திட்டச்சேரி பகுதியில் தொடரும் ஊர்தி மோதல்கள்!
திட்டச்சேரி பகுதியில் தொடரும் ஊர்தி மோதல்கள்! நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரியில் சாலைகள் ஒழுங்காகச் சீரமைக்கப்படாததால் சாலை நேர்ச்சி(விபத்து)கள் அதிகரித்து வருகின்றன என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்துக்கள், இசுலாமியர்கள், கிறித்தவர்கள் என அனைத்து மதத்தினரும் வழிபடக்கூடிய புகழ்பெற்ற இடங்கள் உள்ளன. நாகூர், வேளாங்கண்ணி, திருநள்ளாறு முதலான இறைவழிபாட்டு இடங்களும் தரங்கம்பாடி, பூம்புகார், காரைக்கால், வேதாரண்யம் முதலான வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களும் உள்ளன. இப்பகுதியைக் காண ஏராளமான சுற்றுலா ஊர்திகள் வருகை புரிகின்றன. இதன்மூலம் சுற்றுலாவை மையப்படுத்தி சுற்றுலா…
தேவதானப்பட்டியில் இரண்டாம் போகம்
தேவதானப்பட்டிப் பகுதியில் இரண்டாம் போகம் அறுவடைக்குத் தயாரான நிலங்கள் தேவதானப்பட்டிப் பகுதியில் இரண்டாம் போகம் நெல் பயிரிடலுக்கு உழவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இப்பகுதியிலுள்ள நெல்வயல்கள். தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரம், பொம்மிநாயக்கன்பட்டி, செங்குளத்துப்பட்டி, கெங்குவார்பட்டி ஆகிய பகுதிகளில் இரண்டாம் போக உழவுக்கு ஆயத்தமாகி தயாராகி வருகின்றன நெல்வயல்கள். தேவதானப்பட்டிப் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாகப் போதிய மழை பொழியவில்லை. இதனால் நெல்வயல்கள் தரிசாகக் கிடந்தன. இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்னால் பெய்த கனமழையால் இப்பகுதியில் உள்ள குளங்கள், கிணறுகள்,…
மூடுவிழாவை நோக்கி வெளிப்பாளையம் அஞ்சல்நிலையம்
மூடுவிழாவை நோக்கி வெளிப்பாளையம் அஞ்சல்நிலையம் நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினத்தில் பேருந்து நிலையத்திற்கு எதிர்ப்புறம் நீதிமன்ற வளாகத்தில் அஞ்சலகம் உள்ளது. இப்பகுதியில் உள்ள வழக்கறிஞர்கள், புகார்தாரர்கள் தங்கள் குறைகளை அரசுக்குத் தெரியப்படுத்தும் விதத்தில், தங்கள் குறைகளை அரசு களையும் என்ற நம்பிக்கையில் பதிவு அஞ்சலில் தங்கள் கடிதங்களை அனுப்பி வருகின்றனர். இவ்வாறு அனுப்பச் செல்கின்ற பொதுமக்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரிடம், “இங்கு பதிவஞ்சல் அனுப்ப முடியாது. தலைமை அஞ்சலகம் அல்லது மற்ற அஞ்சலகங்களுக்குச் சென்று அனுப்புங்கள்” எனக்கூறுவதும், பொதுமக்களை ஒருமையில் பேசுவதும் அஞ்சலகப் பணியாளர்களின்…
நெடுந்தீவில் ‘நாங்கள்’ இயக்கத்தின் கல்விப்பணி!
