ஆவடியில் வட இந்தியர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் !

 த.தே.பொ.க. முதலான பல்வேறு அமைப்புத் தோழர்கள் கைது! ஆவடி இந்தியப் அரசுப் பாதுகாப்புத் துறை நிறுவனப் பணி வாய்ப்பில் குவிந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வட இந்தியர்களை எதிர்த்து  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட த.தே.பொ.க. முதலான பல்வேறு அமைப்புத் தோழர்கள் தளையிடப்பட்டுள்ளனர். சென்னை ஆவடியில்  இந்திய அரசு பாதுகாப்புத்துறை  நிறுவனம் (OCF) செயல்பட்டுவருகிறது.  இதில் தையல் பணியாளர்களுக்கான  வேலைவாய்ப்புத் தேர்வு  நடைபெற்றது. வேலை வாய்ப்பு பணித்தேர்வு எழுத இசைவளிக்கப்பட்ட 1800 பேரில் 1026 பேர் தமிழர்கள் அல்லாத, மலையாளிகள், கன்னடர்கள், மேற்குவங்கம், பீகார், மாகாராட்டிராவைச் சேர்ந்த வடஇந்தியர்கள்….

பள்ளி மாணவர்களுக்கான சித்த மருத்துவ ஆய்வு

  குன்றத்தூர் பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளியில் கடந்த 30.11.2013 காரிக்கிழமையன்று பள்ளி குழந்தைகளுக்கான சித்த மருத்துவ ஆய்வு நடந்தது. சித்த மருத்துவர்கள் – மரு. மகேந்திரன் (சித்த மருத்துவ முதுவர்) மரு. தாமோதரன் (சித்த மருத்துவ முதுவர்) மரு. செயப்பிரதாப் (சித்த மருத்துவ இளவர்) வந்திருந்து மருத்துவ ஆய்வுகளை மேற்கொண்டு மருந்ததுகளை வழங்கினர். குன்றத்தூர் சீபா மருத்துவ ஆய்வகத்தினர் தேவையானவர்களுக்குக் குருதி, சருக்கரை, கொழுப்பு…  போன்ற ஆய்வுகளை மேற்கொண்டு உதவினர். மருத்துவ ஆய்வில் 150 பள்ளிக் குழந்தைகளும் 200க்கும் மேற்பட்ட பொது மக்களும் பங்கேற்றுப்…

தமிழர்கள் இந்தியரல்லரா? கேரள அரசால் ஏதிலிகளாகும் அட்டப்பாடித் தமிழர்கள் – தினமலர்

கோவை : கேரள மாநிலம், அட்டப்பாடியில், பல தலைமுறைகளாக வாழும் தமிழர்களின் நிலம் முதலான  சொத்துக்களைக் கவர்ந்து,  ஏதிலிகளாக்கி வெளியேற்றும் முயற்சியில், கேரள மாநில அரசு ஈடுபட்டிருப்பதாகக், குற்றச்சாட்டு எழுந்துள்ளது.   கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தின் வடகிழக்கில், மன்னார்க்காடு  வட்டத்தில் உள்ளது, அட்டப்பாடி. மேற்குத்தொடர்ச்சி மலையில், அடர்ந்த வனம்சார்ந்த இப்பகுதி சுற்றுலா இடமாகவும் விளங்குகிறது. கேரள மாநிலத்தின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது, அட்டப்பாடியில்தான் ஆதிவாசிகள்  மிகுதியாக வசிக்கின்றனர்; இதன் எல்லை, ஏறத்தாழ 750 சதுரஅயிரைக்கோல்(கி.மீட்டர்). இங்கு இருளர், முடுகா, குரும்பா இனத்தவர் குறிப்பிட்ட…

