குறுங்காலப் பயிருக்கு மாறும் தேனி

      தேவதானப்பட்டி பகுதியில் பருவமழை ஏமாற்றிவருவதால் குறுகிய காலப்பயிர்த் தொழிலுக்கு உழவர்கள் மாறத் தொடங்கிவிட்டனர்.   தேவதானப்பட்டி பகுதியில் நீண்டகாலப் பயிர்களான கரும்பு, வாழை, நெல் போன்றவை நடப்பட்டு வேளாண்மை நடைபெற்று வந்தது. இப்பகுதியில் எங்கு பார்த்தாலும் பசுமை விரித்தாற்போல நெல்வயல்களும், வாழை மற்றும் கரும்பு விவசாயமும் நடைபெற்று வந்தது. இதனால் இப்பகுதியில் விளையும் பொருட்கள் தமிழகத்திற்கும் அண்டை மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.    கடந்த மூன்று வருடங்களாகத் தென்மேற்குப் பருவமழை, வடகிழக்குப் பருவமழை ஆகிய மழைகள் பொய்த்துவருகின்றன. இதனால்…

புலிகள் மீதான தடை நீக்கம் – ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பு

புலிகள் மீதான தடையை நீக்கி ஐரோப்பிய நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்ப்பு!   இந்தியாவும் புலிகள் மீதானத் தடையை நீக்க வேண்டும்! தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் கோரிக்கை! தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகள் மீது, ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடை நடவடிக்கைகள் அனைத்தும் சட்ட எதிரானவை என, (புரட்டாசி 30, 2045 / 16.10.2014 அன்று) இலக்சம்பர்க்கில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியப் பொது நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2001ஆம் ஆண்டு செப்டம்பரில்…

தேனிப் பகுதியில் ஈகைத்திருநாள் (பக்கிரீத்து) கொண்டாட்டம்

தேனிப் பகுதியில் ஈகைத்திருநாள் கொண்டாடப்பட்டது. தேவதானப்பட்டி பகுதியில் ஈகைத்திருநாளை முன்னிட்டுத் தத்தம் வசதிக்கேற்ப ஆடு, மாடு போன்ற கால்நடைகளை அறுத்துப் பண்டிகையைக் கொண்டாடினார்கள். பள்ளிவாசல்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன. தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரத்தில் குள்ளப்புரம் பள்ளிவாசலிலும், செயமங்கலத்தில் செயமங்கலம் பள்ளிவாசலிலும், பொம்மிநாயக்கன்பட்டி, கெங்குவார்பட்டி, கெ.கல்லுப்பட்டி பகுதிகளில் உள்ள இசுலாமியர்கள் ஈகைத்திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடினார்கள். இவை தவிர தமிழ்நாடு தவுஃகித்து சமாத்து அமைப்பினர் 7.30 மணிக்கே ஈகைத்திருநாளைக் கொண்டாடினார்கள். மற்ற பள்ளிவாசல்களில் 9.00 மணிமுதல் 9.30 மணிவரை ஈகைத்திருநாள் கொண்டாடினார்கள். ஈகைத்திருநாளை முன்னிட்டு அறுக்கப்படும் கால்நடைகளை…

தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் எதிரொலி-அரசுப்பேருந்துகளில் கூடுதல் கட்டணம்

தேவதானப்பட்டி பகுதியில் தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தத்தை முன்னிட்டு அரசுப்பேருந்துகளில் கூடுதல் கட்டணம் பெறப்பட்டது. இதனால் நடத்துநர்களுக்கும் பயணிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. திண்டுக்கல், தேனிப்பகுதிகளில் தனியார் பேருந்துகள் அதிமுக பொதுச்செயலாளரைப் பிணையில் விடுவிக்கதனியார் பேருந்துகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. மேலும் தொடர்ச்சியாகக் காந்தி பிறந்தநாள், சரசுவதி பூசை, அடுத்து வந்த சனி, ஞாயிறு, அடுத்து ஈகைத்திருநாள் எனத் தொடர்ச்சியாக விடுமுறை அளிக்கப்பட்டதால் மாணவர்கள், அரசு ஊழியர்கள் முதலானோர் சொந்த ஊருக்குத் திரும்பினார்கள். இந்நிலையில் அனைவரும் தங்கள் ஊருக்கும் திரும்பும் நேரத்தில் தனியார் பேருந்துகள் வேலை…