நெடுந்தீவில் ‘நாங்கள்’ இயக்கத்தின் கல்விப்பணி! தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நெடுங்கேணிப் பகுதி அதிகாரி திரு.சான் அவர்களது வேண்டுகோளின் படி, அப்பகுதயில் கல்வி கற்க ஆர்வம் இருந்தும் பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள மாணவர்களது கற்றல் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் கற்றல் கருவிகள் வழங்கப்பட்டன. வடக்கு கிழக்கில் செயல்பாட்டு வலையமைப்பைக்கொண்டுள்ள மக்கள் ஆட்சி அரசியலுக்கான உந்துசக்தி இயக்கமாகிய ‘நாங்கள்’ இயக்கத்தின் தீவுகள் மண்டலத்திற்கான செயல்பாட்டாளர்களான சி.அனுசன், க.கயூரன் ஆகியோரால் குறித்த கற்றல் கருவிகள் பங்குனி 26, 2046, ஏப்பிரல் 09, 2015 அன்று…
ஆளுங்கட்சியின் வன்முறைக்கு எதிராகக் காவல்நிலையம் முற்றுகை
ஆளும்கட்சியினர் வன்முறையைக் கண்டித்துப் பல்வேறு இடங்களில் சாலைமறியல்! காவல்நிலையம் முற்றுகை! பதற்றம்! தேவதானப்பட்டிப் பகுதியில் விலையில்லா அரவை, கலவை, விசிறி, வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேவதானப்பட்டியில் தொடக்கவேளாண்மைக் கூட்டுறவு வங்கி, காவல்நிலையம், பள்ளிவாசல் சமாஅத்து திருமண மண்டபம் முதலான பல இடங்களில் விலையில்லாப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த வாரம் நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியைச்சேர்ந்தவர்களும், தொடக்கவேளாண்மை கூட்டுறவு வங்கி உறுப்பினர்களும் தங்களுடைய ஆளும்கட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தித் தங்களுக்கு வேண்டியவர்களுக்குக் கொடுப்பதற்காக, அடுத்தவர்களுக்குக் கொடுத்த விலையில்லா மின்னுரல், மின்னரவை, மின்விசிறி போன்றவற்றை…
தேவதானப்பட்டியில் மழையால் நெல் சேதம்
தேவதானப்பட்டிப் பகுதியில் திடீர் மழையால் பலஇலட்சம் உரூபாய் மதிப்புள்ள அறுவடை செய்த நெல் சேதம் தேவதானப்பட்டிப் பகுதியில் திடீர் மழையால் பலஇலட்சம் உரூபாய் மதிப்புள்ள நெல்சேதமாகின. தேவதானப்பட்டியிலும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளான கெங்குவார்பட்டி, மலைச்சாலை, கெ.கல்லுப்பட்டி, சில்வார்பட்டி முதலான ஊர்களிலும் முதல்போக நெல் பயிரிட்டு அதனை அறுவடை செய்து வந்தனர். 75 அயிரைக்கல்(கிலோ) கொண்ட நெல் மூடை தற்பொழுது 900 முதல் 1000உரூபாய் வரை விற்பனை ஆனது. கடந்த சில வாரங்களாக அறுவடை செய்த நெல் அதிகமாக வந்ததால் நெல் மூட்டையின் விலை உரூ800…
தேவதானப்பட்டியில் தென்னை மரங்கள் கருகின!
தேவதானப்பட்டிப் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை! இடிவிழுந்து தென்னை மரங்கள் கருகின! தேவதானப்பட்டிப் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பொழிந்தது. தேவதானப்பட்டிப் பகுதியில் கடந்த சில வாரங்களாகக் கோடை வெயில் வாட்டி எடுத்தது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்ல அவதிப்பட்டனர். இந்நிலையில் கடந்தவாரம் மாலை 5.00 மணியளவில் சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை பொழிந்தது. அதன் பின்னர் பயங்கரக் காற்று வீசியது. அக்காற்றால் ஆங்காங்கே உள்ள விளம்பரப் பதாகைகள், தற்காலிகப் பந்தல்கள், கோயில் விழாக்களுக்கு அமைக்கப்பட்ட பந்தல்கள் சாய்ந்தன. இந்நிலையில்…
தேவதானப்பட்டியில் உயிரோடு விளையாடும் அரசுப்பேருந்துகள்
தேவதானப்பட்டிப் பகுதியில் உயிரோடு விளையாடும் அரசுப்பேருந்துகள் தேவதானப்பட்டிப் பகுதியில் இயக்கப்படும் பேருந்துகள் முறையான பேணுதலின்றி இயங்குவதால் பொதுமக்களின் உயிருக்குக் கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரம், மஞ்சளாறுஅணை, கெங்குவார்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி ஆகிய ஊர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் முறையான பேணுதலின்றி இயக்கப்படுவதால்; பொதுமக்கள் உயிருக்குக் கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இயக்கப்படும் பேருந்துகளில் சரியான நிறுத்தி, முடுக்கி ஆகியவற்றுக்கு இழுவைத்தன்மை குறைந்து காணப்படுகிறது. இதற்காக ஓட்டுநர்கள் காரைக்கற்கள்(பேவர்பிளாக் கற்கள்), செங்கல் போன்றவற்றை முடுக்கி அடிப்பாகத்தில் வைத்துவிடுகின்றனர். இதே…
பேரூராட்சிகளில் கொள்ளையோ கொள்ளை!
