இளைஞர் கைகளில் இணையத்தமிழ் – இலக்குவனார் திருவள்ளுவன்

இளைஞர் கைகளில் இணையத்தமிழ்    தமிழ்நாட்டில் எந்த ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றாலும் அனைவரும் எதிரொலிக்கும் கவலை முதியோர் அவையாக இருக்கிறதே என்பதுதான். எந்தத் தமிழ்க்கூட்டம் என்றாலும், இளைஞர்களைக் காண முடிவதில்லை. ஒருவேளை உரையாளர்களின் குடும்பத்தினர் யாரும் வந்திருந்தாலும் அவர்கள் ஒருவர் அல்லது இருவராகத்தான் இருப்பர். கூட்டம் இறுதிவரை இருப்பார்கள் என்பதும் ஐயமே. இதற்காகவே நான் கல்லூரிகளில் நிகழ்ச்சிகள் நடத்தினேன். அங்கும் தமிழ் பயிலும் ஏதோ ஓர் ஆண்டின் மாணாக்கர்கள் மட்டும் அமர்ந்திருப்பார்கள். வருபவர்கள் ஆர்வமாகத்தான் இருப்பர். ஆனால், கல்லூரியில் இந்த நிகழ்ச்சிக்கு இத்தனாம் ஆண்டு…

அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை : 2017 – 2020 பருவத்திற்குரிய பொறுப்பாளர்கள்

  அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை : 2017 – 2020 பருவத்திற்குரிய பொறுப்பாளர்கள்   தமிழகத்திலும் பிற  மாநிலங்களில் செயல்பட்டு வரும் பதிவு செய்யப்பட்ட 30க்கும் மேற்பட்ட தமிழ்ச்  சங்கங்களின் கூட்டமைப்பு ‘அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை’ பேரவையின் செயற்குழுக் கூட்டமும் பொதுக்குழுக் கூட்டமும் சென்னை வண்டலூரில் உள்ள தலைநகர்த் தமிழ்ச் சங்கத்தில் 10/09/2017 அன்று காலை முதல் மாலை 5 மணிவரை  நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2017 – 2020 பருவத்திற்குரிய பொறுப்பாளர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டனர். . தலைவர்:திரு.மீனாட்சி சுந்தரம்(முத்து.செல்வன்) (பெங்களூர்த் தமிழ்ச்…

காவேரி இலக்கியக் கூடல், திருச்சிராப்பள்ளி

  புரட்டாசி 01, 2048 ஞாயிறு 17.09.2017 காவேரி இலக்கியக் கூடல், திருச்சிராப்பள்ளி முந்நூலாய்வு இனிய நந்தவனம் பதிப்பகம்  பேசி 94432 84823

திருலோகம் என்றொரு கவி ஆளுமை – ஆவணப்படம் வெளியிடல், சென்னை

  ஆவணி 30, 2047 / வெள்ளி / 15.09.2017 / பிற்பகல் 2.00 சென்னைப் பல்கலைக்கழகம் திருலோகம் என்றொரு கவி ஆளுமை – ஆவணப்படம் வெளியிடல்,  சென்னை அறிமுக உரை இயக்குநர் : இரவி சுப்பிரமணியன்

அனிதா உயிரீகத்தை ஏளனம் செய்த இலலிதா குமாரமங்கலத்திற்குக் கடுங்கண்டனம்!

  மாணவி அனிதா உயிரீகத்தை ஏளனம் செய்த இந்திய மகளிர் ஆணையத் தலைவர் இலலிதா குமாரமங்கலத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்!   மகளிர் ஆயம் தமிழக ஒருங்கிணைப்பாளர் அருணா கண்டன அறிக்கை!     மாணவி அனிதா மரணம் என்பது அவரது தலையெழுத்து என்றும், ஒவ்வொரு மாநிலத்தவரும் அவரவர் மொழிகளை வலியுறுத்தினால் ‘தேசம்’ என்னாவது என்றும் கூறி அனிதாவின் மரணத்தைச் சிறுமைப்படுத்திய தேசிய மகளிர் உரிமை ஆணையத் தலைவர் இலலிதா குமாரமங்கலம் கூற்றை மகளிர் ஆயம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.    பத்திரிக்கையாளரும் சமூக செயல்பாட்டாளருமான…

