அழிக்கப்பட்டு வரும் நீர்நிலைக்கல்வெட்டுகள்

  மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காக வரும் என ஆரூடம் கூறிக்கொண்டிருக்கிறோம். அதே வேளையில் நீர்ப் பேணுகை, நீர் மேலாண்மையில் முன்னோடியாகத் தமிழன் இருந்தான் என்பதற்கு ஆதாரமாகச் செப்பேடுகள், கல்வெட்டுகள் மிகுதியாக உள்ளன.   இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தண்ணீரின் இன்றியமையாமையை உணர்ந்து ஏரிகள் உருவாக்கப்பட்டன. அவ்வாறு ஏரிகள் உருவாக்கிய பின்னர் ஏரிகளில் உள்ள கல்வெட்டு ஆவணப் பொறிப்புகளையும், அரசர்களின் ஆணைகளையும் இன்றும் காணலாம்.   அரசனின் எந்த ஆணைப்படி அது அமையப்பெற்றது, அதைப் பேணுவதற்கு அளிக்கப்பட்ட கொடைகள், அந்த அரசனின் அரச முத்திரை ஆகியவை…

தேவதானப்பட்டி பகுதியில் இறக்குமதி செய்யப்படும் இளநீர்கள்

தேவதானப்பட்டி பகுதியில் இளநீர்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இறக்குமதி செய்யப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, கல்லுப்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில் பல காணி(ஏக்கர்) பரப்பளவில் தென்னை மரம் பயிரிடப்பட்டு வருகிறது. இப்பகுதியில்விளையும் தென்னங்காய்கள் காங்கேயம், மும்பை, கேரளா என ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. இப்பொழுது கடந்த சில வருடங்களாகப் போதிய மழை இல்லாததாலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததாலும் இப்பகுதியில் தென்னை மரம் பயிரிடலின் பரப்பளவு சுருங்கிவருகிறது. இந்நிலையில் இப்பகுதியில் தண்ணீர் குறைந்ததால் தேங்காய், இளநீர் ஆகியன பெரிதாக இல்லாமல் சிறிய அளவில் இளநீர், தேங்காய்கள் காணப்படுகின்றன. இதனால்…

தனியார் பிடியில் இராணிமங்கம்மாள் உருவாக்கிய மத்துவார் குளம்

தேவதானப்பட்டி பகுதியில் இராணிமங்கம்மாள் காலத்தில் உருவாக்கப்பட்ட மத்துவார் குளம் கேட்பாரன்றிக் கிடக்கிறது. 1689 முதல் 1706 ஆம் ஆண்டு வரை சார்பரசியாக மதுரையை ஆண்டவர் இராணிமங்கம்மாள். அவர் காலத்தில் மதுரையிலிருந்து ஆவியூர், காரியாபட்டி வழியாக அருப்புக்கோட்டைக்கும் திருச்சுழியலுக்கும் பெரியகுளத்திலிருந்து கெங்குவார்பட்டி வழியாக மதுரைக்கும் சாலைகள் அமைக்கப்பட்டன. அச்சாலைகள் இன்று வரை மங்கம்மாள் சாலை என அழைக்கப்படுகிறது. இராணிமங்கம்மாள் காலத்தில் பல்வேறு குளங்கள், சத்திரங்கள், சாவடிகள், அன்னதான மண்டபங்கள் என ஏராளமாகக் கட்டப்பட்டன. அப்படிக் கட்டப்பட்ட குளங்களில் ஒன்று கெங்குவார்பட்டியில் உள்ள மத்துவார்குளம். இக்குளத்தை பொதுமக்களுக்காகக்…

“வெளியார் அதிகரிப்பும் தமிழர் வாழ்வுரிமையும்” மாநாடு தள்ளிவைப்பு!

இன்று நடைபெற இருந்த “வெளியார் அதிகரிப்பும் தமிழர் வாழ்வுரிமையும்” மாநாடு தள்ளிவைப்பு!   தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் சென்னையில் ‘வெளியார் அதிகரிப்பும் தமிழர் வாழ்வுரிமையும்’ என்ற தலைப்பிலான தமிழகம் தழுவிய சிறப்பு மாநாடு, இன்று (புரட்டாசி 12, 2045 / 28.09.2014), நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வந்தன.   இந்நிலையில், முதலமைச்சர் செயலலிதா வழக்குத் தொடர்பானத் தீர்ப்பால் தமிழகமெங்கும் பதற்றச்சூழல் ஏற்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, மாநாடு வேறொரு நாளுக்கு தள்ளி வைக்கப்படுகின்றது. மாநாடு நடைபெறும் நாள், பின்னர் அறிவிக்கப்படும்.   மாநாடு…

