ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை அமைய உதவுங்கள்!

ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை அமைய உதவுங்கள்!   உலகின் மிகவும் புகழ் வாய்ந்த பல்கலைக்கழங்களில் ஒன்றான ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் தனியாகத் தமிழ்துறை ஒன்று தொடங்கப்படவுள்ளது.   ஆறு பேராயிரம்(மில்லியன்) அமெரிக்க தாலர்கள் முதலீட்டில் இந்தத் துறை அங்கே தொடங்கப்படவுள்ளது என இந்த முன்னெடுப்பைச் செய்தவர்களில் ஒருவரான   மருத்துவர் விசயராகவன் சானகிராமன் பி.ஒ.நி. / பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.   அவரும் அவரது நண்பரும் மருத்துவருமான திருஞானசம்பந்தனும் ஆளுக்கு அரை நூறாயிரம் தாலர்களை இதற்காக அளித்துள்ளதாகவும், எஞ்சிய ஐந்து பேராயிரம்(மில்லியன்) தாலர்களை வட அமெரிக்காவில் வாழும்…

வைகை அனிசு தாயார் மும்தாசு பேகம் மறைவு

  ‘அகரமுதல’ இதழின் சிறப்புச் செய்தியாளரும் கட்டுரையாளரும், தனக்கென ஒரு வாசகர் வட்டத்தை உடையவருமான தமிழ்நாடு இதழ்கள் ஊடகச் செய்தியாளர்கள் ஒன்றியத்தின் தேனி மாவட்டச் செயலாளரும், இதழ்கள், தொலைக்காட்சிகளின் செய்தியாளரும், வரலாற்றுக் கட்டுரையாளரும் கல்வெட்டு ஆய்வாளரும் தொல்லியல் சார் படைப்பாளருமான வைகை அனிசு அவர்களின் தயாரும் காலஞ்சென்ற ஆசிரியர் அப்துல்வகாப்பின் மனைவியுமான ஓய்வு பெற்ற ஆசிரியர் மும்தாசு பேகம் அவர்கள் இன்று (ஆடி 31, 2046 / ஆகத்து 16, 2015) காலை 8.30 மணியளவில் இயற்கை எய்தினார். அவருடைய உடல் நல்லடக்கம் தேவதானப்பட்டி…

தேவதானப்பட்டியில் விடுதலை நாளன்று மதுவிற்பனை மிகுதி!

தேவதானப்பட்டியில்  விடுதலை நாளன்று  மதுவிற்பனை  மிகுதி! தேவதானப்பட்டியில் விடுதலை நாளன்று மதுவிற்பனை  மிகுதியாக  நடைபெற்றது. தேனிமாவட்டத்தில் விடுதலை நாளன்று மதுபானக்கடைகள் அனைத்திலும் மது விற்பனை செய்யக்கூடாது என அரசாணைக்கிணங்க மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். மாவட்ட ஆட்சியர் உத்தரவை மீறி தேவதானப்பட்டிப் பகுதியில் உள்ள அரசு- தனியார் மதுபானக்கடைகளில் மதுபான விற்பனை  வெகுவாக நடைபெற்றது. தேவதானப்பட்டியில் உள்ள தனியார் மதுபானக்கடை, வடுகப்பட்டியில் உள்ள அரசு மதுபானக்கடை, குள்ளப்புரம் பகுதிகளில் பெட்டிக்கடைகளில் மதுபானம் விற்பனை  எனப் பரலாவகவும் மிகுதியாகவும் நடைபெற்றது. ஒரு  குப்பிக்கு உரூ.50 வீதம் கூடுதலாக…

அமீரகத்தில் கோடை விழாக்கள்

 அமீரகத்தில் கோடை விழாக்கள்    அபுதாபி : அமீரகத்தில் கோடை விழாவினையொட்டி அபுதாபி, துபாய் முதலான பல்வேறு பகுதிகளில் உள்ள வணிகவளாகங்களில் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் குழந்தைகள் பங்கேற்று தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்துவதை காணலாம். – முதுவை இதாயத்து  

