கவிஞர் மு.முருகேசுக்கு மீரா விருது

கவிஞர் மு.முருகேசுக்குக் கவிப்பேராசான் மீரா விருது வழங்கப்பட்டது பரமக்குடி அரசு கலைக்கல்லூரியும் ‘வளரி’ கவிதை இதழும் இணைந்து நடத்திய கவிப்பேராசான் மீரா விழாவில், தமிழில் குறும்பா(ஐக்கூ) கவிதைகள் குறித்த தொடர் செயல்பாடுகளுக்காகக் கவிஞர் மு.முருகேசுக்குக் கவிப்பேராசான் மீரா விருது வழங்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக மானாமதுரையிலிருந்து வெளிவரும் ‘வளரி’ கவிதை இதழ் சார்பில், தமிழ்ப் படைப்புவெளியில் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளைச்செய்துவரும் படைப்பாளிகளுக்கு கவிப்பேராசான் மீரா விருது வழங்கப்பட்டு வருகிறது.கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சப்பானிய ஐக்கூ வடிவக் கவிதைகளைத் தமிழில் பரவலாக அறிமுகம் செய்ததோடு, இளைய…

உ.வே.சா. உலகத் தமிழர் விருது

உ.வே.சா. உலகத் தமிழர் விருது சிங்கப்பூர் முசுதபா தமிழ் அறக்கட்டளை வழங்கும் உ.வே.சா. உலகத் தமிழர் விருதும், உரூ. ஓர் இலட்சம் பரிசுத் தொகையும் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.இம்முறை ‘சிலப்பதிகாரத்தில் அறக்கோட்பாடு‘ எனும் தலைப்பு வழங்கப்படுகிறது.இத்தலைப்பில் சிறந்த ஆய்வுரையை 150 பக்கங்களுக்கு மிகாமல் எழுதி பொதிக்கோப்பு(PDF) வடிவ ஆவணமாக suriyaudayam@gmail.com  என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 31.8.2019சிறந்த ஆய்வுரைக்கான தெரிவு அறிவிப்பு: 02.1.2020கவிக்கோ மன்றத்தில் விருது வழங்கும் நாள்: 22.2.2020

தெற்கெல்லையில் ஒரு தமிழினப் போராளி மணி நூல் வெளியீட்டு விழா

பங்குனி 03, 2050 ஞாயிறு மார்ச்சு 17, 2019 காலை 9.30 மணி நிகழ்விடம் : இளைஞர் விடுதி, இந்திரா நகர், சென்னை நூல் வெளியீடு:  பழ.நெடுமாறன் படத்திறப்பு: கி.வேங்கடராமன் சிறப்புரை: பெ.மணியரசன் நாஞ்சில் நாடன் ஏற்புரை:  முனைவர் பி.(இ)யோகீசுவரன்   அழைக்கும் அரசி பதிப்பகம்

இலக்குவனார் இலக்கியப் பேரவையின் ஈறாண்டு விழாவும் விருது வழங்கு விழாவும்

பங்குனி 03, 2050 ஞாயிறு மார்ச்சு 17, 2019 மாலை 5.30 திருமால் திருமண மண்டபம், அம்பத்தூர், சென்னை 53 நூல் வெளியீடும் விருது வழங்கலும்: தோழர் இரா.நல்லகண்ணு விருது பெறுநர்: தொல்காப்பியர் விருது: முனைவர் இரா.இராசேந்திரன் (தேவிரா) திருவள்ளுவர் விருது: முனைவர் இ.எலியாசு இலக்குவனார் விருது: முனைவர் க.மலர்விழி கவிஞர் செம்பை சேவியர், ஒருங்கிணைப்பாளர் புவலர் உ.தேவதாசு, செயலர் இலக்குவனார் இலக்கியப் பேரவை

தமிழ் அறிஞர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கு விருது, திருச்சிராப்பள்ளி

உலகத் தாய் மொழி நாளை முன்னிட்டுத் தமிழகப் பெண்கள் செயற்களமும் தமிழரண் அமைப்பும் மாணவர்கள் ஒருங்கிணைக்கும் தாய்மொழி நாள் உறுதியேற்பு விழா, தமிழ்ச் சான்றோர்கள் படம் பொறித்த வளிஊதி(பலூன்) பறக்கவிடும் நிகழ்வு, தமிழ் அறிஞர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்களைப்  போற்றிச் சிறப்பு செய்திட சிறப்பாரம் (விருது) வழங்கும் விழா ஆகியன இணைக்கப்பட்டுத் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் கல்லூரி ஏ.வி. அரங்கத்தில் உலகத்தாய்மொழி நாளான 20.02.2019 அன்று நடை பெற்றது.  தமிழகப் பெண்கள் செயற்களத்தின் தலைவர் இசை மொழி இவ்விழாவிற்குத் தலைமை வகித்தார். தமிழரண் மாணவர்கள் தாமரை,…