உத்தமம் தமிழ்க்கணிமைப் பரிசு பெறும் த.சீனிவாசன்

செல்வா-குமரி அறக்கட்டளை வழங்கும் 2014 ஆம் ஆண்டிற்கான உத்தமம் தமிழ்க்கணிமைப் பரிசை திறமூல ஆர்வலர் திரு. த. சீனிவாசன் வென்றுள்ளார்.   இளைஞரான இவருக்கு நல்ல கணிநிரல்அறிவும் பட்டறிவும் இருப்பதுடன், நல்லஉள்ளமும், தமிழார்வமும், தன்னறிவைப் பகிரும் பேருள்ளமும் கொண்டுள்ளார். பல இளைஞர்களுக்கு நல்வழிகாட்டியாகவும்விளங்குகின்றார்.  ‘கணியம்’ என்னும் மின்னிதழில் ஏறத்தாழ இரண்டாண்டுகளாக நல்ல பங்களிப்புகள் செய்து வருகின்றார். இவையனைத்தும்   படைப்புப்பொதுமை (‘கிரியேட்டிவ் காமன்சு’) பகிர்வுரிமத்தின்கீழ் கட்டணமின்றிப் பயன்படுத்திக் கொள்ளத்தக்கவை.  பார்க்கவும்: http://www.kaniyam.com/  இந்திய இலினக்ஃசு (Linux) பயனர் குழுவின் சென்னைக்கிளையின்தலைவராகவும் திரு த.சீனிவாசன் இருக்கின்றார். இவரது…

பாரதியார் வாழ்ந்த வீட்டை நினைவகமாக அறிவிக்க தருண் விசய் முயற்சி

பாரதியார் வாழ்ந்த வாரணாசி வீட்டை விடுதலைப் போராட்ட நினைவகமாக அறிவிக்க வலியுறுத்துவேன்! – தருண் விசய்     பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டுக் கடந்த ஆவணி 26, / செப்.11 அன்று தில்லித்தமிழ்ச்சங்கம் சார்பில் பாரதியார் உருவச்சிலைக்குத் தமிழார்வலரான உத்தரகண்டு நா.உ. தருண்விசய் மாலை அணிவித்தார். “தமிழ் மொழிக்குத் தேசிய அளவில் முழுமையான அறிந்தேற்பு கிடைக்க வேண்டும்.” என்று அவர் அப்பொழுது தெரிவித்தார். மேலும்,   பாரதியார் வசித்த வாரணாசி வீடு மத்திய, மாநில அரசுகளால் கண்டுகொள்ளப் படாமல் இருப்பதை அறிய வந்ததாகத் தெரிவித்தார்….

“தமிழ்த் தேசியப் பேரியக்கம்” – தீர்மானங்கள் (தொடர்ச்சி) – ஙீ

 (ஆவணி 22, 2045 / செப்.07 ,2014 தொடர்ச்சி) தீர்மானம் – 5: கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும்!   1974-இல், சிங்கள இனவாத அரசோடு தனக்குள்ள உடன்வயிற்றுஉறவை வலுப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காக இந்திய அரசு, தமிழகத்தின் சொத்தாகிய கச்சத்தீவைஇலங்கைக்குத் தானமாகக் கொடுத்தது. அதனால், தமிழக மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். இதுவரைசிங்கள இனவெறி அரசு சற்றொப்ப 600 தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்றுள்ளது.இதற்குப் பின்னரும், இந்திய அரசு தனதுதவற்றைத் திருத்திக் கொள்ளாமல் மேலும்தீவிரத்துடன் கச்சத்தீவு இந்திய எல்லைக்குள் ஒருபோதும் இருந்ததில்லை என்றுஉச்சநீதிமன்றத்திலும்,…

தேவதானப்பட்டியில் அழிந்து வரும் சிற்பக்கலை

  தேவதானப்பட்டி பகுதியில் சிற்பக்கலை அழிந்து வருகிறது. அதனைக் காப்பாற்ற நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.   தேவதானப்பட்டி அருகே உள்ள அ.வாடிப்பட்டி பகுதியில் சிலைகள் வடிவமைக்கத்தேவையான திறனுடைய கற்கள் அதிகம் உள்ளன. மறைந்த முன்னாள்  தலைமையாளர் இராசீவு காந்தி அவர்களுக்குத் திருப்பெரும்புதூரில் சிலை அமைக்க இப்பகுதியில் இருந்துதான் கற்கள் கொண்டு செல்லப்பட்டன. அவ்வளவு பெருமை வாய்ந்த கற்கள் இப்பகுதியில் உள்ளன.   இப்பகுதியில் உள்ள பழமையான கோயில்கள், கற்சிலைகள் அனைத்தும் அ.வாடிப்பட்டி பகுதியில் இருந்த கற்களைக் கொண்டு சிலை வடிவமைக்கப்பட்டன….

