மும்பை சு.குமணராசனுக்குப் பாராட்டு

ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில்  பத்து நாட்களாக நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் ”தமிழ் இலெமுரியா” முதன்மை ஆசிரியர் சு.குமணராசன் இதழியல் பணிக்காகப் பாராட்டப் பெற்றார்.   விழாவில் பாலச்சந்திரன் இ.ஆ.ப. பாராட்டிச் சிறப்புரையாற்றினார்.

மருத்துவப் பண்டுவம் கடனாளி ஆக்குகிறது: சசி தரூர்

சென்னை : ”மருத்துவப் பண்டுவத்திற்காகக், கடனாளிகளாகும் நிலை, இந்தியாவில் நிலவுகிறது. எனவே, குறைந்த செலவில், தரமான மருத்துவம் வழங்க, மருத்துவர்கள் முன்வர வேண்டும்,” என, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர், சசி தரூர் கேட்டுக் கொண்டு உள்ளார். இராமச்சந்திரா பல்கலைக் கழகத்தின், 18 ஆவது பட்டமளிப்பு விழா, பல்கலை வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், மருத்துவம், மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகள், பட்டயப்  படிப்புகளில், சிறப்பிடம் பெற்ற, 51 மாணவ, மாணவியருக்குத் தங்கப் பதக்கம், பாராட்டுச் சான்றுகளை வழங்கி, சசி…

தளையிடப்பட்ட தமிழாசிரியரை விடுதலை செய்க!

 சத்தியம் தொலைக்காட்சியில்   கடந்த வாரம் ‘சத்தியம் – அது சாத்தியம்’ நிகழ்ச்சி இரவு 8.10 மணியில் இருந்து 8.30 மணி வரை நடந்தது. அதில், “முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அகற்றியது சரியா? தவறா?” என்ற விவாதம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் காங்கிரசு சார்பில்சட்ட மன்ற உறுப்பினர் விசயதாரணி , பாசக மாநிலப் பொருளாளர் சேகர் ஆகியோர் பங்கேற்று விவாதம் செய்துகொண்டிருந்தனர். காங்.கின் பேச்சு சரியாக இல்லை என்றும் இதனால் உணர்வுள்ள ஒருவர் தொலைபேசி வாயிலாகப் பேச வந்துள்ளார். முள்ளிவாய்க்கால் முற்றம் வைப்பது தமிழர்களின் கடமை. இதைப்பற்றி…

முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பைக் கண்டித்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள்!

  இந்திய – சிங்களக் கூட்டுப் படைகளால் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழீழ மக்களுக்கு நினைவேந்தும் விதமாக, தஞ்சை விளாரில், உலகத் தமிழர் பேரமைப்பால் எழுப்பப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுவரையும், பூங்காவையும் இடித்த தமிழக அரசின் வன்செயலைக் கண்டித்தும், பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அய்யா பழ.நெடுமாறன் உள்ளிட்ட 83 போராளிகளை விடுதலை செய்யக் கோரியும்

மதிமுக வழக்குரைஞர் மாநாடு : விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி தீர்மானம்

    மதிமுகக் கழக வழக்குரைஞர் மாநாடு 16.11.13 சனிக்கிழமை காலை 10.00 மணிக்குச்  சென்னை, எழும்பூர், வேனல்சு சாலை, இம்ப்பீரியல் வளாகத்தில் உள்ள சிராசு மகாலில் கழகச் சட்டத்துறைச் செயலாளர் வழக்குரைஞர் தேவதாசு தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் காலை அமர்வில் பின்குறிப்பிட்டுள்ள தீர்மானங்கள் ஒருமனமாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஏற்காடு இடைத்தேர்தல் : 27 பேர் வேட்புப் பதிவு

ஏற்காடு இடைத்தேர்தலில்,  திசம்பர், 4 இல் நடைபெற உள்ள, ஏற்காடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான, வேட்புப்பதிவு கடந்த, 9 ஆம் நாள் தொடங்கி, நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இதுவரை, அ.தி.மு.க., – தி.மு.க., வேட்பாளர்கள் உட்பட, 27 பேர்  விண்ணப்பித்துள்ளனர்.  இவர்களில், இரண்டு பேர், அ.தி.மு.க.,

யாழில் காவல்துறையினர் கொடூரமான தாக்குதல்: உலகத் தலைவர்கள் அதிர்ச்சி

  காணாமல் போனவர்களுடைய உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைப்  பொறுத்துக் கொள்ள இயலாத சிங்களக்காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக பெண்கள் என்று பாராமல் எம்மையும் பாதிரியார்களையும் தாக்கினர். கவனயீர்ப்புப் போராட்டத்தில் பலத்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது எனத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பா.உ சரவணபவன்,

இசை அமைப்பாளர் பரத்வாசின் திருக்குறள் பாடல் பேழை

இசை அமைப்பாளர் பரத்வாசு. 1330 திருக்குறள்களையும் 500 பாடகர்களைக் கொண்டு பாட வைத்துத் திருக்குறள் பாடற்பேழை உருவாக்குகிறார்.  திரையிசையால் பணம் கிடைத்தாலும் மன நிறைவிற்காகத் திருக்குறள் பாடலிசை முயற்சியில் ஈடுபட்டுவருவதாக இசைஅமைப்பாளர் பரத்வாசு கூறுகிறார்.

முள்ளிவாய்க்கால் முற்றம்: தமிழக அரசு கட்டித்தர வேண்டும்

-திருமாவளவன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சை அருகே விளார்  என்னும் ஊரில் எழுப்பப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் எனும் நினைவிடத்தின் சுற்றுச்சுவரினை தமிழக அரசு திடீரென இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளது. மேலும், அவ்வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த பூங்காவும் சிதைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான

அரசுப் பள்ளிகளில் 16 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம்

  சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் குழந்தைகள் நாள் விழாவும் சிறந்த நூலகர்களுக்கான  எசு.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கும் விழாவும் 14.11.13 வியாழக்கிழமை அன்று நடைபெற்றது. இந்த விழாவில்   பேசிய பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர்

திருக்குறள் வாழ்வியல் நூல்!

  – சுப.வீரபாண்டியன் ஆயிரம் மொழிகளைக் கற்றுக் கொள்ளுங்கள். ஆனால், தாய் மொழியை மறந்துவிடாதீர்கள்! எந்த நாட்டில் வேண்டுமானாலும் வாழுங்கள்.. ஆனால், சொந்த நாட்டை மறந்து விடாதீர்கள்!

தமிழகச் சட்ட மன்றச் சிறப்புக் கூட்டத்தில் தீர்மானம்!

முந்தைய செய்தி இலங்கை பொதுவள ஆய மாநாட்டை இந்திய அரசு, முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்! தமிழகச் சட்ட மன்றச் சிறப்புக் கூட்டத்தில் தீர்மானம்!   இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரில் இலட்சக்கணக்கில் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழர்களைக் கொன்று குவித்துப் போர்க்குற்றத்திலும் இனப்படுகொலைகளிலும்