புதுமை இலக்கியத் தென்றல் 788ஆம் நிகழ்ச்சி

பங்குனி 18, 2050 திங்கட்கிழமை 1.4.2019  மாலை 6.30 மணி இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், எழும்பூர், சென்னை புதுமை இலக்கியத் தென்றல் (பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி) 788ஆம் நிகழ்ச்சி தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி தொடக்கவுரை: அமுதரசன் சிறப்புரை: சரவணா இராசேந்திரன் தலைப்பு: தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் முனைவர் க.தமிழமல்லன்! வாகை மாலை அணிவிப்பீர்!

புதுச்சேரி மாநிலத்தில் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் மொத்தம் 8 பேர் போட்டி இடுகின்றனர். அவர்களுள் கால்பந்து சின்னத்தில் தனியராக முனைவர் க.தமிழமல்லன் போட்டியிடுகிறார். அவரது தேர்தல் அறிக்கை வருமாறு: அனைவரும் வாழ்க! அனைவரும் உயர்க!       முனைவர் க.தமிழமல்லன் சிறந்த வேட்பாளர்! முனைவர் க.தமிழமல்லன் தமிழ்ஆசிரியர் (ஓ) , பாவலர், இதழ்ஆசிரியர், தனித்தமிழ்இயக்கத் தலைவர். அவர் ஒழுக்கம் உடையவர். நேர்மையானவர். துாய்மையானவர். முனைவர் க.தமிழமல்லன்! சிறந்த அறிஞர், உயர்கல்வி கற்றவர், பல நுால்களை இயற்றியவர். வெல்லும் துாயதமிழ் என்னும் மாத இதழை 26 ஆண்டுகளாக…

இலக்கியச் சிந்தனை 585 + குவிகம் இலக்கிய வாசல் 48

பங்குனி 16, 2050 சனி 30.03.2019  மாலை 6.00  சீனிவாச காந்தி நிலையம், அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை, சென்னை 600018 இலக்கியச் சிந்தனை நிகழ்வு 585 இராமாயணத்தில் ஒரு நெருடல் சிறப்புரை: அம்பத்தூர் திரு தேவராச சாமிகள்  குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 48 கவிதை கடந்து வந்த பாதை சிறப்புரை: கவிஞர் நீரை அத்திப்பூ

தமிழ்மொழி விழா 2019 – தமிழ்ச்சான்றோர் புகழ் போற்றும் தமிழவேள் முப்பெரு விழா

 தமிழ்மொழி விழா 2019 – தமிழவேள் நற்பணி மன்றம் ஏற்பாட்டில் சிங்கப்பூரின் இருநூற்றாண்டு நிறைவில் தமிழ்ச்சான்றோர் புகழ் போற்றும் தமிழவேள் முப்பெரு விழா பங்குனி 17, 2050 ஞாயிறு 31.3.2019  காலை 10.00 முதல்  11.30 மணி வரை இந்திய மரபுடைமை நிலையம் (சிற்றிந்தியா) சிங்கப்பூர் தலைமை: பேராசிரியர் சுப.திண்ணப்பன் முன்னிலை: இராசுகுமார் சந்திரா (தலைவர் – சிற்றிந்தியா கடைக்காரர்கள், மரபுடைமைச் சங்கம்) சிறப்பு விருந்தினர்: இரா.தினகரன் (நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர்) நினைவுரை: சிங்கப்பூரின் முதல் தமிழர் முன்னோடி  நாராயண(ப் பிள்ளை): அருண் வாசுதேவு…

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான வேட்புமனு பதிவு தொடங்கியது : சித்திரை 14/ஏப்பிரல் 27இல் தேர்தல்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான வேட்புமனு பதிவு தொடங்கியது : சித்திரை 14/ஏப்பிரல் 27இல் தேர்தல் ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கும், அரசியல் இறைமைக்கும் போராடிவருகின்ற மக்களாட்சி வடிவமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இருக்கின்றது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாம் தவணைக் காலத்துக்கான வேட்புமனு பதிவு மார்ச்சு 10ஆம் நாளன்று தொடங்கியது. எதிர்வரும் 20ஆம் நாள் நள்ளிரவு வரை வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட இருக்கின்றன. எதிர்வரும் தேர்தல் ஏப்பிரல் 27ஆம் நாள் தேர்தல் புலம்பெயர் நாடுகளில் இடம்பெற இருக்கின்றது. தேர்தல் நடைமுறை விதிகள் , வேட்புமனுக்கள்,பிற விவரங்கள்…

வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க வேண்டும்! – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

