம் தேடாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையாக உதவுக: அரசுக்கு விசயகாந்து வேண்டுகோள்! அதிமுகவினர் துயர்துடைப்புப்பணி செய்வதுபோன்று படம்காட்டுவதை நிறுத்திவிட்டு, அரசியல் ஆதாயம் தேடாமல், மனிதாபிமானத்தோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்று தேமுதிக தலைவர் விசயகாந்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ”சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையின் கோரதாண்டவத்தால், சென்னை, புறநகர்ப் பகுதிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகி வெள்ளக்காடாக மிதக்கின்ற நிலையில், தற்போதைய முதன்மைத் தேவை மழைநீரை வடியச் செய்வதும், செய்வதறியாது திகைத்து நிற்கின்ற பொதுமக்களுக்குக்…
துயரீட்டுப்பணிகளில் சென்னை மாநகராட்சி
துயரீட்டுப்பணிகளில் சென்னை மாநகராட்சி சென்னையில் துப்புரவுப் பணிகளை தீவிரப்படுத்தக் கூடுதலாக 1,139 துப்புரவுப் பணியாளர்கள் பிற மாநகராட்சி, நகராட்சிகளில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி இது தொடர்பாக வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னையில் கடந்த இரு நாட்களாக மழை குறைந்துள்ள நிலையில், துப்புரவுப் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப் பணியில் மாநகராட்சிப் பணியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள் என மொத்தம் 22 ஆயிரத்து 500 பேர் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மாநகராட்சியில் துப்புரவுப் பணியைத் தீவிரப்படுத்தும்…
சிற்றிதழ் அறிமுகம் – பரணி
தரணி போற்றும் தாமிரபரணி ஆற்றங்கரையிலிருந்து(நெல்லை) தமிழ்ப்போர்ப்பரணி பாடப் புத்தாண்டில் களம் புகுகிறது படைப்புகள் அனுப்ப வேண்டிய முகவரி : ந. செயபாலன், காவேரிச் சாலை, 3- ஆவது முதன்மைச் சாலை, கோடீசுவரன் நகர் – திருநெல்வேலி -627 006 பதிவு: பெரம்பலூர் கிருசு இராமதாசு, துபாய்
‘முயற்சி’ குறித்த படைப்புகளைத் தமிழ்த்தேர் வரவேற்கிறது!
தமிழ்த்தேரின் அடுத்தத் தலைப்பு: உங்கள் படைப்புகள் கார்த்திகை 23, 2046 / 09.12.2015க்குள் வரவேற்கப்படுகின்றன. முழுதாய் எண்ணம் வெற்றிபெறவே முதலாய் வேண்டும் முயற்சி! பழுதாய் எண்ணம் மாறிவிடாமல் பாதுகாப்பதும் இங்கே முயற்சி! ஒருமுகச் சிந்தனை உள்ளொளியெல்லாம் திருவினையாக்கும் முயற்சி! அறவழிப் பயணம் ஆக்கத்தை ஈட்டும் அடிப்படை அங்கே முயற்சி! வெற்றியின்படிகள் விலாசங்களெல்லாம் செப்பும் பெயரே முயற்சி! பூமலர் காய்கனி யாவுமே இங்குகாண் வேர்களின் இடைவிடா முயற்சி! தடைகளைத் தகர்த்திடும் நெஞ்சுரம்கொண்டிடின் வெற்றியை ஈட்டிடும் முயற்சி! தகத்தகதகவென வாகைசூடியே தரணியில் வலம்வரும்…
விண் தொலைக்காட்சி எதிரும் புதிரும் நிகழ்ச்சியில் இலக்குவனார் திருவள்ளுவன்
விண் தொலைக்காட்சியில் கார்த்திகை 12, 2046 / நவம்பர் 28, 2015 சனிக்கிழமை இரவு 7.00 மணிக்கு ஒளிபரப்பாகும் எதிரும் புதிரும் நிகழ்ச்சியில் நான் பங்கேற்கிறேன். இந்திய நாடாளுமன்றத்தில் இந்திய அரசியல் யாப்பு, அம்பேத்கார்,நேரு குறித்து நடைபெறும் வாதுரை தொடர்பான வாதுரையாக இந்நிகழ்வு அமையும். மறு ஒளிபரப்பு இன்று யாமம் 1.00 மணி. http://wintvindia.com இணையத் தளத்திலும் காணலாம். வாய்ப்புள்ளவர்கள் காண்க. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் தமிழே விழி! தமிழா விழி!
திருவள்ளுவர் நாட்குறிப்பேடு – 2016, வாங்கிப் பயனுறுக!
2016ஆம் ஆண்டிற்கான தமிழ் நாட்குறிப்பேடு வாங்கிப் பயனுறுக! எமது பன்மைவெளி வெளியீட்டகத்தின் சார்பில், 2016ஆம் ஆண்டிற்கான தமிழ் நாட்குறிப்பேடு (Dairy), சிறப்பாக ஆயத்தமாகியுள்ளது. ஒவ்வொரு பக்கத்திற்கும் தனித்தாள் (மொத்தம் 400 பக்கங்கள்) ஒவ்வொரு தாளிலும் அந்த நாளுக்குரிய வரலாற்று நிகழ்வுகள் (ஆண்டுக் குறிப்புகளோடு) உலகறிந்த தலைவர்களின் பிறந்த நாள் – நினைவு நாள் குறிப்பு நாடுகள் விடுதலை பெற்ற குறிப்புகள் திருக்குறள், புறநாநூறு, பாரதிதாசன் வரையிலான உரையுடன் கூடிய நற்செய்திக் குறிப்புகள் எனப் பல்வேறு செய்திகளும், ஒவ்வொரு நாளுக்கும் தமிழ் எண், தலைவர்களின்…