காவிரிபாயும் மாவட்டங்களில் நீருரிமை ஆர்ப்பாட்டங்கள்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கழிமுக மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம்     “இந்திய அரசே! காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமை!  அரசமைப்புச் சட்டவிதி 355-இன் கீழ் கருநாடகத்திடமிருந்து தமிழகத்திற்குரிய 26 ஆ.மி.க (டி.எம்.சி) பாக்கித் தண்ணீரை திறந்துவிட கட்டளை இடு!”   “உழவர்களின் பயிர்க் காப்பீடுத் திட்டத்தை தனியாருக்குத் தாரை வார்க்கும் நடவடிக்கையைக் கைவிடு!” “இந்திய அரசே! தமிழர்களை வஞ்சிக்காதே!” “தமிழக அரசே! கருநாடகத்திடமிருந்து தமிழகத்திற்குரிய எஞ்சிய தண்ணீரைக் கேட்டுப் பெற உறுதியான நடவடிக்கை…

“தமிழக அரசு மூவர் தூக்கை நீக்க வேண்டும்”

 உயிர்வலி ஆவணப்படவிழாவில் தோழர் கி.வெங்கட்ராமன்  உரை!   இராசீவு கொலை வழக்கில் தொடர்புபடுத்தப்பட்டு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன் குறித்தும், மரண தண்டனை ஒழிப்பு குறித்தும் பேசுகின்ற ‘உயிர்வலி’ ஆவணப்படத்தின் வெளியீட்டு நிகழ்வும், நீதிபதி வீ.ஆர்.கிருட்டிணய்யர் அவர்களின் 99ஆவது பிறந்தநாள் விழாவும் விருதுகள் வழங்கும் விழாவும் 24.11.2013 சென்னையில் நடைபெற்றது. சென்னை பிட்டி.தியாகராயர் அரங்கில், மரண தண்டனை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில்

புலம்பெயர் தமிழர் அனைத்துலக மாநாடு – மொரிசியசு

  புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் குறித்த முதல் அனைத்துலக மாநாடு மொரிசியசு          (சூலை 16, 17 &18 – 2014)             புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் குறித்த முதல் அனைத்துலக மாநாடு மொரிசியசு நாட்டிலுள்ள மகாத்மா காந்தி நிறுவன வளாகத்தில் வரும் சூலை 16-18, 2014 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டினைச் சென்னையிலுள்ள ஆசியவியல் நிறுவனமும் மொரிசியசு நாட்டின் மகாத்மா காந்தி நிறுவனமும், மொரிசியசு நாட்டின் பல்வேறு தமிழமைப்புக்களும் இணைந்து நடத்துகின்றன. மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இம்மாநாட்டின் கருத்தரங்கில் நாளொன்றிற்கு 30…

செந்தமிழ் விரும்பிகள் மாமன்றம் நடத்தும் ஐம்பெரு விழா

 இடம் தமிழ் வள்ளல் சந்திரசேகர் திருமண மண்டபம் மேற்கு மாம்பலம், சென்னை 33 நாள் கார், 8, தி.ஆ. 2044 / நவ,24, கி.ஆ.2013 ஞாயிறு காலை 08.55முதல் நண்பகல் 01.40 வரை (நண்பகல் உணவு 01.50)   செந்தமிழ் விரும்பிகள் மாமன்ற வெள்ளிவிழா எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! எழுச்சி விழா : கருத்தரங்கம், கவியரங்கம்(தாயே! தமிழே! நீ எங்கே!)  தமிழ்த்திரு தியாகு அவர்களுக்குப் பாராட்டுவிழா சிறந்த தமிழ்மாணவன், நற்றமிழாசிரியர் விருது வழங்கும் விழா அருவினை புரிந்த ஆன்றோர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா…

இலங்கைப் போர்க்குற்றங்கள் தண்டிக்கப்பட வேண்டும்: சிதம்பரம்

  குற்றவாளியே நடவடிக்கை எடுக்க வேண்டுமாம்! இலங்கையில் மனித உரிமைகளை மீறியவர்களை, அந்நாட்டு அரசு கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தினார். மேலும், “விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது ஏற்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து முழுமையானஉசாவல் தேவை” என்றும் அவர் தெரிவித்தார். சிங்கப்பூரில்  நடைபெற்ற இரண்டாவது தெற்கு ஆசிய மாநாட்டில் பேசிய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், “மனித உரிமைகள் மீறப்பட்டது தொடர்பாக முழுமையாக உசாவல் நடத்தி, குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இலங்கை அரசுக்கு உள்ளது”…