குறும்பாக்கள் புதிய பார்வையைத் தந்துள்ளன – கவி மு.முருகேசு

குறும்பாக்கள் புதிய பார்வையைத் தந்துள்ளன   – கவி மு.முருகேசு நூற்றாண்டு கண்ட குறும்பாக்கள்(ஐ.கூ கவிதைகள்) புதிய பார்வையைத் தமிழிலக்கியத்திற்குத் தந்துள்ளன                    – நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் மு.முருகேசு           வாலாசாபேட்டை.செப்.10. வாலாசாபேட்டை  அரசுக் கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற  குறும்பாக்கள் நூல் வெளியீட்டு விழாவில், தமிழில் அறிமுகமாகி  நூற்றாண்டைத் தொட்டிருக்கும் சப்பானிய  ஐக்கூ கவிதைகள், இன்றைக்குத் தமிழிலக்கியத்திற்குப் புதிய பார்வையையும் செறிவையும் தந்துள்ளன என்று வந்தவாசி நூலக வாசகர் வட்டத் தலைவர்…

சிந்துவெளி எழுத்து வாசிப்பு : பயிற்சி வகுப்புகள்

ஆவணி 31, 2048  / 16.09.2017  முதல் ஐப்பசி 11, 2048 / 28.10.2017 வரை சனிக்கிழமைதோறும்  ஏழு வாரங்களுக்கு காலை 10 முதல் பகல் 1 மணி வரை பேராசிரியர் இரா மதிவாணனால் சிந்துவெளி எழுத்து வாசிப்பு : பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட இருக்கின்றன. ஆர்வம் உள்ள தமிழறிந்த அன்பர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு எழுத்தறிவு பெறலாம்.   இடம்: சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை, (சென்னைக் கடற்கரை வள்ளுவர் சிலை எதிர்ப் புறம்) திருவல்லிக்கேணி.   தொடர்பு: பேரா. இரா.மதிவாணன் பேசி:…

பெரியார் விழா, சென்னைப் பல்கலைக்கழகம்

திருத்தி யனுப்பப்பட்ட அழைப்பிதழ் சென்னைப் பல்கலைக்கழகம்  தமிழ்மொழித் துறை  பெரியார் விழா புரட்டாசி 02, 2048 / 18-09-2017  பிற்பகல் 2.00 மணி சிறப்புரை – வழக்குரைஞர் அ. அருள்மொழி அனைவரையும் அழைக்கிறோம்! நன்றி.

பொது(நீட்)தேர்வை எப்பாடுபட்டாவது விரட்டியடிக்க வேண்டியது நமது கடமை – இராமதாசு

பொது(நீட்)தேர்வை எப்பாடுபட்டாவது விரட்டியடிக்க வேண்டியது நமது கடமை பணம் இருந்தால்தான் மருத்துவக்கல்வியா? – இராமதாசு கேள்வி பணம் இருந்தால் மட்டும்தான் மருத்துவக் கல்வியைப்பற்றி நினைத்துப் பார்க்க முடியும் என்ற நிலை உருவாகி வருவது மன்பதைக்கு நல்லதல்ல என்று பாமக நிறுவனர்  இராமதாசு தெரிவித்துள்ளார். பொதுத்தேர்வு (நீட்) அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கம் மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதல்ல. சிற்றூர்ப்புற ஏழை மாணவர்களின் மருத்துவக்கல்வி வாய்ப்புகளைப் பறிப்பதுதான் என்பதை  மெய்ப்பிக்கும் வகையில் புள்ளி விவரங்கள் வெளியாகி வருகின்றன. பணம் இருந்தால் மட்டும்தான் மருத்துவக் கல்வியைப்பற்றி நினைத்துப் பார்க்க முடியும்…