தேவதானப்பட்டியில் மின்கம்பங்களால் கண்டம்(ஆபத்து)

தேவதானப்பட்டி பகுதியில் மின்கம்பங்களால் மின்கேடு(விபத்து) ஏற்படும் தீக்கேடு உள்ளது. தேவதானப்பட்டி பகுதியில் அண்மைக்காலமாக மழை பொழிந்து கொண்டிருக்கிறது. மின்கம்பங்களில் கம்பிவடத்தொலைக்காட்சியின் கம்பிகள் கட்டப்பட்டு உள்ளன. இணைப்புவடக் கம்பிகள் முறையாக இணைப்பில்லாமல் ஆங்காங்கே விரிவு ஏற்பட்டு அதன் மேல் காப்புநாடா ஒட்டப்படாமல் உள்ளது. இதனால் மழை நேரங்களில் கம்பிகள் செல்லும் வீடுகளின் மீதுள்ள இரும்புக் கதவு, தகரம் ஆகியவற்றில் மின்சாரம் பாய்கிறது. இவை தவிர மின்கம்பங்களில் ஆங்காங்கே செடிகள் பின்னிக்கிடக்கின்றன. இதனால் செடி, கொடிகளை உண்ணச்செல்லும் கால்நடைகள் அதன்மூலம் மின்சாரம் பாய்ந்து இறப்பதற்கு வாய்ப்பு உள்ளது….

புதுச்சேரி அரசில் தமிழ்வளர்ச்சித்துறை அமைக்க இயலாது

புதுச்சேரி அரசில் தமிழ்வளர்ச்சித்துறை அமைக்க இயலாது என்றுகல்வியமைச்சர் தியாகராசன் 19.9.2014இல் புருசோத்தமன் ச.ம.உ கேள்விக்குவிடையளிக்கும் போது சட்டமன்றத்தில் சொன்னார். அதைத் திரும்பப்பெற வேண்டும்என்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைக்கும் கோரிக்கை 32ஆண்டுக்கோரிக்கைஎன்றும் என்.ஆர். பேராயம் (என்.ஆர்.காங்)சட்டமன்றத்தேர்தலில் அளித்தஉறுதிமொழிகளில் ஒன்று தமிழ் வளர்ச்சித்துறை அமைக்கப்படும் என்பதாகும் என்பதையும் கல்வியமைச்சரிடம் தமிழமல்லன் எடுத்துக் காட்டி வலியுறுத்திச் சொன்னார். தமிழ்வளர்ச்சித்துறை அமைக்கும் உறுதிமொழியை முதல்அமைச்சர் அரங்கசாமி சட்டமன்றத்தில் 2007இல் அளித்துள்ளார் என்றும் எனவே மறுப்பை மறுஆய்வு செய்யவேண்டும் என்றும் 7.10.2014 அன்று கல்வி யமைச்சர் தியாகராசனிடம் நேரில் வேண்டுகோள் அளிக்கப்பட்டது….

தேவதானப்பட்டி பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சி

  தேவதானப்பட்டி பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால்   உழவர்கள் கவலை அடைந்துள்ளனர்.  தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி, கெ.கல்லுப்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி, குள்ளப்புரம் பகுதிகளில் பல காணி(ஏக்கர்) பரப்பளவில் தக்காளிப் பயிரிடல் நடைபெற்று வருகிறது.    இப்பகுதியில் விளையும் தக்காளிகள் சென்னை, பெங்களுர், வத்தலக்குண்டு, ஆண்டிப்பட்டி சந்தை உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.   கடந்த சில வருடங்களாகப் போதிய மழை இல்லாததால் நெல், கரும்பு, வாழை போன்ற பயிரிடலை விட்டு விட்டுக் குறுகிய காலப்பயிர்களான தக்காளி, கத்திரிக்காய் போன்றவற்றைப் பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில்…

தேனிப் பகுதியில் நீர்தெளிப்பான் பாசனத்திற்கு மாறிவரும் உழவர்கள்

  தேனிப் பகுதியில் நீர்தெளிப்பான் பாசனத்திற்கு உழவர்கள் மாறிவருகிறார்கள்.   தேனிப் பகுதியில் பல ஆண்டுகளாகப் பயிர்த்தொழிலில் ஈடுபட்டு வரும் உழவர்கள் பெரும்பாலும் சோளம்,கம்பு, மணிலா போன்ற பயிர்களைப் பயிரிட்டு வந்தனர். கடந்த சில வருடங்களாக உரிய மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, கிணறுகள் எல்லாம் வற்றிவிட்டன. அதனால் உழவர்கள் பயிர்த்தொழிலில் ஈடுபடுவது பெரும் அறைகூவலாக இருந்து வருகிறது.   தண்ணீர்த்தட்டுப்பாடும், வேலையாட்கள் தட்டுப்பாடும் உள்ள சூழ்நிலையில் வேளாண் பணிகளை மேற்கொள்ள முடியாமல் உழவர்கள் தங்கள் விளை நிலங்களைத் தரிசு நிலங்களாக மாற்றிவிட்டனர்….