பன்னாட்டு வணிகக் கண்காட்சியில் ‘தமிழ்நாடு நாள்’ விழா

தில்லி பிரகதித் திடலில் நடைபெற்றுவரும் இந்திய-பன்னாட்டு வணிகக் கண்காட்சியில் ‘தமிழ்நாடு நாள்’ விழாவை தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்புச் சார்பாளர் எசு.டி.கே. சக்கையன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தார். தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி-செய்தித் துறை செயலாளர் முனைவர்  மு.இராசாராம் தலைமையில் விழா நடைபெற்றது. தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுறை ஆணையர் சசுபீர் சிங்கு பசாசு, துணை இயக்குநர் கு.தாணப்பா, செய்தி விளம்பரத் துறை உதவி இயக்குநர் முத்தையா  முதலானோர் பங்கேற்றனர். விழா நடைபெற்ற திறந்தவெளி அரங்கில் பரதநாட்டியம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை முதலான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன….

நெல்லையை உலுக்கிய தமிழர்களப் பேரணி

 தமிழ்நாடு தனி மாநிலமாக உருவான நாளை முன்னிட்டுத் தமிழர்களம், திருநெல்வேலி நகரில் பேரணி, பொதுக்கூட்டம் நடத்தியது.  தமிழர்களத்தின் பொதுச் செயலாளர் அரிமாவளவன் தலைமையில் நடந்த இந்த நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.  பொதுவளஆய மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதைக் கண்டித்தும், முள்ளிவாய்க்கால் முற்றத்தை தமிழக அரசு இடித்ததைக் கண்டித்தும், கூடங்குளம் அணுஉலையை மூடக் கோரியும், மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யக் கோரியும், தமிழகப் பள்ளிகளில் அரசே முன்னின்று நடத்தும் தமிழ் அழிப்பு-ஆங்கிலத் திணிப்பை எதிர்த்தும், தமிழகத்தின் பல்வேறு உரிமைகள் தொடர்பாகவும் பேரணியில்…

மும்பையில் பெரியாரின் 135 ஆவது பிறந்தநாள் விழா

மும்பைத் திராவிடர் கழகத்தின் சார்பாகத் தந்தை பெரியாரின் 135 ஆவது பிறந்தநாள் விழா                 மும்பைத் திராவிடர் கழகத்தின் சார்பாகத் தந்தை பெரியாரின் 135 ஆவது பிறந்தநாள் விழா மிகவும் சிறப்பாக  17.09.2013 செவ்வாய்க் கிழமை  மாலை 7.30 மணியளவில் தாராவில் உள்ள கலைஞர் மாளிகையில் நடைபெற்றது. சு.குமணராசன், பெ.கணேசன், அலிசேக் மீரான், அ. இரவிச்சந்திரன், வே.ம.உத்தமன், கழகப் பொறுப்பாளர்கள் முதலியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.

தஞ்சாவூரில் ‘அறிஞர் அண்ணா இல்லம்’

அன்புடையீர், வணக்கம்.  ஒரு புதிய முயற்சியாக, நம் தமிழ் மக்களின் தேவைக்கான ஒரு முயற்சியாக  தஞ்சாவூரில் ‘அறிஞர் அண்ணா இல்லம்’ அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இதை 2011 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ‘அறிஞர் அண்ணா அறக்கட்டளை’ சார்பில் அமைக்கவிருக்கிறோம். இது யாரும் எதிர்பாராத முயற்சிதான். ஆனால் இந்த ‘அறிஞர் அண்ணா இல்லம்’ மனிதகுலம் இருக்கும் வரை நிலைத்திருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இதை அமைக்க விரும்புகிறோம்.  ஆகவே இப்போது இருக்கிற அரசியல் கட்சிகளின் சூழ்நிலையில், எந்த கட்சியின் தலையீடும் இல்லாத வகையில் இந்த இல்லத்தை உடனடியாக நாம்…