கறவைமாட்டுக்கடன் திரும்பப்பெற முடியாமல் வங்கி அதிகாரிகள் தவிப்பு
தேவதானப்பட்டிப் பகுதில் கறவைமாட்டுக்கடன் திரும்பப்பெற முடியாமல் வங்கி அதிகாரிகள் தவிப்பு தேவதானப்பட்டிப் பகுதியில் வழங்கப்பட்ட கறவைமாட்டுக்கடனைத் திரும்பப் பெற முடியாமல் வங்கி அதிகாரிகள் திணறிவருகிறார்கள். தேசியமயமாக்கப்பட்ட பாரதஅரசு வங்கிகளில் கறவைமாட்டுக்கடன் வழங்கப்பட்டது. தேவதானப்பட்டி, செயமங்கலம், குள்ளப்புரம் முதலான இடங்களில் உள்ள பாரத அரசு வங்கிக்கிளைகளில் கறவைமாட்டுக்கடன் வழங்கப்பட்டது. ஒவ்வொரு வங்கியிலும் தொண்டுநிறுவனங்களின் மேற்பார்வையில்தான் கடன் வழங்கப்பட்டது. அப்போது தொண்டுநிறுவனத்தினரும் வங்கி அதிகாரிகளும் இணைந்து புனையாளாக (பினாமியாக ஆட்களை) வைத்துப் பல கோடி உரூபாய் கடன் வழங்கினார்கள். உணவுப்பொருள் அட்டையின் படி, கடவுச்சீட்டு அளவுப்படம் ஆகியவற்றை…
உழைக்கும் மாற்றுத்திறனாளி சேகரனுக்கு உதவி தேவை.
தன்னம்பிக்கையுடன் தொழில் செய்யும் மாற்றுத்திறனாளி திண்டுக்கல் மாவட்டம், கே.சிங்காரக்கோட்டையைச்சேர்ந்தவர் சேகரன். இவர் ஒரு மாற்றுத்திறனாளி. இரண்டு கால்களும் செயல் இழந்துள்ள. இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இக்குழந்தைகளைக் கெங்குவார்பட்டியில் உள்ள ஏதிலியர் இல்லத்தில் படிக்க வைத்துள்ளார். இவர் கால்நடைகளான குதிரை, மாடுகளுக்குக் குளம்பாணி(இலாடம்) அடிக்கும் தொழில் செய்து வருகின்றார். இத்தொழிலின் பொருட்டு இவர் திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்குச் சென்று தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் இயந்திரங்களின் பயன்பாடு அரிதாக இருந்தது. அப்பொழுது வேளாண்மைக்குக் கால்நடைகள் பயன்படுத்தப்பட்டன. நிலத்தை உழுதல்,…
“செல்லமே மாற்றத்தை உருவாக்குவோம்” விருதுகள் வழங்கும் விழா
‘செல்லமே’ மாத இதழ் சார்பில் 2014 ஆம் ஆண்டிற்கான “செல்லமே மாற்றத்தை உருவாக்குவோம்” விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. தமிழில் பெற்றோருக்காக வெளிவருகின்ற வார இதழான ‘செல்லமே’ தன்னுடைய முதலாவது பிறந்தநாளினை முன்னிட்டுத் தமிழ்நாட்டில் பல்வேறு திறமைகளைக்கொண்டு, மக்களுக்காகத் தங்களை ஒப்படைத்துக்கொண்ட, மற்றவர்களால் அறியப்படாத 10 அருவினையாளர் (சாதனையாளர்)களுக்கு விருது வழங்கும் விழா சென்னை, கந்தன் சாவடியில் நடைபெற்றது. இவ்விழாவில், விருது வழங்கப்பட்ட அருவினையாளர்களில் 12 அகவை யோகேசு என்ற சிறுவனும் அடக்கம். இவர் ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் மின்னணுத்துடைப்பான் ஒன்றினைக்…
தேனிமாவட்டத்தில் குற்றஉடைமை(மாஃபியா)க் கும்பல்