தேனிப் பகுதியில் மழையால் சேதமடைந்த சாலைகள்-பொதுமக்கள் அவதி

தேனிப் பகுதியில் கடந்த சில நாளாகப் பெய்த மழையின் காரணமாகச் சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.    இருவழிச்சாலை அமைக்கும் பணியும் புறவழிச்சாலை அமைக்கும் பணியும் நடைபெற்றது. இதனால் திண்டுக்கல்லில் இருந்து தேவதானப்பட்டி வரை சாலைவேலைகள் நடைபெற்றன. அதன் பின்னர் அப்பணி நிறுத்தப்பட்டது. அப்போது இருந்தே தேவதானப்பட்டிச் சாலைகள் பழுதடைந்தன.  இருவழிச்சாலை அமைக்கப்படும்போது அச்சாலை செப்பனிடப்படும் என நெடுஞ்சாலைத்துறை அறிவித்தது. தற்பொழுது அந்தப்பணி நிறுத்தப்பட்டது. இதனால் தேவதானப்பட்டியிலிருந்து பெரியகுளம் வரை செல்லும் சாலையும், தேவதானப்பட்டியிலிருந்து வைகை அணை செல்லும் சாலையும் பழுதடைந்துள்ளன….

ஐரோப்பியப் பண்டுவ மருத்துவக் கழகத்தின் மதிப்புமிகு உறுப்பினர் வீரப்பன்

   ஐரோப்பியப் பண்டுவ மருத்துவக் கழகம்(European Society of Intensive Care Medicine)  மரு. சிதம்பரம் வீரப்பன் அவர்களுக்கு  மதிப்புமிகு உறுப்பினர் (Honorary Member) எனும் விருதை நிகழாண்டு புரட்டாசி 11-15, 2045 / செப். 27 – அக்.1 நாள்களில் பார்சலோனா நகரில்  நிகழ்ந்த 27-ஆம் அனைத்துலக மாநாட்டில்,  வழங்கியது.  இதுகாறும் பதின்மூவருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள இவ்விருது, 4 ஆண்டுகள் கழித்து வழங்கப்பெறுவதும், இவ்விருதை வாங்கும் முதல் ஆசியர், இந்தியர், தமிழர் இவர்தாம் என்பதும் இச்சிறப்பைக்கூட்டுவன.   இக்கழகம் 7000 உறுப்பினர்களைக் கொண்டது;…

தகர்க்கப்படும் வரலாற்றுப் பாறைகள் – அழிக்கப்படும் வரலாறு – நடவடிக்கை எடுக்காத தொல்லியல்துறை

இந்திய வரலாற்றை அறிவியல் முறையில் ஆய்வு செய்வதற்கும் உண்மையான வரலாற்றைக் காலவாரியாக எடுத்துக்கூறுவதற்கும் தொல்லியல் சான்றுகளே மிகுந்த துணைபுரிகின்றன. மக்களின வரலாற்றில் எளிய மக்களின் வாழ்வையும், நடுத்தர, உயர்குடி மக்களின் வாழ்வையும் தொல்லியல் சான்றுகள் படம் பிடித்துக் காட்டுகின்றன. தமிழகத்தில் உள்ள பழமையான கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், அகழாய்வுகள் முதலியன ஒவ்வொரு காலக் கட்டத்திலும் வாழ்ந்த மக்களின் பண்பாட்டையும் நாகரிகத்தையும் எடுத்துக்காட்டுகின்றன. நானும் எனது நண்பர்களும் விடுமுறைக்காக மேற்குமலைத்தொடர்ச்சியில் அமைந்துள்ள சுருளி அருவிக்குச் சென்று திரும்பும்போது எங்களைப் பதறவைத்தவை வெடிவைத்துத் தகர்க்கப்பட்ட பாறைகள். ஆம்!…