பேரூராட்சிகளில் கொள்ளையோ கொள்ளை! ஆண்டுதோறும் தணிக்கை செய்ய சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு. தமிழகத்தில் உள்ள பேரூராட்சிகளில் நடைபெறும் கொள்ளைகளைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது மன்னன் இல்லாத கோட்டை, தண்ணீர் இல்லாத ஆறு, அதிகாரம் இல்லாத காவலர், மரங்கள் இல்லாத மலை, தெய்வம் இல்லாத கோயில் என அடுக்கிக்கொண்டே போவார்கள். திரைப்படங்களில் காண்பிப்பது போல போடாத சாலை, வெட்டாத கிணறு, கட்டப்படாத கழிப்பறைகள் எனக் கணக்கு காட்டி பணத்தைக் கொள்ளையடிப்பது உண்டு. பொதுவாகத் தமிழகம் முழுவதும் உள்ள பேரூராட்சிப்பகுதிகளில் பலவித முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன….
நுகர்பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் திண்டாட்டம்
விலையில்லாப் பொருட்கள் வழங்கப்படுவதால் நுகர்பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் திண்டாட்டம் தேவதானப்பட்டிப் பகுதியில் விலையில்லா அரைவை, கலவை, விசிறி போன்றவை வழங்கப்படுவதால் குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படக்கூடிய அரிசி, மண்ணெண்ணெய், சீனி, பருப்பு வகைகள் நிறுத்தப்பட்டுள்ளன. விலையில்லாப் பொருள்கள் வழங்கப்படும் பணியில் நுகர் பொருள் கடை ஊழியர்களும், வருவாய்த்துறை ஊழியர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் குடும்ப அட்டைகளுக்கு மாதந்தோறும் வழங்கக்கூடிய பங்கீட்டுப் பொருட்களான அரிசி, மண்ணெண்ணெய், பருப்பு, எண்ணெய் போன்றவை வழங்கவில்லை. இதனால் இதனை நம்பி இருந்த ஏழை எளிய மக்கள் மிகவும் துன்பத்தில் உள்ளனர்….
செயல் அலுவலரின் ஊழலாட்டங்கள்!
திட்டச்சேரி பேரூராட்சி செயல் அலுவலராக இருப்பவர் தங்கையன். இவர் ஒத்துழைப்பால் கடந்த 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தலில், 18 அகவைக்கும் குறைவான இரியாசு என்ற வேட்பாளர் 11 ஆவது தொகுதிக்காகத் தேர்தலில் நின்றுள்ளார். தேர்தலில் நின்று வெற்றி பெற்று விட்டார். இவரை எதிர்த்து நின்ற இசட் 719. கூட்டுறவு வங்கித்தலைவர் சையது இபுராகிம் மனைவியின் உடன்பிறப்பு சியாவுதீன் அதிமுக வேட்பாளராக நின்று தோல்வியுற்றார். தற்பொழுது துணைத்தலைவராக இருக்கும் சுல்தான் மதிமுக சார்பில் போட்டியிட்டார். அப்பொழுது தோல்வியடைந்த வேட்பாளர்கள், 18 அகவைக்கும்…
செயமங்கலம் பகுதியில் தலைவிரித்தாடும் கந்து வட்டிக்கொடுமை
தேவதானப்பட்டி அருகே உள்ள செயமங்கலம் பகுதியில் கந்துவட்டிக்கொடுமையால் பல குடும்பத்தினர் ஊரை விட்டு இரவோடு இரவாகக் காலிசெய்து வருகின்றனர். தேவதானப்பட்டி அருகே உள்ள செயமங்கலத்தில் முதன்மைத் தொழிலாக விளங்குவது வெற்றிலைக் கொடிக்காலும், வாழைப் பயிரிடலும்தான். இப்பகுதியில் உள்ள உழவர்கள் வெற்றிலைகளைப் பயிரிட்டுத் தமிழகம் முழுமையும் ஏற்றுமதி செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த 3 வருடங்களாகப் போதியமழையின்மையால் உழவர்களால் உழவைத் தொடரமுடியவில்லை. ஒரு சில உழவர்கள் தண்ணீரை விலைக்கு வாங்கி உழவைக் காப்பாற்றி வந்தனர். இருப்பினும் தாங்கள் வாங்கிய கடனுக்காக முதலைத் தராமல்…