கழிப்பறை கட்ட உரூ.3000 கையூட்டு – ஊரவைக் கூட்டத்தில் பயனாளிகள் முறையீடு

கழிப்பறை கட்ட உரூ.3000 கையூட்டு  ஊரவைக் கூட்டத்தில் பயனாளிகள் முறையீடு தேவதானப்பட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சியில்  ஊரவை(கிராம சபை)க்கூட்டம் நடைபெற்றது.   இக்கூட்டத்திற்கு ஊராட்சிமன்றத் தலைவர் அப்பாசு தலைமை தாங்கினார்.   இதே போல   க.கல்லுப்பட்டி ஊராட்சியில் ஊராட்சிமன்றத் தலைவர் வளையாபதி, முதலக்கம்பட்டி ஊராட்சியில் ஊராட்சிமன்றத் தலைவர் முத்துப்பாண்டி, எருமலைநாயக்கன்பட்டி ஊராட்சியில் ஊராட்சிமன்றத் தலைவர் பழனியம்மாள்,  செயமங்கலம் ஊராட்சியில் ஊராட்சிமன்றத் தலைவர் சங்கரலிங்கம், சில்வார்பட்டி ஊராட்சியில் ஊராட்சிமன்றத் தலைவர் சுப்புலெட்சுமி, அ.வாடிப்பட்டி ஊராட்சியில் ஊராட்சிமன்றத் தலைவர் மஞ்சமாலா பிச்சைமணி,  தே.வாடிப்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர்…

பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த மள்ளர்நாடு கோரிக்கை

பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த மள்ளர்நாடு கோரிக்கை   பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவேண்டும் என்று மள்ளர்நாடு அமைப்பின் சார்பாக மாநில கொள்கைப் பரப்புச்செயலாளர் செய்தியாளர்களுக்குச் செவ்வி ஒன்றை அளித்தார். அச்செவ்வியில் பின்வருமாறு கூறினார்: – அறவழிப்போராட்டத்தின் வழியாகப் போராடி வந்த மதிப்பிற்குரிய சசிபெருமாள் மரணம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுபானக் கடைகளின் முன் குடிப்பவர்களின் ஒவ்வொரு காலிலும் மறுபயன் எதிர்பாராமல் விழுந்து குடிக்காதீர்கள் என்று வேண்டிக்கொண்டு கொடூரமான அரக்கனான மதுவுக்கு எதிராகப் போராடி வந்த அவரின் இழப்பு என்பது காந்தியக் கொள்கைகளுக்கு ஒரு கரும்புள்ளியாகவம்…

விருபா குமரேசனின் மின்னகராதிப் பணிகள்

அனைவருக்கும் வணக்கங்கள், சென்ற ஆண்டின் இறுதியில், நாம் உருவாக்கிய விருபா வளர் தமிழ் : நிகண்டு என்னும் செயலியின் துணையுடன் சிந்தாமணி நிகண்டு மின்-அகராதியினை இணையத்தில் இணைத்திருந்தோம். இதனை நீங்கள்  http://www.viruba.com/Nigandu/Chintamani_Nigandu.aspx என்ற இணைய முகவரியில் பார்வையிடலாம். சிந்தாமணி நிகண்டில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு சொற்களுக்கும் தனித்தனியான இணைய முகவரி கொடுக்கப்பட்டுள்ளது. சிந்தாமணி நிகண்டு மின் அகராதியில் தலைச்சொற்கள், பொருள் விளக்கச் சொற்கள் இரண்டும் ஒருங்கிணைக்கப்பட்ட நிலையில் அகரவரிசையில் தரப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக 2015.08.03 அன்று, வடசொற்களுக்குத் தமிழ்ப் பொருள் கூறும் அகராதியான வடசொல் தமிழ்…

தமிழ்ப்பெயர் சூட்டாஅமைச்சர் கோகுல இநதிராவிற்குத் தமிழ்க்காப்புக்கழகம் கண்டனம்

தமிழ்ப்பெயர் சூட்டாஅமைச்சர் கோகுல இநதிராவிற்குத் தமிழ்க்காப்புக்கழகம் கண்டனம். கைத்தறி – துணிநூல் துறை அமைச்சர் மாண்புமிகு கோகுல இந்திரா நேற்று மூவண்ணப் புதிய சேலை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். அப்பொழுது அந்தச் சேலைக்கு ‘செய த்ரியம்பிகா’ எனப் பெயர் சூட்டியுள்ளார். இதன் மூலம் தமிழக அரசிற்குக் களங்கம் ஏற்படுத்தி உள்ளார். தமிழ் மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே துணி நெசவில் சிறப்புற்று இருந்தனர். பாலாடை போன்ற மெல்லிய ஆடை நெய்வதிலும் பூ வேலைப்பாடு மிக்க ஆடை நெய்வதிலும் வல்லமை பெற்றிருந்தனர். உரோம் முதலான வெளிநாடுகளில் இதற்கு…