இலங்கை இனப்படுகொலைக் குற்றங்களை விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க வேண்டும் ! – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தல் கொழும்பு, மார்ச்சு 23  இலங்கை இனப்படுகொலைக் குற்றங்களை விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்று அந்நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. முன்னதாக, இலங்கையில் இறுதிப் போரின்போது நிகழ்ந்த இனப்படுகொலைக் குற்றங்கள் குறித்து நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணையை மேற்கொள்ள அந்நாட்டு அரசுக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் இரண்டு ஆண்டுகள் காலக்கெடு அளித்தது. இதற்கு அடுத்த நாளிலேயே தமிழ்த்…

நல்லறிவுக்கூடம் விருது வழங்கும் விழா

நாள் : பங்குனி 14, 2050 வியாழன்  28-3-2019  மாலை 6 மணி இடம் : பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம், மயிலாப்பூர் நல்லறிவுக்கூடம் விருது வழங்கும் விழா  நூல் : தமிழ் இலக்கியத்தில் உவமைகள் இரண்டு தொகுதி ஆசிரியர் : பெரும்புலவர் க.அ. இராமசாமி நிகழ்ச்சி நிரல் இறைவணக்கம் வரவேற்புரை நிரலுரையாளர் : கலைமாமணி திரு. காத்தாடி இராமமூர்த்தி தலைமை – நூல் வெளியீடு – விருது வழங்கல்:   முனைவர் ஒளவை நடராசன் மேனாள் துணை வேந்தர் நூல் பெறுபவர் :…

இனமான நடிகர் எம்.ஏ.கிரிதரன் முதலாமாண்டு நினைவேந்தல்

பங்குனி 10, 2050  ஞாயிற்றுக்கிழமை 24.3.2019 மாலை 4:30 மணி  இடம்: ஆவடி பெரியார் மாளிகை இனமான நடிகர் எம்.ஏ.கிரிதரன் முதலாமாண்டு நினைவேந்தல்  தலைமை: பா.தென்னரசு (மாவட்டத் தலைவர்)   முன்னிலை:  க.இளவரசு (செயலாளர்), ஏழுமலை (துணைத் தலைவர்), உடுமலை வடிவேல் (அமைப்பாளர்), வெ.கார்வேந்தன் (இளைஞரணித் தலைவர்), க.கலைமணி (இளைஞரணிச் செயலாளர்)  நினைவேந்தல் உரை: வி.பன்னீர்செல்வம் (அமைப்புச் செயலாளர்)  நன்றியுரை: வை.கலையரசன்  ஏற்பாடு: ஆவடி மாவட்டம்.

வள்ளுவர் எதிர்த்த வடமொழிச் சிந்தனையோட்டம் – நிகழ்வு ஞாயிறு நடைபெறுகிறது

பெரியார் நூலக வாசகர் வட்டம்  – 2348 ஆம் நிகழ்வு வள்ளுவர் எதிர்த்த வடமொழிச் சிந்தனையோட்டம்  வெள்ளியன்று நடைபெறுவதாக இருந்த நிகழ்வு ஒத்தி வைக்கப்பெற்று, பங்குனி 10, 2050 ஞாயிறு  24.03.2019 மாலை 6 மணிக்கு அன்னை மணியம்மையார் அரங்கத்தில்(பெரியார் திடல், வேப்பேரி, சென்னை) நடைபெறுகிறது. தலைமை: பேராசிரியர் முனைவர் பொற்கோ (மேனாள் துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம்)  முன்னிலை: மயிலை நா.கிருட்டிணன் (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்)  கருத்துரை: முனைவர் இ.சுந்தரமூர்த்தி (மேனாள் துணை வேந்தர், தமிழ் பல்கலைக்கழகம்), முனைவர் ம.இராசேந்திரன் (மேனாள்…

சிலப்பதிகாரம் – தொடர் சொற்பொழிவு கி.இ.க. – ஒய்எம்சிஏ பட்டிமன்றம்

பங்குனி 12, 2050 செவ்வாய் 26.03.2019 மாலை 6.00 சிலப்பதிகாரம் – தொடர் சொற்பொழிவு தலைமை: கவிஞர் கா.வேழவேந்தன் சிறப்புரை:  பேரா.மா.வயித்தியலிங்கன்

அளவளாவல் – வி.இரவிசங்கர்

பங்குனி 10, 2050/ சனி / 24.03.2019 மாலை 4.00   குவிகம் இல்லம்,  ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம்,24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர்,சென்னை 600 017 அளவளாவல் – வி.இரவிசங்கர், இதழாளர்

தமிழ்நாட்டுக் கல்வி உரிமை – ஆர்ப்பாட்டம்

பங்குனி 09, 2050/ சனி / 23.03.2019 முற்பகல் 09.00 முதல் நண்பகல் 12.00 வரை வள்ளுவர் கோட்டம், சென்னை தமிழ்வழிக் கல்வி இயக்கம் – 8015562644