மழை ஏமாற்றியதால் குறைந்து வரும் மஞ்சளாறு அணை நீர்மட்டம்

  தேவதானப்பட்டி பகுதியில் மழை ஏமாற்றியதால் மஞ்சளாறு அணை நீர்மட்டம் குறையத்துவங்கியுள்ளது.   கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மேற்குமலைத்தொடர்ச்சியில் தொடர்ச்சியாகக் கனமழை பொழிந்தது. இதனால் தலையாறு, வறட்டாறு, மூலையாறு பகுதிகளில் உள்ள ஆறுகளில் நீர் வரத்து அதிகமானது. இதனையொட்டி வறண்டு காணப்பட்ட எலிவால் அருவியில் தண்ணீர் வரத்து தொடங்கியது. இதனால் இருபது அடிக்குக் கீழ் இருந்த மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் மளமளவென 40 அடியாக உயர்ந்தது.   இந்நிலையில் கடந்த சில நாட்களாகச் சாரல்மழை பெய்தது. அப்போது மேகங்கள் திரண்டு இருந்தாலும் காற்று…

தூய்மைக்கேடாக்கப்படும் மஞ்சளாறு அணை

  தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை நாளுக்கு நாள் தூய்மைக்கேடாக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தொற்று நோய் பரவும் பேரிடர் உள்ளது.   தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை திண்டுக்கல், தேனி மாவட்டங்களின் உழுதொழில், குடிநீர்த் தேவைகளுக்காகக் கட்டப்பட்டது. இதன் மூலம் பல ஆயிரக்கணக்கான காணி(ஏக்கர்) பரப்பளவில் பயிர் நிலங்கள் பயன்அடைந்து வருகின்றன. இதே போல மஞ்சளாறு அணையில் உள்ள நீரை நம்பி ஊராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவை பயனடைந்து வருகின்றன.   இப்பொழுது மஞ்சளாறு அணை ஆடு, மாடு போன்ற கால்நடைகள்…

தேவதானப்பட்டி பகுதியில் வெளவால்கள் அழிவாட்டம்

  தேவதானப்பட்டி பகுதியில் வெளவால்கள் அழிவாட்டத்தால் (அட்டகாசத்தால்) விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.   தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை, கெங்குவார்பட்டி, வைகை அணைப்பகுதியில் ஆயிரக்கணக்கான வெளவாலகள் கூட்டம் கூட்டமாக தங்கியுள்ளது. இவ்வகை வெளவால்கள் இப்பொழுது மழை இல்லாததால் பழங்கள் இருக்கும் பகுதியை நாடி இடம் பெயர்ந்து வருகின்றன. மேலும் இப்பொழுது நாவல் பழப் பருவம் தொடங்கியுள்ளதால் நாவல்மரங்கள் அடங்கிய பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளன.   இவ்வாறு நாவல்மரங்களில் தங்களுக்குத் தேவையான உணவுகள் கிடைக்காவிட்டால் அண்மையில் உள்ள   சீமையிலுப்பை(சப்போட்டா), வெள்ளரித்தோட்டம், முந்திரித்தோட்டம், பப்பாளித்தோட்டங்களில் நுழைந்து…

மூடுவிழாவை நோக்கிக் கயிறு திரிக்கும் தொழில்

  தேனிப் பகுதியில் கயிறு திரிக்கும் தொழில் மூடப்படும் பேரிடர்(அபாயம்) உள்ளது.   தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி பகுதிகளில் தென்னை மரத்தின் மட்டைகளில் இருந்து கயிறு தயாரிக்கும் தொழில் குடிசைத்தொழிலாக நடைபெற்று வருகிறது. இத்தொழிலை நம்பி ஏராளமான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. தென்னை மட்டைகளின் நார்கள் வெளிநாட்டிற்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் செங்கல் போன்று கடினமாக்கப்பட்டு அதனையும் வெளிநாட்டிற்கு அனுப்புகிறார்கள். இதனால் அதிக விலை கொடுத்தும்முன் தொகை கொடுத்தும் தென்னை மட்டைகளை வாங்கிச்செல்கின்றனர். தற்பொழுது குடிசைத்தொழிலாக உள்ள இத்தொழில்போதிய மூலதனத்துடன் நடைபெறுவதில்லை. இவை…