தேனிமாவட்டத்தில் மீண்டும் தலைதூக்கும் குற்றஉடைமை(மாஃபியா)க் கும்பல் தேனிமாவட்டத்தில் ஏமாற்றும் குற்றக்கும்பல் மறுபடியும் தொழிலில் இறங்கிப் பலரை வஞ்சித்து வருகிறது. தேனி மாவட்டத்தில் மண்ணுளிப் பாம்பு, நாகரத்தினக்கல், குபேரச்செம்பு, கலசம், மயில்படம் போட்ட பத்து உரூபாய்த்தாள், திப்பு சுல்தான் வாள், ஓர் இலட்சம் கொடுத்தால் இரண்டு இலட்சம், கள்ளப்பணம், அரியவகை மூலிகை, கருப்புப் பூனை, கருப்பு மை, கருந்துளசி, இரிடியம்,குபேர பூசை, 500உரூபாய் வண்ணப்படிமை, 1000உரூபாய், பழங்கால நாணயங்கள், பழங்காலத்து தினார்பணத்தாள்கள், களங்கம்(தோசம்) கழிக்கும் பூசை, அகழ்வராய்ச்சியின்போது கிடைத்த மன்னர்காலத் தங்கக் காசுகள்,…
இடைத்தரகர்களின் பிடியில் அரசு அலுவலகங்கள் – வைகை அனிசு
இடைத்தரகர்களின் பிடியில் அரசு அலுவலகங்கள்! அரசு ஆவணங்கள் வெளியில் கடத்தப்படும் கண்டம்(அபாயம்) தேனிமாவட்டத்தில் இடைத்தரகர்களின் பிடியில் அரசு அலுவலகங்கள் இயங்கிவருவதால் அரசு அதிகாரிகள் யார், இடைத்தரகர்கள் யார் எனப் புரியாமல் பொதுமக்கள் குழம்பி வருகின்றனர். தேவதானப்பட்டியில் செயல்படும் அரசு அலுவலகங்கள், வங்கிகளில் ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் தற்காலிகமாகத் திறன் குறைந்த தொழிலாளர்களை அமர்த்திப் பயன்படுத்துகின்றனர். அரசு அலுவலகங்களில் பணியில் இருக்கும் அரசு அலுவலர்கள் வெளிஆட்களைப் பயன்படுத்தி வருகின்றனர். தேவதானப்பட்டி பாரதஅரசு வங்கியில் வெளியார்களும் ஓட்டுநர்களும் வங்கியினுள் உள்ளே உட்கார்ந்து…
வருவாய்த்துறை அதிகாரிகள் உடந்தையுடன் மரங்கள் வெட்டிக் கடத்தல்
வருவாய்த்துறை அதிகாரிகள் உடந்தையுடன் மரங்கள் வெட்டிக் கடத்தல் தேனிமாவட்டத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் உடந்தையுடன் மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டு வருகின்றன. தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை, நாகர்வள்ளி அணை, பச்சிலைநாச்சியம்மன் அணை, மஞ்சள் ஆறு பகுதிகளில் வருவாய்த்துறைக்குச் சொந்தமான மரங்கள் உள்ளன. பலா, தேக்கு, புளியமரம், நாவல் மரம் முதலான ஏராளமான மரங்கள் உள்ளன. இம்மரங்கள் வருவாய்த்துறைக்குச் சொந்தமான மரங்கள். மரம் வெட்டிக்கடத்தும் கும்பல் உரிமைப்பகுதிகளில்(பட்டாக்காடுகளில்) மரங்கள் வெட்டுவதாக இசைவு பெற்று வருவாய்த்துறைக்குச் சொந்தமான மரங்களை வெட்டிக்கடத்துகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வருவாய்…
தேனி மாவட்டத்தில் புளி அமோக விளைச்சல்
தேனி மாவட்டத்தில் புளி அமோக விளைச்சல் தேனிமாவட்டத்தில் புளியமரங்களில் புளிகள் அமோக விளைச்சல் அடைந்துள்ளது. இதனால் உழவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேவதானப்பட்டியிலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் புளியமரங்கள் அதிக அளவில் உள்ளன. முன்பு, சாலையின் இருபுறமும் இராணிமங்கம்மாள் காலத்தில் நடப்பட்ட புளியமரங்கள் அதிக அளவில் இருந்தன. சாலை விரிவாகத்தின்போது அவை அனைத்தும் வெட்டப்பட்டுவிட்டன. இவை தவிர பொம்மிநாயக்கன்பட்டி, எ.புதுப்பட்டி, மேல்மங்கலம் பகுதியில் புளியமரங்கள் அதிக அளவில் உள்ளன. இப்பகுதியில் கிடைக்கும் புளியம்பழங்களை எடுத்துக் காயவைத்து அதில் உள்ள கொட்டைகளை நீக்கி வெளிமாநிலங்களுக்கு அனுப்புகின்றனர்….