பதினாறாவது பன்னாட்டு மாநாடு – கருத்தரங்கம் , 2019

வைகாசி 12-14, 2050  / 26.05.2019-28.05.2019 பி,எசு.என்.ஏ. பொறியியல் தொழில் நுட்பக்கல்லூரி திண்டுக்கல்   வளர்தமிழ் ஆய்வு மன்றம், திண்டுக்கல் மகா கணேச தமிழ் வித்தியா சாலைப் பள்ளி, மலேசியா உலகத் தமிழ்க்காப்பிய ஆராய்ச்சி நிறுவனம், மலேசியா இணையத் தோழி, இந்தியா பதினாறாவது பன்னாட்டு மாநாடு – கருத்தரங்கம் , 2019 அறிவிப்பு மடல் கருப்பொருள் தமிழ்மொழியின் பன்முகத்தன்மை துணைக் கருப்பொருள் தமிழினம், தமிழ் மொழி, இலக்கியம், இலக்கணம், மொழியியல், தத்துவம், வரலாறு, கலை/நுண்கலை, கல்வி/ கற்றல் கற்பித்தல், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் தொன்மை,…

அளவளாவல் – மொழிபெயர்ப்பு விருதாளர் சங்கரநாராயணன்

மாசி 26, 2050 ஞாயிறு   10.03.2019 மாலை 4.00 குவிகம் இல்லம், ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 குவிகம் இலக்கிய வாசல் அளவளாவல் – தமிழக அரசின் மொழிபெயர்ப்பு விருதாளர் சங்கரநாராயணன் தொடர்பிற்கு  சுந்தரராசன் 94425 25191

திருக்குறளை இழிவுபடுத்திய நாகசாமி நியமனத்திற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்

மாசி 25, 2050 சனி  09.03.2019 காலை 10.30 வள்ளுவர் கோட்டம் அருகில் சென்னை திராவிட இயக்கத் தமிழர் பேரவை

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் கருத்தரங்கம், சென்னை

மாசி 26, 2050 ஞாயிற்றுக்கிழமை 10.3.2019  மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை  இடம்: பேரவையின் தலைமை யகம், (புதிய எண். 120,  என்.டி. ஆர். தெரு, (இரண்டாவது மாடி), அரங்கராசபுரம், கோடம்பாக்கம், சென்னை – 24) திராவிட இயக்கத் தமிழர் பேரவையின்  கருத்தரங்கம் வரவேற்புரை: தோழர் சாந்தசீலன் தலைமை: தோழர் மு.மாறன் சிறப்புரை: கோவி.இலெனின் (பொறுப்பாசிரியர், நக்கீரன்)  – கொள்கைசார் இயக்கமும் தேர்தல் சமரசமும் கருத்துரை: தோழர் தமிழ் மறவன் – அன்னை மணியம்மையார், தோழர் மகாலட்சுமி –…

மார்ச்சு 9 – தமிழ்நாடெங்கும் ஏழு தமிழர் விடுதலைக்காக மனிதச் சங்கிலி

மார்ச்சு 9 – தமிழ்நாடெங்கும் ஏழு தமிழர் விடுதலைக்காக மனிதச் சங்கிலி பெருந்திரள் மக்கள் பங்கேற்க வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வேங்கடராமன் அறிக்கை பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயசு, செயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய ஏழு தமிழர்களின் விடுதலைக்குத் தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் இயற்றி அனுப்பி மூன்று மாதங்கள் கடந்த பிறகும் ஆளுநர் அதில் கையெழுத்திடாமல் காலம்கடத்துவது இந்திய அரசின் தமிழினப் பகைப் போக்கின் விளைவே ஆகும்! இந்நிலையில், ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்திப் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள்…

மாறிவரும் சமூகமும் மாறாத மதிப்புகளும் – மறைமலை இலக்குவனார்

மாசி 20,2050  திங்கள்  4.03.2019  மாலை 5.00-6.30 வள்ளலார் அரங்கம், புதுவை மாறிவரும் சமூகமும் மாறாத மதிப்புகளும்  – சிறப்புரை:  நிறைமொழி மாந்தர் முனைவர் மறைமலை இலக்குவனார்

செம்மொழி விருதுக் குழுவில் நாகசாமி: தமிழுக்குப் பேரிழுக்கு!

செம்மொழி விருதுக் குழுவில் நாகசாமி: தமிழுக்குப் பேரிழுக்கு!- மு.க.தாலின் கண்டனம் செம்மொழி திறனாய்வு நிறுவனத்தின் குடியரசுத் தலைவர் விருதுக்  குழுவிலிருந்து தமிழுக்கு எதிரான நாகசாமியை நீக்க வேண்டுமெனத் திமுக தலைவர் முக.தாலின் வலியுறுத்தியுள்ளார். வேதங்களிலிருந்து திருக்குறள் வந்தது எனத் திருவள்ளுவரைச் சிறுமைப்படுத்திய முன்னாள் தொல்லியியல் அதிகாரி நாகசாமியை, செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் குடியரசுத் தலைவர் விருதுகளைத் தேர்வு செய்யும் குழுவில் உறுப்பினராக நியமித்திருப்பதற்குத் திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதாக மு.க.தாலின் கூறியுள்ளார்.  இதுதொடர்பாக நேற்று (மார்ச்சு 2) வெளியிட்டுள்ள அறிக்கையில்,…