அயிரை மீன் வரலாறு காணாத அளவிற்கு விலை உயர்வு
அயிரை மீன் வரலாறு காணாத அளவிற்கு விலை உயர்வு தேனிமாவட்டத்தில் அயிரை மீன் வரலாறு காணாத அளவிற்கு விலை உயர்ந்துள்ளது.இருப்பினும் மீன்விரும்புநர்கள் அம்மீன்களை விரும்பி வாங்கி உண்கிறார்கள். தேவதானப்பட்டிப் பகுதிகளில் உள்ள ஆறுகள், ஓடைகள், கண்மாய்களில் நீர் நிரம்பி மறுகால் பாய்கிறது. இதனால் இயற்கையாக அயிரை மீன், கெழுத்தி மீன் போன்ற மீன்கள் பெருகி உள்ளன. மற்ற மீன்கள் தண்ணீர் செல்லக்கூடிய திசையில் செல்லும் தன்மை உடையது. ஆனால் அயிரை மீன் மற்றும் கெளுத்தி மீன் நீரோட்டத்திற்கு எதிர்த்திசையில் வரும் தன்மை…
கன்னிமார்புரத்தில் கற்சுரங்கங்களால் விரிசலடையும் சுவர்கள்
கன்னிமார்புரத்தில் கற்சுரங்கங்களால் விரிசலடையும் சுவர்கள் ஊர் மக்கள் தூங்கமுடியாமல் தவிப்பு – வைகை அனிசு தேனிமாவட்டத்தில் உள்ள கன்னிமார்புரத்தில் இரவு நேரத்தில் அகழ்களங்களில்(கற்சுரங்கங்களில்) வைக்கப்படும் வெடிகளால் இரவில் தூங்கமுடியாமல் தவிக்கின்றனர். தேவதானப்பட்டி அருகே உள்ள கன்னிமார்புரம், வைகைப் புதூர், தேவதானப்பட்டி கோழிகூப்பிடுகிற ஆலமரம், எ.புதுப்பட்டி, மேல்மங்கலம் புறவழிச்சாலை ஆகிய பகுதிகளில் வெடிப்பகம்(கிரசர்) என்ற பெயரில் பல அகழ்களங்ககள் இசைவில்லாமல் இயங்கிவருகின்றன. இதே போல உத்தமபாளையம் அருகே உள்ள சங்கிலிக்கரடு, ஆண்டிபட்டி அருகே தோட்டக்கலைத்துறை அலுவலகம் ஆகிய இடங்களில் வெடிப்பகம்(கிரசர்) என்ற…
‘நவீனநொச்சி’ – படைப்புகள் வரவேற்கப்படுகின்றன
‘நவீனநொச்சி’ – இலக்கிய இதழுக்குப் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன வணக்கம். இருமாதக் கவிதை இதழான‘நவீனநொச்சி’ இது வரை பத்து (10) இதழ்கள் வெளிவந்துள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன். இவ்விதழின் முதன்மை நோக்கங்களில் ஒன்று மாணவர்களிடமும் ஆய்வாளர்களிடமும் உள்ள படைப்பாற்றல் திறத்தை வளர்த்தெடுப்பதும் ஊக்குவிப்பதும் ஆகும். அதனால் மாணவர்கள் ஆய்வாளர்கள் தம் படைப்புகளை ஒரே கட்டுக்குள் மின்னஞ்சலிலோ இதழின் முகவரிக்கோ அனுப்பலாம். பல்கலைக் கழகப் பேராசியர்களும் கல்லூரிப் பேராசியர்களும் இலக்கிய ஆர்வலர்களும் நவீனநொச்சி வாசகர்களும் அன்போடு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, தமிழர் திருநாளாகிய…
மொழி உரிமை ஆண்டு- ஈகியர் நினைவேந்தல்
ஈகியருக்கு நினைவேந்தலும் மொழி உரிமை ஆண்டாக 2015 ஐ கடைப்பிடித்தலும் மொழி உரிமைக் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குதலும் வணக்கம், தமிழகத்தின் வரலாற்றை மாற்றிய 1965 இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தின் 50 ஆம் ஆண்டு எதிர்வரும் 2015 ஆகும். இவ்வாண்டில் மொழிப்போர் ஈகியர் நாளான சனவரி 25, 2015 முதல் ஓராண்டுக்கு இந்தித் திணிப்பு எதிர்ப்பு மொழிப் போராளிகளின் நினைவை ஏந்துவதும் அந்தப் போராட்டத்தின் உயிர்ப்பிலிருந்து புதிய மொழி உரிமைப் போராட்டங்களை நடத்துவதும் காலத்தின் கட்டாயமாகிறது. இந்தியையும் சமற்கிருதத்தையும் திணிக்கும் நரேந்திர மோடி அரசின்…
இரும்புக் கடைகளுக்குச் செல்லும் வெற்றிலை உரல்கள்
தேவதானப்பட்டிப் பகுதியில் பழைய இரும்புக் கடைகளுக்குச் செல்லும் வெற்றிலை உரல்கள் தேவதானப்பட்டிப் பகுதியில் வெற்றிலை பாக்கு இடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் உரல்கள் பழைய இரும்புக்கடைகளுக்கு வழியனுப்பப்பட்டு வருகின்றன. தேவதானப்பட்டி மற்றும் அதனைச்சுற்றியுள்ள ஊர்களில் வெற்றிலை, புகையிலை பயன்படுத்துபவர்கள் மிகுதியாக இருந்தனர். இதில் வயதானவர்கள் பல் இல்லாமல் இருந்தால் உரல் மற்றும் எச்சில் துப்புவதற்காகப் படிக்கம் என்ற கோளாம்பியைப் பயன்படுத்தி வந்தனர். இந்த உரலில் வெற்றிலை, சுண்ணாம்பு, தேவையான அளவு பாக்குகளை வைத்து அதனைக் குத்தி அதன்பின்னர் தங்கள் வாயில் போட்டு மெல்லுவார்கள்….
